Saturday, August 23, 2008

ஒரு சதி உருவாகிறது!!


இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் நம் உதடுகள் முணுமுணுக்கும் வார்த்தை... அட கேவலமே...!

செய்யும் தொழிலுக்கு இதைவிட ஒரு கேவலத்தை வேறு எந்தப் பத்திரிகையாலும் ஏற்படுத்த முடியாது.

இந்தப் புகைப்படம் தினகரனில் மட்டும் நேற்று வெளிவந்தது.

இந்தப் புகைப்படத்தில் போஸ் கொடுப்பவர்கள் ஆந்திராவிலிருந்து வந்த (வரவழைக்கப்பட்ட?) சில வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டார்கள்.

ஆந்திராவின் மேற்கு மாவட்டங்களில் குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடுவை வெளியிட்டவர்களாம். இப்போது நஷ்டமாகிவிட்டதாம். எனவே குசேலன் நஷ்டத்தை ஈடு செய்யாவிட்டால் ரஜினியை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதமிருப்பதாக அறிவித்திருக்கிறார்களாம்.

அட அதைக்கூட விடுங்கள்... ஏதோ சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிவிட்டார்கள்...

சென்னைக்கு இவர்கள் எதற்கு வந்தார்கள்...? குசேலன் உண்மை நிலையை விசாரித்துவிட்டுச் செல்ல. ஆனால் இங்குள்ள சிலரோ, சும்மா பார்த்துட்டுப் போனா எப்படிய்யா... போய் குசேலனுக்கு எதிரா உண்ணாவிரதம்னு போஸ் குடு... தானாவே மேட்டர் பெரிசாயிடும். போங்கய்யா, துணையா நாங்க இருக்கோம், என ஏத்திவிட, அவர்களும் அந்த விடுதியின் ஒரு அறையில் உட்கார்ந்து குசேலனுக்கு எதிராக போஸ் கொடுத்தனர்.

அப்போதுதான் அந்தப் பத்திரிகையின் புகைப்பாடக்காரர் ஒருவர், ரெட்டி சார், சும்மா உக்காராதீங்க. அந்த காதாநாயகுடு பேனரோடு உட்காருங்க எனச் சொல்ல அவர்கள் திகைத்திருக்கிறார்கள். திடீரென பேனருக்கு எங்கே போவார்கள்!

ஆனால் எல்லா பொய்களையும் அக்மார்க் உண்மை போலவே காட்டும் பவர்புல் மீடியாவை மொத்தமாக வைத்திருப்பவர்கள் ஆயிற்றே... இப்படி ஒரு பேனர் தயாரிப்பதா அவர்களுக்குக் கஷ்டம்!

இரு தினங்களுக்கு முன்பே பக்காவாக ஏற்பாடு செய்து வைத்திருந்த ஒரு பேனரை அவசர அவசரமாகக் கொண்டுபோய், அங்கிருந்தவர்களில் இருவரை ஆளுக்கொருபக்கம் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, வேண்டிய மட்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் இவர்கள் பத்திரிகையில் மட்டும் வருகிறது... இந்தச் செய்தியும் படமும்.

“குசேலனுக்கு எதிராக தெலுங்கு திரையரங்க உரிமையாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!”
-எக்ஸ்க்ளூசிவாம்!

உண்மையாகவே உண்ணாவிரதமிருக்கப் போவதாகக் கூறினீர்களா என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டால், லேது லேது.... என்று மறுத்தவர்கள், இவர்களின் மீடியா பயங்கரவாதத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.

சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியது முதல், பத்திரிகைகளுக்கு வீராவேசமாய் பேட்டி கொடுத்தது வரை எதுவும் எங்கள் சொந்தக் கருத்தில்லை. இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தவர்கள் அந்த நம்பர் ஒன் நாளிதழ் நடத்துபவர்கள்தான், என்கின்றனர் ஆந்திரப் பார்ட்டிகள்.

தினகரனில் வெளியான இந்தப் படத்தின் நிஜப் பின்னணியும், குசேலன் ரிலீசிலிருந்து இன்று வரை, இந்த குறிப்பிட்ட நாளிதழில் மட்டும் ரஜினிக்கு எதிராக வெளியாகும் திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் நிஜமான பின்னணி யார் என்பது புரிகிறதா...

அண்ணாமலையில் ரஜினி இப்படிச் சொல்வார்:

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ஏன்யா இந்த புனிதமான அரசியலைக் (பத்திரிகைத் தொழிலை) கெடுக்கறீங்க...,
என்பார்.
எத்தனை சத்தியமான வார்த்தைகள்! இந்த சதிப் பேர்வழிகளுக்காகவே எழுதப்பட்ட மாதிரியல்லவா இருக்கின்றன!

இதே தினகரன் வளர்ந்த விதத்தை நினைத்துப் பாருங்கள்...

திமுக துணையின்றி, மதிமுக ஆதரவுமின்றி தவித்த 90களின் மத்தியில், ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம்தான் இந்தப் பத்திரிகையை உயிரோடு வைத்திருக்க பெரிதும் உதவியது.

எங்கோ ஒரு குக்கிராமத்தலிருக்கும் ரஜினி ரசிகன் ஒரு சின்ன தகவல் சொன்னால்கூடப் போதும், தினகரனில் கட்டம் கட்டிப் போடுவார்கள்.

அந்த தினகரன் செய்திருக்கும் வேலையா இது!

அட கேவலமே...!

5 comments:

Anonymous said...

Aha!
Enne tamil valarkkum ivargal yukthi. Thathavudan modhi kudumba arasiyalil aniyayamaaga appavi uyirgal paliyaanthu atherke oru pappum vegalai. Dinakaran circulationa-i eppadi ethurathaam. Andharavillurundhu varavannukku anga jagapathi babu, illena ippa katchi arambichirukka chiruvidam allava muthalil povargal. Tamil naataiyum tamilargaliyum kuli thondi puthaikkum punniyathil veru yaarukkum pange ille,Karunandihikkum, avar kudumbathukkum thaan. Ithenna aval pori viyabarama, ondru mattum thelivaaga purigirathu, inthiyavin sattangal kadumaiyaakapadaveendum, Business regulations should be made very clear with all the cleart agreements. Media should be sued for this kind of cheap publicity.

கிரி said...

எத்தனை தான் பொய் செய்திகளை கூறினாலும் என்றாவது ஒரு நாள் உண்மை செய்திகளை கூற வேண்டிய கட்டாயம் கண்டிப்பாக தினகரன் தினமலர் போன்ற பத்திரிக்கைகளுக்கு வரும்

Anonymous said...

Thoo idhellaam oru pizhaippaa. Idhukku paesaama kalla kadathal pannalaam.

Aanal Superstarin paavam ivargalai chumma vidaadhu...

Vaanathin Keezhe... said...

கருத்துக்களுக்கு நன்றி அனானி, கிரி, சுந்தர்...!

என்றைக்குமே நல்லவர்கள் நன்றாகவே இருப்பார்கள். தர்மதுரை பாருங்கள்... ரஜினி அநியாயத்துக்கும் நல்லவராயிருப்பார். இப்போது நிஜத்திலும் அப்படித்தான் இருக்கிறார். அவர் இயல்பு அது. மாறாதது.

Vaanathin Keezhe... said...

கருத்துக்களுக்கு நன்றி அனானி, கிரி, சுந்தர்...!

என்றைக்குமே நல்லவர்கள் நன்றாகவே இருப்பார்கள். தர்மதுரை பாருங்கள்... ரஜினி அநியாயத்துக்கும் நல்லவராயிருப்பார். இப்போது நிஜத்திலும் அப்படித்தான் இருக்கிறார். அவர் இயல்பு அது. மாறாதது.