Wednesday, November 19, 2008

புண்ணிய ஆத்மா நம்பியார்! - ரஜினி

ன்று பிற்பகல் மரணமடைந்த எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து, வணங்கினார் ரஜினி.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், நம்பியார் ஒரு புண்ணிய ஆத்மா. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் வேண்டுகிறேன்.

அவரது இழப்பு அவர்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திரையுலகுக்கே பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
http://www.envazhi.com

4 comments:

Anonymous said...

ஆத்மீகத்தை உணர்ந்தவர்களுக்குத்தான் ஆத்மீக பலத்தின் சக்தியைப் புரிந்து கொள்ள முடியும். எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் உங்கள் பதிவின்மூலம் தெரியப்படுத்துகின்றேன். தகவலுக்கு மனம் நிறைந்த நன்றிகள்!

தங்க. முகுந்தன்.

Anonymous said...

மறைந்த நல்ல உள்ளத்தின் ஆன்மாவிற்கு அஞ்சலி.

***

அது சரி, இப்போ போன வாரம் தான் தலைவர் யாரோட மறைவிற்கும் நேரில போக மாட்டாரு. அவர்கள் இழைப்பை தாங்க முடியாதுன்னு எல்லாம் சொன்னாரு. இப்போ போஇ பார்த்திருக்காரே? ஏன்?

SurveySan said...

:(

Anonymous said...

மறைந்த நல்ல உள்ளத்தின் ஆன்மாவிற்கு அஞ்சலி.

***

//அது சரி, இப்போ போன வாரம் தான் தலைவர் யாரோட மறைவிற்கும் நேரில போக மாட்டாரு. அவர்கள் இழைப்பை தாங்க முடியாதுன்னு எல்லாம் சொன்னாரு. இப்போ போஇ பார்த்திருக்காரே? ஏன்?//

இப்படி எல்லாம் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பதாக நினைத்தால் ...எங்களுக்குச் சுள்ளெனக் கோவம் வரும்.

அவர் எப்ப வருவார்...எப்படி வருவார் என்பது எப்படி தெரியாதோ??
அப்படியே அவர் எங்க போவார்...எங்கே போகமாட்டார் என்பதும் தெரியாது...