Sunday, August 24, 2008

இது ‘விகட’ துவேஷம்!


பத்திரிகைகளைத் திட்டுவதல்ல நமது நோக்கம். உலகத்தின் அழுக்குகையெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட முயல்வதாகக் கூறிக்கொள்ளும் அவர்களின் உள்ளழுக்குகள் பற்றி அவ்வப்போது சுட்டிக் காட்டி நம்மைநாமே விழிப்பாக்கிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

கமர்ஷியல் – (போலி) அறிவு ஜீவித்தனம் இந்த இரண்டின் சரிவிகித கலவையாக்கும் நாங்கள் என மார்தட்டிக் கொள்ளும் விகடன் குழுமத்தில் உள்நீரோட்டம் போல மாறாமல் இருப்பது அவர்களின் கேவலமான ஜாதி வெறுப்புணர்வு!

வெளியிலிருந்து பார்க்கும் போதும், அவர்கள் தரும் அசைவ உணவுக் குறிப்புகள், தலித் இலக்கிய பீத்தல்களைப் படிக்கும்போதும், ‘என்னய்யா சொல்ற... அவங்க ரெம்ப்ப்ப நல்லவங்களாச்சே...’ என உங்களுக்கும் சொல்லத் தோன்றும்.

எரிகிற கொள்ளியில் இவர்கள் நல்ல கொள்ளிகள்...!
அப்படி வேண்டுமானால் சமாதானப்பட்டுக் கொள்ளுங்கள்.

ஆரம்ப நிலையில், திறமைகள் மொட்டவிழும் தருவாயில் உள்ள பலரையும் இவர்களின் குழுமப் பத்திரிகைகள் மட்டம் தட்டியே வந்திருக்கின்றன. அதே நபர்கள் மேலெழுந்து ஒரு சமூக அந்தஸ்தை எட்டிவிட்டால், அவர்களின் அறிவிக்கப்படாத பிஆர்ஓவாக செயல்படவும் துணிந்து விடும் மானமுள்ளவர்கள் இவர்கள்.

அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி சொல்லவில்லை. அண்ணாமலையில் அரசியல்வாதி ஒருவரை எதிர்த்துப் பேசினார். அதை ஊதி ஊதிப் பெரிதாக்கி சர்க்குலேஷனைப் பெருக்கி காசு பார்த்தனர்.

ரஜினி செய்தது சரியா என்று கேட்காதீர்கள்... அதை அலசும் தருணமும் இதுவல்ல.
அடுத்து இளையராஜா.

தமிழ் சினிமாவின் போக்கையே தலைகீழாக மாற்றிக் காட்டிய பெருமைக்குரியவர். அவரது அறிமுகப் படம் அன்னக்கிளி.

அன்னக்கிளி என்னும் படம் யாருக்காக ஓடியது என்று கேட்டால் இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தை கூடச் சொல்லவிடும்.

அந்தப் படம் தயாராகும் போது பஞ்சு அருணாச்சலத்துக்குப் பெயரே ‘பாதிப் படம் பஞ்சு’ என்பதுதான். அதாவது அவர் எடுக்கிற படம் பாதியிலேயே நின்றுவிடுமாம். அதனால் அப்படியொரு பெயர்.

ஆனால் கஷ்டப்பட்டு முழுசாகவே எடுத்து முடித்து திரையிட்டார் அன்னக்கிளியை. முதல் சில வாரங்கள் படம் படு சுமாராகத்தான் போனது. பல திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள்.

அப்போதுதான் கல்யாண வீடுகள், திருவிழா கோயில்களில் மச்சானைப் பாத்தீங்களா... எனும் தெம்மாங்குப் பாட்டு சக்கை போடு போடத் துவங்கியது. அடுத்த வாரமே படத்தின் தலைவிதி மாறிப்போனது. பிளாக் பஸ்டர்!

அந்தப் படத்துக்கு விகடன் எழுதியுள்ள விமர்சனத்தைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

‘இவ்வளவு கேவல எண்ணம் கொண்ட நீங்கள்தானா உங்களை தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்...?’ எனக் கேட்டுத் துப்பி விடுவீர்கள்.

அந்தப் படத்தின் விமர்சனத்தில் எங்குமே இளையராஜாவின் பெயரே கிடையாது. அட குறாந்தது.. 'இந்தப் படத்துக்கு இசை யாரோ ஒரு புது இசையமைப்பாளர் இளையராஜாவாம்', என்று கூடப் போடவில்லை.

நல்லவேளை இதற்கு ஆதாரம் தேடும் சிரமம் கூட வைக்காமல், அவர்களே மலரும் நினைவுகள் எனும் பெயரில் குட்டி இணைப்பு வெளியிட்டு ‘எங்கப்பன் குதிருக்குள்தான் இருக்கான்’ என்று உறுதிப்படுத்தி விட்டார்கள்.

அவர்கள் கவனக்குறைவுக்கு நன்றி!

ஆனால் இன்றைக்கு, இளையராஜாவுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ இந்தப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரும், அதோ பத்திரிகையின் ஒரு புகைப்படக்காரரும்தான்.
இவர்கள் சொல்லாமல் யாருக்கும் பேட்டி கூடத் தரமாட்டார் ராஜா என்ற அளவுக்கு அழுத்தமான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டாரகள். (தன்னை மனதளவில் ஒரு பிராமணராகவே இளையராஜா மாற்றிக் கொண்டதன் விளைவு இது என்றும் சொல்லலாம். அதுபற்றி வேறொரு சமயத்தில் பேசலாம்...!)

சிம்பனி, திருவாசகம் ஆரட்டோரியோவுக்கு இளையராஜா பணம் வாங்கினாரோ இல்லையோ... அந்த செய்தியை ஆவி, ஜூவிகளில் முடிந்தவரை தலைப்புச் செய்தியாக்கி நன்கு காசு பார்த்தவர்கள் இவர்கள்தான்.
இப்படி அவமானப்படுத்தி, பின்னர் இவர்களால் அரணைவனைக்கப்பட்ட கொண்ட மேதைகள் ஒருவரல்ல இருவரல்ல.. இன்னும் நிறைய.

வானத்தின் கீழே... அந்தப் பட்டியல் தொடரும்!

12 comments:

Anonymous said...

Excellent. I'm read vikatan/JV regularly and their standards have become very low. See the latest, they have a biased survey about Rajini and all the choices show Rajini in badlight. So they will print another edition with survey results. Mark my words it will say "Athirchiuttum survery".

Keep up your good work.

அது சரி said...

உங்கள் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு.
நீண்ட காலமாக விகடன் படித்தவன் நான். ஆனால், இப்பொழுதெல்லாம், எரிச்சலாக இருக்கிறது.

ரஜினி தம்மடித்தால், "அன்புமணிக்கு எதிராக சீறும் ரஜினி" என்றும், தம்மடிக்காவிட்டால், "பா.ம.க வுக்கு ரஜினி ஆதரவு" என்றும், தங்களுக்கு தேவையான செய்திகளை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறமை மிக்கது விகடன் நிறுவனம்.

அவர்கள் செய்திகளை சேகரிப்பது இல்லை. தாங்களே உருவாக்கி கொள்கிறார்கள்!

Anonymous said...

Hi friend,
Recent Vikatan vesham is now they are conducting a Survey on "Rajininow", ithila enna rajini's image has gone low nnu solvanga. Frankly, the media should be sued by people then these useless will have their tails tightly to their back with responsibility.

மாயவரத்தான் said...

//விகடன் குழுமத்தில் உள்நீரோட்டம் போல மாறாமல் இருப்பது அவர்களின் கேவலமான ஜாதி வெறுப்புணர்வு!
//

Sorry, I didnt expect this false news from you. This is not true as you can easily see from the editorial board members there.

கிரி said...

போட்டு தாக்குங்க :-)

//அது சரி said...
அவர்கள் செய்திகளை சேகரிப்பது இல்லை. தாங்களே உருவாக்கி கொள்கிறார்கள்!//

:-)))))))))

Vaanathin Keezhe... said...

கருத்துக்கு நன்றி...

ஆனால் நான் சொல்வது உண்மை என்பதற்கான பல ஆழமான ஆதாரங்களை இனி ஒவ்வொன்றாகத் தருகிறேன். பின்னர் சொல்லுங்கள்!!

Anonymous said...

Kumudam's Annakili vimarasinathila kooda Ilayarajavai paththi oru vaarthaiyum illai. Adhukku enna sappaikattu solluveenga?

Vaanathin Keezhe... said...
This comment has been removed by the author.
Vaanathin Keezhe... said...

கருத்துக்கு நன்றி...

விகடனை அந்த அளவு நம்புகிறீர்களா... குட்!

குமுதம் குழுமம் - நாம் விவாதிக்கும் அளவுக்கு தரமானவர்கள் அல்ல. ஊழியர்கள் ஒண்ணுக்குப் போவதைக் கூட சிசி கேமராவில் கண்காணிக்கும் நல்லவர்கள்.

குமுதம் எப்போதும் குப்பை - சுஜாதா அங்கிருந்த நாட்கள் தவிர.

அவர்கள் இளையராஜாவைத் திட்டியதும் தெரியும், இன்று அவர் காலைச் சுற்றிச் சுற்றி வந்து 'ஆஹா...' என ஆனந்த ஆராதனை செய்வதும் தெரியும்!

Thanjavurkaran said...

நாயகன் படத்து விமர்சனம் பாக்கணுமே. படத்தின் ஜீவா நாடியே இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் தான்.
ஆனால் இயக்கம், நடிப்புக்கு முன்னால் பாவம் இளையராஜா அமுங்கிபோய்விட்டார் என்று விமர்சனம் செய்திருந்தனர் பன்னாடைகள். முதல் காரணம் மதன் பன்னாடை.
மணிரத்னம் காலி பெருங்காய டப்பா என்று தளபதி பட விமர்சனத்தில் குறிப்பிட்டதுக்காக அவர் வீடு தேடி பொய் மன்னிப்பு கேட்டது இந்த பன்னாடை.

இப்பவும் ஒரு டிவில விமர்சனம் பண்ணி மற்ற சேனல்களின் rating ஐ ஏற்றிவிடுது.

பாவம் Vijay TV

Anonymous said...

பல்டி, ஈனப்பிறவி - இதுக்கு அர்த்தம் தெரியணுமா? இதப்பாருங்க! ( இது ஒக்கெநக்கல் பிரச்சனைக்கு கொந்சம் முன்னாடி எடுத்தது தான். ஈனப்பிறவிகளும் மனிதபிறவிகளும் இத பார்க்கணும் ) http://www.youtube.com/watch?v=Im7jacsKVR8

Shankar said...

நண்பரே.. உங்கள் கருத்தில் அர்த்தம் உள்ளது. ஆனால் நீங்கள் சாதிய ரீதியிலே இதை பார்ப்பது சற்று வேதனையை தருகிறது. அப்படி என்றால் நக்கீரன் , தினகரன் போன்ற பத்திரிக்கைகளும் இவ்வாறு தான் உள்ளன. இதில் துக்ளக் விதிவிலக்கு என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே இதில சாதி என்பதை விட பணம் மற்றும் சந்தர்ப்பவாதமே முக்கியத்துவம் பெறுகிறது! நன்றி. உங்கள் கட்டுரைகள் , முக்கியமாக திரு.ரஜினி பற்றிய அனைத்தும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி

ஷங்கர்