கோயபல்ஸை நம்மில் யாரும் பார்த்ததில்லை... சன் - தினகரன் குழுமத்தினர் பெரிய மனது பண்ணி அந்த விஷ மனிதனின் வாரிசுகளாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தினகரன் குழும இதழ்கள் சன் நெட்வொர்க்குக்கு கை மாறியபோது ஒரு வாரப் பத்திரிகை இப்படி எழுதியிருந்தது.
“ஏற்கெனவே சாராயத்தைக் குடித்த குரங்கை ஒரு குளவியும கொட்டிவிட்டால் எப்படியிருக்கும்.... அப்படி ஒரு ஆட்டத்தை இனி இந்த குழுமம் தமிழகத்தில் நிகழ்த்துவதைப் பார்க்கலாம். சக பத்திரிகைகளான தினத்தந்தி, தினமலருக்கு மட்டுமல்ல... ஒட்டு மொத்த பத்திரிகை உலகத்துக்குமே ஒரு அபாய மணியாகத்தான் இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது...”
கிட்டத்தட்ட அதை 100 சதவிகிதம் உறுதிப்படுத்தி வருகிறார்கள் சன் குழுமத்தினர். கோயபல்ஸ் பிரச்சாரம் என்ற வார்த்தை திமுக முகாம்களில் அடிக்கடி பிரயோகிக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். அந்த ஒரிஜினல் கோயபல்ஸ் வாழ்ந்தது ஹிட்லர் காலத்தில். இந்த தலைமுறை அவனைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைத்துள்ளது சன் நெட்வொர்க்.
ஒரே பொய்யை தன்னிடம் உள்ள அத்தனை வித மீடியா மூலமாகவும் உண்மை போலவே ஜோடனை செய்து வெளிப்படுத்தும் இவர்களது டெக்னிக்கைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அந்த ஒரிஜினல் கோயபல்ஸே வெட்கித் தலைகுனிந்திருப்பார்.
அறவழிப் போராட்டமாவது செய்யுங்கள்!இனி ரஜினி படங்கள் தங்கள் தொலைக்காட்சிக்கு கிடைக்காது என்ற உண்மை ஒருபக்கம், கலைஞருக்குப் பிந்தைய வெற்றிடம் ரஜினிக்காக என்று ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்... இப்படி அவர்களின் நடவடிக்கைகளுக்கு சுயநல காரணங்கள் நிறைய.
எனவே இவர்கள் செய்தியைப் பார்த்து நண்பர்கள் மனக் கவலையடைவதை விட, அறவழிப் போராட்டம் எதையாவது உடனே செய்யலாம்.
குசேலன் விவகாரம் நிஜமாகவே தீர்ந்து விட்டாலும் கூட, இவர்கள் வேண்டுமென்றே அதைக் கிளறிக் கொண்டுதான் இருப்பார்கள்.
முதல் நாள் 40 கோடி நஷ்டம் என்று தியேட்டர்காரர்கள் சொன்னதாகப் போட்டார்கள். இப்போது 40 கோடி, 7 கோடியாகக் குறைந்திருக்கிறது. வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் ரஜினி சிறப்புப் பேட்டி கொடுக்க ஒப்புக் கொண்டால், குசேலன், குபேரனாகிவிடும்! நஷ்டப் பழி போயே போய்விடும்!!
ஊரெல்லாம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகப் பிதற்றும் பத்திரிகைகள் தங்களுக்குள்ளேயே பெரும் பயங்கரவாதியாய், சமூகத்தை அரிக்கும் கிருமியாய் உருவெடுத்து வரும் இந்த மோசமான பத்திரிகை பயங்கரவாதத்தை எப்படி ஒழித்துக் கட்டப் போகிறார்கள்?
குறைந்தபட்சம் எதிர்த்து, கண்டித்து ஒரு எடிட்டோரியல் எழுதும் தைரியமாவது இவர்களுக்கு உள்ளதா...(சோ விதிவிலக்கு)?
காலை விடிந்ததிலிருந்து இரவு முடியும் வரை ரஜினி படங்கள், ரஜினி பாடல்கள்,. ரஜினி பட காமெடி என்று கல்லா கட்டும் இவர்கள், அடுத்து தங்கள் செய்திகளில் அவதூறு பரப்பவும் அதே ரஜினி தலையைத்தான் உருட்டுகிறார்கள்.
பால் கொடுத்த தாயின் மார்பை அறுத்துப் பார்க்கும் ஈன புத்திக்காரர்களுக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கும் வித்தியாசம் ஏதாவது உள்ளதா...?
இவர்களுக்கு பாடம் புகட்ட, ரசிகர்களுக்கு உடனடித் தேவை நிறைய அழகிரிகள்!
ரஜினியிடமிருந்து ஒரு முடிவான ஆனால் பாஸிடிவ் பதில் வந்தால் போதும், அழகிரிகளுக்குக் கூட அவசியமிருக்காது!!
10 comments:
உங்கள் பதிவுகள் தமிழ்மணத்திற்கு மிக அவசியம் :-)
உண்மை என்ன என்று தெரியாமலே பேசி கொண்டு இருப்பவர்களுக்கு இதை போல பதிவுகள் அவசியம்.
காரியம் ஆக வேண்டும் என்றால் சன் டிவி என்ன வேண்டும் என்றாலும் செய்யும்..இதற்க்கு அதனுடைய டாப் 10 படங்களே சாட்சி. ஒத்து வராத நல்ல படத்தை மோசம் என்பதும் இவர்கள் வாங்கிய படம் மொக்கை என்றாலும் முதலிடம் தருவதும் அனைவரும் அறிந்தது.
இத்தனை நாள் மக்கள் மீது இல்லாத அக்கறை கலைஞருடன் சண்டை வந்த பிறகு வருகிறது. மறைமுக பேருந்து கட்டண உயர்வு, சாலை சரி இல்லை, பெட்ரோல் தட்டுப்பாடு பற்றி எல்லோரிடமும் கருத்து கேட்பது என்று பல விசயங்களை இப்போது தான் வெளிப்படையாக கூறி வருகிறது.
ரஜினி க்கு பிரச்சனை இருக்கோ இல்லையோ கலைஞர் செம காண்டுல இருப்பாரு :-))))
We would like to publish ur article in our site www.rajinfans.com. Please let us know if you have any objection
Admin, for www.rajinifans.com
rajinifans@gmail.com
sun tv ya run pannura rendu bonda vayanungalum yeppadhan seruppadi vangaporanungalo?
yerkanave azhagirikitta vanguna adi podhadhu avanungalukku.
bloody **********
sun tv ya run pannura rendu bonda vayanungalum yeppadhan seruppadi vangaporanungalo?
yerkanave azhagirikitta vanguna adi podhadhu avanungalukku.
bloody **********
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
ஊடக சுதந்திரம் இல்லாமல் இலங்கை தமிழர் படும் அவஸ்தை? ஆனால் ஊடக சுதந்திரத்தை இப்படியும் கேவலமாகவா பஜன்படுதுகிறது சன் குழுமம்
நான் கண்ட இன்னொரு உதாரணம்
சென்னை 28, இந்தப் படத்தினை விஜய் டீவியில் அதிகளவு விளம்பரப்படுத்தியதும், படத்தில் ரேடியோ மிர்ச்சி காட்சிகள் வந்ததும் தினகரன் குழுமத்துக்கு காய்ச்சலை உண்டு பண்ணி இப்படம் வந்த வேளை படம் காலி என்றும், நடித்தவர்களுக்கு வெங்கட் பிரபு சம்பளம் கொடுக்காமல் அல்வா கொடுத்தார் என்றும் நாளும் செய்தி போட்டார்கள். திடீரென்று சில நாட்களின் பின் பார்த்தால் சென்னை 28 படம் பற்றி பிரமாதமான செய்திகள். என்னடான்னு பார்த்தா இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக சன் டீவியில் படம் காண்பிக்கப்பட்டது. தினகரனின் பழைய ஆர்க்கைவை பார்த்தீர்களென்றால் இப்போதும் இந்த வேடிக்கையை பார்க்கலாம்.
தசாவதாரம் கூட சில வாரங்களுக்கு பின் தான் சன் டீவியில் காட்சிகளாகவும்,டாப் டென், சூப்பர் டென்னிலும் வருது. அங்கேயும் இதே கொடுப்பினை இருக்கலாம்.
வேர்ட் வெரிபிகெசனை எடுத்திடுங்களேன்.
A Very good article.
Thank you very much friends...
குசேலன் குறித்த ஒரு நேர்மையான விமர்சனம்.
http://sirippu.wordpress.com/2008/08/25/kuselan-2/
Post a Comment