ரஜினியை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டுமா.. கூப்பிடுங்கள் சீமானை என்றிருந்த நிலையில், குசேலன் பிரச்சினையின்போது, ரஜினிக்கு ஆதரவாகப் பேசி ஆச்சர்யப்பட வைத்தவர் இயக்குநர் சீமான்.
ஆனால் சில தினங்களில், கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டார் என ஒரு பொய்யைப் பரப்பி யாரோ தூண்டிவிட, மீண்டும் ரஜினிக்கு எதிராக விஷம் கக்கினார் இதே சீமான்.
இப்போது மீண்டும் ‘தெளிவாகி’யிருக்கிறார். குறிப்பாக ஈழ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, யாரும் பேச முடியாத அளவு அழுத்தம் திருத்தமாக ரஜினி பேசியவற்றைக் கேட்ட பின் அவரை வாயாரப் புகழ்ந்திருக்கிறார் சீமான்.
‘நேரத்துக்கு ஒரு பேச்சுப் பேசும் இந்த சீமானின் புகழ்ச்சி தலைவருக்குத் தேவையா...’ என்கிற ரீதியில் சில ரசிகர்களின் குரல்கள் கேட்கக்கூடும்.
எப்பொருள் யார் யார் வாய்க்க கேட்பினும்... என்ற வள்ளுவப் பெருமானின் வாக்குமட்டுமல்ல, இங்கு சீமான் பேட்டியைத் தர வேறு ஒரு காரணமும் இருக்கிறது.
சில தினங்களுக்கு முன் வெளியான விஷம விகடனின் கொடுக்கு ஒன்றில் ரஜினியின் உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிட்டிருந்தனர்.
கூடவே, ரஜினியின் உண்ணாவிரதப் பேச்சை இயக்குநர் சீமானும், அமீரும் கடுமையாக எதிர்த்ததாகவும், ரஜினிக்கு கண்டன அறிக்கை விடவும் தயாரானதாகவும், அவர்களை பாரதிராஜா சமாதானப்படுத்தியதாகவும் புளுகியிருந்தனர்.
ஆனால் நிஜத்தில் நடந்தது என்ன?
இதோ... ரஜினியின் உண்ணாவிரதப் பேச்சு குறித்த சீமான் அளித்துள்ள பேட்டி. அடுத்து அமீர் பேட்டியும் வருகிறது. விரைவில் பாரதிராஜாவின் முழுமையான பேட்டியையும் வெளியிடவிருக்கிறோம்.
மீண்டும் ரஜினியின் அதே ‘நச்’ கேள்வியைத்தான் அந்த விஷமக்காரர்களைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது... ‘இப்ப உங்க மூஞ்சிங்கள என்னங்கடா போய் வச்சுக்குவீங்க...?’
ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வேண்டும்!
"இலங்கைத் தமிழர்களைக் காக்க பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராடும்போது, தங்களது திரைப்பட வர்த்தகத்தை விரிவடையச் செய்ததில் ஈழத்தமிழர்களுக்கும் பங்குண்டு என்பதை திரைப்பட நடிகர்கள் மறக்கவில்லை. அதற்கு நன்றிக்கடனாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும் அது பாராட்டுதலுக்குரியதே. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே தங்கள் உணர்வைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் எழுந்தே தீரும், என கமல் கூறியது சரியான வார்த்தை.
சர்வதேச ராணுவ பலத்தை வைத்துக்கொண்டு முப்பதாண்டுகளாகப் போராடியும் வெற்றி முடியவில்லையென்றால், நீங்க ஆம்பிளைங்களா... உங்கள் தோல்வியை ஒத்துக்கோ... என ரஜினி கூறியதும் சரியானதே.
ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வரவேண்டும். அதாவது, ரஜினியின் கருத்தை இந்தியா உணர வேண்டும் என்பதே என் விருப்பம். தமிழர்களின் உணர்வை இந்த உண்ணாவிரதம் சரியாக வெளிப்படுத்தியுள்ளது. நடிகர்களுக்கு சமூக அக்கறை இருப்பதை நிரூபித்திருக்கிறது..."
http://www.envazhi.com
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
No comments:
Post a Comment