உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறார்கள் உலக முழுவதும் உள்ள ரஜினியின் ரசிகர்கள். காரணம் இன்று அவர்கள் ரஜினியை நேரில் சந்தித்து தங்கள் மனதிலிருக்கிற அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்களைப் பெற்றுவிட்டனர். அதுவும் சாதகமான பதில்களை!
எந்திரன் உள்ளிட்ட படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ரசிகர்களின் விருப்பமே தன் முடிவு என்றும், அவர்களை
ஒருபோதும் கைவிட மாட்டேன் என்றும் பெருத்த ஆரவாரத்துக்கிடையே கூறியிருக்கிறார் ரஜினி.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான செய்தி இதோ (தட்ஸ்தமிழ்):
உங்களைக் கைவிட மாட்டேன்! - ரஜினி உறுதி
சென்னை: என்னை நம்பியிருக்கும் ரசிகர்களான உங்களை ஒருபோதும் கைவிட மாட்டேன். இப்போது கைவசமுள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, அரசியல் பற்றி அறிவிக்கிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்தார் ரஜினிகாந்த். காலை 7 மணியிலிருந்தே ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர்.
கடுமையான போலீஸ் பாதுகாப்பு, மன்ற தலைமை நிர்வாகி சத்தியநாராயணா மற்றும் நிர்வாகிகளின் சோதனைகளுக்குப் பிறகே, ஒவ்வொரு ரசிகரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்டத்துக்கு 10 நிர்வாகிகள் வீதம் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் பிரதான மண்டபத்தில் அமர வைக்கப்பட்டனர்.
மேடையில் ஒரே ஒரு நாற்காலி. அதன் பின்னணியில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்டுள்ள வாக்கியம்தான் இந்த சந்திப்பின் ஹைலைட். ரஜினி சொல்ல வரும் ஒட்டுமொத்த செய்திக்கும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கும் ஒரு வாக்கியம் அந்த பேனரில் இடம் பெற்றிருந்ததாம்.
'கடமையைச் செய்; பலனை எதிர் பார்!' – இதுதான் அந்த வாக்கியம்.
அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாபாஜியின் படம் வைக்கப்பட்டிருந்தது.
கேள்வி பதில்!
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு கேள்விகள் வீதம் ரஜினியிடம் ரசிகர்கள் கேட்டனர். அதற்கு பெரும்பாலும் பாஸிட்டிவ் பதிகளை ரஜினி தந்ததாக்க் கூறப்படுகிறது. புதிய மன்றங்கள் பதிவது, பதிந்த மன்றங்களுக்குப் பதிவெண் வழங்குவது, புதிய உறுப்பினர் சேர்க்கை, குறிப்பிட்ட இடைவெளியில் ரசிகர்களைச் சந்திப்பது என அனைத்து கேள்விகளுக்கும் ரசிகர்களுக்குப் பிடித்த பதிலையே ரஜினி கூறியதாகக் கூறப்படுகிறது.
அரசியல் எப்போது?
அரசியல் கட்சி துவங்கும் எண்ணமுள்ளதா என்ற கேள்விக்கு மட்டும் வழக்கம்போல் பட்டும் படாமலும்தான் ரஜினி பதில் கூறியதாகத் தெரிகிறது.
'அரசியல் பத்தி இப்போ பேசாதீங்க. நேரம் வரும்போது நானே சொல்றேன். இப்போது நான் எந்திரன், சுல்தான் மற்றும் ஒரு படத்தில் நடிக்கிறேன் இந்தப் படங்கள் முடியட்டும். அதன்பிறகு உங்கள் விருப்பம்போல் செய்கிறேன். உங்கள் விருப்பமே என் முடிவு. உங்களைக் கைவிட மாட்டேன்!' - இதுதான் அந்தக் கேள்விக்கு ரஜினி தந்த 'நேரடி' பதில்.
- சும்மா அதிருதுல்ல!
http://www.envazhi.com
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
No comments:
Post a Comment