நிறைய விமர்சனங்கள், அலசல்கள் வந்துவிட்டன குசேலன் பற்றி.
நானும் அவற்றில் ஒன்றை இங்கே கொடுத்திருந்தேன். அதை இப்போது நீக்கிவிட்டேன்.
காரணமாகத்தான்.
காரணம் சிலர் செய்த கோயபல்ஸ் பிரசாசாரத்தை நம்பி நானும் இந்தப் படம் தோற்றுவிட்டிருக்குமோ என சற்றே அயர்ந்துவிட்டேன். அவ்வளவுதான். எந்த ஒரு சாதாரண ரசிகனுக்கும் ஏற்படுகிற சின்ன தடுமாற்றம் அது.
இந்த கட்டுரையை எழுதுவதற்கு 2 மணிநேரம் முன்புதான் - இன்று செவ்வாய்கிழமை- காசி, கமலா மற்றும் சைதை ராஜ் திரையரங்குகளைப் பார்த்துவிட்டு வருகிறேன்.
இன்றைய மாலை நேர காட்சிக்கு கிட்டத்தட்ட திரையரங்குகள் நிறையத் தொடங்கிவிட்டன.
மோட்டார் சைக்கிள்களை நிறுத்த இடமின்றி பக்கத்தில் இடம் மாற்றிக் கொண்டிருந்தார்கள், காசியில். நினைவில் கொள்ளுங்கள், இன்று செவ்வாய்க்கிழமை. நிறைவாக இருந்தது.
இந்தப் படத்தை ரஜினி தமிழில் யாருக்காகச் செய்தாரோ, அவர்களிடம் இதுவரை சம்பளமாக ஒரு நயா பைசா கூட பெற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மை இங்கே எத்தனைப் பேருக்குத் தெரியும்…
செவன் ஆர்ட்ஸ் மற்றும் அஸ்வினி தத் ஆகிய இருவரிடமிருந்தும், தெலுங்குப் பதிப்புக்காக மட்டுமே அவர் சம்பளம் பெற்றுக் கொண்டார்.
அவரைப் போய் வியாபாரி என்றும், பணத்துக்காக மாற்றிப் பேசுகிறார் என்றும் விமர்சிப்பவர்களைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
முன்பு, 1985லிருந்து 87 வரையிலான அமரர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியை கோமாளியின் தர்பார் என்றும், துக்ளக் தர்பார் என்றும் எழுதிய அதே உத்தம பத்திரிகைகள், இன்று ‘புரட்சித் தலைவரின் ஆட்சிக் காலம்தான் தமிழகத்தின் பொற்காலம்’, என்று அவர் புகழ் பாடுவதைப் படிக்கிறோம். அன்று அவர் படங்களைக் கிண்டலடித்த அதே விகடனும், குமுதமும், மக்கள் திலகத்தின் படங்கள்தான் 'க்ளீன் எண்டர்டெயின்மெண்ட்' என பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றன.
அட, அவ்வளவு ஏன்... இந்த சத்துணவுத் திட்டத்துக்கு எம்ஜிஆர் ரூ.100 கோடி ஒதுக்கியதைக் கிண்டலடித்தும் குறை கூறியும் எழுதாதவை மூன்று தினப் பத்திரிகைகள்தான்.
தினத்தந்தி, தினத்தூது மற்றும் அண்ணா.
வாரப் பத்திரிகைகளில் தாய் மற்றும் இதயம் பேசுகிறது தவிர மற்றவர்கள் எல்லாம் பொளந்து கட்டினார்கள் புரட்சித் தலைவருக்கு எதிராக.
ஆனால் இன்று... விளக்கத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும் அந்த திட்டத்தின் சாதனை என்ன... வாக்கு வங்கி எவ்வளவு என்று!
நண்பர்களே… உங்களுக்குத் தெரிந்திருக்கும்… பாபா படத்துக்காக 48 அட்டைப் படக் கட்டுரைகளை (ஆனந்த விகடன் 16, ஜூனியர் விகடன் 32) வெளியிட்டு, ரஜினி ரசிகர்களையே மிஞ்சிய பெருமைக்குரியவர்கள் விகடன் குழுமத்தினர்.
அதுவும் அன்றைக்கு அவரை சூப்பர் ஸ்டார் என்று கூட குறிப்பிடாமல், தலைவர் என்ற அடைமொழியோடு கட்டுரை எழுதி நம் ரசிகர்களின் பாக்கெட்டுகளைச் சுரண்டியவர்கள். நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்றாலும் எனக்கு இதைச் சொல்வதில் எந்தத் தயக்கமுமில்லை. இதை அவர்களின் இணை நிர்வாக இயக்குநரிடமே நேரடியாகச் சொன்னவன்.
அவ்வளவு ஏன், ரஜினிக்கு ஓப்பனாக கடிதம் எழுதிய இந்த வீராதி வீர விகடன்கள், குசேலன் விமர்சனத்தை எழுதாமல் விட்டிருக்க வேண்டியதுதானே… அப்படிச் செய்யமாட்டார்கள். காரியவாதிகள்… குசேலன் விமர்சனத்துக்காகவே இந்த இதழ் கூடுதலாக பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகுமே... அதை எப்படி இழக்க முன்வருவார்கள் இந்த தர்மாத்மாக்கள்!
அவ்வளவு ஏன்… இன்று பெரிதாக எழுதிக் கிழிக்கும், தன்னைத்தானே பெரிய தத்துவ மேதையாகக் கருதிக் கொள்ளும் அந்த ஜோல்னா பை நபர், அருணாச்சம் படத்துக்காக ரஜினி நடத்திய பிரஸ்மீட்டில் ‘ரூபாய் 2000 அன்பளிப்பு’ பெற்றுக் கொண்டு அதையும் பெரிய சாதனையாக அடுத்த இதழில் எழுதியவர்தானே!
அடுத்து ரஜினியை விமர்சித்திருக்கும் எழுத்தாள நபரோ பார்களில் மட்டுமே பிரபலமான பாரு. ரஜினியுடன் சேர்ந்து தண்ணியடித்தவனாக்கும் நான் என ஊரெல்லாம் பீற்றிக் கொள்வதில் அப்படியொரு ஆனந்தம் அவருக்கு. ஆனாலும் ஒருத்தரும் மதித்த மாதிரி தெரியவில்லை. வந்துட்டார் அந்த தேசிய தமிழ் நாளிதழில் எழுதிக் கிழிக்க... அதுவும் சொந்த சரக்கென்றால் எவரும் சீந்த மாட்டார்கள். இது குசேலன் சீஸன். முடிந்த வரை அதில் தனது மூன்றாம் தரத்தைக் காட்ட முயன்று கேவலப்பட்டு நிற்கிறார்.
இந்த மாதிரி பத்திரிகையாளர்களை, பார்களில் இலக்கியம் தேடும் சைக்கோ கூட்டத்தை ஒரு பொருட்டாகக் கூட மதிக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைக்கு பத்திரிகையுலகம் நிதானத்திலும் இல்லை!!
இல்லாவிட்டால் எந்த ஆதாரமும் இல்லாமல், தியேட்டர்களுக்கே செல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு, ஆகஸ்ட் 3-ம் தேதியே கூட்டம் குறைந்துவிட்டதாக எழுதுமா அந்த முன்னணி நாளிதழ்!
ஆக. 3 ஞாயிற்றுக்கிழமை. ரஜினியின் பழைய படம் போட்டால் கூட கூட்டம் அலைமோதும் நாள் அது. ரிலீசாகி மூன்றாவது நாள் மட்டுமே ஆன அவரது படம் விழுந்துவிட்டதாக எழுதுவது எத்தனை பெரிய மோசடி!
இப்போதும் சொல்கிறேன்… நாளையே வாசுவோ… பிரமிட் நிறுவனமோ ஒரு பிரஸ் மீட் வைத்து சில ஆயிரங்களை அள்ளி விட்டுப் பார்க்கட்டும், இதே பத்திரிகைகளின் ‘பத்திரிகா தர்மம்’ என்னவென்று தெரிந்துவிடும்…!!
மக்களே... உண்மையான ரசிகர்களே... விழிப்போடு இருங்கள். நல்லவர்கள் பக்கம் உங்களைச் செல்ல விடாமல் தடுப்பதற்காகவே இருப்பவைதான் பத்திரிகைகளும் இன்றைய அரசியல் கட்சிகளும்.
நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்ள இவர்களை நம்பாதீர்கள்!
2 comments:
Dear Boss,
excellent write up....
I just had tears in my eyes.Blast sify.com for propagating false news.Do they knew the meaning of loyalty?
How can Rajini collect money from Kavithalaya?If Kavithalaya had so much money,why would they ask Rajini to bail them out from Financial crisis.What kind of logic is used.How can Rajini collect 26 crores for a cameo.When we as ordinary people can have so many questions why dont these media dogs have sense in publishing such tasteless writings...
My Thalaivar is "maasu maraiyatra thangam"
God bless you.Thanks once again...
anbudan...
Vishwa
Thank you Mr.Vishwa...
This is the time to show our solidarity towards the cowardised and currupted media world and other selfish politicians behind all the nonsenses against Rajini, the great soul!
Post a Comment