Wednesday, November 12, 2008

‘நாளைய முதல்வரைச் சந்தித்த பாஜக பிரதமர் வேட்பாளர்’!!

ராகவ வீரா அவென்யூவுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறது அந்தப் பிரபல வீடு. அடுத்த முதல்வர் என அதிமுகவினரும் சில எதிர்க்கட்சிகளும் நம்பும் ஜெயலலிதாதாவின் வேதா இல்லம்தான் அது.

ஆனால் அந்த வீட்டை விட மிக சக்தி மிக்கதாக திகழ்வது ராகவ வீரா அவென்யூவிலிருக்கும் இன்னொரு இல்லம். வாய்மையே வெல்லும் என பொன்னெழுத்துக்கள் தகதகக்கும் அந்த இல்லத்தின் சொந்தக்காரர் யாரென்பது சொல்லாமலே தெரியும்!

இன்று புதன்கிழமை மாலை ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அந்த இல்லத்தில் நடந்த சந்திப்பு மீதுதான் நிலைத்திருந்தது.

ஆம்... பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து அரைமணி நேரத்துக்கும் மேல் அரசியல் பேசினார்!

சென்னையில் இன்று நடந்த அத்வானியின் சுயசரிதை என் நாடு; என் வாழ்க்கை புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அத்வானி முதலில் பார்த்துப் பேச விரும்பியது ரஜினியைத்தான்.

அவரிடம் ஏற்கெனவே ரஜினியின் சமீபத்திய அரசியல் சார்ந்த பேச்சுக்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள அசாதாரண எழுச்சி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே, தனது புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்க வேண்டும் என அத்வானி விரும்பினார். அதை தமிழக பாஜகவினரிடமும் தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த இரு தினங்களுக்கு முன் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து விழாவுக்கு அழைப்பு விடுத்தார் இந்தி நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா.

அவரைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கான பாஜக வேட்பாளரான அத்வானி இன்று போயஸ் கார்டன் சென்றார்.

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் திருநாவுக்கரசர், சோ எஸ். ராமசாமி மற்றும் எஸ். குருமூர்த்தி ஆகிய மூவர்தான்.

இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் என்னவென்று ரஜினி தரப்பில் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் இச்சந்திப்பு குறித்துப் பேசிய திருநாவுக்கரசர், ரஜினியின் அரசியல் பிரவேசம், கட்சி ஆரம்பிக்கும் திட்டம் குறித்து அத்வானி கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.

ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்த அத்வானி கூறுகையில், “இது அரசியல் நிமித்தமான சந்திப்புதான். வருகிற பொதுத்தேர்தலில் ரஜினியின் ஆதரவைக் கோரவே அவரது இல்லம் தேடிச் சென்றேன்....” என்று தெரிவித்தார்.

ஆனால் வெளிப்படையான எந்த ஆதரவையும தன்னால் அளிக்க முடியாது என ரஜினி தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த பிரதமர் எனும் நிலையில் வைத்துப் பார்க்கப்படும் நாட்டின் பெரிய தலாவர் ஒருவரே ரஜினியை வீடு தேடிப்போய் சந்தித்திருப்பது, ரஜினி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘ஒரு வருங்கால முதல்வரை, வருங்கால பிரதமர் சந்தித்திருக்கிறார்...’ என அர்த்தத்துடன் சொல்லி மகிழ்கின்றனர் ரசிகர்கள்.

"மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி இன்றைக்கு ரஜினியிடம் மட்டுமே உள்ளது. காரணம் மாசற்ற கரங்கள், நேர்மையான எண்ணங்களுக்குச் சொந்தக்காரர் ரஜினி. அதனால்தான் இன்று தமிழக அரசியலின் மையப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறார். டெல்லியைப் பொறுத்தவரை இன்றைக்கு கருணாநிதி, ஜெயலலிதாவை விட ரஜினியின் நகர்வுகள்தான் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. இதை நன்கறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்", என்றார் நம்மிடம் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர்.

ஒவ்வொரு தமிழனும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் பெருமை இது!

நிஜமாகவே மகிழ்ச்சியில் மனம் அதிருதுங்கோ!!

http://www.envazhi.com

1 comment:

Anonymous said...

ஒரே ஒரு சீட் கொடுங்கள்,நாங்கள் கணக்கைத் திறக்கிறோம் என்று கணக்குத் திறந்த கோவையைக் கலகக் களமாக
மாற்றிய கூழைக் கும்பிடு அத்வானி.

இப்போது சோ மாமா ரஜனி மூலமாக
இந்துத்வா வெறிக்கு எங்கே இடை வெளி கிடைக்கும் மாமா வேலைக்கு என்று
நுழையப் பார்க்கிறார்.
"உனக்கும் பெப்பே,உங்க மாமாவுக்கும்
பெப்பே!" என்று புத்திசாலித் தனமாக
ரஜனி வலையில் விழாமல் இருக்கிறார்.