Showing posts with label Birthday. Show all posts
Showing posts with label Birthday. Show all posts

Thursday, December 4, 2008

தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்

சிகர் மன்றங்கள் ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி எந்த வகையான வசூலிலும் இறங்கக் கூடாது, இதில் தலைவர் முன்னெப்போதையும் விட மிகக் கடுமையாக இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நல்ல நோக்கமாகவே இருந்தாலும் கூட, அந்தந்த ரசிகர்கள் தங்களால் ஆன உதவியை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யட்டும். ஆனால் பொது மக்களிடமோ, ரசிகர்களிடமோ எந்தக் காரணம் கொண்டும் ஒரு பைசா கூட வசூல் என்று பெறக் கூடாது.

இந்த வசூல்தான் பல அடிப்படைக் கோளாறுகளுக்குக் காரணமாகிறது. பல அப்பாவி ரசிகர்கள் நல்ல நினைப்பில் தருகிற உதவிகளை, சிலர் தங்கள் சுய லாபத்துக்காகப் பயன்படுத்துவது தலைவர் காதுகளுக்கு வருகிறது. இதனால்தான் இப்போது மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது!

அவருடைய பெயரைப் பயன்படுத்தி செய்யப்படும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது ஏழை மக்களுக்கு சரியான விதத்தில் போய்ச் சேர வேண்டும். அந்த அக்கறைதான் இத்தனை முன்னெச்சரிக்கைகளுக்கும் காரணம். இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!”

-ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் திரு.சுதாகர் அவர்கள் கூறியது.

-எஸ். சங்கர்
Courtesy: www.rajinifans.com

Tuesday, December 2, 2008

ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 58-வது பிறந்த நாளை மேலும் அர்த்தமுள்ளதாகக் கொண்டாடும் விதத்தில் ரஜினிபேன்ஸ்.காம் ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் பல்வேறு பொதுநலத்திட்டங்களும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் டிசம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறவிருக்கிறது.

www.rajinifans.com சார்பாக நடைபெறவிருக்கும் இந்த முகாமில் பங்கேற்க அனைத்து ரசிகர்களும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். முகாம் நடைபெறும் இடம் பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளியிடப்படும்.

முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ய ஆர்வமுள்ள ரசிகர்கள் தங்களைப் பற்றிய விபரங்களுடன் ரஜினிபேன்ஸ்.காமை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விபரங்களை http://www.rajinifans.com/others/contactus.php சுட்டியில் பதிவு செய்யவும். தங்களின் ரத்த வகை என்னவென்று தெரிந்திருந்தால் Feedback-ல் தெரிவிக்கவும். மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விபரங்கள் பரிசீலிக்க முடியாது.

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மேற்கொள்ளும் இந்த சிறப்பான முயற்சியில் நீங்களும் கரம் கோர்க்கலாமே...
http://www.envazhi.com

Tuesday, November 18, 2008

போர் நிறுத்தம் ஏற்பட என் அறிவிப்பும் தூண்டுதலாக இருந்தால் மகிழ்ச்சி! - ரஜினி

லங்கைத் தமிழ் மக்கள் காயமுற்றுத் துன்புறும் இந்த தருணத்தில் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதுகுறித்து ஏற்கெனவே இன்று காலை ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில் பிறந்தநாள் கொண்டாட்ட ரத்து குறித்து ரஜினியே அறிக்கை விடுப்பார் என மன்றப் பொறுப்பாளர் சுதாகர் அறிவித்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தோம்.

அவர் சொல்லி முடித்த 24 மணி நேரத்துக்குள் ரஜினி தனது அறிக்கையை மீடியாவுக்கு வழங்கியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

இலங்கையில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஒவ்வொரு தமிழனின் இதயமும் காயப்பட்டுள்ள இந்த நிலையில் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனறு ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தூண்டுகோலாக எனது இந்த அறிவிப்பும் அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன், என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ரஜினி.

எளிய முறையில் பணிகளைச் செய்யுங்கள்!

பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்ற ரஜினியின் முடிவு வெளியானதும், உலகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குப் போன் செய்து பிறந்த நாள் விழாவுக்கு தாங்கள் செய்துள்ள ஏற்பாடுகளைத் தெரிவித்து வந்ததால், இப்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பதில் அன்னதானம், ரத்ததானம் போன்ற நற்பணிகளை ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள விதத்தில் செய்ய அனுமதிக்கலாம் என மன்றப் பொறுப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று ரஜினி சார் கூறிவிட்டார். ஆனால் ஏழை மக்களுக்காக நடக்கும் நற்பணிகள் தொடரலாம். அதையும் கூட எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார். இவை எல்லாமே ரஜினி சார் என்னிடம் சொன்னவை. அதை அப்படியே மீடியாவுக்குச் சொல்லிவிட்டேன், என்றார் சுதாகர்.

http://www.envazhi.com

ஈழத் தமிழர் பிரச்சினை: வேண்டாம் பிறந்தநாள் கொண்டாட்டம் ! –ரஜினி

ஜினியின் பட வெளியீட்டை விட பத்து மடங்கு உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடும் விசேஷம் தங்கள் தலைவர் ரஜினியின் பிறந்த நாள் விழா.

ஆண்டுதோறும் டிசம்பர் 12-ம் தேதி ரத்ததானம், கண்தானம், உணவு தானம், சமபந்தி போஜனம், தங்கத் தேர் இழுத்தல், பூச்சட்டி ஏந்துதல் என தங்களுக்குத் தெரிந்து வழிகளிலெல்லாம் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வது அவர்கள் வழக்கம்.
திருச்சி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்கள் ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்றவை.

ஆனால் இம்முறை இந்தக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் நிர்வாகியும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சுதாகர் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்தின் பிறந்தநாள், அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.

ஆனால் ஈழத் தமிழர்கள் துன்பப்படும் இந்த வேளையில், பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி, ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

இதுபற்றிய முறையான அறிக்கையை அவரே நேரடியாக வழங்கவிருக்கிறார். ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், என சுதாகர் கூறியுள்ளார்.

http://www.envazhi.com