Wednesday, August 27, 2008

தலைவா... !


ரோபோவுக்கு முன் அதிரடியாக தனது ஸ்டைல் படம் ஒன்றை மீண்டும் தரவிருக்கிறார் ரஜினி – இதுதான் செய்தி.

உற்சாகத்தில் தொண்டை நரம்பு வெடிக்குமளவுக்கு குரல் எழுப்புகிறார்கள் ஒவ்வொரு ரஜினி ரசிகரும், தகவல் கேள்விப்பட்டு.

இத்தனைக்கும் இது ஒரு உறுதி செய்யப்பட்ட தகவல் கூட இல்லை. செவிவழிச் செய்திகள்தான்.

ஓரிரு இணைய தளங்களும், சில நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால் இன்னும் ரஜினியிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் எனக் கூறப்படும் பஞ்சு அருணாச்சலம், ஆர்எம்வீயிடம் கேட்டால் அத்தமான சிரிப்பும் மௌனமும்தான் பதிலாகக் கிடைக்கிறது.

எப்படியோ நல்ல படமான குசேலனை இந்த நன்றி கெட்ட உலகம்படுத்திய பாட்டைக் கண்டும், ரசிகர்களைப் போல தளர்ந்துவிடாமல் உறுதியாக நின்று பிரச்சினையை ரஜினி கையாண்ட விதம், எதற்கும் உதவாத விதண்டாவாதிகள், பொறாமைக்காரர்கள் நிறைந்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவுன்சில், பிலிம் சேம்பர் போன்றவர்களின் துணையை நாடாமல் தன்னந் தனியாகவே அவர் இந்த விவகாரத்தை சமாளித்த பாங்கு... இவைதான் ஒரு நல்ல தலைவனுக்குண்டான இலக்கணங்கள் என அவரது நலம் விரும்பிகளை நெஞ்சு நிமிர வைத்துள்ளது.
தட்ஸ்தமிழில் வந்த இந்த நல்ல செய்தி நிஜமாகட்டும்:

ரஜினியின் ஆக்ஷன்-காமெடி!

இப்போதைக்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இதைவிட சந்தோஷமான செய்தி எதுவும் இருக்க முடியாது. சில தினங்களுக்கு முன் தட்ஸ்தமிழ் வெளியிட்ட செய்தி விரைவில் உண்மையாகப் போகிறது.

ரோபோவுக்கு முன்பே மீண்டும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார். அதுவும் முழு நீள ஆக்ஷன்- காமெடி சரவெடியில் கலக்கப் போகிறார்.

குசேலன் படம் பல விதங்களில் ரஜினிக்கு மன உளைச்சலையும் அவரது ரசிகர்களுக்கு சங்கடத்தையும் தோற்றுவித்துவிட்டது.

இதைச் சரிகட்டும் விதத்திலும், தனது பாக்ஸ் ஆபீஸ் பலத்தை இன்னொரு முறை நிரூபித்துக் காட்டவும் இந்த அதிரடிப் படத்தை தர முடிவு செய்துள்ளாராம் ரஜினி.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் முருகதாஸ் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் எதையும் உறுதி செய்யவில்லையாம் ரஜினி.

எஸ்.ஜே.சூர்யாவும்கூட ரஜினிக்கு ஒரு அதிரடி ஆக்ஷன் கதை சொல்லியிருக்கிறார். ரவிக்குமார் இப்போதைக்கு ஜக்குபாய் படத்தை சரத்குமாரை வைத்து எடுப்பதால், அவரும் ரஜினியை இயக்க முடியாத நிலை. எனவே தனது நண்பர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறாராம் ரஜினி.

படத்தை பஞ்சு அருணாச்சலம்-சத்யா மூவீஸ் ஆர்எம் வீரப்பன் இணைந்து தயாரிக்கப் போவது மட்டும் நிச்சயமாகிவிட்டது.

தள்ளிப் போகும் ரோபோ:

இதற்கிடையே ரோபோ படம் சில தொழில்நுட்ப விஷயங்களுக்காக சில தினங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளதாம். பிரேசில் நாட்டில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு நடத்தப்படும் என்கிறார்கள்.

சௌந்தர்யா இயக்கிவரும் சுல்தான் தி வாரியர் வெளியாவதற்கு முன்பே இந்த புதிய படத்தை வெளியிடப் போகிறார்கள்.
நன்றி: தட்ஸ்தமிழ்

1 comment:

E-Farmers said...

It is a good strategy by Thalaivar. Robo itself is an experience subject and it can not be tested with the current situation. Similarly Sultan too..