Monday, November 3, 2008

இதெப்டி இருக்கு!

ஜினிக்கு எப்போதும் ஒரு ராசி உண்டு... யாரெல்லாம் அவரைத் திட்டுகிறார்களோ, அவர்களே மீண்டும் வலியப் போய் அவரை பாராட்டித் தள்ளுவார்கள்.
எடுத்துச் சொல்ல ஒன்றா இரண்டா சம்பவங்கள்...

பகுத்தறிவு பேசிய வேலு பிரபாகரன் தொடங்கி, நானே இனி சூப்பர்ஸ்டார் என நாக்கில் சனியுடன் திரிந்தவர்கள் வரை, கடைசியில் ‘ரஜினி வழிதான், எங்கள் வழி’ என்று அவருக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். தன்மேல் வீசப்பட்ட கற்களையே, படிக்கட்டுகளாய் மாற்றிக் கொள்ளும் பண்புதான் அவரை திரையுலகுக்கு வெளியேயும் தாண்டி சூப்பர் ஸ்டாராகவே வைத்திருக்கிறது.

ஒகேனக்கல் காவிரி உண்ணாவிரதப் பிரச்சினையின்போது ரஜினி மீது வசை மாரி பொழிந்து உலகமெங்கும் பெயரைக் கெடுத்துக் கொண்டவர் சத்யராஜ். எதையும் ஒரு முறை யோசித்துச் செய்யும் ரஜினி ரசிகர்களே ஆவேசப்பட்டு சத்யராஜின் கொடும்பாவியைக் கொளுத்தும்படியாகிவிட்டது நிலைமை (உடனே ரஜினி ரசிகர்களை விமர்சித்து கமெண்ட் எழுதிவிடாதீர்கள். ரஜினியின் பெரும்பாலான ரசிகர்கள் உண்மையில் பொறுமைக்கும், சுயநலமின்மைக்கும் பெயர்பெற்றவர்கள். சில நடிகர்களின் ரசிகர்கள் கத்தியுடன்தான் அலைகிறார்கள். தேவைப்பட்டால் ஒருவரையொருவர் குத்தியும் ‘விளையாடிக்’ கொள்வார்கள்!)

‘இந்த மேடையில் யார் பெயரைச் சொன்னால் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன்...’ என்று ஒகேனக்கல் உண்ணாவிரத மேடையில் சாமியாடினார் சத்யராஜ்.

ஆனால் காலத்தின் சுழற்சி பாருங்கள்... இன்று மீண்டும் ரஜினி நடுநாயகமாய் வீற்றிருந்த அதே போன்றதொரு உணர்ச்சிகரமான உண்ணாவிரத மேடைக்கு சத்யராஜை வரவழைத்துவிட்டது.

அதுமட்டுமல்ல... ரஜினியின் பேச்சையும், அவர் அளித்த நிதியுதவியையும் பார்த்துக் கொண்டிருந்த சத்யராஜ், இறுதியில் நேராக ரஜினியிடம் போனார். கைகுலுக்கினார், தோளில் தட்டிக் கொடுத்து பிரமாதமான பேச்சு என ரஜினிக்கு பாராட்டு தெரிவித்தார். ஆனால் பழைய குற்ற உணர்வின் விளைவோ என்னமோ, அவரால் ரஜினியை முகத்துக்கு நேரே கூட பார்த்துப் பேச இயலவில்லை.

மேடையைவிட்டு இறங்கியவர், ‘உண்ணாவிரதத்தின் சிறப்பு ரஜினியின் உணர்ச்சிகரமான பேச்சுதான். அதை நாம் பாராட்ட வேண்டும். ஈழ மக்களுக்கு இது ஒரு பெரிய அங்கீகாரம். இந்த மாதிரி ஒரு பேச்சை அவரிடமிருந்து நிஜமாகவே நான் எதிர்பார்க்கவில்லை மாப்ளே...’ என ராதாரவியிடம் மனம் விட்டுப் பாராட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

ஒரு தமிழ் நடிகராய் ரஜினி தன் வாழ்க்கையைத் துவக்கிய நாள்முதல், சர்வதேச கலைஞராய் இன்று ஜொலிப்பது வரை, ஒருபோதும் தமிழர்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவரல்லவே அவர். மனதால், உணர்வால், இருப்பிடத்தால், ரத்த உறவுகளால் அவரும் ஒரு தமிழர்தானே...

இதைப் புரிந்து கொள்ளாமல், பொறாமையால் அவரைத் தூற்றுவதும், அவரது பெருமை புரிந்து மீண்டும் அவரை மேடைக்கு மேடை புகழ்ந்து கைத்தட்டல் பெறுவதும் எதற்கு... உங்களுக்கு விளம்பரம் வேண்டுமென்றால், போய் ரஜினியுடன் கரம்கோர்த்து நில்லுங்கள். உலகம் முழுக்க உங்கள் புகழ் பரவும்.

அதை விட்டுவிட்டு அவரை விரல் நீட்டி விமர்சிக்க ஆரம்பிப்பவர்களை காலச் சுழல் மீண்டும் அவர் காலடிக்கே கொண்டு வந்துவிடும்!
http://www.envazhi.com

No comments: