Thursday, August 7, 2008

ரோபோ படப்பிடிப்பு ஹாலிவுட்டில் துவக்கம்!!


ஷங்கர் இயக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிரமாண்ட படமான ரோபோ ஆகஸ்ட் 10-ம் தேதி அமெரிக்காவில் துவங்குகிறது.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகிற 9-ம் தேதி இரவு அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்.

தமிழ்ப் படம் ஒன்று படப்பிடிப்புடன் ஹாலிவுட்டில் துவங்குவது இதுவே முதல்முறை.
ரஜினி-ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க, ரூ.150 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமாய் உருவாகும் ரோபோ திரைப்படத்தை அய்ங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஷங்கர் இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் நேரடியாகத் தயாராகும் ரோபோ ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மெழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது.
இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் போட்டோ செஷன்கள் முடிவடைந்துவிட்டன.

குசேலன் படம் வெளியான கையோடு, ரோபோவின் படப்பிடிப்பு துவங்கும் என ரஜினி அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த வாரம் குசேலன் வெளியானதும், ரோபோ படப்பிடிப்பு துவங்கும் தேதியை அறிவித்துள்ளனர் ரஜினியும் இயக்குநர் ஷங்கரும்.

ஹாலிவுட் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரோபோவின் படப்பிடிப்பு வரும் 10-ம் தேதியன்று துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் சனிக்கிழமை இரவு அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார். அவருடன் இம்முறை அவரது மனைவி லதா மற்றும் மகள் சவுந்தர்யா ஆகியோரும் அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார்கள்.

தனது உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு ஐஸ்வர்யா ராய் நேரடியாக ரோபோ படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

முதல் கட்டமாக பிரமாண்ட பாடல் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டுடியோக்களிலும் ரோபோ படமாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் ஹாலிவுட்டில் நேரடியாகப் படமாகும் முதல் தமிழ் திரைப்படம் எனும் பெருமை ரோபோவுக்குக் கிடைக்கிறது.

ரோபோ படப்பிடிப்பு குறித்து நேற்று ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:
வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி அமெரிக்காவில் துவங்குகிறது ரோபோ படப்பிடிப்பு. மிகப் பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படம் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு பெருமை தருவதாக அமையும். இதன் படப்பிடிப்புக்காக வரும் சனிக்கிழமை மாலை நான் அமெரிக்கா புறப்படுகிறேன், என்றார்.

தட்ஸ்தமிழிலிருந்து....

No comments: