Saturday, November 29, 2008

இதுவும் தீவிரவாதம்தான்!

மீடியாவில் இருந்து கொண்டே மீடியாவுக்கு எதிராக தொடர்ந்து பல கடும் விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை வைப்பதாக என்னிடம் உரிமையுடனும் கோபத்துடனும் சண்டைக்கு வரும் நண்பர்கள் நிறைய!

ஆனால், அவர்கள் எல்லாரும் ஒருமனதுடன் நேற்று மீடியாவை, குறிப்பாக எலக்ட்ரானிக் மீடியாவில் பெரும் பங்கு வகிக்கும் தொலைக்காட்சி செய்திக் குழுவின் அடாவடித்தனமான சில செயல்களைப் பார்த்தபிறகு, 'மீடியாவின் தீவிரவாதம்' எத்தகைய பயங்கரம் வாய்ந்தது என்பதை ஒப்புக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள்.

சாம்பிள் ஒன்று:

கடந்த இரு தினங்களாக மும்பை நகரில் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதல்களைப் பார்த்து நாடே பதற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தது. மும்பை மக்களின் கண்ணெதிரே தீவிரவாதிகளும் கமாண்டோ படையினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபராய் ஓட்டலிலிருந்து கையில் குண்டடிபட்டு ரத்தம் சொட்டச்சொட்ட ஒருவர் ஓடிவருகிறார். அடுத்த கணம்

அவரை என்ன செய்திருக்க வேண்டும், மனிதாபிமானம் பற்றி முழங்கும் இந்த மீடியா மேதாவிகள்...?

மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு ஓடியிருக்கலாம். அட, குறைந்தபட்சம் முதலுதவி செய்யச்சொல்லி யாரையாவது உதவிக்கு அழைத்து விட்டிருக்கலாம்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

'ஹலோ... ஹலோ... இங்க வாங்க... இப்படிக் காட்டுங்க உங்க கையை...', 'மிஸ்டர்... ப்ளீஸ் ஷோ மீ யுவர் ஹான்ட்ஸ்...', 'இன்னும் கொஞ்சம் நல்லா காட்டுங்க... இருங்க, அவசரப்பட்டு ஓடாதீங்க!' 'அங்க எத்தனை பேர் இருக்காங்க. என்ன செஞ்சாங்க... உங்களை எப்படி சுட்டாங்க... ஒரு பைட் (byte) எடுத்துக்கிறேன்...!'

'சரி... இதைச் சொல்லுங்க... கமாண்டோ படையால உங்களைக் காப்பாத்த முடிலையா... அவங்க வந்தும் பிரயோஜனமில்லேன்னு சொல்றீங்களா...?'

அந்த மனிதரோ வலியால் துடிக்கிறார், ரத்தம் இன்னமும் கொட்டியவண்ணம் உள்ளது. அவரைப் போக விடாமல் மறித்துக் கொண்டு நிற்கின்றன 20க்கும் மேற்பட்ட கேமராக்களும், அவற்றை இயக்கும் இதயமற்ற மனிதர்களும்!

சாம்பிள் இரண்டு:

ஓட்டலுக்குள் பிணைக் கைதியகளாய் மாட்டிக் கொண்ட நபர்களை விடுவிக்க கமாண்டோக்கள் போராடிக் கொண்டிருக்க, அதை லைவ் கவரஜ் எனும் பெயரில் ஒளிபரப்பிக் காசு பார்த்துக் கொண்டிருந்தன சேனல்கள் (அரை மணிக்கு குறைந்தது 20 விளம்பரங்கள் - டைம்ஸ் நவ், NDTV, IBNLive) இந்த லைவ் கவரேஜை யாராவது தீவிரவாதி டிவியில் பார்த்துக் கொண்டிருந்தால்... அல்லது இவர்களை வெளிநாட்டிலிருந்து இயக்கும் கும்பல் பார்த்துக் கொண்டிருந்தால், கமாண்டோக்களின் இத்தனை முயற்சியும் வீண் அல்லவா...!

இந்த யோசனை வந்ததும், முதலில் டிவி கேமராமேன்களுக்கு விஷயத்தைப் புரிவைத்து விலகிப் போகச் சொன்னது பாதுகாப்புப் படை. .

சொன்னவுடன் கேட்டுவிட்டால் பத்திரிகையாளன் என்ற நான்கு கொம்பு வைத்த, சட்டத்தை மீறிய சிறப்பு உரிமைகள் பெற்ற (உ.ம்: ஏம்பா நோ என்ட்ரில வந்தே? சார்.. பிரஸ். அர்ஜென்ட்) இந்த மாவீரர்களுக்கு இழுக்கு வந்துவிடும் அல்லவா..!

உடனே இதுகுறித்து அவர்கள் தத்தமது செய்தி ஆசிரியர்களுக்குத் தகவல் சொல்கிறார்கள்.
ஒரு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர், அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட செய்தியாளருக்கு இப்படி உத்தரவு போடுகிறார்: 'நீங்கள் போய் நமது கேமரா மட்டும் இன்னும் குளோசப்பாக நிகழ்ச்சியைக் கவர் பண்ண முடியுமா என தனியாகக் கேளுங்கள். முடிந்தால் அவரிடம் போனைத் தாருங்கள், நான் பேசுகிறேன். நமக்கு லைவ் கவரேஜ் முக்கியம்!'

இதற்குப் பெயர் என்ன? இவர்களை என்ன சொல்லித் திட்டுவது? எப்படித் திருத்துவது? கேட்டால் செய்தியை முந்தித் தருகிறார்களாம். மக்களுக்கு உண்மையை அறிவிப்பதில் அவ்வளவு ஆர்வமாம். அளவுக்கு அதிகமானால் எதுவுமே ஆபத்தில்தான் முடியும்!

மும்பை பயங்கரவாதத்தின் பின்னணியும், உண்மைகளும் உடனடியாக தொலைக்காட்சி பார்க்கும் இந்த வேடிக்கை மனிதர்களுக்குத் தெரிந்து இப்போது என்ன ஆகப் போகிறது? நாட்டின் இறையாண்மையைக் காக்க, உடலும் உயிரும் இந்தியத் திருநாட்டுக்கு என்று வீரவேசமாகக் கிளம்பி வருகிற கூட்டமா இது...!

'ஏம்பா... போரடிக்குது. எவ்வளவு நேரம்தான் இதையே காட்டிக்கிட்டிருப்பாங்க. கையாலாகாத கமாண்டோ படை... சேனல் மாத்துப்பா... கோலங்கள் அபி சட்டிப் பாத்திரம் கழுவுறாளா... கலைஞர்ல இன்னிககு ஆடறவ ரம்பாவா, கும்பாவா... பாரு!' என்று பொழுதுபோக்கில் தங்களைப் புதைத்துக் கொண்ட இந்தக் கூட்டத்துக்கு, செய்தியை முந்தித் தர இரக்கத்தையும் மனித நேயத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு செயல்படும் இந்த எந்திரங்களை மீடியா தீவிரவாதிகள் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது!

ஒரு குறிப்பு: எங்கும் எதிலும் சில அதிசயமான விதிவிலக்குகள் உண்டு. மீடியாவிலும் அப்படிச் சிலர் இருக்கலாம்... இருக்கிறார்கள். இந்தக் கட்டுரை அவர்களுக்கானதல்ல!

ஒரு சல்யூட்: இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஹேமந்த் கர்கரே, மேஜர் சந்தீப், உன்னி கிருஷ்ணன், வீரர் கஜேந்திர சிங் தியாகங்களுக்கு வார்த்தைகளில் வெறும் புகழஞ்சலி செலுத்துவதை அவர்கள் ஆத்மா மன்னிக்காது (மோடி அளித்த நிவாரணத் தொகையைக் கூட மறுத்துவிட்டது கர்கரே குடும்பம்). அவர்கள் எந்த நோக்கத்துக்காக உயிர் தியாகம் செய்தார்களோ அது முழுமையடைய நம்முடைய பங்களிப்பைத் தர தயாராக வேண்டும்!

ஒரு தீர்வு:
இது வர்த்தக உலகம். மீடியா தன் வேலையைத் தாமதப்படுத்த முடியாது. செய்திகளை முந்தி தருவது தொழில் தர்மம். அதைக் குறை சொல்லலாமா என இன்னமும் வாதிடுபவர்களுக்கு... உண்மைதான். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தருவதில் ஒருவரை ஒருவர் மி்ஞ்சும் வகையில் செயல்படலாம். அது அக்மார்க் வியாபாரம்.

ஆனால், நாட்டின் பாதுகாப்பு கந்தலாகிவிட்ட அந்த சூழலில், இருக்கிற வீரர்களை வைத்துக் கொண்டு நிலைமையைச் சமாளிக்க ராணும் திணறிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பைத் தருவதே முதல் கடமை. செய்தி அப்புறம்தான்.

நிலைமையின் தீவிரம் கருதி விவரமான அறிக்கை மற்றும் காட்சிப் பதிவை சில மணிநேரங்கள் கழித்துத் தருகிறோம் என்று அறிவித்தால், பார்வையாளர்கள் தேடி வந்து கழுத்தை நெறித்துவிடுவார்களா என்ன...

நகரப் பகுதிகளில் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் யாரென்பதே தெரியாமல் வாழ்ந்து வரும் கலாச்சாரம் இன்று அதன் உச்சத்துக்குப் போய்விட்டது. இனியும் இது தொடர வேண்டாம்.

புதிதாக ஒரு கிராமத்துக்குள்இருவர் போய் பாருங்கள். ஏய் யாரப்பா நீங்க... உங்களை இதுக்கு முன்ன பார்த்ததே இல்லையே... என சுற்றி வட்டமிடாத குறையாக கேள்வி எழுப்புவார்கள். சந்தேகமிருந்தால் கட்டி வைத்து விடுவார்கள்!

ஆனால் நகரங்களில் புதிதாக ஒருவர் நுழைந்தால், முதலில் அவரை இருகரம் கூப்பி வரவேற்று வாடகைக்கு வீடும் பிடித்துக் கொடுத்து கமிஷன் பெறுவதற்கென்றே தெருவுக்குத் தெரு ஒரு கூட்டம் அலைகிறது. அவன் யார், எங்கிருந்து வருகிறான், என்ன கொண்டு வருகிறான் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறையே கிடையாது.

இந்த விஷயத்தில் போலீஸை விட அதிக அக்கறை நமக்குத்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் காக்கிச் சட்டை போடாத போலீஸ்தான்!


-வினோஜாஸன்

http://www.envazhi.com

Friday, November 28, 2008

இந்தியாவின் தவப் புதல்வர்களில் ஒருவர் ரஜினி! – இல கணேசன்

பொதுவாக திராவிட கட்சிகளில் உள்ள தலைவர்களுக்கு இணையாக பேச்சுத் திறன் கொண்ட தலைவர்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பாஜகவில் இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். யதார்த்தமான தேசியக் கட்சிகளின் பால் மக்களுக்கிருந்த ஈடுபாட்டைத் திருப்ப திராவிடக் கட்சிகள் பயன்படுத்திய உத்திகளுள் ஒன்று அலங்கார மேடைப் பேச்சு. ஆனால் தீரர் சத்தியமூர்த்தி, சிஎஸ் போன்ற போன தலைமுறை தலைவர்கள் அழுத்தமான, நாகரிகமான, மறுக்க முடியாத மேடைப் பேச்சுகளை வழங்குவதில் தனித்த திறனுடன் விளங்கினர்.

ஆனால் தமிழ் சினிமாவில் நிலவும் பாகுபாட்டைப் போலவே இவர்களின் பேச்சு ஏ சென்டர்களுக்கு மட்டும்தான் என்றிருந்த்து. ஆனால் அறிஞர் அண்ணா, கலைஜர், மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரது பேச்சுக்களே அனைத்துத் தரப்பு மக்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன.

இன்றைய தலைமுறையில் நல்ல மேடைப்பேச்சுக்கு திமுக பேச்சாளர்களை விட்டால் ஆள் கிடையாது (மோசமான பேச்சுக்கும்தான்!). புரட்சித் தலைவர் காலத்திலாவது பரவாயில்லை, ஆர்எம்வீ, முத்துசாமி, எஸ்டிஎஸ், ஜேப்பியார், நாவலர் என நிறைய தலைகள் இருந்தன. இவர்கள் பேச்சைக் கூட எடுபடாமல் செய்யுமளவுக்கு செல்வாக்கு புரட்சித் தலைவரின் முகத்துக்கு இருந்த்து. ஆனால் இன்றைய அதிமுகவில் அப்படிப்பட்டவர்களை வலை வீசித்தான் தேட வேண்டும்.

காங்கிரஸில் தமிழருவி மணியன், பீட்டர் அல்போன்ஸ் இருவரை விட்டால் நல்ல மேடைப் பேச்சுக்கு ஆளில்லை.

பாஜகவில் மூன்று நல்ல பேச்சாளர்கள் உள்ளனர். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த நண்பர்கள் திருநாவுக்கரசர், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் இல கணேசன். இந்த மூவரைத் தவிர நான்காமவர் ஒருவர் உண்டு. அது நம்ம சோ. ஆனால் அவர் எப்போது பாஜவை ஆதரிப்பார், எப்போது காலை வாருவார் என்று அவரது குரு அத்வானிக்கே தெரியாது!

இவர்களை எல்லாம் விட இல கணேசனுக்கு உள்ள சிறப்பு அவரது பேச்சில் இழையோடும் அழுத்தம் திருத்தமான வாதம். எந்தக் கருத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசத் தெரியாத மனிதர் அவர். கட்சிப் பணிக்காகவே தன் இளமையை அர்ப்பணித்துக்கொண்ட கட்டை பிரம்மச்சாரி, நேர்மையான மனிதர்.

பாஜக என்ற கட்சியுடன் நமக்குள்ள முரண்பாடுகளை தள்ளிவிட்டுப் பார்த்தால், இல கணேசன் அபரிமிதமான திறமைகளை உள்ளடக்கிய யதார்த்தமான மனிதர். எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய யதார்த்த அம்சங்களைக் கொண்ட நல்ல அரசியல்வாதி அவர்.
‘ஆர்த்தி’ என்ற புதிய ஆன்மீக தொலைக்காட்சி துவக்க விழா இரு தினங்களுக்கு முன் நடந்தது. சிறப்பு விருந்தினர் இல கணேசன்.

அவரது விழா சிறப்புரை மிகவும் அருமையாக, நிறைவாக இருந்தது. இந்த மனிதர் மட்டும் திராவிடக் கட்சிகளில் இருந்திருந்தால்... வைகோவைப் போல அருமையான பேச்சாளராக புகழ்பெற்றிருப்பார்... பரவாயில்லை. காலமிருக்கிறது. ரஜினி என்ற நேரிய மனிதரின் அரசியல் பிரவேசம் பாக்கியிருக்கிறது... பார்க்கலாம்!

தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பதினைந்து நிமிடங்கள் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது.

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக நம்மைக் கவனித்து வரும் ஒரு நண்பர் அவர். அந்த உரிமையில் அவரது காரில் ஏறிக் கொள்ளச் சொன்னவர், தொடர்ந்து அரைமணி நேரம் நம்மிடம் பேசினார். அவரது பேச்சிலிருந்து...

(நமது கேள்விகளை விட்டுவிடுவோம்... நேரடியாக அவரது பேச்சுக்குப் போய்விடுவோம்!)

நல்ல மனிதர் ஒருவருக்காக இணையதளம் நடத்துகிறீர்கள், முதலில் வாழ்த்துக்கள். ரஜினிக்கு வெப்சைட் என்ற பேரில் அவரது புகழ் பாடும் வேலை வேண்டாம். அதை ரஜினியே விரும்ப மாட்டார். எனக்குத் தெரியும் நண்பர் ரஜினியைப் பற்றி!

மக்களை... அவரது ரசிகர்களை மேலும் விவரமானவர்களாக மாற்றும் முயற்சியில் இறங்குங்கள்.

கிட்டத்தட்ட ரஜினிக்கு மட்டும் 15க்கும் மேற்பட்ட இணைய தளங்களும், நூறுக்கும் மேற்பட்ட பிளாக்குகளும் இருப்பதாக நண்பர் குருமூர்த்தி என்னிடம் ஒருமுறை சொன்னார். எனக்குத் தெரிந்து உலகில் எந்த நடிகருக்கும் இந்தச் சிறப்பு இல்லை என்றே நினைக்கிறேன். நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

ஆன்மீகத்தையும், இந்த நாட்டின் கலாச்சாரத்தையும் பாதுகாக்க நினைக்கும் ஒரு உண்மையான இந்தியனுக்கு கிடைத்துள்ள பெருமை இது.

ரஜினியை ஒரு நடிகன் என்றா நினைக்கிறீர்கள். நிச்சயம் இல்லை. அவர் அதற்கும் மேல். அவர் ஒரு அரசியல்வாதி அல்லது சமூக சேவகர் என்ற வட்டத்துக்குள் அடங்குபவரில்லை.

இந்த உலகில் நான் பெரிதும் மதிக்கும் அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி ஆகிய பெரிய தலைவர்களின் வரிசையில் ரஜினியை நான் பார்க்கிறேன். உடனே, அவர் பாஜவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இதைச் சொல்வதாக நினைக்க வேண்டாம். நிச்சயம் அப்படியொரு குறுகிய மனப்பான்மை எனக்குக் கிடையாது.

ரஜினி ஒரு அதிசயப்பிறவி. அவர் ஆதரவு அத்வானி போன்ற நல்ல மனிதருக்குக் கிடைத்தால் நல்லதுதான். அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இந்த இந்திய மக்களுக்கு அவரது சேவை கிடைக்க வேண்டும். அவரைப் போன்ற நல்ல மனிதர் பிறப்பதே அரிது. அப்படி ஒரு அதிசய மனிதரின் வருகைக்காகத்தான் நாடு தவம் கிடக்கிறது.

ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள்... இன்றைக்கு நாடு இருக்கும் நிலைமயில் எந்த மனிதரையாவது, அரசியலுக்கு வாருங்கள், கட்சி துவங்குங்கள் என மக்கள் அழைக்கிறார்களா... இல்லையே! அந்தப் பெருமையை ரஜினி ஒருவருக்குத்தான் மக்கள் முன் வந்து தருகிறார்கள். வருந்தி வருந்தி அழைக்கிறார்கள். ஆனால் அந்த மனிதரோ, தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள ஒரு யோகியைப் போல தவம் இருக்கிறார்.

ராமாயண, மகாபாரத காலத்து தருமங்களையும் இந்த பாரதத்துக்கு தேவையான கர்ம சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டவர் நண்பர் ரஜினி. நியாய தர்மத்துக்கு அந்த அளவு முக்கியத்துவம் தருபவர்.

அவர் இடத்தில் வேறு யாரையாவது நினைத்துப் பாருங்கள்.. அவசர கோலகத்தில் ஏதோ ஒரு கட்சி தொடங்கி அல்ப சந்தோஷங்களைப் பார்த்துவிட்டு இந்நேரம் காணமல் போயிருப்பார் அல்லது மோசமான அரசியல்வாதிகள் வரிசையில் இடம் பிடித்திருப்பார்.
வரமாட்டேன்... வரமாட்டேன் என்கிறார். கடைசியில் இவர் வந்துதான் இந்த நாடு நல்ல வழிக்கு திரும்ப வேண்டியிருக்கும் பாருங்கள், என அடிக்கடி சொல்வார் என் நண்பர் குருமூர்த்தி.

அத்வானியின் ஆச்சர்யம்!

சமீபத்தில் சென்னை வந்த அத்வானி அவர்கள் ரஜினியைச் சந்தித்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அது ஒரு அரசியல்லாத அரசியல் சந்திப்பு! அத்வானி அவர்கள் அத்தனை சீக்கிரம் ஒவுர் வீடு தேடிப் போய்விடமாட்டார். அவர் அந்த அளவு ஈகோ பார்ப்பவர் என்று நினைத்துவிட வேண்டாம். அவருக்கு மனிதர்களைப் பார்த்தவுடன் புரிந்துவிடும் ஒருவர் எவ்வளவு நேர்மையுடன் நடந்து கொள்வார் என்று. ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்தபின், அவரது மன உறுதி குறித்து மிகுந்த ஆச்சர்யப்பட்டார் அத்வானி. மக்களிடம் இத்தனை வரவேற்பு, அழைப்புகள் இருந்தும் ரஜினி அமைதி காக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. இந்த மாதிரி நல்ல மனிதர்களின் நட்புதான் நமக்குத் தேவை; இவரைப் போன்ற மனிதர்கள்தான் இந்திய அரசியலுக்குத் தேவை என்றார். அதையே அவர் பத்திரிகையாளர்களிடமும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் தவப்புதல்வர்களுள் ஒருவர் ரஜினி. இந்த என் கருத்தில் என்றைக்கும் மாற்றம் இருக்காது, ரஜினி கட்சி ஆரம்பித்து தனி வழி கண்டாலும்...!, என்றார் இல கணேசன்.

இவை ஒப்புக்காக சொல்லப்பட்டவை அல்ல... உள்மனதிலிருந்து வந்த வார்த்தைகள் என்பதை நம்மால் உணர முடிந்தது!

http://www.envazhi.com

Thursday, November 27, 2008

விதியே... என்ன செய்ய நினைத்தாய் இந்த பாரதத்தை...!

நிலைமையை கவனிச்சிக்கிட்டே வாங்க... இன்னிக்கு நாடு சரியில்ல. இங்க, தமிழ்நாடு மட்டுமில்ல. இந்தியா முழுக்கவே நிலைமை இப்படித்தான் இருக்கு...”

தனது ரசிகர்களைச் சந்தித்த போது சூப்பர் ஸ்டார் ரஜினி பெரும் வேதனையோடும், ஒரு யோகியின் தீர்க்க தரிசனத்தோடும் சொன்னவை இவை.

மும்பை எத்தனையோ தொடர் குண்டு வெடிப்புகளை, ரத்தப் பலிகளைப் பார்த்துள்ளது. மீண்டுள்ளது. ஆனால் இன்று நடந்துள்ள தீவிரவாதத் தாக்குதலும் கொலைகளும் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த மாதிரியொரு மோசமான தாக்குதல் நடந்ததாக சரித்திரமில்லை.

இந்தச் சம்பவத்தில் இன்னும் கூட தீவிரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. துப்பாக்கிச் சத்தம் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மும்பை முழுக்க கரும்புகையும், கொழுந்துவிட்டெறியும் தீயும், குண்டு முழக்கங்களும்...

அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இணையாக அல்லது அதைவிட மேலும் ஒரு படி கொடூரமான தாக்குதல் இது என்று அமெரிக்க இன்னாள் அதிபர் புஷ்ஷும், வருங்கால அதிபர் ஒபாமாவும் வர்ணிக்குமளவுக்கு நிலையை கைமீறிப் போய்விட்டது.

திறந்த இந்தியாவுக்குள் தீவிரவாதம் ஊடுருவுவது எத்தனை எளிது, அதைக் கட்டுப்படுத்துவது எத்தனைக் கஷ்டம் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ள வலி மிகுந்த கொடூரம் இது.

இந்தியாவின் மற்ற நகரங்கள், சுற்றுலாப் பிரதேசங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இன்னும் எத்தனை தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள் என்று புரியவில்லை.

தாஜ் மஹால், டிரைடண்ட், ஓபராய், நாரிமன் ஹவுஸ் ஆகிய 5 நட்சத்திர ஓட்டல்களிலும் ஒரு பக்கம் தீ கொழுந்து விட்டு எரிகிறது. மறுபுறம் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் எத்தனைபேர், எங்கிருந்து சுடுவார்கள், அவர்களின் பிடிக்குள் உள்ள வெளிநாட்டு பயணிகள் எத்தனைப் பேர் என்ற சரியான விவரங்கள் தெரியாமல் போராடிக் கொண்டிருக்கிறது ராணுவம்.

டெக்கன் முஜாஹிதீன் என்ற பெயரில் சில தீவிரவாத இளைஞர்கள் பாகிஸ்தானிலிருந்து படகில் வந்து மும்பையில் நடத்தி வரும் இந்த கோரத் தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். 1000 பேர் காயம். இன்னும் 300 பேரின் நிலைமை தெரியவில்லை. இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளின் பிடிக்குள் பிணைக் கைதிகளாய். இவர்களை விடுவிக்க, நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளும் விடுவிக்கப்பட வேண்டுமாம். பெரும் தொகை பணமாகத் தரவேண்டுமாம். இந்நேரம் பேரங்களும் துவங்கிவிட்டதாகக் கேள்வி!

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆளாவது இதுதான் முதல் முறையா... இன்னும் கவனத்தோடு போலீசார் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற வழக்கமான கேள்வியை இப்போதும் உதாசீனப்படுத்த முடியாது. காரணம் நமது பாதுகாப்பு வளையத்தில் உள்ள ஓட்டைகள்.

அதேபோல உளவுத்துறையின் அதீத மெத்தனத்தையும், ‘பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்..’ என்ற கேள்வியோடு விட்டுவிட முடியாது.

தேசப் பாதுகாப்பின் இரு கண்களாகத் திகழும் இந்த இரு பிரிவினருமே இன்று செயலிழந்து நிற்கக் காரணம், லஞ்சம் என்ற அழிக்கவே முடியாத வைரஸ் இவர்களின் ஈரல், இதயம், மூளை என எல்லா பகுதியையுமே தின்று கொண்டிருப்பதுதான்.

தேசத்துக்காக செய்ய வேண்டிய இந்த பொறுப்பான பொது நலப் பணியில் இருக்கும் இவர்களிடம் கவனக் குறைவும், சுயநலமும் சேர்ந்து கொண்டதாலேயே இன்று இந்த தீவிரவாதப் புலியின் தும்பை விட்டு வாலைப் பிடித்து கடிபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கராச்சியிலிருந்து படகு மூலம் 25 பேர், ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இந்தியாவின் இதயப் பகுதியில் ஊடுருவுகிறார்கள் என்றால், நாட்டின் பாதுகாப்பில் விழுந்துள்ள ஓட்டை எத்தகையது எனப் புரிகிறதல்லவா!

தீவிரவாதம் எந்த மதத்திலிருந்து வருகிறது என்று பார்த்து அதற்கேற்ப அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் மத்திய மாநில அரசுகளும் இதற்கு பொறுப்பானவர்களே.

மாலேகானில் இந்துத் தீவிரவாதம் என்றால் அதுபற்றிப் பேசக் கூடாது என பாஜகவும், தொடர் குண்டு வெடிப்புகளில் முஸ்லிம் தீவிரவாதம் என்றால் அதுபற்றி பேசாமல் அமைதி காக்குமென்று காங்கிரஸ் ‘பேரியக்கங்களும்’ இன்னும் எத்தனை காலத்துக்கு வோட்டுப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? இதிலே மனித உரிமை பேசிக்கொண்டு கம்யூனிஸ்டுகள் வேறு காலை வார காத்திருப்பார்கள்.

யார் செய்தாலும் தீவிரவாதமே... மதங்களைத் தாண்டி அதை அழித்தொழிக்க வேண்டியது ராணுவம்-பாதுகாப்புப் படையின் பணி. அதில் குறுக்கே வரும் யாரும் இந்தத் தீவிரவாதிகளுக்கு இணையான குற்றவாளிகளே...

வெளிநாடுகளிலும் தீவிரவாதம் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. அமெரிக்காவில் இன்னொரு 9/11 அரங்கேறாமல் அவர்களால் பார்த்துக் கொள்ள முடிகிறதென்றால், உலகின் முதல்நிலை ஜனநாயகம், முதல் நிலை ராணுவம் என்று பீற்றிக் கொள்கிற நாம் தொடர்ந்து கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோமே... ஏன்?

எதையும் சுலபமாக எடுத்துக் கொள்கிற நமது மனப்பான்மைதான். கண்ணெதிரே கொலை வெறியோடு அடித்துக் கொள்ளும் சட்டக் கல்லூரி மாணவர்களையும், அவர்களை வேடிக்கை பார்க்கிற போலீசையும், மோதவிட்டு வேடிக்கை பார்த்த கல்லூரி முதல்வரையும், இதற்குப் பின்னணியில் இருந்த முக்கியப் புள்ளிகளையும் எப்படி வேடிக்கைப் பார்த்தோமோ, அதே போலத்தான் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்டு கண்ணெதிரே உயிர் விட்டுக் கொண்டிருக்கிற அப்பாவி மக்களையும் பார்க்கிறோம். அப்படியே பழகிவிட்டோம்.

நமக்கும் சேர்த்து உணர்ச்சிவசப்பட்டுக் கொள்கின்றன மீடியாக்கள். அடுத்த நாளே, இந்த துயரத்தை மறக்கத் தேவையான கேளிக்கைகளையும் படுகைகையறைக்கே வந்து கொட்டுகின்றன.

நாட்டின் முக்கிய நகரங்களை சொல்லிச் சொல்லி இந்த கொடியவர்கள் தாக்குவதும், அதை சேனல்கள் சுழன்று பம்பரமாகப் படம்பிடித்து காட்டிக் கொண்டிருக்கும் அவலமும் இனியொருமுறை தொடர்ந்தாலும், இந்த அமைப்பை மாற்றியாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதென்று அர்த்தம்!

அதைவிட முக்கியம், இந்த மக்கள் தங்கள் மரத்துப் போன இதயங்களை கொஞ்சமாவது சொரணையுள்ள மனித இதயங்களாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம்!

-ஷங்கர்
http://www.envazhi.com

ரஜினி பேரக் கேட்டாலே...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் டாக்டர் காயத்ரி சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் வெளியிட்டது நினைவிருக்கும்.
இதன் தமிழ்ப் பதிப்பு ரஜினி பேரைக் கேட்டாலே... எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) வெளியிடப்படுகிறது.

கனிமொழி எம்பி முதல் பிரதியை வெளியிட, சவேரா குரூப்ஸ் சேர்மன் நீனா ரெட்டி பெற்றுக் கொள்கிறார். (விழா நடக்குமிடம், மற்ற விவரங்கள் முழுமையாக அழைப்பிதழில்)
இந்த விழாவின் சிறப்பு, எழுத்தாளர் – கார்டூனிஸ்ட், எல்லாவற்றுக்கும் மேல் ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவரான மதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து

கொள்கிறார்.

மற்றொரு சிறப்பு விருந்தினர் ரஜினி ரசிகர்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே கருதப்படும் எஸ்பி முத்துராமன். விழாவை இறைவணக்கம் பாடித் துவக்கி வைப்பது யார் தெரியுமல்லவா... விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்!

ஆங்கிலப் புத்தகத்தில் சில பிழைகள் இருந்தன. அவற்றை விழா நடந்து கொண்டிருக்கும்போதே, காயத்ரியின் பிஆர்ஓ நிகில் மூலம் முதல்முறையாக நாம்தான் சுட்டிக் காட்டினோம். பின்னர் ஏராளமான ரசிகர்களும் அதுகுறித்து கடிதங்களும் மின்னஞ்சல்களும் அனுப்பியிருந்தனர்.

அதனடிப்படையில் இப்போது பல்வேறு பிழைகள் திருத்தப்பட்டு, முழுமையான புத்தகமாக, தமிழில் சூப்பர் ஸ்டாரின் முதல் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் எனும் சிறப்போடு வெளிவருகிறது ரஜினி பேரக் கேட்டாலே...!

இந்த விழாவில் ரஜினிக்கு நெருக்கமான இன்னும் சில விவிஐபிக்களும் கடைசி நேரத்தில் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது!
http://www.envazhi.com

Tuesday, November 25, 2008

‘அட, மெய்யாலுமே ரூம் போட்டு யோசிக்கிறாய்ங்க!’


லங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் பெறும் விதத்தில் பேசியது...

அடுத்த சில தினங்களில் ரசிகர் சந்திப்பு என்னும் பெயரில் அனைவர் மனங்களையும் கொள்ளை கொண்டது...

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல, ஈழ மக்களின் கண்ணீர் துடைக்க ஒரு முன் முயற்சியாக இருக்கட்டும் என்ற நோக்கில் தன் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாமென ரசிகர்களுக்கு கட்டளையிட்டு, அறிக்கை விட்டது...

இப்படி டெண்டுல்கர் 20 ஆண்டுகள் அடித்த ஸ்கோர்களை இரண்டே வாரங்களில் சூப்பர் ஸ்டார் மொத்தமாய் அள்ளிவிட, நம்ம உள்ளூர் ஸ்டார்களுக்கு ஜுரமே வந்துவிட்டது. அந்த ஜுர வேகத்திலேயே நாமும் ஏதாவது செய்தாக வேண்டுமே என, அடுத்து கட்சி ஆரம்பிக்கக் காத்திருக்கும் கோலிவுட் ‘தலைவர்கள்’ மாலை நேர பார்ட்டிகளில் ஆலோசனை செய்து வருவதாகக் கேள்வி!

இவர்களுக்கு ஒரே பிரச்சினை... ரஜினியை எப்படி ஓவர்டேக் செய்வது. அட ரஜினியை ஓவர்டேக் பண்ண முடியலைன்னாலும் பரவாயில்லை... அவர் ரசிகர்களை எப்படி ஓவர் டேக் பண்ணுவது.... தனித்தனியாய் யோசித்துப் பார்த்து ஒண்ணும் வேலைக்காகவில்லை.
‘ரூம் போட்டு’ யோசித்தால் ஒருவேளை ஏதாவது ஐடியா வருமோ என யோசித்ததன் விளைவு, விஜய்காந்தின் லீக் கிளப்பில் ரூம் ரெடி.

அல்டிமேட் ஸ்டார் அஜீத், ஸ்டாலின் இளவல் (அட.. அதாங்க இளையதளபதி!) விஜய், தம்மாத்துண்டு ஸ்டார் சிம்பு, திடீர் நாயகன் ஜேகே ரித்தீஸ் என ‘தலைவர்கள்’ உச்சி மாநாட்டுக்குத் தயாராகிறார்கள்.

இவர்களுடன் மைனஸ் ஸ்கோரில் நொண்டியடித்துக் கொண்டிருக்கும் விஜய்காந்தும் சேர்ந்து கொள்ள, கச்சேரி களை கட்டுகிறது!

வி.காந்த்: வாங்க தம்பிங்களா... உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா... தமிழ்நாட்டுல இருக்கிறது ஏழு கோடி பேரு. அதுல மூணே முக்கால் லச்சம் ஆண்கள், மூணே கால் லச்சம் பெண்கள். ரெண்டரை லச்சம் ஆண் வாக்காளர்கள்...

விஜய் (அஜீத்திடம்): அடடா... வந்துட்டாரு, சென்சஸ் பார்ட்டி. இந்தாள பேச விட்டோம்னா... பேசியே நம்மை டயர்டாக்கிவிடுவாரு. சீக்கிரம் ஏதாவது உருப்படியான ஐடியா இருந்தா அவுத்துவிட்டு ஆஃப் பண்ணுப்பா அந்தாளை...

அஜீத் (தனக்குள்): ஆமா... இவனும் இவங்கப்பனும் புது நடிகர்களுக்கு வளரும்போதே உஷாரா ஆப்பு வைப்பாங்க. அது இந்தாளுகிட்ட வேகலை போலிருக்கு.
(பின்னர் சத்தமாக...) ஜோசப்... எனக்கும் அவருக்கும் சிங்கப்பூர்லருந்தே செட் ஆகல... என்னெக் கேட்டா ஸினமாவ ஸினமாவா இருக்க விடணும்... இத இப்போவே சொல்லிட்டு வெளிநடப்பு செய்ட்டா... அது!

விஜய்: நேரங் காலம் தெரியாம ‘அது... அது’ன்னு சொல்லாதய்யா... எல்லாரும் என்னவோ ஏதோன்னு பார்க்கப் போறாங்க. ஜனங்க கிட்ட ரஜினிய விட அதிகமா பேர் வாங்குற மாதிரி உருப்படியா ஏதாவது சொல்லு...

விஜய்காந்த்: (இன்னமும் தொடர்கிறார்...) அதனால இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்காக பாண்டிச்சேரில ஒரு மாநாடு நடத்தப் போறேன். இந்த ஒரே மாநாட்டுல மொத்த ஓட்டும் அள்ளிடப் போறேன். தவறாம நீங்கள்லாம் கலந்துக்கணும். ஆனா நமக்குள்ள எந்தக் கூட்டணியும் கிடையாது. கண்டிப்பா எல்லாம் வந்துடுங்க... தவறாம நின்னு என்கூட போட்டோ எடுத்துக்கணும். அப்பத்தான் ஒரு ‘இதுவா’ இருக்கும். போட்டோகிராபர் தயாரா வச்சிருக்கேன். தம்பி விஜய், அப்பாட்டச் சொல்லிடு... வரும்போது... வேணாம்... நீ மட்டும் வந்தா போதும்!

விஜய்: ண்ணா... நீங்க பாண்டிச்சேரில மாநாடு நடத்துற ரகசியம் தெரிதுங்ணா... உங்க இளைஞரணிக்காரங்க மெட்ராஸ கொஞ்சமா நாறடிச்சிட்டாங்கன்ற கோபத்துல, பாண்டிச்சேரிக்கே கூட்டிட்டுப் போற உங்க குணம் யாருக்குங்ணா வரும். நமக்கு நேரா சிஎம் சீட்டுக்குப் போயிடணும். அதானுங்கணா ஒரே ஆசை!

நானும் ரெண்டு உண்ணாவிரதம் இருந்துப் பார்த்துட்டேன். ஒண்ணும் வேலைக்காகல... ரஜினி பேசுனா அதைச் தலைப்புச் செய்தியாக்கி வன்னிக்காடு வரை ஓட விடறாங்க. நம்ம உண்ணா விரதத்தை இந்த பரங்கிக்காடு கூட தாண்ட விட மாட்டேங்குறாங்க. இந்தப் பத்திரிகைக்காரனுங்களுக்கும் ஏகப்பட்ட லொள்ளு. படத்தையெல்லாம் போட்டு கூடவே கேவலமா கமெண்ட் வேற... தந்தி குடுக்கச் சொன்னா காமெடியாக்கிட்டாங்ணா...

ஒண்ணுமே புரியலைங்ணா... இந்த கூட்டத்தை நம்பி மாவட்டம் மாவட்டமா கல்யாண மண்டபம் கட்டிக்கிட்டு வரேன்... செந்தூரப் பாண்டியான நீங்கதான் நமக்கும் ஒரு வழி சொல்லணும்...

வி.காந்த்: அய் அஸ்கு புஸ்கு... சாட்சின்னு ஒரு படம் எடுத்துட்டு, அதை வெச்சியே எங்கிட்ட டப்பா படத்துக்கெல்லாம் கால்ஷீட் வாங்கி உங்கப்பா சம்பாதிச்சாரு. இது சினிமா இல்லப்பா... இலவச ஐடியாவெல்லாம் வேலைக்காகாது. ஒவ்வொரு ஐடியாவுக்கும் பண்ருட்டிக்கு நான் கொடுக்குற வெலை இருக்கே... அதுக்காக பிரேமா கிட்ட நான் படற பாடு உனக்கெங்க தெரியப் போகுது.

விஜய்: அது என்னங்னா... ஒகேனக்கல் உண்ணாவிரதம்னாலும் ரஜினிதான் பின்றாரு... இலங்கைத் தமிழர் உண்ணாவிரதம்னாலும் அந்தாளுதான் கடைசில ஜெயிக்கிறாரு... அட ரசிகர்கள் கிட்டயாவது கெட்ட பெயரெடுப்பார்னு பார்த்தா... ரசிகர்களுக்கு பதில் சொல்ற சாக்கில நம்ம பொழப்பை காலி பண்ணிட்டாரு. என்ன மாயம் பண்ணார்னே தெரியல... ஒரு மணி நேரத்துல அவர்தான் கடவுள்னு தூக்கி வெச்சிக்கிட்டு ஆடறாங்க.

ஒரு பேப்பரையும் திறக்க முடியல. எதுல பார்த்தாலும் ரஜினி புராணம்... என்னால முடியல...முடியல... தாங்க முடியல... நாம ஒரு தட்ல சாப்பிட்டு வளர்ந்தவங்க இல்லையா... நீயாவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா அஜீத்!

அஜீத்: அட புலம்பாதய்யா, பேச்சைக் குறை... என்னைப் பொறுத்தவரை... சினிமா வேற... மத்ததெல்லாம் வேற வேற. இப்பதான் அவங்களும் (ரஜினி ரசிகர்களும்) என்னை போனா போகட்டும்னு விட்டிருக்காங்க. இந்த நேரத்துல இது தேவையா எனக்கு... அய்யோ...இதெல்லாம் தெரியாம வந்திட்டேன் நான். எனக்கு விஷ்ணுவர்தன் கூட அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கு. பிரபு வரச் சொல்லியிருக்கார். வர்ட்டா... (கிரேட் எஸ்கேப்)!

சரியாக அந்த நேரம் பார்த்து என்ட்ரி கொடுக்கிறார்கள் சிம்புவும் (கூடவே சினேகா உல்லல்!) ரித்தீஸூம்!

சிம்பு: என்ன பண்றதுண்ணே தெரியல விஜய். லிட்டில்னு எந்த நேரத்துல எங்கப்பன் வச்சான்னே தெரியல. இன்னும் லிட்டில் லிட்டிலாவே போய்க்கிட்டிருக்கேன். லைப்ல ஒரு மாற்றமும் இல்லை. எனக்குன்னு எங்கப்பன் ஆரம்பிச்ச கட்சியும் என்னை மாதிரியே லிட்டிலாதான் இருக்கு...

விஜய்: வாடா வம்பு வாயா... புள்ளையாரே எலுமிச்சம் பழத்துக்கு சிங்கியடிக்கிறாராம். இதுல சுண்டெலிக்கு ஆப்பிள் கேக்குதா! போடா...போய் அப்படி ஓரமா குந்து...
சிம்பு: ண்ணேய்... நான் ஓரமா உக்கார்ற ஆளுல்ல... உங்களையே அசத்தப் போற ஆளு. பவர்ல தேளு. நான் சொல்றதக் கேளு...

வி.காந்த்: ஏம்பா விஜய்.... இந்தப் பையன் எப்படி உங்கப்பாகிட்டருந்து தப்பிச்சான்... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல... அவர்ட்ட சொல்லி எப்படியாவது இவன் கால்ஷீட்ட வாங்கிடச் சொல்லு. ஒரு எதிர்கால அரசியல் கட்சி ஒழிஞ்சதுங்கிற நிம்மதியாவது மிச்சமாகும்!

சிம்பு: திருநெல்வேலிக்கே அல்வாவா... இந்த சிம்புவுக்கே சொம்பா... அதெல்லாம் நடக்காதுண்ணே... இந்த விசயத்துல நான் எங்கப்பன் கிட்டேருந்தே நைசா தப்பிச்சிட்டேன். எஸ்ஏசி கிட்ட மாட்டுவனா...

விஜய்: சரி.. சரி... சாமியாடனது போதும்... பிளானச் சொல்லு!

சிம்பு: இப்ப என் டார்கெட்ல மூணு புது ஹீரோயின்ஸ், ரெண்டு ‘ஆன்ட்டி’ ஹீரோயின்ஸ் இருக்காங்க. அவங்களோட டிஸ்கஷன் முடிஞ்சதும் முழு வீச்சுல இறங்கிட வேண்டியதுதான்... லட்சிய திமுக பேரை மாத்திட்டு, சிம்பு திமுகவாக்கப் போறேன். நம்ம கட்சி லேடீஸ் ஸ்பெஷல்... புல்லா ஃபீமேல்ஸ்தான்... என்னைத் தவிர நோ மேல்ஸ்!

வி.காந்த்: சரிப்பா... போய்ட்டு வா. உன்னை ஏதாவது ஒரு ஆஸ்பத்திரில பாத்துக்கிடறேன்!
ஜே.கே.ரித்தீஸ்: யண்ணே... ரஜினிய விடுங்க. நாம தனி ரூட்ல போலாம். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கண்ணே... எனக்கு தனியா கச்சி நடத்தி பளக்கமில்லண்ணே... நீங்க ஒப்புக்கிட்டா... சுதீஷ் இடத்துக்கு வந்திடறேன். மொத்தச் செலவையும் நான் பாத்துக்கிடறேண்ணே... ஆச்சி மாறும்போது நான் உங்கக்கிட்டயிருந்தா ஸேப்பா இருப்பேண்ணே...

வி.காந்த்: தம்பி நல்ல யோசனதான்... ஆனா அதுல முடிவெடுக்கிற அதிகாரம் என்கிட்ட இல்லே. கேட்டுச் சொல்றேன். ஆனா, சுதீஷ் இடத்துக்கு வர்றதா சொல்லி, நாயகன் படத்துல ரமணாவக் காலி பண்ண மாதிரி வேலையில இறங்கினா நான் என்ன பண்ணுவேன்... உன் கேஸ் கொஞ்சம் சந்தேகமால்ல இருக்கு!
ரஜினியை மிஞ்சற மாதிரி ஏதாவது தடாலடியா ஒரு யோசனை சொல்லுப்பா... மத்ததை பிறகு பேசிக்கிடலாம்!

ரித்தீஸ்: சரிண்ணே... ஆனா ரஜினி மேட்டர் வேணாம்னே. பளக்க தோசத்துல ‘ரஜினி வாள்க’ன்னு கோஸம் போட்டாலும் போட்டுடுவேன்.
உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நீங்க கச்சி நடத்துறது எதுக்கு... சம்பாதிக்கத்தானே... நான் வேணா ஒரு ஆயிரம் கோடி கொடுத்திடறேன். பிரேமா அக்காவையும், சுதீஷையும் நீங்க வச்சிக்கிட்டு கச்சியை எங்கிட்ட குடுத்திடுங்கண்ணே... கஸ்டப்படாம காசு பார்த்தா மாதிரி இருக்கும்.

வி.காந்த்: இந்த சில்லுண்டி வேலைய விருத்தாசலம் எம்எல்ஏகிட்ட வெச்சுக்காதப்பு... கெளம்பு கெளம்பு...

விஜய் (தனக்குள்): நாமதான் ரஜினியை ஓவர்டேக் பண்ண பாயைப் பிறாண்டிக்கிட்டு இருக்கோம்னா... இவரு கேஸ் நம்ம விட மோசமா இருக்கும் போலிருக்கே... கட்சி ஆரம்பிச்சாலும் இதே நிலைதானா...

வி.காந்த் (தனக்குள்): எல்லாப் பயலும் நம்ம பார்க்கும் போதெல்லாம் என்னமோ கேப்டன் கேப்டன்னும் நெஞ்சை நக்குறாங்களேன்னு பாத்தா... எல்லாம் நம்ம பங்காளிகளாவே இருக்கானுங்களே... ரஜினியை மிஞ்ச உருப்படியா ஒரு ஐடியா கொடுக்கத் துப்பில்ல...

அட ரஜினி சும்மா இருந்தாலும் இந்த ரசிகர்களும் அரசியல்வாதிகளும் விடமாட்டேங்கறாங்க. கூட்டணி வெச்சுக்க ரெடின்னு, எத்தனை முறைதான் இந்த பிஜேபிக்கு சொல்லிவிடறது...

ஆனா இந்த அத்வானி நேரா போயஸ் கார்டன் போய் ரஜினியப் பார்த்தா, அப்புறம் ஒரு பய நம்மை மதிப்பானா! அந்தாள சினிமாவுல எந்தக் காலத்திலும் ஓவர் டேக் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சிதான் முன்கூட்டியே அரசியலுக்கு வந்தேன். இப்ப இங்கேயும் வரேங்கிறாரு. அடுத்து நான் எங்கதான் போறது?

விஜய்: சரிங்ணா... நம்மள இந்த பத்திரிகைக்காரங்கதான் நல்ல ஐடியா கொடுத்து காப்பாத்தணும். அடுத்த மீட்டிங்குக்கு ஆவி, அஞ்ஞானி, தினப்பொய்மலர், கோயபல்ஸ் சன் குரூப், இத்துப்போன எக்ஸ்பிரஸ்னு ஒரு குரூப்பை பிடிச்சிடலாம். கண்டிப்பா கிரிமினல் ஐடியாக்கள் நிறைய கிடைக்கும். அதுவரைக்கும் கச்சிய பாத்துக்கங்ணா... வர்ட்டா...

வி.காந்த்: யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பார்க்கும்னு சொல்றது இதானா... சரி... உருப்படியா ஒரு யோசனை சொல்லியிருக்கே. இல்லாததையும் சரியா இட்டுக் கட்டி லாஜிக்கோட எழுதறவங்க அவங்கதான். கூட்டிட்டுவா... பேசலாம்!

இருவரும் மனதுக்குள் வன்மமும் வாய் நிறைய புன்னகையுமாய் கலைகிறார்கள்!

அடுத்த பகுதி தொடரும்... ஆனா, ஒரு வாரம் கேப் கொடுங்க... (இத்தனை பொய்யர்களையும் ஒண்ணா சேர்க்கணும்ல!)

-வினோஜாஸன்

http://www.envazhi.com

Monday, November 24, 2008

மனசாட்சியை அடகு வைத்த மாறன் பிரதர்ஸ்!

நெய்க்கு தொன்னை ஆதாரமா... தொன்னைக்கு நெய் ஆதாரமா?

இந்த சாதாரண கேள்விக்குக் கூட விடை தெரியாத சின்னப் புள்ளத்தனத்துடன் சன் நிர்வாகிகளான கலாநிதி, தயாநிதி மாறன்கள் நடந்து கொள்ளும் விதம் சிரிப்பைத்தான் தருகிறது.

இன்றைக்கு சன்டிவி வளர்ந்துவிட்டிருக்கலாம். ராஜநாயகம் போன்ற சந்தர்ப்பவாதிகள், பொய்யர்களின் கருத்துக் கணிப்புகளில் முதலிடம் வகிக்கலாம்.

ஆனால் கலைஞரின் நிழல்தான் இந்த மாறன் சன்களையும் அவர்களின் ‘சன்’னையும் முழுக்க முழுக்க காப்பாற்றி வந்துள்ளது, நேற்றுவரை.

ஆனால் இந்த வளர்த்த கடாக்கள் இப்படியெல்லாம் பிரஸ்மீட் வைத்து, திமுகவின் அஸ்திவாரத்தையே கேள்விக்குறியாக்குவார்கள் என்று தெரிந்திருந்தால் நிச்சமாய் அன்றே இந்த 'சன்'னின் கழுத்தை நெறித்திருப்பார் கலைஞர்.

இன்றைக்கு மாறனை ஒரு மக்கள் தலைவனைப்போல் சித்தரிக்க முயல்கின்றன சன் நெட்வொர்க் ஊடக அங்கங்கள். இது எத்தனைப் பெரிய கேலிக் கூத்து.

மக்களை மட்டுமல்ல... மக்கள் மன்றத்தையே சந்திக்க விரும்பாதவர் மாறன் ... சந்திக்கவும் பிடிக்காது அவருக்கு. பெரும்பாலும் ராஜ்யசபா உறுப்பினராகப் போனவர், சிலமுறைதான் நேரடிப் போட்டியில் எம்பியாகியிருக்கிறார். அதுகூட திமுகவுக்கு அமோக ஆதரவிருந்த கால கட்டங்களில், அதுவும் பாதுகாப்பான சென்னைத் தொகுதிகளில்.

மாறன் என்ற ஒரு சாதாரண மனிதர், எம்பி, முன்னாள் மந்திரி என பல உயர்வுகளை அடையக் காரணமாக இருந்தது திமுகவும் கருணாநிதியும்தான். அந்தக் கருணாநிதி ஆட்சியின் தயவில்தான் சன் குழுமம் அசுரத்தனமாய் வளர்ந்து அச்சுறுத்தும் விதத்தில் கிளைபரப்பி நிற்கிறது.

அப்படியானால் மாறனுக்கு திறமையில்லையா எனக் கேட்கலாம். வாய்ப்பு... வாய்ப்புதான் ஒருவனுக்கு முக்கியம். ரஜினி சொல்வது போல சந்தர்ப்பம் சூழ்நிலை முக்கியம்.

மாறனுக்கு கிடைத்தது போல் மாமாக்களும், வாய்ப்புகளும் உங்களுக்கும் எனக்கும் கிடைத்திருந்தால், ஆயிரம் 'கத்தார் சாதனை'களை, கலாநிதிகளை, தயாநிதிகளை நாமும் உருவாக்கியிருப்போம்!

கலைஞரால்தான் சன்னுக்கு லாபமே தவிர, அந்த லாபத்துடன் ஒப்பிடும்போது சன் மூலம் திமுக பெற்ற நன்மைகள் குறைவுதான். அவ்வளவு ஏன்... ஆசியாவின் முதல்நிலை தொழிலதிபராகவும், துடிப்பான இளம் மத்திய மந்திரியாகவும் இந்த பிரதர்ஸுக்கு எப்படி பெயர் வந்தது? சன் மூலமா... தாத்தா கலைஞர் மூலமா...

கட்சியில் எத்தனையோ மூத்த நிர்வாகிகள் பதவிக்குக் காத்திருக்க, எல்லா விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு அல்லது உதாசீனப்படுத்திவிட்டு தயாநிதிக்கு எம்பி வாய்ப்புக் கொடுத்து, முதல் ‘அட்டெம்டி’லேயே டிஸ்டிங்ஷன் பெற்றதற்குச் சமமாய் கேபினட் மந்திரி பதவியும் வாங்கிக் கொடுத்த (அதுவும் பத்திரிகைகள் விமர்சிக்கும் அளவு அடம் பிடித்து) கலைஞருக்கு அந்திம காலத்தில் இது தேவைதான்.

அவருக்குப் பிடித்தமான ‘வளர்த்த கடா...’ பாடலுக்கு ரொம்ப அழுத்தமான அர்த்தம் தெரிய வேண்டாமா... அதற்கு இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பம் இது!

தீட்டிய மரத்தில் கூர்பார்ப்பது போல, ‘சன்’னுக்கு அறிவாலய வீட்டில் இடமளித்த கலைஞரின் குடும்பத்துக்கே உலை வைக்கப் பார்த்து, வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக் கொண்டது சன்னின் தவறா, அழகிரியின் தவறா?

அழகிரியோ ஸ்டாலினோ... யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர் வந்துவிட்டுப் போகிறார். இவர்களைப் பிரிந்து நின்று அடித்துக் கொள்ளத் தூண்டிவிடும் சகுனி வேலை செய்தது சன்தானே!

முரசொலியில் பிறந்து, அந்த வளாகத்தில் காலம் தள்ளி, அறிவாலயத்தில் அசுர பலம் பெற்ற அந்த ‘சன்’னின் இன்றைய ஏகபோக நிர்வாகிகள் சொல்கிறார்கள், திமுக ஆட்சிக்கு வர பெரிதும் காரணமாக இருந்தது சன்னும் தினகரனும்தானாம்.

அப்படியெனில் மக்களிடம் பொய் சொல்லி திமுகவுக்கு அரியணை கிடைக்கச் செய்தோம் என்கிறார்களா?

நேற்று மழையில் இன்று முளைத்த இந்த மாறன் பிரதர்ஸ்தான், கருணாநிதி என்ற 90 வயதைத் தொடும் தமிழ்க் கிழவனின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டதாகக் கூறுகிறார்களா...

ஒரு ஆதரவுக்கு தோளைப் பிடித்து நடந்ததற்கு, அவரது கால்களையே வெட்டிவிட முயலும் இந்த மாறன் பிரதர்ஸ் எவ்வளவு பெரிய சூழ்ச்சியாளர்கள்!

இப்போதாவது புரிகிறதா...சன் டிவியின் அஸ்திவாரம் பொய் மட்டுமே என்று நாம் அடிக்கடி கூறுவதன் காரணம்!

குறிப்பு: இது கலைஞரை ஆதரிப்பதற்கான பதிவன்று. ஒரு பக்கத்துப் பொய் முகத்தை அம்பலப்படுத்த முனைகையில் இன்னொரு தரப்பு நிரபராதிகளாகவே தெரிவார்கள். இங்கே நம் நோக்கம், சன் குழும நிர்வாகிகளின் துரோகத்தை வெளிச்சமிடுவது மட்டுமே.

மற்றபடி கலைஞரின் அரசியல் குறித்து நாட்டுக்கே தெரியும், இதில் நாமென்ன புதிதாகச் சொல்வது!


-இமானுவேல்

http://www.envazhi.com

Saturday, November 22, 2008

சுல்தான்: வெற்றி நிச்சயம்! – சௌந்தர்யா ரஜினி


ந்தியத் திரையுலகில் சுல்தான் நிச்சயம் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்தப் படம் நிச்சயம் அப்பாவின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். இன்னொன்று இது என் கனவுப் படமும் கூட. தரத்திலும் வசூலிலும் உலக அளவில் பேசப்படும், என்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

சமீபத்தில் சுல்தான் படப்பிடிப்பிலிருந்த சௌந்தர்யாவிடம் சுல்தான் படம் மற்றும் அதன் இப்போதைய நிலை குறித்து கேட்கப்பட்டது.

சௌந்தர்யா கூறியதாவது:

சுல்தான் படம் என்னுடைய பல வருட கனவு, உழைப்பின் விளைவு என்றுகூடச் சொல்லலாம். இந்தப் படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் நான் திட்டமிட்டேன். 
இல்லாவிட்டால் அப்பாவை அத்தனை சீக்கிரம் யாராலும் கன்வின்ஸ் பண்ணவே முடியாது. தன் மகள் என்பதற்காகவெல்லாம் எந்த வாய்ப்பையும் தந்துவிடமாட்டார் அவர்.

ஆனால் அப்பா ஒரு முறை முடிவு செயதுவிட்டால், கடவுளே நினைத்தாலும் அதை மாற்றமுடியாது. அதுதான் அவரது இயல்பு. ஆரம்பத்திலேயே இந்தப் படம் குறித்த ஒவ்வொரு காட்சிக்கும் அவருக்கு போதிய விளக்கம் கூறி அவருக்கு திருப்தி வரும் வகையில் கதையை அமைத்தேன்.

மற்றபடி எந்தக் காட்சியிலும் அப்பா ஒரு திருத்தம்கூடச் சொன்னதில்லை.

இந்தப் படத்தில் நாயகி விஜயலட்சுமி என்றபோது அப்பா ஒரு நிமிடம் சங்கடப்பட்டார். பின்னர் அதற்கான காட்சி அமைப்புகளைச் சொன்னேன். மக்கள் என்ன பேசுவார்கள் என்பதை அவர்களுக்கு முன்னதாகவே கணித்துச் சொல்லிவிடுவார் அப்பா. எத்தனையோ படங்களுக்கு அப்படித்தான் நடந்திருக்கிறது.

எந்த மகளுக்கும் கிடைக்காத பெருமையை ஒரு அப்பாவாக எனக்குத் தந்திருக்கிறார். அந்தப் பெருமையைக் காப்பாற்றும் விதத்தில் இந்தப் படத்தை எடுத்திருப்பதாகவே நம்புகிறேன்.

இந்தப் படம் அப்பாவின் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு இனிய அதிர்ச்சியாக இருக்கும். இதன் மூன்றாவது டிரெயிலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. குழந்தைகள் மற்றும் மாணவர்களின் குதூகல மாதமான ஏப்ரலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.

எந்திரனுக்கு முன், உலகம் முழுக்க வெளியாகப்போகும் படம் சுல்தான்தான். 2000க்கும் கூடுதலான பிரிண்டுகள். அனிமேஷன் தவிர்த்து அப்பா ரியலாக வரும் சில காட்சிகளையும் ஸ்பெஷலாக வைக்கும் உத்தேசமுள்ளது, என்றார்.

அடுத்து இந்தியில் ஒரு வித்தியாசமான படம் இயக்கும் முயற்சியில் உள்ளார் சௌந்தர்யா. இதற்காக ஹ்ரித்திக் ரோஷனுடன் பேசி வருகிறாராம்.

சூப்பர் ஸ்டார் மகள்னா சும்மாவா... 32 அடி பாயும் புலிக்குட்டியல்லவா!

http://www.envazhi.com/

நல்லவர்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு!

ல்லோர் செல்லுமிடமெல்லாம் அவர்களுக்கும் சிறப்பு, அந்த இடங்களுக்கும் செழிப்பு என்று ஒரு முதுமொழி இருக்கிறது.

ரஜினி என்ற மனிதரை தமிழ்நாடு, கர்நாடாக, மகாராஷ்டிரா என இந்தியர்கள் எல்லைகளுக்குள் சிறை வைக்கத் துடிக்க, அவரோ தனது உதாரண குணங்களால் எல்லைகள் கடந்து புகழ்பெற்றுத் திகழ்கிறார்.

ரஜினியின் வார்த்தைகளுக்குள்ள வீர்யத்தை, சக்தியை சமீப நாட்களாக அவரது விமர்சகர்களும் தெளிவாக உணரத் தலைப்பட்டுள்ளனர்.

ரஜினி சொன்னதும் இலங்கைப் போர் நின்றுவிட்டதா... என்று கேட்கலாம். போர் நிற்காவிட்டாலும், இன்று இலங்கை ராணுவத்தில் கொத்துக் கொத்தாக பிணங்கள் விழுகிறதே, அந்த ஆவேச எதிர்ப்புக்கு உரமாக அமைந்துள்ளன ரஜினியின் வார்த்தைகள். இதை விடுதலைப் புலிகளே அறிவித்துள்ளனர்.

பொதுவாக எந்த அரசியல் தலைவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டுவது புலிகளின் வழக்கமல்ல. அமரர் எம்ஜிஆர் மட்டுமே இதில் விதிவிலக்கு.

ஆனால் ரஜினியின் ஈழத் தமிழ் உண்ணாவிரதப் பேச்சுக்கு, தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், புலிகளின் ஊடகங்கள் என அனைத்துத் தரப்பிலும் ஒருமித்த பாராட்டு கிடைத்ததே இதற்குச் சான்று. நிச்சயம் ரஜினியின் வார்த்தைகள் போர்முனையில் நிற்கும் ஈழப் புலிகளுக்கு ஒரு உந்து சக்தி.

அதேபோல, ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை அவர் ரத்து செய்திருப்பதும் உலகளாவிய தமிழ் நெஞ்சங்களின் காயங்களுக்கு ஒத்தடமாய் அமைந்துள்ளது.

ரஜினியின் இந்த மனிதாபிமானம், நியாயத்துக்காக மட்டுமே, அது எந்தச் சூழலாக இருந்தாலும், குரல் கொடுக்கும் அவரது பண்பு ஆகியவை மற்றவர்களை எந்தளவு கவந்துள்ளன என்பதற்கு இதோ இன்னுமொரு சான்று, பால் தாக்கரே ரஜினியை மராட்டிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இது சரியா... தவறா என்பதை நாம் அப்புறம் அலசலாம்.

தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த காந்தியடிகளை இந்தியாவுக்கு வந்து போராடி சுதந்திரம் பெற்றுத் தாருங்கள் என்று இந்தியத் தலைவர்கள் வருந்தி அழைத்தது வரலாறு.

அதே போல உலகின் புரட்சிக்காரர் எனப்படும் சே குவேராவை, கியூபா மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததைப் போல எங்களுக்கும் போராடி சுதந்திரம் பெற்றுத் தாருங்கள் என பொலிவியாவும் பிற நாடுகளும் வருந்தி வருந்தி அழைத்ததும் வரலாறுதான்.

உலகில் மிகச் சில மனிதர்களுக்குத்தான், இந்த மாதிரி அபூர்வ அழைப்புகள் மக்களிடமிருந்து நேரடியாக வந்திருக்கின்றன (நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பால் தாக்கரே பின்னால் பெரும் மக்கள் சக்தி இருப்பது உண்மைதானே!)

மராட்டியர்களுக்காக போராட ரஜினிக்கு தாக்கரே அழைப்பு!

மும்பை: தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் வேலை முடிந்து விட்டது. இலங்கைத் தமிழர்களுக்காக அவர் குரல் கொடுத்ததைப் பாராட்டுகிறோம். இப்போது மராட்டியர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க ரஜினியை மகாராஷ்டிராவுக்கு வருமாறு அழைக்கிறேன் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.

மராட்டியத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, தமிழகத்தில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து, இன்று தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாகவும், இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமாகவும் திகழும் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வரவே தயக்கம் காட்டினாலும், அரசியல்வாதிகள் அவரை விடுவதாக இல்லை.

இந்த நிலையில் இப்போது பால் தாக்கரே, ரஜினியை மராட்டியர்களுக்காகப் போராட மும்பை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது சாம்னா இதழில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது...

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், தமிழர்கள் படும் அவலங்களைக் கண்டித்தும், துயரங்கள், வேதனைகளை மதித்தும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இதை நான் வரவேற்கிறேன், ரஜினியைப் பாராட்டுகிறேன். இதை நான் பிராந்தியவாதமாக எடுத்துக் கொள்ளவில்லை. இது முழுமையான தேசியவாதம். இப்படித்தான் இருக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்களுக்காக ரஜினி காந்த் கவலைப்படுகிறார். அதேபோல இலங்கைத் தமிழர் பிரச்சினையி்ல் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஓரணியில் உள்ளனர்.

இவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து விட்டு பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.

ஆனால் இதேபோன்ற பிரச்சினையை நாங்கள் மகாராஷ்டிராவில் எழுப்பினால் மட்டும், தேசத்தை உடைக்கப் போவதாக குற்றம் சாட்டுகின்றனர். தமிழர்கள் பிரச்சினைக்காக செய்யும்போது யாரும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. அதுவே மராட்டியர்களின் உரிமைகளுக்காக போராடினால் எங்களை தேசத் துரோகிகள் என்கிறார்கள்.

ரஜினிகாந்த் காவிரி நீர் பிரச்சினைக்காக போராடுகிறார். நாங்கள் மராட்டியர்களுக்கு வேலை வாங்கித் தருவதற்காக போராடுகிறோம். தமிழர்களின் உரிமைகளிலும், மராட்டியர்களின் உரிமைகளிலும் வேறுபாடு உள்ளதா.

மராட்டியம் உருவாக 105 பேர் இன்னுயிர் ஈந்தனர். ஆனால் ரஜினிகாந்த்தைப் போல ஒருவர் இன்னும் மராட்டியத்திற்குக் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் பணிகள் முடிந்து விட்டன. அவர் மராட்டியத்திற்கு வந்து மராட்டியர்களின் உரிமைக்காக போராட வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.

செய்தி: தட்ஸ்தமிழ், தினத்தந்தி

குறிப்பு: தாக்கரே ஒரு பிரிவினைவாதி, சந்தர்ப்பவாதி அவர் பாராட்டைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற கருத்து கொண்டவர்களுக்கு:

இது ஒரு செய்தி. ரஜினியின் வார்த்தைகளுக்குள்ள மதிப்பு, அவரிடமுள்ள நேர்மை அடுத்தவர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைக் காட்டவே இந்த செய்தியைக் குறிப்பிட்டுள்ளோம்.

அதே நேரம் தாக்கரேயின் அர்த்தமற்ற அமிதாப் எதிர்ப்பு, பிறமாநில மக்கள் மீதான எதிர்ப்பை நாமும் ரசிக்கவில்லை.
http://www.envazhi.com

Thursday, November 20, 2008

குசேலன் வசூல் - சில உண்மைகள்!

குசேலன் என்ற படத்தின் தகுதி, தரம் இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, ரஜினி மீதான காழ்ப்புணர்ச்சியை மட்டுமே காரணமாக்கி அந்தப் படத்தை முதல் வாரத்திலேயே தோல்விப்படம் என முத்திரைக் குத்தி விட்டது மீடியா.

முன்பே சொன்னது போல, இந்தப் படத்தில் ஆளுக்கு ஒரு பங்கு வேண்டும் என மீடியா வெளிப்படையாகக் கேட்காதது ஒன்றுதான் பாக்கி. மற்றெல்லாவற்றையும் செய்துவிட்டார்கள்.
இந்தப் படம் ஓடக் கூடாது என்று வெளிப்படையாகவே வேலை பார்த்தன பத்திரிகைகளும் சில சேனல்களும்.

ரஜினியின் ரசிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல சினிமா பார்வையாளனாக குசேலன் விவகாரத்தைப் பார்த்த அனைவருமே இந்தக் கருத்தை ஒப்புக் கொள்வார்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு, அழுத கண்களோடு வெளியில் வந்த அதே பத்திரிகையாளர்கள், படம் பார்க்கும்போது இருந்த இளகிய மனதை பொறாமைக்கு அடகு வைத்து, பொய்யெழுதி தங்கள் வக்கிரத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

ரஜினி கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக பிரச்சாரம் செய்து அவருக்கு எதிரான போக்கை உருவாக்க முயற்சி செய்தார்கள். ஒரு கவுரவ வேடத்தில் நடிக்க அவர் ரூ.26 கோடி வாங்கியதாக கூசாமல் பேசினார்கள்.

எந்தப் படமாக இருந்தாலும் குறைந்தது 3 மாதங்கள் வரையாவது பொறுமை காக்கும் திரையரங்க உரிமையாளர்கள், மூன்றாவது நாளே நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி தூக்கியதுதான் கொடுமை. இந்தப் படம் தூக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு வரைகூட பெரும்பாலான திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களைப் பார்க்க முடிந்தது. 10 சதவிகிதம் கூட பார்வையாளர்கள் இல்லாத பல படங்களை 200 நாட்கள் ஓட்டி சாதனைப் படைத்த திரையரங்கு உரிமையாளர்கள் படம் தோல்வி, அதிக விலைக் கொடுத்துவிட்டோம், நஷ்ட ஈடு வேண்டும் என பத்திரிகைகள் மூலம் செய்த பிரச்சாரம் நாடறிந்தது.
போகட்டும்...

இப்போது, வெளிநாட்டில் இந்தப் படம் எந்தளவு சாதனைப் படைத்துள்ளது என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.

இங்கிலாந்தில் மட்டும் இந்தப் படம் வசூல் செய்த மொத்தத் தொகை கிட்டத்தட்ட ரூ.89 லட்சம். வெளியான முதல் வாரத்தில் 13-வது இடத்தில் இருந்தது குசேலன். கமல்ஹாசனின் தசாவதாரம் ரூ.1.07 கோடிகளை வசூலித்துள்ளது. ஒரு சூப்பர் ஹிட் படம் எனப்பட்ட தசாவதாரத்துக்கும், தோல்விப் படம் என இவர்கள் வர்ணித்த ரஜினியின் குசேலனுக்கும் இடையிலான வசூல் வித்தியாசம் ரூ.19 லட்சம்! தசாவதாரத்தைக் குறைத்துச் சொல்ல இங்கே இதைக் குறிப்பிடவில்லை. ஒரு வணிக ஒப்பீட்டுக்காகத்தான்.

மற்ற நடிகர்களின் வெற்றிப் படங்கள், ரஜினியின் தோல்விப் பட வசூலுக்குச் சமம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறோம்.
அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகச் சிறந்த படமாகப் பார்க்கப்பட்ட குசேலன், சிங்கப்பூர், மலேசியாவில் மட்டும் ரூ.5.96 கோடிகளை வசூலித்ததாக சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை முழுமையாகக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ரஜினி ஆதரவாளர்கள் சிலர். இதையே சாய்மிரா நிறுவனமும் சில தினங்களுக்கு முன் உறுதிப்படுத்தியது நினைவிருக்கலாம்.

ரஜினிக்கு பகிரங்கக் கடிதம், வேறு பெயரில் ஒளிந்து கொண்டு மோசடிக் கடிதம் என்றெல்லாம் எழுதிய அஞ்ஞானிகள், இப்போது ரஜினி கூறிய விளக்கத்தைக் கேட்டதும் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன்? அதே முக்கியத்துவத்துடன் ரஜினி விளக்கத்தையும் வெளியிட்டிருக்கலாமே!

மீடியா எப்போதும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதும், சம்பந்தப்பட்ட நபர் மீது இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு பொய் எனத் தெரிந்த பின் குறைந்த பட்சம் அதற்கான வருத்தம் கூடத் தெரிவிக்காததும் எந்த வகை தர்மத்தில் சேர்த்தி?
காலம் கடந்தாலும், உண்மைகள் இனியாவது வெளியில் வரட்டும்!
http://www.envazhi.com

Wednesday, November 19, 2008

புண்ணிய ஆத்மா நம்பியார்! - ரஜினி

ன்று பிற்பகல் மரணமடைந்த எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து, வணங்கினார் ரஜினி.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், நம்பியார் ஒரு புண்ணிய ஆத்மா. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் வேண்டுகிறேன்.

அவரது இழப்பு அவர்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திரையுலகுக்கே பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
http://www.envazhi.com

எம்.என். நம்பியார் மரணம்

வில்லனுக்கு வில்லன் எனப் புகழப்பட்ட பிரபல நடிகர் எம்என் நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார்.
சிறிது காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் நம்பியார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், இன்றைய முதல்வர் மு.கருணாநிதி ஆகியோருக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தவர் நம்பியார்.



பழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார் மரணம்!

சென்னை: அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.

எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:

எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.

அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.

நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.

தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.

நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதராகவே வாழ்ந்தார் நம்பியார்.

பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

அஞ்சலி

கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Source: www.thatstamil.com

http://www.envazhi.com

Tuesday, November 18, 2008

போர் நிறுத்தம் ஏற்பட என் அறிவிப்பும் தூண்டுதலாக இருந்தால் மகிழ்ச்சி! - ரஜினி

லங்கைத் தமிழ் மக்கள் காயமுற்றுத் துன்புறும் இந்த தருணத்தில் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதுகுறித்து ஏற்கெனவே இன்று காலை ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில் பிறந்தநாள் கொண்டாட்ட ரத்து குறித்து ரஜினியே அறிக்கை விடுப்பார் என மன்றப் பொறுப்பாளர் சுதாகர் அறிவித்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தோம்.

அவர் சொல்லி முடித்த 24 மணி நேரத்துக்குள் ரஜினி தனது அறிக்கையை மீடியாவுக்கு வழங்கியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

இலங்கையில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஒவ்வொரு தமிழனின் இதயமும் காயப்பட்டுள்ள இந்த நிலையில் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனறு ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தூண்டுகோலாக எனது இந்த அறிவிப்பும் அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன், என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ரஜினி.

எளிய முறையில் பணிகளைச் செய்யுங்கள்!

பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்ற ரஜினியின் முடிவு வெளியானதும், உலகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குப் போன் செய்து பிறந்த நாள் விழாவுக்கு தாங்கள் செய்துள்ள ஏற்பாடுகளைத் தெரிவித்து வந்ததால், இப்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பதில் அன்னதானம், ரத்ததானம் போன்ற நற்பணிகளை ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள விதத்தில் செய்ய அனுமதிக்கலாம் என மன்றப் பொறுப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று ரஜினி சார் கூறிவிட்டார். ஆனால் ஏழை மக்களுக்காக நடக்கும் நற்பணிகள் தொடரலாம். அதையும் கூட எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார். இவை எல்லாமே ரஜினி சார் என்னிடம் சொன்னவை. அதை அப்படியே மீடியாவுக்குச் சொல்லிவிட்டேன், என்றார் சுதாகர்.

http://www.envazhi.com

ஈழத் தமிழர் பிரச்சினை: வேண்டாம் பிறந்தநாள் கொண்டாட்டம் ! –ரஜினி

ஜினியின் பட வெளியீட்டை விட பத்து மடங்கு உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடும் விசேஷம் தங்கள் தலைவர் ரஜினியின் பிறந்த நாள் விழா.

ஆண்டுதோறும் டிசம்பர் 12-ம் தேதி ரத்ததானம், கண்தானம், உணவு தானம், சமபந்தி போஜனம், தங்கத் தேர் இழுத்தல், பூச்சட்டி ஏந்துதல் என தங்களுக்குத் தெரிந்து வழிகளிலெல்லாம் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வது அவர்கள் வழக்கம்.
திருச்சி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்கள் ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்றவை.

ஆனால் இம்முறை இந்தக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் நிர்வாகியும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சுதாகர் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்தின் பிறந்தநாள், அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.

ஆனால் ஈழத் தமிழர்கள் துன்பப்படும் இந்த வேளையில், பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி, ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

இதுபற்றிய முறையான அறிக்கையை அவரே நேரடியாக வழங்கவிருக்கிறார். ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், என சுதாகர் கூறியுள்ளார்.

http://www.envazhi.com

சத்தியநாராயணாவை நீக்கவில்லை! – சுதாகர் பேட்டி

கில இந்திய ரஜினிகாந்த் மன்ற பொறுப்பாளர் பதவியில் இருந்து சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாக வந்துள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவை மவெறும் வதந்திகளே. சத்தியநாராயணா நீக்கப்படவில்லை. தற்காலிக ஓய்விலிருக்கிறார், என ரஜினியின் நெருங்கிய நண்பரும், மன்றப் பணிகளை கவனிப்பவருமான சுதாகர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் கூறியுள்ளதாவது:

ரஜினி ரசிகர் மன்றத்தில் இப்போதும் சத்தியநாராயணா பொறுப்பில்தான் உள்ளார். அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்படுவது வீண் வதந்தி.

கடந்த 3-ந் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து பேசியபோது, சத்யநாராயணாவை மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மன்ற பணிகளை கவனிக்க ஏற்பாடு செய்வீர்களா? என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டார்.

அந்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கும்போது, சத்யநாராயணாவுக்கு உடல் நலம் இல்லை. அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி நான்தான் கூறியிருக்கிறேன். அவருடைய தாயார் சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார். தந்தைக்கு 88 வயது ஆகிறது. அவரை, சத்யநாராயணாதான் கவனிக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் கொஞ்சநாளைக்கு ஓய்வு எடுத்துக்கப்பா... உனக்கு பதில் நானே அதுவரை மன்றத்தைப் பார்த்துக்கிறேன், என்று கூறினார். இப்போது தான் சொன்னதைப் போலவே சத்திக்கு ஓய்வளித்துள்ளார் ரஜினி.

ஆனால் சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாகவும், அவருக்கு பதில் என்னை நியமித்து இருப்பதாகவும் கண், காது, மூக்கு வைத்து வதந்தியைப் பரப்பி விட்டார்கள். அதில், கொஞ்சமும் உண்மை இல்லை. சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாக ரஜினிகாந்த் சொல்லவில்லை. சத்திக்கு உடல் நலம் இல்லாததால், தற்காலிகமாக ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார்.

நானே பார்த்துக் கொள்வேன்! - ரஜினி

இனிமேல் மன்ற பணிகளை நான்தான் கவனிப்பேன், என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதற்காக ராகவேந்திரா மண்டபத்தில் 2 பணியாளர்களை வேலைக்கு நியமித்துள்ளார். அவர்கள் ரசிகர்களிடம் இருந்து வருகிற போன்கள் மற்றும் தகவல்களைக் குறித்து வைத்து என்னிடம் தருகிறார்கள். ரசிகர்களின் நிறை, குறைகளைக் கேட்டு, அவற்றை ரஜினிகாந்திடம் கூறவும், ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கூறும் பதில்களை, ரசிகர்களிடம் கூறுவதற்காகவும்தான் அவர் என்னை நியமித்து இருக்கிறார்.

அவர் உத்தரவுப்படி, நான் என் பணிகளைச் செய்து வருகிறேன். இதுதான் உண்மை, என சுதாகர் தெரிவித்துள்ளார்.

எனவே மன்றப் பொறுப்பை தன் கையில் நேரடியாக ரஜினியே எடுத்துக் கொண்டிருப்பதால், பல அதிரடி முடிவுகள் அடுத்தடுத்து வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.envazhi.com

மீடியாவின் எல்லை மீறிய செயல்! - சத்யநாராயணா

ன்றப் பொறுப்பாளர் பதவியிலிருந்து சத்தியநாராயணா நீக்கம், புதிய தலைவராக சுதாகர் நியமனம் என்றெல்லாம் இரு தினங்களாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

உண்மையில் நடந்தது என்ன?

சத்தியநாராயணா மீது ரஜினிக்கு உண்மையிலேயே அதிருப்தியா... அவர் தனக்கென்று தனி கோஷ்டி சேர்க்கிறார் என்பது உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வெறும் யூகங்களின் அடிப்படையில் ‘அவல்’ தர முடியாது.
எனவே இதுகுறித்த தீவிர விசாரணையில் இறங்கினோம். முதலில் ராகவேந்திரா மண்டப பொறுப்பாளர்கள் சொன்ன தகவல்:

“சத்தி சார் நீக்கப்பட்டார் என்று ரஜினி இதுவரை எங்கும் சொல்லவில்லை. எந்த அறிக்கையும் விடவும் இல்லை. ஏற்கெனவே சத்திக்கு கொஞ்சநாள் ஓய்வு தர வேண்டும் என்று ரஜினி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் உடல் நலக் கோளாறு. மறுபக்கம் தாயை இழந்த சோகம். இப்போது வயதான தந்தையைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு.

தாய் தந்தைக்குத்தான் முதலிடம் என்று அடிக்கடி சொல்வார் ரஜினி. எனவேதான் இப்போது சத்திக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ரஜினி ரசிகர் மன்றத்தின் எந்த முடிவாக இருந்தாலும் அதை ரஜினிதான் முதலில் சொல்ல வேண்டுமே தவிர மீடியா இஷ்டத்துக்கு சொல்லவிட முடியாது... சத்தி எப்போதும்போல இந்த குடும்பத்தின் ஓர் அங்கம்தான்...”

இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்லக் கூடிய இருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. மற்றொருவர் சத்தியநாராயணாதான். மிக நீண்ட முயற்சிக்குப்பின் சத்தியைத் தொடர்பு கொண்டோம். நேரில் சந்திக்கக் கேட்டபோது, ‘இப்போது வேண்டாமே’ என்றவர், தனது நிலை குறித்து சுருக்கமாக கருத்து சொல்லி முடித்துக் கொண்டார்.

எனக்கு உடல் நலம் சரியில்லை. ரெஸ்டில் இருக்கிறேன். ரஜினி சாரே என்னை ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். சார் அடிக்கடி சொல்வார்... ஏம்பா இவ்ளோ கஷ்டப்படற... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ, என்பார். இப்போது சில வாரங்கள் ஓய்வுக்காக வீட்டிலிருக்கிறேன். அதற்குள் மீடியா இப்படியெல்லாம் கதை எழுதுவது வேடிக்கையாக உள்ளது.

நான் விடுமுறையில் போனால், அந்த வேலையை இன்னொருவர் கவனித்துக் கொள்ளமாட்டாரா... அப்படித்தான் நண்பர் சுதாகர் இப்போது பார்த்துக் கொள்கிறார். அதற்குள் நான் ராஜினா செய்துவிட்டேன் என்றும், வேறு சில வேண்டாத கோணத்திலும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

நேற்றிலிருந்தே ரசிகர்களின் போன் கால்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இன்று இன்னும் அதிகம்.

இந்தச் செய்திகளைப் படித்துவிட்டு, சாரே கோபப்பட்டார். ஒரு விஷயம் கேள்விப்பட்டால் குறைந்தபட்சம் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூட மாட்டார்களா பத்திரிகைக்காரர்கள்...! இது அவர்களின் எல்லை மீறிய செயல்...” என்றார்.

Monday, November 17, 2008

ரஜினிக்கு பிரபாகரன் பாராட்டு!

ன்னிக் காடுகளில் எதிரொலித்த ரஜினியின் பேச்சு – ரஜினியின் உண்ணாவிரதப் பேச்சு குறித்து இந்த தலைப்பில் சில தினங்களுக்கு முன் நாம் எழுதிய கட்டுரை இது.

இப்படி அப்போது எழுதக் காரணம், தமிழகத்தில் உள்ள முக்கிய ஈழ ஆதரவுத் தலைவர்களிடம் பேசிய எல்டிடிஇ தலைவர் பிரபாகரன், ரஜினியின் பேச்சுக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈழ ஆதரவு ஊடகங்கள் மற்றும் புலிகளின் பிரதான இணைய தளங்கள், பத்திரிகைகளில் இந்தச் செய்தி பிரதானமாக இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

இதோ இப்போது, ரஜினியின் பேச்சுக்கு பிரபாகரன் தெரிவித்த பாராட்டை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன்.

பூநேரி முகாம் வீழ்ந்ததுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘முப்படைகளை வைத்துக் கொண்டு 30 ஆண்டுகளாக யுத்தம் செய்யறீங்க... உங்களால் அவங்களை (புலிகளை) ஜெயிக்க முடிஞ்சதா... உங்க தோல்வியை ஒத்துக்கிட்டு, அவர்கள் மண்ணை திருப்பித் தந்துவிடுங்கள்... என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதன் மூலம், எமது மண்ணின் கள யதார்த்தத்தை, அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

இங்குள்ள ஒவ்வொரு தமிழரும் வீரத்தை வெளிப்படுத்தியபடி, தியாகங்களைப் புரிந்தபடி போராடி வருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக எங்களுடைய சுதந்திரத் தீயை அணையவிடாது பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம்...’ என தனது அஎறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் நடேசன்.

சமீபத்தில் இலங்கை ராணுவத்தில் குண்டு வீச்சில் பலியான தமிழ்ச் செல்வனுக்குப் பின் அவரது இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.envazhi.com

Saturday, November 15, 2008

புறக்கணிப்பு: இது காந்திய வழி!

புறக்கணிப்பு குறித்த ரசிகர்களின் கருத்துக்கள், விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளன... அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

வினோ,

முதலில் ஒரு பத்திரிக்கை நடுநிலை என்று எழுதுவதே தவறு.. உதாரணமாக, ஒரு கொலையோ அல்லது தீய செயலோ நடைபெறும் போது இரண்டு பக்கத்துக்கும் பொதுவாக நான் நடுநிலையில் இருக்கிறேன் என்று சொல்லக் கூடாது.. அது தர்மம் அல்ல.

ஆனால் இன்றைக்கு இருக்கும் பத்திரிகைகள் அந்த அளவுக்கு சத்தியத்தை காக்கும் அல்லது உணரும் தகுதியில் இல்லை என்பதால் குறைந்தபட்சம் நடுநிலை அல்லது தவறுக்கு ஆதரவின்மை என்ற நிலையிலாவது இருக்க முயற்சிக்க வேண்டும்..

ஒரு காலத்தில் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் விமர்சிக்காத பத்திரிக்கைகளே இல்லை.. பிற்பாடு அந்த அளவு கடுமை இல்லாவிடினும் கலைஞரையும் விமர்சித்தார்கள் சில பேர்.. பல நேரங்களில் பிஜேபி விமர்சனங்களால் படுகாயப் பட்டது.. ஆனால் இவர்கள் எல்லாருமே நேரடியாக மக்களால் பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, பொது வாழ்வில் இருப்பதால் அவற்றையாவது ஓரளவுக்கு ஞாயப்படுத்தலாம்.

ஆனால், எந்த விதத்திலும் மக்களை பொருளாராத ரீதியாகவோ, அல்லது நம்பிக்கை துரோகமோ செய்யாத ரஜினி போன்ற மனிதர்களை எந்த வித காரணமும் இன்றி கடுமையாக விமர்சிப்பதும் அவதூறு பரப்புவதும் மன்னிக்க முடியாத குற்றம்.

உண்மையிலேயே மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அவர்கள் வருந்த வேண்டும்.. மாதம் ஒருமுறை, இருமுறையாகி பின்னர் வாரம் ஒரு முறையும் இருமுறையாகி விட்டதால் பரபரப்புக்காக ஒரு தனிமனிதனையும் அவர் சுய மரியாதையையும் பலி கடா ஆக்க நினைத்தால் அதன் பலனை அவர்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்..
பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று நினைப்பவர்களை, அவர்களுக்கு பண வரவைக் குறைக்கும் வண்ணம் புறக்கணிப்பது, காந்தீய வழியிலான நேர்மையான செயல்..

இதை சொல்லி விட்டு செய்வதுதான் நிச்சயம் சிறப்பு… நமது முயற்சி வெல்லட்டும்..
பூனைகளுக்கு நிச்சயம் மணி கட்டத்தான் வேண்டும்…

அன்புடன்
அக்னி குமாரன்

Friday, November 14, 2008

ஏன் இந்த புறக்கணிப்பு?

நண்பர்களே...

இந்தப் புறக்கணிப்பு தேவைதானா... இவ்வளவு தீவிமாக, பகிரங்கமாக நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டுமா என்று நம்மைக் கேட்ட நண்பர்கள் கூட இப்போது, 'விடக்கூடாது. ஒரு கை பார்த்துவிடலாம் இந்த விஷமிகளை!' என்று சொல்லும்அளவுக்கு நாளுக்குநாள் தங்களைத் தரம் தாழ்த்திக் கொண்டு வருகின்றன இந்த பத்திரிகைகள்.

தினமலர் – விகடன் புறக்கணிப்பு குறித்த ரசிகர்கள் மற்றும் ரசிகரல்லாத வாசகர்களிடமிருந்து தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்தவண்ணமுள்ளன. இவர்களில் சிலருடைய விவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலமும் ரசிகர்கள் - வாசகர்கள் தங்கள் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவை அனைத்துமே ஒருங்கிணைக்கப்பட்டு நாளைய பதிவில் வெளியிடப்படும். இதற்கென்ற தனி பகுதி ஒன்றும் ஒதுக்கப்படும்.

அடுத்து ஒரு விளக்கம்...

தினமலர் – விகடன் புறக்கணிப்பை பகிரங்கமாகக் கோருவதால் அதுகுறித்து சில மிரட்டல் பாணி மின்னஞ்சல்களும், தொலைபேசி எச்சரிக்கைகளும் நமக்குக் வந்துள்ளன. அவர்களின் விவரமும் தனியாகத் தரப்படும்.

நமது நோக்கம் தெளிவானது. தினமலர்- விகடன் குழுமத்துடன் நமக்கு நேரடி மோதலோ, கொடுக்கல் வாங்கலோ கிடையாது!

யார் சம்பந்தப்பட்ட செய்தியாக இருந்தால் என்ன... நடுநிலையாகக் கொடுக்க வேண்டியதுதானே அவர்களின் கடமை...? ஆனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக, பல லட்சம் மக்கள் படிக்கும் ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை மட்டுமே நாம் எதிர்க்கிறோம்.

ரஜினி எதிர்ப்புச் செய்திகளை மட்டுமே அவர்கள் பிரதானப்படுத்துகிறார்கள். ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் எதிராக கருத்துத் திரிப்புகளை வெளியிடுவதில் மட்டுமே தனி கவனம் செலுத்துகிறார்கள். எனவே ரசிகர்கள் சார்பில் காட்டப்படும் காந்தீய வழியிலான எதிர்ப்பு இது.

இது அவர்கள் போட்டுக்கொடுத்த ரூட்டுதான்!

ரஜினி என்பவர் ஒரு சாதாரண நடிகர் அல்ல... சினிமா என்கிற ஒரு தொழிலையே தீர்மானிக்கிற சக்தியாகத் திகழ்பவர். தன்னால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும் அவர், தன் பின்னால் உள்ள மக்கள் சக்தியை ஒருபோதும் சுயநலத்துக்காகப் பயன்படுத்தாதவர். அத்தகைய மனிதருக்கு எதிராக வேண்டுமென்றே இன துவேஷத்தையும், தனிமனித தாக்குதல்களிலும் இவ்விரு பத்திரிகைகளும் இறங்கியதாலேயே, ரசிகர்களின் கோபத்தைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

நாடறிந்த ஒரு நல்ல மனிதரையே இந்த அளவு குறிவைத்து, பாரபட்சமாக செய்தி வெளியிடும் இவர்கள் எப்படி பொதுநலத்துடன் செயல்படுவதாக நம்ப முடியும்... சமூக விரோதிகளுக்கும் இந்த நடுநிலையற்ற பத்திரிகைகளுக்கும் என்ன வித்தியாசம்?

ரசிகர்களின் கோபம் மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் என்பதை இந்த இரு பெரு வியாபாரிகளுமே நன்கு புரிந்தவர்கள் என்பதால் உடனடியாக அவர்களைக் குளிரவைக்கும் முயற்சிகளில் இறங்கக் கூடும்...

பாக்கெட்டை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்!!

-என்வழி

அதான் ரஜினி!

ஜினி அரசியலில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவரைச் சுற்றி அரசியல் இருக்கிறது... என்று சிவாஜி வெள்ளிவிழாவில் கவிஞர் வைரமுத்து சொன்னதன் உண்மை சிலருக்கு இப்போதாவது புரிந்திருக்கும் என நம்புவோமாக...

தன்னைச் சுற்றி இவ்வளவு அரசியல் நடந்தாலும், அதற்குள் தன்னை இழுக்க எவ்வளவோ முயற்சிகள், பகீரதப் பிரயத்தனமாய் தொடர்ந்தாலும் அதற்கு உடனடியாக மயங்கிவிடாத யோகியின் மனது அமையப் பெற்ற தலைவர்கள் மகாத்மா காந்தியைப் போல ஒரு சிலர் மட்டும்தான் இந்த நாட்டில் காணக் கிடைத்திருக்கிறார்கள்.

அப்படி ஒரு உன்னதமான மன நிலைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் ரஜினி என்பதுதான் அவர் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துபவை.

ரசிகர்கள் கட்சி ஆரம்பித்ததற்கு ஒரு எச்சரிக்கைக் கடிதம் எழுதியதில் தொடங்கிய ‘ரஜினி அரசியல் பரபரப்பு’ இந்த ஒரு மாத காலத்துக்குள் சுற்றிச் சுழன்று தமிழகத்தில் புதிய புயலைக் கிளப்பி வருகிறது.

இனி ரஜினியின் 'அரசியல் வாய்ஸ்' எடுபடாது என்று சில ரசிகர்களே கூட அயர்ந்து போய்விட்ட நிலையில், இலங்கைத் தமிழருக்கான உண்ணாவிரதம், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு என கிளம்பிய பரபரப்பு, இப்போது அத்வானி சந்திப்பு வரை வந்திருக்கிறது. அன்று அயர்ந்து போய்க் கிடந்த ரசிகர்கள் எல்லாம் இப்போது, ‘அட நம்ம தலைவர்தான் அடுத்த சிஎம்மாக்கும்...’ என்று அடித்தொண்டையில் சந்தோஷமாய் குரலெழுப்புவதைப் பார்க்க முடிகிறது.

மீடியாவுக்கோ, தங்கள் முகத்திரை கிழிந்து போன கவலை. தமிழ்நாட்டு மக்கள் எதை எழுதினாலும் படிப்பார்கள்தான்... ஆனால் எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை மட்டுமே கணக்கில் கொள்வார்கள்.. மற்றதை குப்பைத் தொட்டிக்கு சொந்தமாக்கி விடுவார்கள் என்ற உண்மை புரியாமல் பொய்யை எழுதியதால் கிடைத்துள்ள அவமானத்தால் வந்துள்ள கவலை அது.

இன்று பாவிகளின் பொய் பிரச்சார சாதனமாகத் திகழும் விஷ விகடன்கள், நாளொரு வண்ணம் பூசிக் கொண்டு சுயத்தை இழந்து நிற்கும் குமுதங்கள், அதல பாதாள சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொய் மலர்கள் எல்லாமே, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற பிரமையில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றன. இவை உளற உளற... அதுவே ரஜினிக்கு நல்ல உரமாக மாறிக் கொண்டு வருகிறது.

மக்களின் இந்த தெளிவு கடைசி வரைத் தொடர வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் விருப்பம்.

சாராயம் குடித்த குரங்கை ஒரு குளவியும் கொட்டினால்... எந்த மாதிரி கிறுகிறுப்பு வருமோ அப்படியொரு போதைதான் அரசியல் அதிகாரம். ரஜினியின் நிலையில், வேறு ஒரு நடிகர்தான் என்றில்லை... வேறு யாராக இருந்திருந்தாலும் இந்நேரம் இந்த போதாக்கு அடிமையாகி தொலைந்தே போயிருப்பார்கள்...

இங்குதான் நாலு பேர் தலைவா என்றால் அடுத்து நான்தான் சிஎம் என்று இவர்களாகவே ஒரு நாற்காலி செய்து தூக்கிக் கொண்டு அலைக்கிறார்களே...

ஆனால் இந்த மனிதரைப் பாருங்கள்.... இவர் தீர்க்கதரிசி... பல தீர்க்கதரிசிகளின் ஆசி பெற்ற தீர்க்கதரிசி. அதுவே அவரை என்றும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வைக்கிறது.

நேற்றைய நிகழ்வையே பாருங்கள்...

அத்வானியின் சிறப்பு அழைப்பாளராக மேடை ஏறிய ரஜினி, அவரிடம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு திரும்புகிறார்.

ஒட்டுமொத்த மீடியாவும் விழாவை விட்டுவிட்டு ரஜினியின் பின்னால் ஓடி வந்து அவரை வழி மறிக்கிறது.

சார் சார் சார்... ஒரே ஒரு கேள்வி சார்... ப்ளீஸ்...ப்ளீஸ்...

நோ..நோ... இப்போ எதுவும் வேணாமே...

சார்... அத்வானியிடம் அரசியல் பேசினீர்களா...?

நோ.. திஸ் ஈஸ் எ கர்ட்டஸி விசிட்... இது மரியாதை நிமித்தமான சந்திப்பு... நத்திங் ஸ்பெஷல்!

சார், நீங்க பிஜேபிக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணுவீங்களா?

ஓ... நோ நோ... அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.

நீங்க கட்சி ஆரம்பிக்கிறதா முடிவு பண்ணிட்டீங்களா சார்..?

ஸாரி... இது தேவையில்லாதது.

-அதான் ரஜினி!

எங்கும் எப்போதும் நிதானமிழக்காத, சுய கட்டுப்பாட்டுடன் கூடிய தலைவர்... இந்த தமிழ்நாடு இதுவரை பார்த்திராத தலைவராக ரஜினி உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.

அவர் எப்போது வேண்டுமானாலும் வரட்டும்... ஆனால் அவர் வரும் நாள் நிஜமாகவே தமிழகத்தின் புதிய அரசியல் கலாச்சாரத்துக்கு, புதிய விடியலுக்கு வழிவகுக்கும் என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி. அந்த நம்பிக்கை நடுநிலையாளர்களுக்கும் மத்திய தர மக்களுக்கும் வந்திருப்பதுதான் விசேஷம்!

குறிப்பு: வழக்கம்போல் இந்தப் பதிவுக்காகவும் விமர்சனக் கணைகளோடு வரும் பதிவர்/வாசகர்களுக்கு...

இங்கே எதையும் நாம் இட்டுக் கட்டிச் சொல்லவில்லை. மிகைப்படுத்தல் இல்லாத ஒரு சமப் பார்வையுடன்தான் இதை எழுத முயற்சித்துள்ளாம். படித்துவிட்டு சில நிமிடம் யோசித்துப் பார்த்து நீங்கள் விமர்சிக்கலாம்.

ஆரோக்கியமான விமர்சனங்களை என்வழி நிச்சயம் அனுமதிக்கும்!
http://www.envazhi.com

Thursday, November 13, 2008

அத்வானி – ரஜினி: எளிமையின் சிகரங்கள்!

ஜினியை அத்வானி சந்தித்ததன் பின்னணி குறித்து இனி ஒவ்வொருவரும் கட்டுக் கதைகளாக எழுதிக் குவிப்பார்கள். நமக்கு அந்த விவரங்கள் வேண்டாம். உண்மை மட்டும்தான் தேவை. ரஜினியைப் போன்ற உண்மையான மனிதர்கள் கட்டுக் கதைகளுக்காக கவலைப்படுவதில்லை.

ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த பின் அத்வானி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், சென்னை வரும்போது வீட்டுக்கு வருமாறு ரஜினி அழைத்தார். எனக்கும் அவரைச் சந்தித்துப் பேசும் ஆவலிருந்தது. அது இன்றுதான் நிறைவேறியது.
ஆண்டவன் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என ரஜினி கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். நான் அவரிடம், ‘உங்கள் நிலைப்பாடு அற்புதமானது. நீங்கள் நிச்சயம் அரசியலுக்கு வருவீர்கள். அதற்கு என் ஆசீர்வாதம்’, என்று கூறினேன். அவரிடம் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டேன், ஆனால் பதில் சொல்லவில்லை, என்று யதார்த்தமாகக் கூறினார்.

சும்மா விடுவார்களா நம்ம காகிதப் புலிகள்...

அதற்குள், ‘அத்வானி ஒன்றும் தானாகப் போகவில்லையாம், ரஜினி வேண்டி வருந்தி அழைத்ததால்தான் போனாராம்’, என எழுதிவிட்டனர்.

அவர்களது பொறாமைத் தீயில் நாளும் அவர்களே வெந்து கொண்டிருப்பதன் கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும்...! இதில் ஒரு அல்ப திருப்தி..!

அத்வானியின் இயல்பு!

ஒரு அரசியல்வாதியாக நாம் அத்வானியைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரது கட்சி மீதோ, அவர்களின் கொள்கை மீதோ நமக்கு பெரிய அபிப்பிராயமும் கிடையாது. ஆனால் அத்வானி நேர்மையாளர் எனப் பெயரெடுத்தவர். எளிமைக்கு மறுபெயர் அத்வானி என்று சொல்லலாம்.

2001-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சமயத்தில் அவரது பேட்டி அவசரமாகத் தேவைப்பட்டது. அப்போது அவர் மத்திய அமைச்சர். அவரைப் பேட்டியெடுக்க அவரது செயலாளரிடம் தொடர்பு கொண்டோம். அடுத்த நாள் நேரில் வருமாறு அவரும் நேரம் ஒதுக்கிவிட்டார்.

ஆனால் டெல்லிக்குச் சென்று பேட்டியெடுத்து திரும்ப வேண்டும். அன்றைய விமானக் கட்டணப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய், இரண்டு நாள் கால அவகாசம் வேண்டும்.

செயலாளரிடம் நிலைமையைச் சொன்னபோது, டெல்லியில் உள்ள வேறு யாராவது ஒரு நிருபரை அனுப்புமாறு மாற்று யோசனை சொன்னார். ஆனால் அன்றைய சிறப்புக் கட்டுரைக்கான அவரது பேட்டி, குறிப்பாக இந்தி சேனலில் அன்றே ஒளிபரப்பாக வேண்டிய கட்டாயம். உடனே அவருக்கு நிலைமையை விளக்கினாம். அடுத்த 30 நிமிடம் கழித்து பேசச் சொன்னார்.

பேசினோம். மறுமுனையில் மாண்புமிகு எல்.கே. அத்வானி!

அத்தனை எளிமை, எளிதில் அணுகும் தன்மை கொண்டவர் அத்வானி. அவர் சூப்பர் ஸ்டாரை தேடி வந்து பார்ப்பதில் எந்த அதிசயமும் இல்லை. மீண்டும் மீண்டும் வரவேண்டியிருந்தாலும் வருவார்...!

மற்றபடி சூப்பர்ஸ்டாரின் இயல்பு பற்றி நாட்டுக்கே தெரியும். யாராக இருந்தாலும் தன்னைத் தேடி வந்துதான் பார்க்க வேண்டும் என்ற ஈகோ இல்லாத மனிதர் அவர்.

‘உங்கள் வீட்டுக்கு வருமாறு முன்பு அழைத்தீர்கள். வர முடியவில்லை. இப்போது சென்னை வருகிறேன். உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா...?’ என்று கேட்கும் இந்தியாவின் பிரதமர் பதவிக்கான பிரதான கட்சியின் வேட்பாளரிடம் அவர் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்?

ரஜினியைப் போன்ற நல்லவர்களின் பெருமையை இங்குள்ள வக்கிரம் பிடித்த அரசியல்வாதிகளுக்கும், நோயுள்ளம் கொண்ட பத்திரிகையாள பாவிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன், அத்வானியை போயஸ் இல்லம் (இனி அரசியலில் போயஸ் இல்லம் என்றால் ரஜினி வீடு என்று பொருள் கொள்க!) போக வைத்தார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இன்னும் எத்தனை சரித்திர சந்திப்புகள் இந்த போயஸ் இல்லத்தில் நடக்கப் போகின்றனவோ!

என்ன சொல்றீங்க!
http://www.envazhi.com

‘பாக்ஸ் ஆபீஸ் பாதுஷா’ ரஜினி!

வெள்ளித்திரையில் மட்டுமல்ல... சின்னத்திரையிலும் கூட தன் படத்தின் நிழலைக் கூட வேறு எந்தப் படமும் தொடமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

இந்த முறை தீபாவளிக்கு தமிழில் வெளியான படங்கள் இரண்டுதான். அவையும் பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லாத நிலையில் வெளியாகின. இதற்குக் காரணம், தீபாவளியை முன்னிட்டு இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ரஜினியின் சந்திரமுகி ஒளிபரப்பாகும் என சன் டிவி அறிவித்திருந்ததுதான். (இதுகுறித்து ஏற்கெனவே, ‘கல்லா கட்டும் சன் டிவி’ எனும் தலைப்பில் நாம் வெளியிட்ட கட்டுரையை நினைவில் கொள்க.)

இதற்குப் போட்டியாக, புதுப் படமான பில்லாவை ஒளிபரப்பப் போவதாக கலைஞர் தொலைக்காட்சி அறிவித்தது. இதுவும் ஒருவிதத்தில் ரஜினியின் படம்தான். அவரது பழைய பில்லாதான் அஜீத் நடித்த இந்தப் புது பில்லா என்பது உலகறிந்த உண்மை. ஆனால் நயன்தாராவையும் நமீதாவையும் முக்கால் நிர்வாணத்தில் நடமாட விட்டு இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்க விடாமல் செய்திருந்தனர்.

தீபாவளியன்று சன் டிவியில் சந்திரமுகி படம் ஒளிபரப்பாகத் தொடங்கியபோது பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்த ரஜினியின் ரசிகர்கள், படம் ஆரம்பித்ததும் பட்டாசு வெடிப்பதையே நிறுத்திவிட்டு படத்தில் மூழ்கிவிட்டதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன.
அந்த வகையில் சந்திரமுகியை ஒளிபரப்பிய சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் யாரும் தொட முடியாத உயரத்துக்கு எகிறியிருக்கிறது.

மும்பையின் TAM நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி சந்திரமுகியை ஒளிபரப்பிய சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் 20.82 ஆக இருந்துள்ளது!
இதே நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சி பில்லா படத்தை ஒளிபரப்பியது. ஆனால் இதற்குக் கிடைத்த டிஆர்பி ரேட்டிங் 4.28 சதவிகிதமே!

இந்தப் புத்தம் புதிய பில்லாவுக்கு ரசிகர்களிடம் இந்த அளவு மோசமான வரவேற்பு கிடைக்கும் என யாரும் நம்பவே இல்லை என்கின்றனர் சின்னத் திரையுலகில்.
ரஜினியின் சந்திரமுகிக்கு அடுத்து அதிக வரவேற்பைப் பெற்ற படம் வேட்டையாடு விளையாடு. இதற்கு கிடைத்த ரேட்டிங் 11.29. அன்று அதே நேரத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மருதமலைக்கு கிடைத்த புள்ளிகள் 7.74.

விளம்பர வருவாய் என்று பார்த்தால் இந்தப் படத்தை வாங்கிய விலையைவிட இருமடங்குக்கும் மேல் சன் தொலைக்காட்சி சம்பாதித்துவிட்டது இந்த ஒரே நாளில்.
இனி இதே படம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பாகும் போதும் கிடைக்கும் தொகை போனஸ் மேல் போனஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிஞ்சிப்பூ போல அரிதாக படங்கள் கொடுத்தாலும் அடுத்த படம் வெளியாகும் வரை தமிழ் பொழுதுபோக்குத் துறையை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பாதுஷா, இந்த ‘பாட்ஷா ரஜினி’தான் என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபணமாகியிருக்கிறது!
http://www.envazhi.com

Wednesday, November 12, 2008

‘நாளைய முதல்வரைச் சந்தித்த பாஜக பிரதமர் வேட்பாளர்’!!

ராகவ வீரா அவென்யூவுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறது அந்தப் பிரபல வீடு. அடுத்த முதல்வர் என அதிமுகவினரும் சில எதிர்க்கட்சிகளும் நம்பும் ஜெயலலிதாதாவின் வேதா இல்லம்தான் அது.

ஆனால் அந்த வீட்டை விட மிக சக்தி மிக்கதாக திகழ்வது ராகவ வீரா அவென்யூவிலிருக்கும் இன்னொரு இல்லம். வாய்மையே வெல்லும் என பொன்னெழுத்துக்கள் தகதகக்கும் அந்த இல்லத்தின் சொந்தக்காரர் யாரென்பது சொல்லாமலே தெரியும்!

இன்று புதன்கிழமை மாலை ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அந்த இல்லத்தில் நடந்த சந்திப்பு மீதுதான் நிலைத்திருந்தது.

ஆம்... பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து அரைமணி நேரத்துக்கும் மேல் அரசியல் பேசினார்!

சென்னையில் இன்று நடந்த அத்வானியின் சுயசரிதை என் நாடு; என் வாழ்க்கை புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அத்வானி முதலில் பார்த்துப் பேச விரும்பியது ரஜினியைத்தான்.

அவரிடம் ஏற்கெனவே ரஜினியின் சமீபத்திய அரசியல் சார்ந்த பேச்சுக்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள அசாதாரண எழுச்சி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே, தனது புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்க வேண்டும் என அத்வானி விரும்பினார். அதை தமிழக பாஜகவினரிடமும் தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த இரு தினங்களுக்கு முன் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து விழாவுக்கு அழைப்பு விடுத்தார் இந்தி நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா.

அவரைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கான பாஜக வேட்பாளரான அத்வானி இன்று போயஸ் கார்டன் சென்றார்.

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் திருநாவுக்கரசர், சோ எஸ். ராமசாமி மற்றும் எஸ். குருமூர்த்தி ஆகிய மூவர்தான்.

இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் என்னவென்று ரஜினி தரப்பில் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் இச்சந்திப்பு குறித்துப் பேசிய திருநாவுக்கரசர், ரஜினியின் அரசியல் பிரவேசம், கட்சி ஆரம்பிக்கும் திட்டம் குறித்து அத்வானி கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.

ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்த அத்வானி கூறுகையில், “இது அரசியல் நிமித்தமான சந்திப்புதான். வருகிற பொதுத்தேர்தலில் ரஜினியின் ஆதரவைக் கோரவே அவரது இல்லம் தேடிச் சென்றேன்....” என்று தெரிவித்தார்.

ஆனால் வெளிப்படையான எந்த ஆதரவையும தன்னால் அளிக்க முடியாது என ரஜினி தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த பிரதமர் எனும் நிலையில் வைத்துப் பார்க்கப்படும் நாட்டின் பெரிய தலாவர் ஒருவரே ரஜினியை வீடு தேடிப்போய் சந்தித்திருப்பது, ரஜினி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘ஒரு வருங்கால முதல்வரை, வருங்கால பிரதமர் சந்தித்திருக்கிறார்...’ என அர்த்தத்துடன் சொல்லி மகிழ்கின்றனர் ரசிகர்கள்.

"மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி இன்றைக்கு ரஜினியிடம் மட்டுமே உள்ளது. காரணம் மாசற்ற கரங்கள், நேர்மையான எண்ணங்களுக்குச் சொந்தக்காரர் ரஜினி. அதனால்தான் இன்று தமிழக அரசியலின் மையப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறார். டெல்லியைப் பொறுத்தவரை இன்றைக்கு கருணாநிதி, ஜெயலலிதாவை விட ரஜினியின் நகர்வுகள்தான் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. இதை நன்கறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்", என்றார் நம்மிடம் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர்.

ஒவ்வொரு தமிழனும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் பெருமை இது!

நிஜமாகவே மகிழ்ச்சியில் மனம் அதிருதுங்கோ!!

http://www.envazhi.com