மக்கள் வாழ்க்கையில் திரைப்பட அரங்குகள் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டன.
என்னதான் அறிவுஜீவிகள் வாய்கிழியப் பேசினாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை சினிமா என்பது முதல்வர்களை உருவாக்கும் இடமாகத்தான் இப்போதும் பார்க்கப்படுகிறது.
இன்றும் மக்களுக்கு குடும்பத்துடன் போய்வர ஒரு எளிய சிற்றுலா மையம் திரைப்பட அரங்குகள்தான்.
ஆனால் இத்தகைய அரங்குகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன?
எக்கச்சக்கமாக கட்டணம் வசூலித்தாலும் எந்த அடிப்படை வசதியும்- ஒரு சில திரையரங்குகளைத் தவிர- மற்றவற்றில் கிடையாது.
மோசமான இருக்கைகள், சுத்தமில்லாத கழிவரைகள், மூன்று நான்கு மடங்கு அதிக விலையில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள்... அடுக்கிக் கொண்டே போகலாம் இத் திரையரங்குகளின் லட்சணத்தை. சென்னை கூட இதற்கு விதிவிலக்கல்ல (சத்யம், ஐநாக்ஸ் என சில வளாகங்கள் தவிர).
குடும்பத்தோடு படத்துக்குப் போகும் ஒருவர் தியேட்டர்காரர்களோடு சண்டை போடாமல் வீடு திரும்பவதே அதிசயம்தான்.
இந்த லட்சணத்தில் அரங்குகளில், பார் வசதி செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கையை தீர்மானமாகவே நிறைவேற்றி அதை தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ளனர் திரையரங்க உரிமாயாளர்கள் சங்கத்தினர்.
இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், திரையரங்குகளில் வருமானத்தைப் பெருக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி ஆலோசித்து வருகிறோம். அதில் ஒன்று அரங்குகளிலேயே பார்களைத் திறப்பது!!
வெளிநாடுகளில் இதுபோல பார் வசதி கொண்ட திரையரங்குகள் உள்ளன. இதனால் பெண்கள் வருவது பாதிக்கப்படுவதில்லை. எனவே இதேபோல தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நமக்குத் தெரிந்து பார் தியோட்டர்கள் வெளிநாட்டில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், ஏற்கெனவே குற்றங்களும், அத்துமீறல்களும் மலிந்துவிட்ட தமிழக திரையரங்குகளுக்குப் பொருந்துமா...
பணத்துக்காக இப்போது பார் கேட்பவர்கள், நாளை வாடிக்கையாளர்களுக்கு வசதியாக சிவப்பு விளக்கு கார்னர் ஒன்றை ஏற்படுத்தவும் கோரிக்கை வைப்பார்களோ? (இன்னும் பணத்தை அள்ளலாமே!)
ஒகேனக்கல் பிரச்சினையில் சூப்பர்ஸ்டார் ரஜினி கேட்டாரே ஒரு கேள்வி: ...உதைக்க வேண்டாமா இவர்களையெல்லாம்!, என்று.
நியாயமாக அது இந்த பேராசைக்கார, நேர்மையற்ற வணிகப் பிரதிநிதிகளான தியேட்டர்காரர்களுக்குத்தான் பொருந்தும்!!
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
13 comments:
Baw, kasagad-sagad sa iya ubra blog!
ive done something here to have you a few cents!
சூப்பர் போஸ்ட். இந்த அட்டை பூச்சிகளை திருத்தவே முடியாது. அதிலும் அவர் சொல்றாரு, பார் வைச்சா பெண்கள் கூட்டம் குறையாதாம். நீங்க சொல்றது சரி தான் உதைக்க வேணாமா இவங்களை??
இந்த பன்னீர் செல்வம் இன்னும் கொஞ்சம் காமெடி பண்றாரு கேளுங்க. ரஜினி படம் போட்டா collection அள்ளாதாம், ஜஸ்ட் ஊர்லேயே பெரிய தியேட்டர்னு பெயர் கிடைக்கும் போடுறாங்களாம். நம்ப எல்லாம் மடையன்னு நினைச்சுட்டு இருக்காங்களா??
Good article Settu( am I right?). Some one must have given wrong information about bars in foreign theatres.
If at all, it could be restaurants in the malls, will have bar, and there could be theatre in the mall. Definitely not with in Theatre premises..
A suggestion to these theatre owners: Convert the entire theatre as Bar and stop screening movies..
Before looking at Foreign theatres, they should look at the sanity in their theatre. As you mentioned in the article, 99% of Tamil Nadu theatres will not get licence, if they are located in any of the foreign country
Only solution for these theatre mess is releasing DVDs on same day and reduce no of theatres.. Give choice to the people and let them decide what they want to watch.. It will bring the money lost in pirated CDs.
Super star can try with his animation moview Sultan.
New innovative ideas of exhibiting movies is need of the hour.
anbudan
Thinakar
//வெளிநாடுகளில் இதுபோல பார் வசதி கொண்ட திரையரங்குகள் உள்ளன. இதனால் பெண்கள் வருவது பாதிக்கப்படுவதில்லை. எனவே இதேபோல தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்///
எந்த வெளிநாட்டில் அப்படி இருக்காம்? லூஸுப் பயலுவ!
தண்ணி அடிச்சிட்டு மப்பு ஏறிப்போயா ஒருத்தன் படம் பாக்கணும்?
என்ன அல்ப்பத்தனமான கோரிக்கையா இருக்கு இது?
இதற்கு அனுமதி கொடுத்தா, அதைவிட கேவலம் நம்ம அரசுக்கு வேறு இருக்க முடியாது.
இதை தடை செய்ய, என்னென்ன செய்யணுமோ, அதை செஞ்சே ஆகணும்.
Yes..We can buy good quality DVD's on first day, rather than watching in theatres like that. How can family audience will go these kind of theatres.. dont they have any idea. may be he had something while talking or came directly from bar..that's why....
why not Sultan get released only in good Multiplex and not in theatres and parallel release good quality DVD's. True Rajini fans will always buy it..
மிக மிக தவறான கோரிக்கை, தியேட்டர் அதிபர்களிடம் இருந்து
Friends,
Please pass on DVD release suggestions to Super Star.. Let Sultan drive the initiative in Tmail industry.
Anyway these dirty theatres are not worth watching movies. I am sure many family people get in to these theatres, just to watch Rajini movies or any big budget movies.
I think, time has started for demolition of these theatres to get converted in to malls. Places like Tuticorin witnessing this.A very popular theatre called ' Charles' was called South India's Taj Mahal. It was old, big and beautiful. It has been demolished and a shopping mall is on the way.
75% of current theatre revenue can be fetched from direct DVD sales worldwide with in a week. Remaining amount can be made from selective good theatres accross the state with profit share model.. So no more loss claim by theatre owners.
anbudan
Thinakar
Yes,
friends, I am living in canada after reading this news in dinamani, i am searching for such a theatre in toronto. Tamil naatoda tharathai agila ulaga alavula uyartha enna enna thittangal aha aha. Muhammed bin tuglag kettaryaa ippadi kenathanama yosigrtathula. Ille nijama ennaku oru doubt ivanuga ellam pomabalingulluku thaan porthanungala ille per theriyaatha Godzilla, aliens-nnu ethukaakava. Ithila theriyuthu invaunga pammi pammi potta kuselan nadaga velicham. Rasigarl ille pothu jananga othaikkanum/
Yes friends, DVDs should be released. I bought Siviaji original DVD from Shruthi. Still thiruttu DVD copies adichi vyapaaram pannuvaanuga. inthmathir kumbal iruntha appa nasta eedu keppanga.Most important need is regulated Business polciies and implementing authorities.
Inthiya va kadavule kaapathupaa
Let our thalivar start this new trend in this line too. Let this owners go to hell for cheating, spoiling all our peace.
Ivanungalukku mattum mannippae kidaiyaadhu....
Yet another super article boss.
பல்டி, ஈனப்பிறவி - இதுக்கு அர்த்தம் தெரியணுமா? இதப்பாருங்க! ( இது ஒக்கெநக்கல் பிரச்சனைக்கு கொந்சம் முன்னாடி எடுத்தது தான். ஈனப்பிறவிகளும் மனிதபிறவிகளும் இத பார்க்கணும் ) http://www.youtube.com/watch?v=Im7jacsKVR8
Dearest Vino
இடுக்கண் வருங்கால் நகுக! Am a fan of Mr.Rajini since my childhood and will be for ever ( I just read this on google search is it possible to publish the following message in a creative and positive and also in a slight humorous way, am not good in expressing my thoughts or feelings with words eventhough some evil people do with a purpose)
by the way don’t u ever think otherwise… Rajini IS part of our lives that much I can say. Rajini IS A respectable admirable followable human.
# There is no theory of evolution. Just a list of creatures Rajnikant has allowed to live.
# Outer space exists because it’s afraid to be on the same planet with Rajnikant.
# Rajnikant counted to infinity - twice.
# When Rajnikant does a pushup, he isn’t lifting himself up, he’s pushing the Earth down. (God help me.. i cant take this anymore)
# Rajnikant is so fast, he can run around the world and punch himself in the back of the head.
# Rajnikant doesn’t wear a watch, HE decides what time it is. (LOL)
# Rajnikant gave Mona Lisa that smile.
# Rajnikant can slam a revolving door.
# There are no races, only countries of people Rajnikant has beaten to different shades of black and blue.
# Rajnikant’s house has no doors, only walls that he walks through.
# Rajnikant can divide by zero.
# Newton ’s Third Law is wrong: Although it states that for each action, there is an equal and opposite reaction, there is no force equal in reaction to a Rajnikant turnaround kick.
# When taking the GRE, write “Rajnikant” for every answer. You will score over 1600.
# Rajnikant has 12 moons. One of those moons is the Earth.
# Rajnikant grinds his coffee with his teeth and boils the water with his own rage.
# Archeologists unearthed an old English dictionary dating back to the year 1236. It defined “victim” as “one who has encountered Rajnikant”
# If you Google search “Rajnikant getting kicked” you will generate zero results. It just doesn’t happen.
# Rajnikant can drink an entire gallon of milk in thirty-seven seconds.
# Rajnikant doesn’t bowl strikes, he just knocks down one pin and the other nine faint.
# It takes Rajnikant 20 minutes to watch 60 Minutes.
# The Bermuda Triangle used to be the Bermuda Square , until Rajnikant kicked one of the corners off.
# There are no weapons of mass destruction in Iraq , Rajnikant lives in Chennai.
# Rajnikant once ate an entire bottle of sleeping pills. They made him blink.
# James Cameron wanted Rajnikant to play the Terminator. However, upon reflection, he realized that would have turned his movie into a documentary, so he went with Arnold Schwarzenegger.
# Thousands of years ago Rajnikant came across a bear. It was so terrified that it fled north into the arctic. It was also so terrified that all of its decedents now have white hair.
Post a Comment