Saturday, August 9, 2008

இதில் தமிழ் துரோகம் எங்கே வந்தது? - சோ


ரஜினியை வேண்டுமென்றே தாக்கும் கூட்டத்துக்கு இப்போது குஷியான நேரம். அதனால்தான் செய்யாத ஒரு செயலுக்காக அவர் குறி வைக்கப்படுகிறார். தன் பேச்சுக்கு அவர் விளக்கம் தெரிவித்ததும், நல்ல விஷயத்துக்கா வருத்தம் தெரிவித்ததும் தமிழ்த் துரோகமா... என்கிறார் துக்ளக் ஆசிரியர் சோ எஸ்.ராமசாமி.

இதுகுறித்து அவர் இப்படி கூறியுள்ளார்:

ஒகேனக்கல் விவகாரத்துக்காக உண்ணாவிரதம் இருந்தது ஒரு சினிமா காட்சி மாதிரிதான். மேடையில் இருந்தவர்களெல்லாம் ஓவராக உணர்ச்சி வசப்பட்டுப் பேச, ரஜினியும் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.

இதில் பிரச்சினையே உதைக்க வேண்டாமா... என்று அவர் பேசியதுதான்.
இதன் பின் விளைவுகள் எப்படியிருக்கும், கர்நாடகத்தில் எந்தமாதிரி ரியாக்ஷன் இருக்கும் என்றெல்லாம் கேள்வி - பதில் பகுதியில் அப்போதே விரிவாகக் கூறிவிட்டேன். இந்த இதழ் துக்ளக்கிலும் கூட எழுதியிருக்கிறேன்.

இதற்குப் பேசாமல் அவர் கட்சி ஆரம்பித்திருக்கலாம். அவர் பங்குக்கு காரசாரமாக பதிலாவது சொல்லியிருப்பார். பஸ்களைக் கொளுத்த அவருக்கும் ஆயிரம் தொண்டர்கள் இருந்திருப்பார்கள்! நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, ரொம்ப நல்லவரா எப்போதும் இருக்கக் கூடாது என்ற உண்மை மட்டும் நன்கு புரிகிறது!!

இன்னொன்று ரஜினி ஏற்கெனவே தனது பேச்சுக்கு கன்னட தொலைக்காட்சியில் விளக்கம் கூறிவிட்டார். அதே விளக்கத்தை இன்னொரு முறை சொல்லியிருக்கிறார்.
இதில் தமிழ்த் துரோகம் எங்கே வந்துவிட்டது!

ரஜினி என்ற நல்ல மனிதரின் குணம் தெரியாமல் இவர்களாகவே கற்பனை செய்து கொண்டு பேசுகிறார்கள். இதில் மீடியாவின் பங்கும், பரபரப்புக்காக தவறான செய்திகளைப் பரப்பும் அவர்களின் குணமும்கூட முக்கியப் பங்கு வகிக்கிறது.

வரவர பத்திரிகைகள் யோசிக்கும் திராணியையே இழந்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது.

இதுபோன்ற சூழலைத்தானே கருணாநிதி எதிர்பார்த்திருப்பார்... அவருக்கு சந்தோஷமாக இருக்கும்!

ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் வேண்டும், அவரைத் தாக்கிப் பேச.
இதிலிருந்தும் அவர் மீண்டு வருவார், என்று கூறியுள்ளார் சோ.

No comments: