ரஜினி மீது மீண்டும் விஷம் கக்கியிருக்கிறது சன் டிவி, குசேலனுக்கு விமர்சனம் எனும் பெயரில்.
குசேலன் நல்ல கதையாம்... அருமையான நடிப்பாம். ஆனால் ரஜினிகாந்த் பகுதி மிகவும் செயற்கையாம். லாஜிக் இல்லாத மேஜிக் நடத்திக் காட்ட முயன்று தோற்றுப் போய் விட்டார்களாம்.
படம் வெளியாகி 25 நாட்கள் கழித்து சன் டிவி கண்டுபிடித்திருக்கும் மாபெரும் உண்மை இது. ஆனால் இதே விமர்சனத்தை சாக்காக வைத்து திரும்பத் திரும்ப ரஜினியைக் காட்டி பல லட்சம் ரூபாயை விளம்பர வருவாயாக கல்லா கட்டினார்களே (25 விளம்பரங்கள். சன் டிவியில் ஒரு விளம்பரத்துக்கான கட்டணம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் - 10 நொடிகளுக்கு!) அப்போதி தெரியவில்லையா இந்த லாஜிக் இல்லா மேஜிக்.
இவர்கள் என்ன நோக்கில் அரை மணி நேர நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப ரஜினியைக் காட்டினார்களோ... அதே லாஜிக்கில்தானே வாசுவும் இந்தப் படத்தை எடுத்திருப்பார்?
இந்த மாதிரி மூன்றாம் தர விமர்சனம் பார்த்த பிறகுதான், மக்கள் அந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என்ற நிலைமை ரஜினியின் எந்தப் படத்துக்கும் இல்லைதான்.
ஆனால் குசேலன் விஷயத்தில் மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அல்லது சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு கடும் விஷத்தைக் கக்கி வருகிறது சன் நெட்வொர்க்.
ரஜினியின் விறுவிறு ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே விரும்பும் ரசிகர்களுக்கு குசேலன் திரைப்படம் ஏமாற்றமாக இருந்தாலும், அது ஒரு நல்ல படம் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
துப்பாக்கி குண்டு எதேச்சையாகப் பாய்ந்ததில் தொண்டையிலிருந்த கேன்சர் நீங்கிவிட்டது என்றும், 12-ம் நூற்றாண்டில் கடலில் போடப்பட்ட ரங்கநாதர் சிலை 10 நூற்றாண்டுகள் கழித்து ரங்கராஜன் நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க சுனாமியை உருவாக்கியது எனும் கேயாஸ் தியரி பகுத்தறிவையும் (பெரியார் இருந்திருந்தால் தாடியாலேயே தூக்கு மாட்டிக் கொண்டிருந்திருப்பார்.... என்னே பகுத்தறிவு!) சிலாகிக்கும் இந்த மோசடிக் கும்பலுக்கு, வாழ்வின் வலிகளையும், நட்பின் உன்னதத்தையும் சொல்லும் குசேலன் லாஜிக் இல்லாத படமாகத்தான் தெரியும்.
கலைஞர் டிவி ரூ.7 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கிவிட்ட குசேலனை இன்னும் எந்தெந்த வழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளிலும் தாக்கவே செய்யும் இந்த நச்சுக் கும்பல்.
என்ன கொடுமையென்றால்... இந்த நச்சுப் பிரச்சாரத்துக்கு அடிமையாகி ரஜினி ரசிகர்கள் சிலரும், குசேலனை நினைத்து வெறுத்துப்போய் உட்கார்ந்திருப்பதுதான்.
முன்பெல்லாம் மொத்த மீடியாவும் தங்கள் தனிப்பட்ட வெறுப்பை விட்டுவிட்டு வியாபாரத்துக்காக ரஜினி படங்களைக் கொண்டாடுவார்கள். ஞானி மாதிரி சிலர் கூனி வோலை செய்வார்கள். அதனால் அது பெரிதாகத் தெரியவில்லை. துரதிருஷ்டவசமாக இன்று பெரும்பாலும் மீடியாவை கூனிகளே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.
ரஜினி நல்ல படம்தான் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைய மோசமான நச்சுத்தனம் மிக்க மீடியா உலகில், அவர்களுக்குரிய 'பங்கு' சரியாகப் போய் சேராததன் விளைவுதான் இந்த விமர்சனத் தாக்குதல்கள்.
மாநிலத்துக்கு மாநிலம் நாராயண கவுடாக்களும், வட்டாள் நாகராஜாக்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் வந்தாரை வாழ வைத்துக் கிழித்து விட்டோம் என்ற ஜம்பம் வேறே...!
14 comments:
adap paavingala,
Ennathaan reel suthurathnnaalum alave illiya, Climaxla rajini alum antha sila nimidangal unrvugal urantha manathugal kooda urgui kanneerai veliyil konduvantha nimidangal, athai ulage ariyum.
Marans you are morons Tei, Livingston kattuna 9vthu athisaym romba iyargaiya. Pesama annaum thabiyume kathai vasanam eluthi naddichhi super dooper padam apnnalame, ille Serialngara perla kudumbathai alikkira, vakkira nadagangallaa palthu unga ideas thaan niraya pola iruke. Superpa, entha seriala yaavathu sathi eppadi panrathunnu director/ kathasiriyaruku kulappam vanthaa konjam sun tv annan thambiya ninachaup pattha pothum ideas malaipola kottum. Nichayam oru nallaiki annanum thambiyum oruthanai oruthaan vettiko kuthikkonnu nikathaan poreenga. Antha kaalam vegu thoorathil ille. Appa unga thaatha maama ellarum viratinaa kooda enga SS nallathu panna ninaipparr. Avar sokkathangam. ungalai mathiri record dance aadra kumbal ille.
kanna.. vilamparam vera vimarsanam veera. athukuda unakku theriyala.. nee pathivu enda peyarila.. rajaniku vaal pidikirai.
Nanbargale,
Climax scene was the greatest joke in Tamil cinema.
I will give you my example. A friend of mine wanted to find his ex-lover who lost touch after school and lot of transfer of his parents. My friend is an ordinary person and he could trace her in another town after 4 months.
Later, we came to know about personal detective services or private investigators who do such services for 10,000 rs and can get you the person in 2 weeks.
So does for a Superstar, does it take 25 years to find a old buddy????
I am not asking to take completely logical film, but this is way too much and lot of audience felt the same way.
//துப்பாக்கி குண்டு எதேச்சையாகப் பாய்ந்ததில் தொண்டையிலிருந்த கேன்சர் நீங்கிவிட்டது என்றும், 12-ம் நூற்றாண்டில் கடலில் போடப்பட்ட ரங்கநாதர் சிலை 10 நூற்றாண்டுகள் கழித்து ரங்கராஜன் நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க சுனாமியை உருவாக்கியது எனும் கேயாஸ் தியரி பகுத்தறிவையும் (பெரியார் இருந்திருந்தால் தாடியாலேயே தூக்கு மாட்டிக் கொண்டிருந்திருப்பார்.... என்னே பகுத்தறிவு!) சிலாகிக்கும் இந்த மோசடிக் கும்பலுக்கு, வாழ்வின் வலிகளையும், நட்பின் உன்னதத்தையும் சொல்லும் குசேலன் லாஜிக் இல்லாத படமாகத்தான் தெரியும்.//
idhai padithaal enakku thondruvadhu
"காழ்ப்புணர்வன்றி வேறில்லை!"
//பெரியார் இருந்திருந்தால் தாடியாலேயே தூக்கு மாட்டிக் கொண்டிருந்திருப்பார்.... என்னே பகுத்தறிவு!//
தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்பது உலகவழக்கு !,
பெரியாரை இழிவு படுத்தும் இந்த வரிகளை வன்மையாக கண்டிக்கிறேன், பெரியாரோ, பெரியாரின் உண்மையா பற்றாளர்களோ தன்னம்பிக்கையற்றவர்கள் அல்ல,
திரைப்படக் காட்சிகளுக்கெல்லாம் தூக்குமாட்டிக் கொள்ளும் திரைரசிகர்கள் அல்ல பெரியார் என்கிற பகுத்தறிவு இமயம் !
கருத்துக்கு நன்றி...
இப்படிப்பட்ட மூடத்தனங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள், எப்போதும் பெரியாரையும் அவரது கொள்ளகைகளையும் வேறு துணைக்கழைத்துக் கொள்கிறார்கள். அதைக் கொஞ்சம் அழுத்தமாகக் குறிப்பிட இந்த வரிகளைப் பயன்படுத்தினேன். மற்றபடி, பெரியார் என்ற சமூகப் போராளியை யாராலாவது அவமானப்படுத்திவிட முடியுமா?
கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வீர்களே,
ஒரு ஆயிரம் பேர் மட்டும் சன் டிவி முன்னால் போய் போராட வேண்டியதுதானே?
இல்லை அஹிம்சைதான் எங்கள் வழி என்றால்
ஒரு கோடி ரசிகர் மட்டும் இன்னொருமுறை 100 ரூ கொடுத்து படத்தை பார்த்து நஷ்டத்தை சரிகட்ட வேண்டியது தானே?
இதை விட்டுவிட்டு கமல் மேல் ஏன் பாய்ச்சல்?
நன்றி திரு முரளி கண்ணன்.
இது கமல் மீதான பாய்ச்சல் கிடையாது. ஒரு தவறான படத்தைக் கூட மீடியாக்கள் எப்படியெல்லாம் புரமோட் செய்தன என்பதற்கு உதாரணம் தசாவதாரம்.
குசேலன் என்ற நல்ல படத்தை, ரஜினி தங்களைப் பார்க்கவில்லை, கவனிக்கவில்லை அல்லது அவரை எளிதில் அணுகமுடியவில்லை என்ற கடுப்பில்தான் கவிழ்த்தனர் இவர்கள்.
நான் ஏதோ மிகையாகச் சொல்வதாக நினைக்க வேண்டாம். உங்கள் மீடியா நண்பர்கள் யாரையாவது கேட்டுப் பாருங்கள்...
மற்றபடி கமலை தனிப்பட்ட முறையில் நான் ஒன்றும் சொல்லவில்லையே... (ஆதாரங்களோடு விமர்சிக்க ஆயிரம் இருந்தாலும்!)
\\ஒரு தவறான படத்தைக் கூட மீடியாக்கள் எப்படியெல்லாம் புரமோட் செய்தன என்பதற்கு உதாரணம் தசாவதாரம்\\
ha ha ha ha ha
\\குசேலன் என்ற நல்ல படத்தை\\
ha ha ha ha ha ha
டாக்டர் என்னை அல்சர் குறைவதர்க்கு கவலை ஏதும் படாமல் சந்தோஷமாக இருக்க சொன்னார். இனிமேல் உங்கள் பதிவுகளை படித்து சிரித்துக்கொள்கிறேன் நன்றி
\\குசேலன் என்ற நல்ல படத்தை, ரஜினி தங்களைப் பார்க்கவில்லை, கவனிக்கவில்லை அல்லது அவரை எளிதில் அணுகமுடியவில்லை என்ற கடுப்பில்தான் கவிழ்த்தனர் இவர்கள்\\
நான் படத்தை பிரிவியுக்கு முன்னரே பார்த்தேன் (சென்சார் ஸ்க்ரிப்ட் எழுதுபவர்களுடன், விமர்சனமும் எழுதினேன்). அப்போது அவர்கள் படத்தைப்பற்றி கூறிய கருத்துக்களை இங்கு சொல்வது நாகரீகமில்லை.
பின் படத்தை இரண்டாம் நாள் சென்னை புறநகரில் பார்த்தேன். சுமாரான கூட்டமே. படத்தின் இடைவேளையிலும் படம் முடிந்ததும் ரசிகர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க முடியவில்லை. அவர்களை மீடியாவா தடுத்தது?
சிபி,இன்டியா டைம்ஸ் போன்ற இணைய தளங்கள் தசாவதாரத்தை கடுமையாக விமர்சித்தன (இன்றும் அவை மிக்ஸ்ட் ரிப்போர்ட் என்றே குறிப்பிடுகின்றன.)
ஆனந்த விகடனின் மார்க் என்ன அப்படத்திற்க்கு?
ரஜினியை, விஜய்யை,அஜீத்தை அட்டையில் போட்டால் நாலு பேர் வாங்குவார்கள். கமலை அட்டையில் போட்டால் யார் வாங்குவார்கள்? என்று விகடன் முடிவுசெய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
எந்த மீடியா தசவாதாரத்தை பிரமோட் செய்தது?
நான் 20,25 வருடமாக திரையரங்குகளில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். மீடியாவால் ரசிகர்களை மாற்ற முடியாது.
குசேலனை கலைஞர் டீவி வாங்கியதால் சன் டீவி தாக்குதாம் ..அண்ணே! தசாவதாரத்தையும் கலைஞர் டீவி தான் வாங்கியிருக்கு.ஹி.ஹி.
குசேலனை கலைஞர் டீவி வாங்கியதால் சன் டீவி தாக்குதாம் ..அண்ணே! தசாவதாரத்தையும் கலைஞர் டீவி தான் வாங்கியிருக்கு.ஹி.ஹி.
பல்டி, ஈனப்பிறவி - இதுக்கு அர்த்தம் தெரியணுமா? இதப்பாருங்க! ( இது ஒக்கெநக்கல் பிரச்சனைக்கு கொந்சம் முன்னாடி எடுத்தது தான். ஈனப்பிறவிகளும் மனிதபிறவிகளும் இத பார்க்கணும் ) http://www.youtube.com/watch?v=Im7jacsKVR8
vidungannae...
namakku oru nalla kaalam viraivil varumnae..
athukkaka aduthavuga vetriya paarthu vayireriya vaendamnae...
thalaivar 2050 la namma ellaraiyum santhikka poraraam. 2051-la namma aatchithaan.
appa irukku ivanukalukku...
athuvaraikku irukkavae irukku 'yaaro eluthi koduthu' thalaivar paesiya dialogues...
Post a Comment