Wednesday, August 13, 2008

குசேலன் வசூல்– மகிழ்ச்சியில் அமெரிக்க வினியோகஸ்தர்கள்!


குசேலன் பற்றி இந்த வலைப்பூவில் வந்த அத்தனை தகவல்களும் நாம் நேரில் பார்த்து, அல்லது உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு வெளியிடப்படுபவை. ரஜினி ரசிகர்களை ‘ஏத்திவிடு’வதற்காக எழுதப்படுபவை அல்ல... கீழ் வரும் கட்டுரையைப் படிக்கும்போது இதை மனதில் கொண்டே படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்!

நண்பர்களுக்கு இன்னுமொரு சந்தோஷ செய்தி...

குசேலனை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வெளியிட்ட பிரமிட் சாய்மிராவின் கிளை நிறுவனங்களும், அவர்களிடமிருந்து SUB LEASE முறையில் வாங்கிய மற்ற விநியோகஸ்தர்களும் சந்தோஷத்திலிருக்கிறார்கள்.

இருக்காதா பின்னே...

ஒரே வாரத்தில் போட்ட பணம் திரும்பக் கிடைத்துவிட்டால் சந்தோஷப்படாமல் என்ன செய்வார்கள்! அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் குசேலனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்தியர்கள் அல்லாதவர்களும், இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது... ஏன் இந்த இந்தியர்கள் இந்த நடிகருக்காக கைக் காசை இவ்வளவு செலவழிக்கிறார்கள்... எனத் தெரிந்து கொள்வதற்காகவே, தியேட்டருக்கு வந்து படம் பார்த்து பின்னர் நெகிழ்ந்து போய் திரும்பினார்களாம்.

இந்தியாவைப் போல, ஒரு படத்தின் வெற்றியை 100 நாட்கள் அளவு வைத்து அங்கே மதிப்பிடுவதில்லை. குசேலன் வெளியாகி 12 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் பல அமெரிக்கத் திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டுதானிருக்கிறது.
இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் நல்ல வசூல்தான் என பிரமிட் சாய்மிரா நிறுவன முக்கிய அதிகாரி நம்மிடம் தெரிவித்தார்.

இந்தப் படம் திரையிட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே விநியோகஸ்தர்களின் முதலீட்டுப் பணம் திரும்பக் கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இப்போது அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் லாபம்தான்.

இதை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களே பிரமிட் சாய்மிராவுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

வளைகுடா உரிமையை வாங்கிய நாக்ரவி மட்டும்தான் குசேலன் பற்றிக் குறை கூறி இருக்கிறார். சிவாஜிக்கும் இவர் இதே பல்லவியைத்தான் பாடினார். உண்மை என்னவென்பதை அவர்களாகவே ஒப்புக் கொண்டால்தான் உண்டு!

கர்நாடக உரிமையை வாங்கிய நிரஞ்சன் கூட, படத்துக்கு இரண்டாவது வாரத்தில் எதிர்பார்த்த மாதிரி கூட்டம் சேரவில்லை என்று கூறினாரே தவிர, இந்தப் படம் தனக்கு நஷ்டம் என்று கூறவில்லை. காரணம் அவரது முதலீடு, இந்தப் படத்தின் விற்பனை உரிமையோடு ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவு. இந்நேரம் அந்தக் கலெக்ஷனை அவர் எடுத்திருக்கக் கூடும் என்கின்றன சாய்மிரா நிறுவன தகவல்கள் (இவர்களை ஒரேயடியாக நம்பிவிடவும் முடியாது. ஏன் என்பதற்கான பதிலை அடுத்த பதிவில் பார்க்க!).

ரஜினியின் படங்கள் ஷேர் மார்க்கெட் அல்ல... எந்த நேரத்திலும் என்ன விபரீதம் வேண்டுமானாலும் நடக்க. அவை நிலத்தின் மேல் செய்யப்படும் முதலீடுகள் மாதிரி. எப்பவும் மதிப்பு கூடிக்கிட்டேதான் இருக்கும்!
ரஜினியின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல... அவரது எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் உண்மை இது.

மற்றபடி, இந்த சீஸனில் ரஜினி பற்றி வந்த, இன்னும் வந்து கொண்டிருக்கும் பல அபாண்டங்களுக்கு, காலம் பதில் செல்லும்!

2 comments:

Anonymous said...

Hi,
Nice Post. Hope soon all the negative reviews about Kuselan box office collections will blown away. 1 question to Naq ravi, if he does got gain in Sivaji, why the hell he buy Kuselan? He is one fraud guy who caught red handed while trying to pirate the movie some time back in chennai, I forget the film name. Keep up the good work and provide more details about thalaivar

Regards,
Jay

Vaanathin Keezhe... said...

Yes... of course. These guys should be removed from Kollywood for the sake of Cinema!
Thank you for your Valid Comment and continue!