Friday, November 7, 2008

தன் 60 வது வயதில் அரசியலுக்கு வருவார் ரஜினி! –சொல்கிறார் சிரஞ்சீவி

ரசியலுக்கு வருவது குறித்து ரஜினி முடிவாக ஒரு பதிலைச் சொல்லிவிட்டார். ஆண்டவன் உத்தரவு வந்ததும் தன் அடுத்த உத்தரவை ரசிகர்களுக்கு வழங்கப் போவதாக அவர் அறிவித்துவிட்ட நிலையில் அவரது பேச்சுக்கு பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதத் தொடங்கியுள்ளன சில வார இதழ்கள்.

ஆனால் ரஜினியின் புதிய கீதோபதேசத்தில் தெளிவும் மன நிம்மதியுமடைந்துள்ள அவரது ரசிகர்கள், ‘தலைவர் வரும்போது வரட்டும். உறுதியான உத்தரவை வழங்கட்டும். அதுவரை பொறுத்திருப்போம்’, என தங்களை உள்ளக் கிடக்கையை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, ரஜினியின் இன்னொரு உத்தரவான குடும்பத்தைக் காப்பாற்றும் வேலையில் மூழ்கி விட்டார்கள்.

இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகரும், ரஜினியின் நண்பரும், சமீபத்தில் பிரஜா ராஜ்யம் கட்சி துவங்கி கலக்கி வருபவருமான சிரஞ்சீவி சிஎன்என் ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு இன்று அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
ரஜினி தனது 60 வது வயதில் அரசியலுக்கு வருவார் என்றும், இத்தகவலை ரஜினியே தன்னிடம் பேசும்போது தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார்.

அந்த பேட்டியின் சுருக்கம்:

என்னைக் கேட்டால் ரஜினி இப்போதே அரசியலில் இறங்க வேண்டும் என்றுதான் சொல்வேன். இதுதான் அதற்கான தருணமும் கூட.

நானும் அவரும் பலமுறை இது பற்றி ஆலோசனை செய்திருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் ‘என்னுடைய 60-வது வயதில் அரசியலுக்கு வருவதுதான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று ரஜினி கூறுவார்.

அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கு உள்ளது. அவரளவுக்கு மக்களை வசீகரித்துள்ள தலைவர்கள் இப்போது தமிழகத்தில் இல்லை. மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். எனவே இப்போது அரசியல் பற்றி அவர் முடிவு செய்யும் நேரம் வந்துவிட்டது, என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.

இந்த நேர்காணலை வீடியோ பதிவாகப் பார்க்க:

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்! - சிரஞ்சீவி

http://www.envazhi.com

1 comment:

Gopikrishnan said...

adhu saringa...avarukku epa 60 vayasu aagaradhu...

avaru edho comedya chiru kita solli irupar..Avarukku 60 aagadhu nu oorukey theriunga..