Showing posts with label சுதாகர். Show all posts
Showing posts with label சுதாகர். Show all posts

Thursday, December 4, 2008

தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்

சிகர் மன்றங்கள் ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி எந்த வகையான வசூலிலும் இறங்கக் கூடாது, இதில் தலைவர் முன்னெப்போதையும் விட மிகக் கடுமையாக இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நல்ல நோக்கமாகவே இருந்தாலும் கூட, அந்தந்த ரசிகர்கள் தங்களால் ஆன உதவியை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யட்டும். ஆனால் பொது மக்களிடமோ, ரசிகர்களிடமோ எந்தக் காரணம் கொண்டும் ஒரு பைசா கூட வசூல் என்று பெறக் கூடாது.

இந்த வசூல்தான் பல அடிப்படைக் கோளாறுகளுக்குக் காரணமாகிறது. பல அப்பாவி ரசிகர்கள் நல்ல நினைப்பில் தருகிற உதவிகளை, சிலர் தங்கள் சுய லாபத்துக்காகப் பயன்படுத்துவது தலைவர் காதுகளுக்கு வருகிறது. இதனால்தான் இப்போது மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது!

அவருடைய பெயரைப் பயன்படுத்தி செய்யப்படும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது ஏழை மக்களுக்கு சரியான விதத்தில் போய்ச் சேர வேண்டும். அந்த அக்கறைதான் இத்தனை முன்னெச்சரிக்கைகளுக்கும் காரணம். இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!”

-ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் திரு.சுதாகர் அவர்கள் கூறியது.

-எஸ். சங்கர்
Courtesy: www.rajinifans.com

Tuesday, November 18, 2008

போர் நிறுத்தம் ஏற்பட என் அறிவிப்பும் தூண்டுதலாக இருந்தால் மகிழ்ச்சி! - ரஜினி

லங்கைத் தமிழ் மக்கள் காயமுற்றுத் துன்புறும் இந்த தருணத்தில் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதுகுறித்து ஏற்கெனவே இன்று காலை ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில் பிறந்தநாள் கொண்டாட்ட ரத்து குறித்து ரஜினியே அறிக்கை விடுப்பார் என மன்றப் பொறுப்பாளர் சுதாகர் அறிவித்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தோம்.

அவர் சொல்லி முடித்த 24 மணி நேரத்துக்குள் ரஜினி தனது அறிக்கையை மீடியாவுக்கு வழங்கியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

இலங்கையில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஒவ்வொரு தமிழனின் இதயமும் காயப்பட்டுள்ள இந்த நிலையில் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனறு ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தூண்டுகோலாக எனது இந்த அறிவிப்பும் அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன், என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ரஜினி.

எளிய முறையில் பணிகளைச் செய்யுங்கள்!

பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்ற ரஜினியின் முடிவு வெளியானதும், உலகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குப் போன் செய்து பிறந்த நாள் விழாவுக்கு தாங்கள் செய்துள்ள ஏற்பாடுகளைத் தெரிவித்து வந்ததால், இப்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பதில் அன்னதானம், ரத்ததானம் போன்ற நற்பணிகளை ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள விதத்தில் செய்ய அனுமதிக்கலாம் என மன்றப் பொறுப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று ரஜினி சார் கூறிவிட்டார். ஆனால் ஏழை மக்களுக்காக நடக்கும் நற்பணிகள் தொடரலாம். அதையும் கூட எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார். இவை எல்லாமே ரஜினி சார் என்னிடம் சொன்னவை. அதை அப்படியே மீடியாவுக்குச் சொல்லிவிட்டேன், என்றார் சுதாகர்.

http://www.envazhi.com

மீடியாவின் எல்லை மீறிய செயல்! - சத்யநாராயணா

ன்றப் பொறுப்பாளர் பதவியிலிருந்து சத்தியநாராயணா நீக்கம், புதிய தலைவராக சுதாகர் நியமனம் என்றெல்லாம் இரு தினங்களாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

உண்மையில் நடந்தது என்ன?

சத்தியநாராயணா மீது ரஜினிக்கு உண்மையிலேயே அதிருப்தியா... அவர் தனக்கென்று தனி கோஷ்டி சேர்க்கிறார் என்பது உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வெறும் யூகங்களின் அடிப்படையில் ‘அவல்’ தர முடியாது.
எனவே இதுகுறித்த தீவிர விசாரணையில் இறங்கினோம். முதலில் ராகவேந்திரா மண்டப பொறுப்பாளர்கள் சொன்ன தகவல்:

“சத்தி சார் நீக்கப்பட்டார் என்று ரஜினி இதுவரை எங்கும் சொல்லவில்லை. எந்த அறிக்கையும் விடவும் இல்லை. ஏற்கெனவே சத்திக்கு கொஞ்சநாள் ஓய்வு தர வேண்டும் என்று ரஜினி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் உடல் நலக் கோளாறு. மறுபக்கம் தாயை இழந்த சோகம். இப்போது வயதான தந்தையைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு.

தாய் தந்தைக்குத்தான் முதலிடம் என்று அடிக்கடி சொல்வார் ரஜினி. எனவேதான் இப்போது சத்திக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ரஜினி ரசிகர் மன்றத்தின் எந்த முடிவாக இருந்தாலும் அதை ரஜினிதான் முதலில் சொல்ல வேண்டுமே தவிர மீடியா இஷ்டத்துக்கு சொல்லவிட முடியாது... சத்தி எப்போதும்போல இந்த குடும்பத்தின் ஓர் அங்கம்தான்...”

இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்லக் கூடிய இருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. மற்றொருவர் சத்தியநாராயணாதான். மிக நீண்ட முயற்சிக்குப்பின் சத்தியைத் தொடர்பு கொண்டோம். நேரில் சந்திக்கக் கேட்டபோது, ‘இப்போது வேண்டாமே’ என்றவர், தனது நிலை குறித்து சுருக்கமாக கருத்து சொல்லி முடித்துக் கொண்டார்.

எனக்கு உடல் நலம் சரியில்லை. ரெஸ்டில் இருக்கிறேன். ரஜினி சாரே என்னை ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். சார் அடிக்கடி சொல்வார்... ஏம்பா இவ்ளோ கஷ்டப்படற... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ, என்பார். இப்போது சில வாரங்கள் ஓய்வுக்காக வீட்டிலிருக்கிறேன். அதற்குள் மீடியா இப்படியெல்லாம் கதை எழுதுவது வேடிக்கையாக உள்ளது.

நான் விடுமுறையில் போனால், அந்த வேலையை இன்னொருவர் கவனித்துக் கொள்ளமாட்டாரா... அப்படித்தான் நண்பர் சுதாகர் இப்போது பார்த்துக் கொள்கிறார். அதற்குள் நான் ராஜினா செய்துவிட்டேன் என்றும், வேறு சில வேண்டாத கோணத்திலும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

நேற்றிலிருந்தே ரசிகர்களின் போன் கால்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இன்று இன்னும் அதிகம்.

இந்தச் செய்திகளைப் படித்துவிட்டு, சாரே கோபப்பட்டார். ஒரு விஷயம் கேள்விப்பட்டால் குறைந்தபட்சம் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூட மாட்டார்களா பத்திரிகைக்காரர்கள்...! இது அவர்களின் எல்லை மீறிய செயல்...” என்றார்.