Thursday, August 28, 2008

ஆகஸ்ட் என்றாலே சோதனையா?


ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்த ராசிதான் குசேலனுக்கு இவ்வளவு சோதனைகளைத் தந்து விட்டது என பத்திரிகைகள் இஷ்டத்துக்கும் எழுத, ரஜினியின் ரசிகர்களே கூட அதைப் பெரிதும் நம்பிவிட்டனர்.

செண்டிமெண்டிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் திரையுலகினரைப் பற்றி கேட்க வேண்டுமா... அவரவர் தங்கள் பங்குக்கு, ‘ரஜினி சார்கிட்ட அப்பவே சொன்னோம்...’ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

ஓரிரு பொது மேடைகளிலும் கூட இதைப் பற்றி பேசிவிட்டார்கள். தங்கள் வாதங்களுக்கு ஆதாரமாக 2002, ஆகஸ்ட் 14-ம் தேதி வந்த பாபா சந்தித்த சோதனைகளைச் சுட்டிக் காட்டவும் செய்தார்கள்.

ஆனால் அந்த பாபா, கிட்டத்தட்ட 105 திரையங்குகளில் 50 நாட்கள் ஓரளவு நல்ல கூட்டத்துடனேயே ஓடியது. சென்னை மதுரையில் 8 திரையரங்குகளில் 100 நாள் ஓடியிருக்கிறது. ரஜினியின் தோல்விப் படம் என்று கூறப்படுவது கூட 100 நாள் படம்தான் என்பதை என்னவென்று சொல்வது!

சரி... உண்மையாகவே சூப்பர் ஸ்டாருக்கு ஆகலஸ்ட் மாதம் என்றாலே ஆகாதா... என்ற நினைப்போடு அவரது படங்கள் வெளியான தேதிகளைப் பார்த்தோம்.
அட... ஆகஸ்ட் மாதம் வெளியான ரஜினியின் பல படங்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. பெரும் திருப்பு முனைகளைத் தந்துள்ளன என்பதை நிறைய பேருக்கு நினைவுபடுத்தவே இந்தப் பதிவு.

ரஜினியின் முந்தைய ஆகஸ்ட் வெளியீடுகள் குறித்த ஒரு சில தகவல்கள்...

கிட்டத்தட்ட குசேலனைப் போலவே ரஜினி ரஜினியாகவே நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் வெளியானது 1984, ஆகஸ்ட் 2-ல். படம் பெரிய வெற்றி.

1982 ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான எங்கேயோ கேட்ட குரல், மிகப் பெரிய வெற்றி. சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. ரஜினிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருதைப் பெற்றுத் தந்தது.

1981-ல் ரஜினி நடித்த இரு படங்கள் வெளிவந்துள்ளன. ஆகஸ்ட் 14-ல் கர்ஜனையும், 15-ம் தேதி நெற்றிக்கண்ணும் வெற்றிப் படங்களே.

ஆகஸ்ட் 15, 1980-ல் வெளிவந்த ஜானி, இரட்டை வேட நடிப்புக்கு புதிய இலக்கணம் எழுதியது. தமிழ் தெரியாதவர்கள் கூட ரசித்துப் பார்த்த ‘க்ளாஸிகல் ப்ளாக் பஸ்டர்’ அந்தப் படம்.

அட அவ்வளவு ஏன்... ரஜினி என்ற சூப்பர்ஸ்டாரை தமிழ்ப் படவுலகத்துக்குத் தந்த அபூர்வ ராகங்கள வெளியானது கூட 1975 ஆகஸ்ட் 18-ம் தேதிதான்.

அதனால் தேதியில் என்ன இருக்கு... படத்தின் சேதியில்தான் விஷயமிருக்கு. அப்படியே சேதி நன்றாக இருந்தாலும், அதைச் சுற்றி எழுப்பப்படும் சதி வலைகளைத் தாண்டி படம் ஓடும்போதுதான் வெற்றி உறுதியாகிறது.

குசேலனைச் சுற்றி கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒருவரல்ல... இருவரல்ல... ஓராயிரம் எதிரிகள்.

படம் பற்றி வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்ட புரளிகள், ரஜினி என்ற மாபெரும் நடிகரின் இமேஜைக் குலைக்க அசுர பலத்துடன் களமிறங்கிய மீடியாக்கள்... கிடைத்த இடைவெளியில் தங்கள் வக்கிரம் தீர்த்துக்கொண்ட அஞ்ஞானிகள், பார் மேதாவிகள், அந்துமணிகள், சதிவிகடன்கள், பொய்யையே பிழைப்பாய் கொண்ட மாறன் டிவிக்கள்...

- இவர்களையெல்லாம் தாண்டித்தான் இன்றைக்கு ஒரு படம் ஜெயித்தாக வேண்டும்.
இந்த தீய சக்திகளுக்கு எதிராகப் போராட மிகப் பெரிய சக்தியை ரஜினி போன்ற நல்ல மனிதர்களுக்கு இறைவன் அருளட்டும்!

10 comments:

Shankar said...

நன்றி. மிக அருமையான கட்டுரை. இத்தீய சக்திகளை , தலைவர் ஊதித் தள்ளிவிடுவார்.

Anonymous said...

Do you know your mother's birthday?
Currently, do you know who is the best industrialist in India or TN?
How does it going matter to you or your readers about this August sentiment of R's films?

Will you die if you do not watch any R film? Curios to know. Or do you work as his PRO in tamilmanam? How much do you get paid?

Anonymous said...

Friend,
Beautiful analysis Kudos the photo with caption is fantastic. I believe we can design such ecards and charge to help few in the ocean in need.

Anonymous said...

PANNINGA EPPAVUM KOOTAMATHAAN VARUM SINGAM SINGLE- AGA JAIYIKKUM

Raja said...

இதெல்லாம் தெரிஞ்சு தான் தலைவர் இந்த மீடியா வியாபாரிகளை கணடு கொள்வதில்லை. இப்ப மக்களும் கண்டு கொள்வதில்லை. இதுல சென்டிமெண்ட் பாக்குற கூட்டம் எல்லாம் அறிவாளிகளாம்

Vaanathin Keezhe... said...

Do you know your mother's birthday?
Currently, do you know who is the best industrialist in India or TN?
How does it going matter to you or your readers about this August sentiment of R's films?

Will you die if you do not watch any R film? Curios to know. Or do you work as his PRO in tamilmanam? How much do you get paid?
----------------------------------

உங்கள் கருத்துக்கு நன்றிங்க...

ஒரு நல்ல நடிகரை ரசிக்க, நல்ல மனிதரைப் புகழ, நீங்கள் குறிப்பிட்டுள்ள எதுவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை.

ரஜினிக்கு எதிரான கருத்துக்களைப் பரப்ப நீஙகள் யாரிடம் காசு வாங்குகிறீர்கள்?

குரங்கு கையில் பூமாலை என்பார்களே... அதற்குச் சரியான உதாரணம் தமிழன்தான்.

தான் விரும்பி ரசித்த பூவையே பின்னர் கசக்கிப் பார்த்து மீண்டும் முகர்ந்து பார்க்கும் வக்கிர புத்திக்காரர்களுக்குப் பெயர்தான் தமிழன் என்றால் இப்படி ஒரு காட்டி மிராண்டிக் கூட்டத்திலிருந்து விலகி நிற்க விரும்பும் சாதாரண ஆசாமி நான்.

எனக்குப் பிடித்ததை நான் எழுதுகிறேன். அது உங்களுக்கும் பிடி்ததிருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே...

கருத்து தெரிவித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

ரஜினிக்கு பத்திரிகைகள் பிடிக்கும். பத்திரிகையாளர்களைத்தான் பிடிக்காது, பெரும்பாலும் அவர்கள் பச்சோந்திகளை விட சீக்கிரம் நிறம் மாறுபவர்கள் என்பதால்!

Anonymous said...

In Gujarat, every youth is carrying the foto of Dhirubhai in his pocket with the dream of making great like him in his life.

I do not want to talk about TN.
RK is just an image created by the media and his fans. How do we know that he is good person / or good actor?? Let him act in some really negative role and we can find out.
Can he act in a role like Auto Shankar / Veerappan or a Psychotic mass murderer or Child rapist?
He will not. RK is just an image created and ballooned by the media. This image or icon is worshipped by his "FANS"...

Real Rajini has to be identified far away from the images created by the media and his fans.

Can you tell me one place except TN, which worships its actors/ actresses?

Can you tell me one place where people mass suicide even for the death of some small time actresses?

What has your SS done to reduce this image worship?

Anonymous said...

vaanathin keele just ignore him...if you answer them.. they will ask again and again ..you can't satisfy their mind. you are in one end ..they are in other end ..

you arguement will never stop.

R.Gopi said...

Rajni's movies released on Independence Day.

INDEPENDENCE DAY

1.15.08.1978-MULLUM MALARUM
2.15.08.1980-JOHNY
3.15.08.1981-NETTRIKAN
3.15.08.2002-BABA

Anonymous said...

Anony,
AAMA,
Ivvalo samuga sinthanaiyoda pesura nee ethukku inge vanthu padichi periya periya post were podanum? Avvalo arivujeevinna nee enya Rajiniya pathi potta news- padikirra. Summa ithu oru mathiri filimu.