
உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எந்திரன் படப்பிடிப்பின் அடுத்த கட்டம் எப்போது துவங்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி ஏற்கெனவே அறிவித்திருந்தார். வரும் நவம்பர் 16-ம் தேதி குல்லு மணாலியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவங்குவதாக அவர் ரசிகர்களிடம் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான், சமீபத்தில் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் நிதி நெருக்கடி மற்றும் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக மீடியாவில் செய்தி பரவியது.
உடனே, எந்திரன் படத்துக்கும் நிதி நெருக்கடி எழுந்துள்ளதாக சில இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணமிருந்தன.
உண்மை நிலவரம் என்ன?
ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகியான விஜய்குமாரைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தோம்.
அவர் கூறியதாவது:
என்ன ஒரு மோசமான கற்பனை பாருங்கள்... சூப்பர் ஸ்டாரின் எந்திரன் உலகளாவிய படம். இந்தியாவின் திரையுலக சாதனையாக சர்வதேச அளவில் பேசப்படப்போகும் படம்.
அதன் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் எந்த சுணக்கமும் நேராமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த சிரத்தையுடன் ஏற்பாடு செய்து வருகிறோம்.
இந்த நிலையில் இப்படி ஒரு செய்தியா... வதந்திகள் பற்றிக் கவலை வேண்டாம். எந்திரன் தொடர்பான அனைத்தும் திட்டமிட்டபடி மிகச் சரியாக நடக்கும்... என்றார்.
http://www.envazhi.com
1 comment:
இதுல ஏதும் உள்குத்து இல்லையே?
Post a Comment