Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Wednesday, December 17, 2008

இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

நாம் முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்க வேண்டும் என்று 'பக்கா'வாகக் கணித்து வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. எந்த முடிவு எடுப்பதானாலும் கொட்டினோம், கவிழ்த்தோம் என்று பரபரக்கச் செய்ய மாட்டார். நிதானமாக, நன்கு யோசித்துத்தான் முடிவெடுப்பார்…

-ரஜினிக்கு இது யார் கொடுத்த சான்றிதழ் என்று யோசிக்கிறீர்களா...

இப்போது அவரைத் திட்டி எழுதி, தங்களது இருப்பை வெளிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள அதே விகடன் குழுமம்தான்.

நேரத்துக்கு ஒரு பேச்சு, ஆண்டுக்கு ஒரு நிலைப்பாடு என மாறிக் கொண்டே இருக்கும் இவர்கள், எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இயங்கும் ரஜினியை விமரிசிப்பதை என்னவென்று சொல்வது?

மதுரையில் நடந்த ஒரு விழாவில் ரஜினி பங்கேற்றுப் பேசியதை, ரஜினியின் பிறந்த நாளுக்காக தங்களது இலவச இணைப்பில் வெளியிட்டிருந்தனர்.

நியாயமாக இந்த வரிகளை அவர்கள்தான் தினசரி மனப்பாடம் செய்ய வேண்டும். தன் ரசிகர்களுக்கு ரஜினி தந்திருக்கும் இடம் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது விகடன் போன்ற பத்திரிகைகள்தான்.

அன்றும், இன்றும்... ‘என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களே...’ என்றுதான் ரஜினி அழைக்கிறார். இதை அவர் எப்போதும் மறக்கவில்லை. மீடியாதான் இந்த உண்மையை அடிக்கடி மறப்பதும், பின்னர் நினைவுக்கு வந்து தடுமாறுவதுமாக காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறது.

தன் ரசிகர்கள் குறித்து ரஜினி கூறிய வரிகள்:

"மதுரைக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய நட்பு உண்டு. நான் மதுரைக்கு முதன்முதலில் வந்தது 'மூன்று முடிச்சு' பட விழாவுக்கு. இதில் 'மூன்று' உண்டு. அதன்பின் 'திரிசூலம்' படத்தின் வெற்றி விழாவுக்கு வந்தேன். 'திரிசூலம்' - மூன்று சூலம். இதிலும் 'மூன்று' உண்டு.

பிறகு. 'மூன்று முகம்' படத்தின் வெற்றி விழாவுக்கும் வந்தேன். இதிலும் 'மூன்று' உண்டு. மதுரை என்பதிலும் மூன்று எழுத்து. ரஜினி என்பதிலும் மூன்று எழுத்து. இப்படியாக எனக்கும் மதுரைக்கும் நெருங்கிய நட்பு உண்டு.

நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு அதிசயம். அதிலும் கதாநாயகன் அந்தஸ்து பெற்றது பெரிய அதிசயம். அதைவிட, ரசிகர்களாகிய உங்கள் உள்ளங்களை நான் வென்றது மிகப் பெரிய அதிசயம். இந்திப் படங்களில் நடிக்கச் சென்றதும் அதிசயம். அதன்பின் ஆங்கிலப் படத்தில் நடித்தது பேரதிசயம்.

நான் பிறந்தவுடன் டாக்டர்கள், 'இவன் பத்து நாள் கூடத் தாங்க மாட்டான். இறந்துவிடுவான்' என்று சொல்லிவிட்டார்களாம். நான் பிறந்த நட்சத்திரம் என்ன என்று எனக்குத் தெரியாது. 'மூன்று முடிச்சு' விழாவுக்கு வந்திருந்தபோது, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றேன்.

சக நடிகர்களெல்லாம் தங்கள் பிறந்த நட்சத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தார்கள். அர்ச்சகர் என்னிடம் 'உன் நட்சத்திரம் என்ன?' என்று கேட்டார். எனக் குத்தான் தெரியாதே! அப்போது என் நட்சத்திரம் என்ன என்று தெரியாது. இப்போது தெரிந்துவிட்டது'' என்று கூறவும், ரசிகர்கள் 'சூப்பர் ஸ்டார்' என்று உற்சாக மாகக் குரல் கொடுத்தனர்.

ரசிகர்களே என் தெய்வம்!

நான் ஒரு குதிரை மாதிரி. என் கண்மணிகளாகிய நீங்கள் என் மேல் அமர்ந்துள்ளீர்கள். எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குதிரைமேல் சாமியை வைத்து ஊர்வலம் வந்தார்கள். வரும் வழியில் எல்லோரும் வணங்கினார்கள். உடனே குதிரைக்குக் கர்வம் வந்துவிட்டது, எல்லோரும் தன்னை வணங்குகிறார்களே என்று!

கோயில் வந்ததும், சாமியை உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்கள். அப்புறம் யாரும் குதிரையை மதிக்கவில்லை. அதுபோலத்தான் நானும்! ரசிகர்களாகிய நீங்கள் இருக்கும் வரைதான் எனக்கு மரியாதை...!"

ஆக, ரஜினி அன்று சொன்னதை இன்று வரை காப்பாற்றி வருகிறார். ‘தலைவா எங்களுக்காக என்ன செஞ்சீங்க?’ என்று தன் ரசிகன் தன்னை நேருக்கு நேர் பார்த்துக் கேட்கும் அளவு அவர்களை சமமாக நடத்துகிறார். அந்த நேர்மையும் சத்தியமும் ரஜினிக்கு இருக்கிறது.

ஆனால் 15 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கும் தங்கள் வாசகர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி, யார் பக்கமும் சாயாமல், நடுநிலையாகச் சொல்லும் தொழில் தர்மமும், நேர்மையும் விகடனுக்கு இப்போது இருக்கிறதா?

-வினோஜாசன்

www.envazhi.com

Friday, November 14, 2008

ஏன் இந்த புறக்கணிப்பு?

நண்பர்களே...

இந்தப் புறக்கணிப்பு தேவைதானா... இவ்வளவு தீவிமாக, பகிரங்கமாக நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டுமா என்று நம்மைக் கேட்ட நண்பர்கள் கூட இப்போது, 'விடக்கூடாது. ஒரு கை பார்த்துவிடலாம் இந்த விஷமிகளை!' என்று சொல்லும்அளவுக்கு நாளுக்குநாள் தங்களைத் தரம் தாழ்த்திக் கொண்டு வருகின்றன இந்த பத்திரிகைகள்.

தினமலர் – விகடன் புறக்கணிப்பு குறித்த ரசிகர்கள் மற்றும் ரசிகரல்லாத வாசகர்களிடமிருந்து தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்தவண்ணமுள்ளன. இவர்களில் சிலருடைய விவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலமும் ரசிகர்கள் - வாசகர்கள் தங்கள் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவை அனைத்துமே ஒருங்கிணைக்கப்பட்டு நாளைய பதிவில் வெளியிடப்படும். இதற்கென்ற தனி பகுதி ஒன்றும் ஒதுக்கப்படும்.

அடுத்து ஒரு விளக்கம்...

தினமலர் – விகடன் புறக்கணிப்பை பகிரங்கமாகக் கோருவதால் அதுகுறித்து சில மிரட்டல் பாணி மின்னஞ்சல்களும், தொலைபேசி எச்சரிக்கைகளும் நமக்குக் வந்துள்ளன. அவர்களின் விவரமும் தனியாகத் தரப்படும்.

நமது நோக்கம் தெளிவானது. தினமலர்- விகடன் குழுமத்துடன் நமக்கு நேரடி மோதலோ, கொடுக்கல் வாங்கலோ கிடையாது!

யார் சம்பந்தப்பட்ட செய்தியாக இருந்தால் என்ன... நடுநிலையாகக் கொடுக்க வேண்டியதுதானே அவர்களின் கடமை...? ஆனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக, பல லட்சம் மக்கள் படிக்கும் ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை மட்டுமே நாம் எதிர்க்கிறோம்.

ரஜினி எதிர்ப்புச் செய்திகளை மட்டுமே அவர்கள் பிரதானப்படுத்துகிறார்கள். ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் எதிராக கருத்துத் திரிப்புகளை வெளியிடுவதில் மட்டுமே தனி கவனம் செலுத்துகிறார்கள். எனவே ரசிகர்கள் சார்பில் காட்டப்படும் காந்தீய வழியிலான எதிர்ப்பு இது.

இது அவர்கள் போட்டுக்கொடுத்த ரூட்டுதான்!

ரஜினி என்பவர் ஒரு சாதாரண நடிகர் அல்ல... சினிமா என்கிற ஒரு தொழிலையே தீர்மானிக்கிற சக்தியாகத் திகழ்பவர். தன்னால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும் அவர், தன் பின்னால் உள்ள மக்கள் சக்தியை ஒருபோதும் சுயநலத்துக்காகப் பயன்படுத்தாதவர். அத்தகைய மனிதருக்கு எதிராக வேண்டுமென்றே இன துவேஷத்தையும், தனிமனித தாக்குதல்களிலும் இவ்விரு பத்திரிகைகளும் இறங்கியதாலேயே, ரசிகர்களின் கோபத்தைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

நாடறிந்த ஒரு நல்ல மனிதரையே இந்த அளவு குறிவைத்து, பாரபட்சமாக செய்தி வெளியிடும் இவர்கள் எப்படி பொதுநலத்துடன் செயல்படுவதாக நம்ப முடியும்... சமூக விரோதிகளுக்கும் இந்த நடுநிலையற்ற பத்திரிகைகளுக்கும் என்ன வித்தியாசம்?

ரசிகர்களின் கோபம் மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் என்பதை இந்த இரு பெரு வியாபாரிகளுமே நன்கு புரிந்தவர்கள் என்பதால் உடனடியாக அவர்களைக் குளிரவைக்கும் முயற்சிகளில் இறங்கக் கூடும்...

பாக்கெட்டை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்!!

-என்வழி

Wednesday, November 12, 2008

இவர்களுக்குப் புரிய வைப்போம்!


ஒரு வேண்டுகோள்!

நண்பர்களே...

ரஜினியின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்கள் என்ற பட்டப்பெயரை நேர்மையற்ற சில பத்திரிகைகளும், சில 'மனநோயாளி வலைப்பதிவர்களும்' நமக்கு சூட்டிவிட்டன. அதற்காக நாம் வருத்தப்படவில்லை. சந்தோஷமே...
இருக்கட்டும்.

இப்போது உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

ரஜினி எனும் நல்ல மனிதரின் எந்தச் செயலையும் கொச்சைப்படுத்துவது மட்டுமே தங்கள் குறிக்கோள் எனும் நோக்கில் ஆபாச விகடன்களும், தினப் பொய் மலர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளன.

இவற்றை புறக்கணிப்பது மட்டும்தான் அவற்றுக்கு நாம் தரும் பதிலடியாக இருக்க முடியும். ரஜினி பெருந்தன்மையான மனிதர். நிச்சயம் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் எனும் தைரியம் இந்தப் பத்திரிகைகளுக்கும் பதிவர்களுக்கும்.

தமிழை ஒழுங்காக எழுதத் தெரியாத 'அரைவேக்காடு'களும் கூட அவருக்கு திறந்த கடிதம் எழுதி தங்கள் கோணல்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

எனவே இவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை கிடைக்கும்போது கிடைக்கட்டும்... ஆனால் பொருளாதார ரீதியில் ரஜினியின் சமூகம் என்ற பெருமைக்குரிய ரசிகர்கள் ஏற்படுத்தும் இழப்பு என்னவென்பதைக் காட்ட வேண்டிய தருணம் இது. விற்பனையில் குறைந்தது பத்து பிரதிகளைக் கூட்ட வேண்டும் என்றாலும் அதில் உள்ள வலிகள் என்னவென்பது நாம் நன்கு அறிந்ததே.

புறக்கணிப்பு தேவையில்லை என்று கூறும் நண்பர்களும் நமக்குள்ளேயே இருக்கிறார்கள். ரொம்ப நாட்கள் பின்னால் போக வேண்டாம்... குறைந்தபட்சம் 6 மாத காலத்துக்கு முந்தைய குசேலன் வெளியீட்டிலிருந்து நிகழ்ந்தவற்றை யோசித்துப் பார்த்தால் நாம் சொல்வதில் உள்ள நியாயம் புரியும்.

ரஜினி நேரடியாக வந்து நமக்கு உத்தரவாக இதைச் சொல்லப் போவதில்லை. அவரிடம் இதுபற்றி யாரேனும் புகார் தெரிவித்தாலும், ‘பிடிக்கலன்னா விட்டுட்டுப் போயிட்டே இரு கண்ணா... அவங்களை ஏன் பொருட்படுத்தறீங்க...’ என்றுதான் சொல்வார். காரணம் பெருந்தன்மையில் அவர் ஒரு மகானின் மன நிலைக்குப் போய்விட்டவர்.

எனவே இன்றிலிருந்து மேற்கண்ட குழுமங்களின் எந்த வெளியீடுகளையும் வாங்குவதில்லை என உறுதியெடுப்போம். அத்தோடு, இந்த நல்ல பிரச்சாரத்தை முடிந்தவரை இணையத்துக்கு வெளியிலும் செய்வோம்.

ஒரு பத்திரிகையாளனாக இந்த செயலில் நமக்கு ஒரு தயக்கமிருந்தாலும், வணிகத்துக்காக அனைத்து தர்மங்களையும் தூக்கியெறிந்த, யாரோ ஒருவரைத் தூக்கி வைத்துக் கொண்டாட ஒரு நல்லவரைப் புண்படுத்துகிற இவர்களுக்கு எதிராக மக்கள் திரளுகிறார்களோ இல்லையோ, முதலில் ரசிகர்கள் திரளவேண்டிய நேரம் இது.

இந்தப் பத்திரிகைகளைப் புறக்கணித்தவர்கள், விருப்பப்பட்டால் தங்கள் விவரங்களைத் தெரிவிக்கலாம். www.envazhi.com- ல் அவற்றை வெளியிடும் எண்ணமுள்ளது. கூடவே தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம், அவற்றையும் பிரசுரிக்கிறோம்.

எதுவரை இந்தப் புறக்கணிப்பு...?

இந்தப் பத்திரிகைகள் ரஜினியை தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்பதல்ல நம் விருப்பம். குறைந்தபட்ச நடுநிலையுடன் நடந்து கொண்டாலே போதும். அப்படியொரு ஆரோக்கியமான சூழலுக்கு இந்த நோயுற்ற பத்திரிகைகள் திரும்பும் வரை இந்தப் புறக்கணிப்பைத் தொடரலாம்.

‘நீ சொல்லி நாங்க என்ன செய்யறது... அது எங்கள் விருப்பம்...’ என்று வாதிடுபவர்கள், அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் பத்திரிகை தர்மம் பேசும் நண்பர்கள் இந்த வேண்டுகோளைப் படிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இது அவர்களுக்கல்ல!

நன்றி!!
www.envazhi.com


குறிப்பு: புறக்கணிப்பு மற்றும் சந்தா நிறுத்திய விவரங்களை envazhi@gmail.com எனும் இமெயில் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கருத்துக்களை புகைப்படங்களோடும் அனுப்பலாம்.
படங்கள்: சுந்தர்

Sunday, August 24, 2008

இது ‘விகட’ துவேஷம்!


பத்திரிகைகளைத் திட்டுவதல்ல நமது நோக்கம். உலகத்தின் அழுக்குகையெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட முயல்வதாகக் கூறிக்கொள்ளும் அவர்களின் உள்ளழுக்குகள் பற்றி அவ்வப்போது சுட்டிக் காட்டி நம்மைநாமே விழிப்பாக்கிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

கமர்ஷியல் – (போலி) அறிவு ஜீவித்தனம் இந்த இரண்டின் சரிவிகித கலவையாக்கும் நாங்கள் என மார்தட்டிக் கொள்ளும் விகடன் குழுமத்தில் உள்நீரோட்டம் போல மாறாமல் இருப்பது அவர்களின் கேவலமான ஜாதி வெறுப்புணர்வு!

வெளியிலிருந்து பார்க்கும் போதும், அவர்கள் தரும் அசைவ உணவுக் குறிப்புகள், தலித் இலக்கிய பீத்தல்களைப் படிக்கும்போதும், ‘என்னய்யா சொல்ற... அவங்க ரெம்ப்ப்ப நல்லவங்களாச்சே...’ என உங்களுக்கும் சொல்லத் தோன்றும்.

எரிகிற கொள்ளியில் இவர்கள் நல்ல கொள்ளிகள்...!
அப்படி வேண்டுமானால் சமாதானப்பட்டுக் கொள்ளுங்கள்.

ஆரம்ப நிலையில், திறமைகள் மொட்டவிழும் தருவாயில் உள்ள பலரையும் இவர்களின் குழுமப் பத்திரிகைகள் மட்டம் தட்டியே வந்திருக்கின்றன. அதே நபர்கள் மேலெழுந்து ஒரு சமூக அந்தஸ்தை எட்டிவிட்டால், அவர்களின் அறிவிக்கப்படாத பிஆர்ஓவாக செயல்படவும் துணிந்து விடும் மானமுள்ளவர்கள் இவர்கள்.

அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி சொல்லவில்லை. அண்ணாமலையில் அரசியல்வாதி ஒருவரை எதிர்த்துப் பேசினார். அதை ஊதி ஊதிப் பெரிதாக்கி சர்க்குலேஷனைப் பெருக்கி காசு பார்த்தனர்.

ரஜினி செய்தது சரியா என்று கேட்காதீர்கள்... அதை அலசும் தருணமும் இதுவல்ல.
அடுத்து இளையராஜா.

தமிழ் சினிமாவின் போக்கையே தலைகீழாக மாற்றிக் காட்டிய பெருமைக்குரியவர். அவரது அறிமுகப் படம் அன்னக்கிளி.

அன்னக்கிளி என்னும் படம் யாருக்காக ஓடியது என்று கேட்டால் இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தை கூடச் சொல்லவிடும்.

அந்தப் படம் தயாராகும் போது பஞ்சு அருணாச்சலத்துக்குப் பெயரே ‘பாதிப் படம் பஞ்சு’ என்பதுதான். அதாவது அவர் எடுக்கிற படம் பாதியிலேயே நின்றுவிடுமாம். அதனால் அப்படியொரு பெயர்.

ஆனால் கஷ்டப்பட்டு முழுசாகவே எடுத்து முடித்து திரையிட்டார் அன்னக்கிளியை. முதல் சில வாரங்கள் படம் படு சுமாராகத்தான் போனது. பல திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள்.

அப்போதுதான் கல்யாண வீடுகள், திருவிழா கோயில்களில் மச்சானைப் பாத்தீங்களா... எனும் தெம்மாங்குப் பாட்டு சக்கை போடு போடத் துவங்கியது. அடுத்த வாரமே படத்தின் தலைவிதி மாறிப்போனது. பிளாக் பஸ்டர்!

அந்தப் படத்துக்கு விகடன் எழுதியுள்ள விமர்சனத்தைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

‘இவ்வளவு கேவல எண்ணம் கொண்ட நீங்கள்தானா உங்களை தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்...?’ எனக் கேட்டுத் துப்பி விடுவீர்கள்.

அந்தப் படத்தின் விமர்சனத்தில் எங்குமே இளையராஜாவின் பெயரே கிடையாது. அட குறாந்தது.. 'இந்தப் படத்துக்கு இசை யாரோ ஒரு புது இசையமைப்பாளர் இளையராஜாவாம்', என்று கூடப் போடவில்லை.

நல்லவேளை இதற்கு ஆதாரம் தேடும் சிரமம் கூட வைக்காமல், அவர்களே மலரும் நினைவுகள் எனும் பெயரில் குட்டி இணைப்பு வெளியிட்டு ‘எங்கப்பன் குதிருக்குள்தான் இருக்கான்’ என்று உறுதிப்படுத்தி விட்டார்கள்.

அவர்கள் கவனக்குறைவுக்கு நன்றி!

ஆனால் இன்றைக்கு, இளையராஜாவுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ இந்தப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரும், அதோ பத்திரிகையின் ஒரு புகைப்படக்காரரும்தான்.
இவர்கள் சொல்லாமல் யாருக்கும் பேட்டி கூடத் தரமாட்டார் ராஜா என்ற அளவுக்கு அழுத்தமான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டாரகள். (தன்னை மனதளவில் ஒரு பிராமணராகவே இளையராஜா மாற்றிக் கொண்டதன் விளைவு இது என்றும் சொல்லலாம். அதுபற்றி வேறொரு சமயத்தில் பேசலாம்...!)

சிம்பனி, திருவாசகம் ஆரட்டோரியோவுக்கு இளையராஜா பணம் வாங்கினாரோ இல்லையோ... அந்த செய்தியை ஆவி, ஜூவிகளில் முடிந்தவரை தலைப்புச் செய்தியாக்கி நன்கு காசு பார்த்தவர்கள் இவர்கள்தான்.
இப்படி அவமானப்படுத்தி, பின்னர் இவர்களால் அரணைவனைக்கப்பட்ட கொண்ட மேதைகள் ஒருவரல்ல இருவரல்ல.. இன்னும் நிறைய.

வானத்தின் கீழே... அந்தப் பட்டியல் தொடரும்!