Monday, August 11, 2008

தேர்தல் வெற்றிக்கு ரஜினியை நம்பும் மலேஷிய அரசியல் கட்சிகள்!


கன்னடர்களிடம் கேட்காத மன்னிப்பைக் கேட்டுவிட்டதாக முடிவே செய்து கொண்டு இங்கு சிலர் ரஜினிக்கு எதிராக ஒரு இயக்கமே நடத்த ஆரம்பித்திருக்கும் இந்தத் தருணத்தில், அவரை நேசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்ளுக்கு ஒரு இனிய செய்தி...

மலேஷியாவில் நடைபெறும் ஒரு இடைத்தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப் பெற அந்நாட்டு முன்னாள் துணைப் பிரதமரும் எதிர்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராகிம் பயன்படுத்தியுள்ள துருப்புச் சீட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சிவாஜி மற்றும் குசேலனில் வரும் அவரது விதவிதமான கெட்டப்புகளை கட்-அவுட்டுகள் மற்றும் குறுந் தட்டிகளாக்கி கைகளில் ஏந்தியடி, போடுங்கம்மா ஓட்டு... என வீதி வீதியாக வாக்குச் சேகரிக்கின்றனர் அன்வரும் அவரது ஆதரவாளர்களும்.

ரஜினியின் சிவாஜி திரைப்படம் சிங்கப்பூர் - மலேஷியாவில் பெரிய வசூல் சாதனைப் படைத்தது. அந்தப் படத்தை விநியோகித்த அய்ங்கரனும், பைவ் ஸ்டார் லோட்டஸ் நிறுவனமும் பெரிய அளவு திரைப்படத் தயாரிப்பில் இறங்க சிவாஜிதான் காரணமாக இருந்தது.

இப்போது குசேலன் திரைப்படம் மலேஷியா – சிங்கப்பூரில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அன்வரைப் பொறுத்தவரை, ரஜினியின் படத்தைக் காட்டினாலே இந்த இடைத் தேர்தலில் தமிழர்களின் ஓட்டுக்களை வென்று விட முடியும் என நம்புகிறார்.

மேலும் இந்த வெற்றி அவருக்கு மிக முக்கியமானது. அடிக்கடி செக்ஸ் குற்றச்சாட்டுகளில் மலேஷிய அரசு அவரைக் கைது செய்துவரும் நிலையில், மலேஷியாவில் தனது செல்வாக்கை நிரூபிக்க இந்த இடைத் தேர்தலை அன்வர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.

இவரது இந்த டெக்னிக்கைப் பார்த்து ஆளும் கட்சியும் ரஜினியை தங்கள் நட்சத்திர நாயகனாகக் காட்டிக்கொள்ள முயன்று வருகிறது!

பொதுவாகவே அருகிலிருக்கும்போது அல்லது சாதாரணமாகக் கிடைக்கும்போது ஒருவரின் மகத்துவம் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
அதை யாராவது வெளிநாட்டுக்காரர் சொன்ன பிறகுதான், அடடா... நமக்கு இது தெரியாமப் போச்சே, என வருத்தப்படுவோம்.

ரஜினி விஷயமும்கூட அப்படித்தான்!

இதோ, மலேஷிய ரசிகர் ஒருவர் நமக்கு எழுதியுள்ள மின்னஞ்சல்...

நண்பரே... மலேஷியா மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களை எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ள சூப்பர்ஸ்டார் ரஜினியைத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு இனத்தின் பிரதிநிதியாகவே பார்க்கப்படும் அவரை உலகத் தமிழர்கள் போற்றிப் பாராட்டுகின்றனர். ஆனால் சில இணைய தளங்களில் அவரைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புவதைப் பார்க்கும்போது வேதனை கொப்பளிக்கிறது.

தமிழே தெரியாத அந்நிய தேசத்து ரசிகர்கள் ரஜினியை எந்த எதிர்பார்ப்புமின்றி ரசிக்கிறார்கள். தமிழர்களுக்கு இணையாக டிக்கெட்டுக்கு கொட்டிக் கொடுக்கின்றனர்.
ஒரு நல்ல கலைஞனை, மனிதனை இப்படி அவமானப்படுத்தி எழுதாதீர்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.


பெரும்பான்மை மக்களின் குரலும் அதுவே. யாரோ சிலர் ரஜினிக்கு எதிராக புத்திசாலித்தனமாகப் பரப்பும் அவதூறுகளை காலம் தோற்கடிக்கும்!

No comments: