Sunday, December 21, 2008

தமிழ்ப் பத்திரிகைகளின் 'நம்பகத்தன்மைக்கு' இதோ இன்னொரு சாம்பிள்!

மீண்டும் மீண்டும் தங்களின் நம்பகத் தன்மையை தாங்களே கேவலப்படுத்திக் கொள்வதில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நிகர் எதுவுமில்லை.

மற்றவர்களுக்கு எப்படியோ, ரஜினி ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட இது பழகிப்போன விஷயமாகிவிட்டது.

இருவாரங்களுக்கு முன் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் ஒரு கவர்ஸ்டோரி.

‘ரஜினி பிறந்த நாளுக்கு ரசிகர்கள் தரும் அதிர்ச்சிப் பரிசு! - சத்தியநாராயணாவை ரஜினி கழற்றி விட்டுவிட்டதால், கோபித்துக் கொண்டுள்ள 14 மாவட்ட ரஜினி மன்ற தலைவர்கள், சத்தியின் ஆதரவாளர்களுடன் ரஜினி பிறந்த நாளன்று கூண்டோடு அதிமுகவில் சேரப் போகிறார்கள்!’


டிசம்பர் 12-ம் தேதியும் வந்தது... மாவட்டம் தோறும் நடந்த சிறப்பான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகள்தான் இதுவரை வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
அன்றைய தினம் ஈ, காக்கா, குருவி கூட ரஜினி மன்ற நண்பர்களைச் சுற்றிச் சுற்றித்தான் வந்துகொண்டிருந்திருக்கும். காரணம் இங்குதானே சரியான ‘தீனி’ இருந்தது அன்றைக்கு.

எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்கள்... என்ற விவரத்தை இந்த கட்டுரை தயாரித்த குமுதம் ஆசிரியர் குழு, அட... அடுத்த இதழில்கூட வேண்டாம்... இப்போதாவது வெளியிடலாமே!

அன்று, சத்தி மன வருத்தத்தில் புழுங்குவதாக விகடன் குழுமமும் இதே குமுதமும் அட்டைப் படக் கட்டுரையும், அவரது பேட்டியையும் (‘ராமனின் அம்பு முனை பட்ட வலி!’ - விகடன்!) வெளியிட்டன.

இதோ... அதே ரிப்போர்ட்டர் இதழில் இன்று வந்துள்ள சிறப்புக் கட்டுரை!

படித்துவிட்டு, நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்... அப்படியே, சத்திக்கு ஓய்வளிப்பதாக ரஜினி மன்றத்திலிருந்து அறிவிப்பு வந்தபோது, நாம் வெளியிட்ட சத்தியநாராயணாவின் சிறப்புப் பேட்டியையும் நினைவில் கொள்ளுங்கள்!

ரஜினி பிறந்த நாளில் சத்தியநாராயணா செய்த யாகம்!!


கடந்த 12-ம்தேதி காலை பத்து மணி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைக்காட்டூர் என்ற குக்கிராமத்தில் உள்ள சித்தர் கோயிலில் வந்து நின்றது ஒரு ஸ்கார்பியோ கார். அந்த காரில் இருந்து இறங்கி அமைதியாக கோயிலுக்குள் நுழைந்தவர் வேறு யாருமில்லை. சத்தியநாராயணா.

சூப்பர் ஸ்டார் ரஜினியால் மன்றப் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டார் என்றும், ரஜினிக்கும் அவருக்கும் தற்போது ஏழாம் பொருத்தம் என்றும் சத்திய நாராயணாவைப் பற்றி பரபரப்புச் செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், சத்தியநாராயணா ரஜினியின் பிறந்தநாளும் அதுவுமாக திடுதிப்பென இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்தது அங்கிருந்த சொற்ப பக்தர்களுக்கும் திகைப்பைத் தந்தது.

வயல்வெளிகளுக்கு நடுவில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத அந்த குட்டியூண்டு கோயிலில் சுமார் ஐந்து மணிநேரம் தங்கியிருந்து, ரஜினி மற்றும் லதா பெயரில் யாகம் நடத்திவிட்டு, அன்று மதியம் முந்நூறு பேருக்கு அன்னதானமும் செய்திருக்கிறார் சத்தி. ரஜினி பிறந்தநாளில் பிரபல சித்தர் கோயிலுக்கு வந்து ரஜினிக்கும் அவரது மனைவிக்கும் யாகம் செய்ததன் மர்மம் என்ன?

அதைத் தெரிந்து கொள்ள உடனே இடைக்காட்டூருக்குப் புறப்பட்டோம்.

மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனேந்தல் என்ற சிற்றூரின் வடப்புறமாகப் பிரியும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இடைக்காட்டூர். இந்த ஊரில் பிறந்து வளர்ந்து திருவண்ணாமலையில் ஜீவசமாதி ஆனவர்தான் இடைக்காட்டுச் சித்தர். இடைக்காடர் என்று அழைக்கப்படும் அவர் பதினெட்டுச் சித்தர்களில் தனித்தன்மை வாய்ந்தவராம்.

... ... ... அப்படி நவகிரக கோயில் என்று பெயர் கொண்ட அந்தச் சிறிய கோயிலில் மூலவரே நவகிரகங்கள்தானாம். கடந்த பத்தாண்டுகளாக திருவாதிரை பூஜையும், கடந்த ஐந்து மாதங்களாக பௌர்ணமி பூஜையும் நடந்து வருகிறது. அந்தக் கோயிலில்தான் 12-ம்தேதி நடந்த பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டு யாகமும் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார் சத்தியநாராயணா.

சென்னையிலிருந்து 12-ம்தேதி அதிகாலை சத்தியஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜனுடன் விமானம் மூலம் மதுரை வந்த சத்தியநாராயணா, அங்கிருந்து காரில் பரமக்குடி வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கியிருக்கிறார். அங்கே தனக்கு நெருக்கமான மாவட்ட நிர்வாகிகளை மட்டும் வரவழைத்துப் பேசிய சத்தியநாராயணா, 'நான் வந்த விஷயமோ, நோக்கமோ வேறு எக்காரணம் கொண்டும் வெளியில் கசியக் கூடாது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்குத் தெரியக் கூடாது' என்று கூறியிருக்கிறார். வெள்ளி, சனி ஆகிய இரண்டுநாட்கள் அவர் பரமக்குடியில் தங்கியிருந்தும் அவரது விசிட் அவரது விசுவாசிகளால் பொத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ரஜினி பெயரில் சிறப்பு யாகம்!

12-ம்தேதி காலை பத்து மணியளவில் இடைக்காட்டூர் சித்தர் கோயிலுக்கு வந்து சேர்ந்த சத்தியநாராயணா, அங்கே ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகசாலையில் தியாகராஜனுடன் அமர்ந்தாராம். அதன்பிறகு நடந்தவற்றை அந்தக் கோயில் அர்ச்சகர் நம்மிடம் விவரித்தார்.

‘ஏறத்தாழ இரண்டு மணிநேரம் நடந்த அந்த யாகத்தில், சத்தியநாராயணா பயபக்தியுடன், முழு ஈடுபாட்டுடன் அமர்ந்திருந்தார். `யாருக்காக யாகம்? அவர்களது பெயர், நட்சத்திரங்களைக் கூறுங்கள்' என்று யாகம் நடத்தியவர் கேட்டபோது, `ரஜினிகாந்த், திருவோண நட்சத்திரம், லதா ரஜினிகாந்த், மகம் நட்சத்திரம்' என்று சத்தியநாராயணா கூறினார். யாகம் மிக எளிமையாக நடந்து முடிந்த பின், கோயிலுக்குள் நடந்த அன்னதானத்தில் அவரே எல்லோருக்கும் உணவு பரிமாறினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவர் புறப்பட்டுப் போகும் வேளையில் எங்களிடம், `கோயில் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது' என்று சொல்லிவிட்டுச் சென்றார்’ என்றார் அந்த அர்ச்சகர்.

.... .... அந்த நவகிரக சித்தர் கோயிலை விட்டுக் கிளம்பும் முன் சத்தியநாராயணா, தன் சொந்தச் செலவில் கோயிலைச் சுற்றி பக்தர்கள் வலம் வர வசதியான ஏற்பாட்டைச் செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். அவரிடம் `அன்னதான மண்டபம்' ஒன்றையும் கட்டித்தருமாறு கோரிக்கை வைத்த கோயில் பக்தர்கள், அடுத்து வைத்த இன்னொரு கோரிக்கைதான் வித்தியாசமானது.


`ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமியன்று பதினெட்டு சித்தர்களும் இங்குள்ள நவகிரகங்களை வழிபட வருவதால் அந்த நாளில் கோயிலில் அதிர்வுகள் (வைபரேஷன்) அதிகமாக இருக்கும். ஆகவே வரும் சித்ரா பௌர்ணமியன்று சூப்பர் ஸ்டாரை இந்தக் கோயிலுக்கு அழைத்து வாருங்கள்' என்பதுதான் பக்தர்கள் வைத்த கோரிக்கை. அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாகச் சென்று விட்டாராம் சத்தி..."

-இப்படி முடியும் கட்டுரையில் மீண்டும் தங்கள் வக்கிரத்தைக் காட்டியுள்ளது குமுதம். அது,

"சத்தியநாராயணாவின் இந்தக் கோயில் விசிட், ரஜினி ரசிகர்கள் சிலருக்கு சிறிய சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைவரும் தளபதியும் தங்களுக்குள் `லடாய்' என்பது போல நாடகமாடுகிறார்களா? என்ற சந்தேகம்தான் அது. எது உண்மை என்பது அந்த இடைக்காட்டூர் சித்தருக்கே வெளிச்சம்!"

-நீங்கள்ளாம் திருந்தவே மாட்டீங்களாப்பா!!

ஒரு சின்ன நினைவூட்டல்: பசி என்பது நியாயமான விஷயம்தான்... அதற்காக வெந்தது... வேகாதது என கிடைப்பதையெல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காமல் எடுத்துப்போட்டு விழுங்குவது ஆறறிவு பகுத்தறிவு கொண்ட மனிதன் செயலா... அதுவும் வாளை விட வலியது என தோள் தட்டும் பத்திரிகைத் தொழிலுக்கு அழகா?

http://www.envazhi.com

Saturday, December 20, 2008

300 பக்கங்களை ஒரே மூச்சில் படித்த எந்திரன்!


விஞ்ஞானியான ரஜினி, தன் அரிய கண்டுபிடிப்பால் எந்திரனை உருவாக்குகிறார். அந்த எந்திரன் தோற்றத்தில் இன்னொரு ரஜினியாக இருக்கிறது. மொழியைப் படிக்கவும், பேசவும் மற்ற மனிதர்களைப் போலவே இயங்கக்கூடிய விதத்தில் பார்வைக்கு மனிதனைப் போலவே தோற்றமளித்தாலும் அந்த எந்திரனுக்குள், கம்ப்யூட்டர் மூளை செயல்படுவதால்... மனித சக்திக்கு அப்பாற்பட்ட அரிய சக்திகள் பலவும் எந்திரனுக்கு இருக்கின்றன.

எந்திரனின் தோற்றம் மற்ற மனிதர்களுடன் ஒத்திருக்கிறதா, இல்லையா என்பதை சோதித்துப் பார்க்க விரும்பும் விஞ்ஞானி, அதைக் கூட்டிக் கொண்டு தான் வழக்கமாக முடி திருத்திக் கொள்ளும் சலூனுக்குப் போகிறார்.

உள்ளே போனதும், அங்கிருக்கும் முடி திருத்தும் கலைஞர்கள் எல்லோரும் ரஜினியுடன் இன்னொரு ரஜினியும் வருவதாப் பார்த்து அதிசயப்படுகிறார்கள். அதில் ஒருவர் விஞ்ஞானி ரஜினியிடம், ‘யார் இவர்... உங்களைப் போலவே இருக்காரே?’ என்று கேட்க, அதற்கு, இவர் என்கூட பிறந்தவர்...!” என்கிறார் விஞ்ஞானி ரஜினி.

கூடப் பிறந்தவன்னா, ‘இதுவரைக்கும் இவரை இங்கு கூட்டிக்கிட்டே வந்ததில்லையே...!” என்று பதிலுக்கு அவர் கேட்க, “இவர் நேத்துதானே பிறந்தார்...!!” என்று ரஜினி பதில் சொல்லி, பிறகு சமாளிக்கிறாராம்.

சலூனில், உட்கார்ந்து கொண்டிருக்கும் வேளையில், எந்திரன் ரஜினி படிக்க புத்தகம் கேட்க, அவரிடம் கொடுக்கப்படும் புத்தகங்கள் அத்தனையையும் உடனுக்குடன் படித்துக் கொடுத்துவிட்டு, வேறு புத்தகம் கேட்பாராம் எந்திரன் ரஜினி.

இந்த தொல்லை தாங்காத சலூன்காரர், 300 பக்கங்களுக்கு மேல் உள்ள ஒரு புத்தகத்தைக் கொடுக்க, அதையும் சில நிமிடங்களில் மண்டையில் ஏற்றிக் கொள்வாராம் எந்திரன்.

எதையும் படிக்காமல், சும்மா ஒப்புக்குத்தான் அவர் விளையாடுகிறார் என்று நினைத்த சலூன்காரர், எந்திரனிடம், அந்தப் புத்தகத்தில் அவர் படித்ததைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, இன்ன புத்தக்த்தில் இத்தனாம் பக்கத்தில் இந்த விஷயம் எழுதப்பட்டிருக்கிறது என்று, இதுவரை படித்ததையெல்லாம் எந்திரன் புட்டுப்புட்டு வைக்க, அதிர்ச்சியில் மயக்கம் போடாத குறையாக அங்கிருந்து விரைகிறாராம் சலூன்காரர்... நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருப்பார் இது அத்தனைக்கும் காரணகர்த்தாவான விஞ்ஞானி ரஜினி.

-இது எந்திரனில் இடம்பெறும் ஒரு காட்சி.

இதை நாம் லீக் செய்யவில்லை. எந்திரன் தயாரிப்பாளர்களே வெளியிட்டிருக்கும் காட்சி மற்றும் படங்கள் இவை. வெளிவந்த இதழ் குங்குமம்!!

அதைவிடுங்க...

இந்தக் காட்சியை ரஜினி எப்படிச் செய்திருப்பார்... அதுவும் இரண்டு ரஜினிகளும் ஒரே காட்சியில் தோன்றுவது நிஜமாகவே சுவாரஸ்யமான காட்சியமைப்புதான்.

ஒரு சாம்பிளுக்கே இப்படியென்றால்... இன்னும் படம் பற்றிக் கேட்க வேண்டுமா...!

எந்திரன்... சன்... சில பார்வைகள்!

ந்திரனை சன் குழுமம் வாங்கிவிட்டது!

இந்தச் செய்திக்கு எழுந்துள்ள எதிர்வினைகளைப் பாருங்கள்...

ரஜினி சன் நிறுவனத்திடம் பணிந்துவிட்டார்.... சன் குழுமமும் அதன் பத்திரிகைகளும் இனி ரஜினிக்கு ஜால்ரா அடித்து சம்பாதிக்கப் போகின்றன... சன் குழுமத்தைத் திட்டிய நீங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்கள்?

இந்த மூன்று கேள்விகளுக்குமே இனி அர்த்தமில்லை.

காரணம் இந்த ஒப்பந்தத்தை முன்நின்று முடித்துக் கொடுத்துள்ளவர் ரஜினி. அவரே இதைப் பற்றிக் கவலைப்படாத போது, வேறு யார் அதுபற்றி விசனப்படுவதும் அபத்தம்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒரு முக்கிய பிரமுகரின் விளக்கத்தைத் தரவிருக்கிறேன், அவர் அனுமதி கிடைத்தபிறகு.

ரஜினிக்கு தெரியாததையா ரசிகர்கள், ஆதரவாளர்கள் எனும் பெயரில் நீங்கள் சொல்லப் போகிறீர்கள்!

ரசிகர்கள் வருத்தப்படுவதற்கு இதில் ஒன்றுமே இல்லை. மேலே நாம் குறிப்பிட்ட இந்தக் கேள்விகள் ரஜினிக்குள் எழுந்திருக்காதா... அல்லது இவற்றைப் பற்றி யோசிக்காமலா ரஜினி கலாநிதி மாறன் வீட்டுக்குப் போயிருப்பார்!

நாம் ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயம் பற்றி தெளிவாகக் கூறியிருக்கிறோம்.
ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அவரது மிகச் சிறந்த நடிப்பை, ஸ்டைலை, நகைச்சுவையை, அதிர வைக்கும் ஸ்டன்ட் காட்சிகளைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் மட்டும்தான் ஒரு நல்ல ரசிகனுக்கு இருக்க வேண்டும்.

இதைத்தான் ரஜினியும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். ரசிகர்கள் எல்லை தாண்டாமல், ரஜினி என்ற நடிகருக்கான ரசிகர்களாக இருங்கள் என்பதுதான் அவர் கொள்கை. அவர் அரசியலுக்கு வெளிப்படையாக வரும்போது தொண்டர்களாக மாறிக் கொள்ளுங்கள்...

அதைவிட்டுவிட்டு, அவர் எப்படி இதில் கையெழுத்திட்டார்... அப்போது யார் யாரெல்லாம் கூட இருந்தார்கள். ரஜினிக்கு இதில் எவ்வளவு பங்கு... அது மொத்தத்துக்கும் வரி கட்டினாரா... இதில் அவர் குடும்பத்தாருக்கு திருப்தியா...கலாநிதி மாறனுடன் கைதட்டி சிரித்துக் கொண்டிருக்கிறாரே அது ஏன்?

-இப்படியெல்லாம் தோண்டித் துருவிக் கொண்டிருப்பது ஒரு ரசிகனின் வேலையல்ல... அந்த உரிமையை அவர் மீடியா உள்பட யாருக்கும் தந்துவிடவில்லை. இவை ரசிகன் என்ற போர்வையில் சிலர் செய்யும் அதிகப்பிரசங்கித்தனங்கள்.

அடுத்து சன் குழுமம் குசேலனுக்கு செய்ததை மறந்துவிட்டாரா ரஜினி?

ஒருமுறை நடிகர் அஜீத் இப்படிக் குறிப்பிட்டார்:

“ரஜினி சார் மாதிரி எதையும் தொலைநோக்குப் பார்வையோட, ரசிகர்களை மட்டுமே மனசுல வச்சிக்கிட்டு முடிவு எடுக்கும் பக்குவம் நமக்கில்லை.

அவர் என்னிடம் சில நகைச்சுவை நடிகர்களைக் குறிப்பிட்டு, அவங்கெல்லாம் எனக்கு எதிரா என்னென்ன பேசினாங்கன்னு எனக்கும் தெரியும். ஆனால் நமக்கு ரசிகர்கள்தான் முக்கியம். அவங்க ஏமாந்துடக் கூடாது. இவர் நம்மாகூட சேர்ந்து காமெடி பண்ணியிருந்தா நல்லாருக்குமே என பேச வச்சிடக் கூடாது. அதுக்காகத்தான், நானே சிலரை அழைத்து என் படத்தில் நடிக்க வச்சேன். நீங்களும் இதை மனசுல வச்சிக்கிட்டு, எந்த காமெடியன் கூடவும் பிரச்சினை வச்சிக்காதீங்க... எல்லார் கூடவும் சேர்ந்து நடிங்க...” என்றார்.

இதுதான் ரஜினியின் மனது. எல்லாருக்கும் பொதுவான, ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றையே அவர் செய்கிறார்.

தனது லட்சியப் படமான பாபாவுக்கு எதிராக ராமதாஸ் செய்ததையே மறந்து, மீண்டும் ராமதாஸ் மற்றும் அவர் மகனிடம் நட்பு பாராட்டியவர் ரஜினி. யோசித்துப் பாருங்கள்... ராமதாஸ் பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் பாபா எத்தகைய படமாக திகழ்ந்திருக்கும் என்பதை!

அடுத்து குசேலன் விவகாரம்... அந்த விவகாரத்தில் சன் நடந்து கொண்டது தவறு என்று எழுதிய நாம், என்ன விரும்பினோம்? சன் குழுமம் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றுதானே... இதோ இப்போது அவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டே தீர வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ரஜினியின் புகழைப் பரப்பும் வலுவான மீடியாவாக சன், தினகரன் மாறும்போது அதில் ரசிகர்கள் கஷ்டப்பட என்ன இருக்கிறது...

இன்னொன்று இந்த முடிவை யாரோ ஒருவர் வந்து திணிக்கவில்லை... இது ரஜினி எடுத்த முடிவு... அந்தப் படத்துக்கு எது நல்லதோ அதை ரஜினி செய்திருக்கிறார்.

சன்-தினகரன் குழுமத்தை அவரே ஏற்றுக் கொண்ட பின், மேற்கொண்டு அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. அப்படியே இருந்தாலும், இந்த நேரத்தில் தன் சார்பாக பதில் சொல்லுங்கள் என்று ரஜினி யாருக்கும் உத்தரவிடவில்லை!

ஒரு பிரச்சினையின்போது பொதுவாக நியாயத்தைச் சொல்வது இயல்புதான். குசேலன் பிரச்சினையில் மீடியா செய்த தவறை அப்படித்தான் நாம் சுட்டிக் காட்டினோம்.
ஆனால் ஒரு வர்த்தகத்தின் இடையில் புகுந்து அதே நியாயத்தைப் பேச முடியாது.
இந்தியாவின் மிகச் சிறந்த படமாக, உலகத் தரத்தில் தயாராகும் எந்திரன் சிறப்பாக வரவேண்டும் என அவர் விரும்புகிறார்.

சிவாஜிக்கு கெட்ட பெயர் வந்த போதும் கைகட்டி நின்ற ஏவிஎம், குசேலனைக் கூறு போட்ட போது வாயில் ப்ளாஸ்டரோடு திரிந்த கவிதாலயம்... இவர்களோடு இப்போதும் ரஜினி நட்பு பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார். சொல்லமுடியாது, மீ்ண்டும் கூட நடித்துக் கொடுப்பார். இவர்கள் மாதிரி சன் இருக்காது என்று ஆற்றுதல் பட்டுக் கொள்ளுங்கள்.

படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கிய அவர்கள் நிச்சயம் கல்லா கட்டத்தான் செய்வார்கள். அதற்குத்தானே இவ்வளவு முதலீடு... இதற்கு முன் பாட்ஷா, சந்திரமுகி பரடத்தைப் போட்டு கல்லா கட்டும்போது இருந்த உரிமையை விட இப்போது அவர்களுக்கு அதிக உரிமை வந்திருக்கிறது.

எந்திரன் குறித்து சன்-தினகரன் இனி வெளியிடுவது முற்றிலும் அதிகாரப்பூர்வ செய்தியாகவே இருக்கும். எனவே இப்போதைக்கு ரஜினி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் ஒரே ஆதாரம் சன் குழும மீடியாதான்.

இந்தப் படத்தை ரஜினியே தயாரிதிருக்கலாமே... அவரிடம் இல்லாத பணமா? என்றும் சிலர் கேட்கிறார்கள்.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருப்பார்: “எழுதறவன், எந்தக் கவலையும் இல்லாம எழுதிக்கிட்டே இருக்கணும். கரன்சி நோட்டை கையில எடுத்து கணக்கு வழக்குல இறங்கினா அப்புறம் எழுத்துல உள்ள சுவாரஸ்யம் போய்டும்... அதுக்கு நாட்டுல இருக்கு நிறைய உதாரணங்கள்....”

இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நிஜ காரணம் அவரே சொன்னாலன்றி யாருக்கும் தெரியாது. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்... படம் வரும் வரை அதுகுறித்த செய்திகளை என்ஜாய் பண்ணுங்க என்று அவரே நினைக்கும்போது, நாம் எதற்கு அதுபற்றி விவாதிக்க வேண்டும்!

ரஜினி ஆதரவு தளங்களின் நிலை என்ன?

இதில் பெரிய நிலைப்பாடு எடுக்கும் அவசியம் எதுவுமில்லை. சன் குழுமம் எந்திரன் தயாரிப்பாளர். எனவே ரஜினி குறித்த அவர்கள் பார்வை அடியோடு மாறியிருக்கிறது. நேரம் வரும்போது மீண்டும் மீண்டும் யு டர்ன் எடுக்கும். இப்போதைக்கு ரஜினி பற்றி மோசமாக சித்தரிக்க மாட்டார்கள்.

ஆனால் அவர்களின் அரசியல் பார்வை, பிற செய்திகளை வெளியிடும் பாங்கு மாறாது அல்லவா... எனவே அவர்கள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்கள் நம் தளத்தில் தொடரும்.

-வினோஜாசன்

மீண்டும் வருக!

நண்பர்களே... புதிய பொலிவுடன் www.envazhi.com விரைவில் வெளிவர உள்ளது. அதுவரை www.vinojasan.blogspot.com-லும் சந்திக்கலாம்.

நன்றி...

வினோஜாசன்

ஹாலிவுட் தரத்தில் ஃபேண்டஸி படம் எந்திரன்! - ரத்னவேலு

எந்திரன் திரைப்படம் மூலம் தன்னுடைய சீரியஸ் பட ஒளிப்பதிவாளர் இமேஜ் மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஒள்ப்பதிவு இயக்குநர் ரத்னவேலு.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:

எந்திரன் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே 8 மாதங்களாக பட வேலைகளை பற்றி திட்டமிட்டு வந்தோம். ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்க வேண்டும், எந்த லொகேஷன் உட்பட படத்தின் அனைத்து விஷயங்களையுமே தீர்மானித்துவிட்டோம். அதற்கு முக்கிய காரணம், ஷங்கரின் திட்டமிடுதல்தான்.

பெரு நாட்டில் ஒரு பாடல் காட்சியும் பிரேசிலில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கினோம். கோவா, சென்னையில் சில காட்சிகளை எடுத்துள்ளோம். அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நேற்று தொடங்கிவிட்டோம். பெரு பாடல் காட்சிகளின் ஸ்டில்களை பார்த்தவர்கள், ரஜினியை இளமையாக காட்டியிருப்பதாக பாராட்டினார்கள்.

ரஜினியுடன் இப்போதுதான் முதல்முறையாக பணியாற்றுகிறேன். மிகவும் எளிமையானவர். காட்சி நன்றாக வந்தால் உடனே பாராட்டுவார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் இப்படத்தின் மார்க்கெட்டிங் பலம் பல மடங்கு கூடியுள்ளது.

எனவே உலக அளவில் இப்படம் பேசப்படும். சேது, பிதாமகன், வாரணம் ஆயிரம் என சீரியசான படங்களில் மட்டுமே பணியாற்றுவதாக என்னை பற்றி கூறுவார்கள். எந்திரன், ஹாலிவுட் தரத்தில் உருவாகும் ஃபேன்டசி படம். எனவே இப்படம் மூலம் எனது இமேஜ் மாறும், என்கிறார் ரத்னவேலு.

நன்றி: தினகரன்

Friday, December 19, 2008

தினகரனின் இன்றைய 'எந்திரன் ஸ்பெஷல்'!


இனி சன் குழும பத்திரிகைகள் மற்றும் இதர ஊடகங்களில் எந்திரன்தான் கவர் ஸ்டோரி என ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்த ஹைப், நல்லதா... கெட்டதா என்பதை இப்போதே கணித்துச் சொல்வது அபத்தமாகிவிடும். ரஜினியே கூட இன்னும் சில தினங்களுக்கு அமைதியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறார். இதையெல்லாம் எதிர்பார்க்காமலா அவர் சன்னோடு கை கோர்த்திருப்பார்.

எனவே இப்போதைக்கு எந்திரன் குறித்த செய்திகளை ரசித்து அனுபவிப்போம். எந்திரன் – சன் புதுக் கூட்டணி குறித்த பல்வேறு பார்வைகளை விரைவில் தருகிறோம்.

இதோ தினகரனின் இன்றைய எந்திரன் ஸ்பெஷல்!

எந்திரனுக்காக சென்னையில் ஐஸ்வர்யா!

சென்னை, டிச.19: எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் சென்னை வந்துள்ளார்.

இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத மிக பிரமாண்டமான திரைப்படமாக ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

மணி ரத்னம் படத்துக்காக கேரளா சென்றிருந்த ஐஸ்வர்யா ராய், அந்த ஷெட்யூல் முடிந்து, எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார்.

பிப்ரவரி மாதம் வரை எந்திரன் படப்பிடிப்பில் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ரத்னவேலு கவனிக்கிறார்.

அடுத்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.envazhi.com

Thursday, December 18, 2008

‘பொறுத்திருந்து பாருங்க!’ - ரஜினி

ந்திரன் இந்தியாவிலேயே மிகப் பெரிய படம். பொறுத்திருந்து பாருங்க... நான் சொல்றது உங்களுக்கே புரியும் என்றார் ரஜினி.

எந்திரன் படத்தை 150 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டு வேலைகளைத் துவங்கின ஈராஸ் நிறுவனமும், அய்ங்கரன் இன்டர்நேஷனலும்.

ஆனால் சர்வதேச நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்ட ஈராஸ், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. இப்படியொரு பிரமாண்ட படத்தை தனித்து நின்று தயாரிக்கவும் அய்ங்கரனால் முடியாது. எனவே மாற்று வழி யோசித்துக் கொண்டிருந்தது அந்நிறுவனம். ஆனாலும் படப்பிடிப்புக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக் கொண்டவர்கள் இருவர்.
ஒருவர் நமது சூப்பர் ஸ்டார்... அடுத்தவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன்.

இன்னொரு பக்கம் படத்தை அய்ங்கரனை விட அதிக செலவில் தயாரிக்கும் பிரமாண்ட தயாரிப்பாளர்களையும் தேடி வந்தார் இயக்குநர் ஷங்கர்.

சில மாதங்களுக்கு முன் ரஜினி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நேரம்...

அவரை தனியாகச் சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார் கலாநிதி மாறன். சன் நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்ற பிரிவை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதற்கு ரஜினி ஒரு படம் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ரஜினியும் அப்போது, கட்டாயம் படம் செய்யலாம் என்று கூறியிருந்தார்.

(இதே கோரிக்கையை ஸ்டாலின் மகன் உதய நிதியும் இரு ஆண்டுகளுக்கு முன் ரஜினியிடம் வைத்திருந்தார்.)

இப்போது, எந்திரன் படத்தையே செய்யச் சொல்லலாமே, என்ற யோசனை எழ, சன் தலைமைச் செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். அய்ங்கரன் நிறுவனம் செலழித்த தொகைக்கு மேலேயே தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதெல்லாம் நடந்தபிறகு, தீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படிச் சொன்னார் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா:

நாங்கள் இதுவரை, மற்ற நிறுவனங்கள் தயாரிப்பில் இருந்தவற்றை வாங்கி அவர்களது பேனரிலேயே வெளியிட்டு வந்திருக்கிறோம். காதலில் விழுந்தேன், தெனாவட்டு எல்லாமே அப்படித்தான். இப்போது வரவிருக்கும் சிவா மனசுல சக்தி, தீ, திண்டுக்கல் சாரதி, பூக்கடை ரவி எல்லாமே மற்றவர்கள் தயாரித்து எங்களுக்குத் தந்தவை.

ஆனால் முதல் முறையாக சன் நிறுவனம் தனது சொந்த பேனரில் முழுக்க முழுக்க தயாரிக்கும் படம் ஒன்றை அறிவிக்க உள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத பிரமாண்ட படமாக அது இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். டிசம்பர் 2-ம் வாரம் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறோம், என்றார்.

சரியாக 15 நாட்களில் இந்த அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் சூப்பர் ஸ்டாரும், அவர் பெயரிலேயே அமைந்துவிட்ட இந்த பட நிறுவனமும்... (குழப்பமாக உள்ளதா... சூப்பர்ஸ்டார்=சன்... சரிதானே!)

இதுபற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியிருப்பதாவது:

சன் பிக்சர்ஸ் பேனரில் ஒரு படம் பண்ணலாம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கலாநிதி மாறன் கேட்டிருந்தார். நிச்சயம் பண்ணலாம் என்று நான் அப்போது கூறியிருந்தேன். இப்போது இந்தப் படம் பண்றோம். அதுவும் அவர்களுடைய முதல் படமா எந்திரன் அமைஞ்சிருக்கு. ரொம்ப ஆச்சயர்யமாயிருக்கு. வெயிட் பண்ணி பாருங்களேன்... நிச்சயம் பெரிய சக்ஸஸ்புல் படமா இந்தப் படம் அமையும்..., என்றார்.

இந்தப் படம் மற்றும் சன் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்களை சன் டிவி தனியாகப் பதிவு செய்துள்ளது. விரைவில் மிகப் பெரிய நிகழ்வாக அதை ஒளிபரப்பக் கூடும்.

குறிப்பு: சன் குழுமத்தின் மீது நீங்கள் வைத்த விமர்சனங்கள் என்னாச்சு என நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதுபற்றி விரிவான பதிவு விரைவில் வரும்.
http://www.envazhi.com

அசத்தும் எந்திரன்! சிறப்புப் படங்கள்!!

அசத்தல் எந்திரன் ஸ்டில்கள்... மனதை அள்ளும் ரஜினி!

ந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அசத்தல் ஸ்டில்களை சன் டிவியும் தினகரனும் இன்று வெளியிட்டுள்ளன.

சன் டிவியில் எப்படி நேற்று முழுக்க ரஜினியின் எந்திரன் சிறப்புச் செய்தியாக இருந்ததோ, அதே போல இன்று முழுக்க தினகரனில் எந்திரன் எட்டுகால தலைப்புச் செய்தி.

இதைத் தவிர இரண்டு பக்கங்களில் எந்திரன் சிறப்புப் படங்கள் (மாச்சு பிக்குவில் எடுத்த பாடல் காட்சிகள்), செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் படங்கள் ரஜினி ரசிகர்களுக்குப் புதியவை அல்லை. ஏற்கெனவே பல தளங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியாகி இருந்தன.

ரஜினியின் தோற்றம் உண்மையிலேயே அசத்தலாக இருக்கிறது இந்தப் படங்களில். பாபாவுக்கு முந்தைய ரஜினியின் தோற்றமும், இளமைத் துடிப்பும் அவர் முகத்தில் தெரிவதைப் பார்க்கலாம்.

ரகசியம் காப்பது ஷங்கரின் உத்தி என்றால், மெகா பப்ளிசிட்டி சன் நிறுவனத்தின் உத்தி.

எனவே செய்திகளுக்கோ ஸ்டில்களுக்கோ பஞ்சமிருக்காது.

இதுகுறித்து சன் தலைமைச் செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா இப்படிக் கூறுகிறார்:
ஷங்கரின் அனுமதியோடு இனி அடுத்தடுத்து, தொடர்ச்சியாக இப்படம் குறித்த செய்திகள் வெளியாகும். எனவே எந்திரன் குறித்த அனைத்தும் அதிகாரப்பூர்வமான செய்திகளாகவே மீடியா தரலாம். நோ மோர் காஸிப்ஸ்!

இது உலக அளவில் சரித்திரம் படைக்கப் போகும் படம், அதில் எந்த அளவும் சந்தேகம் வேண்டாம் என்றார்.

http://www.envazhi.com

Wednesday, December 17, 2008

எந்திரன் - சன் கூட்டு: ரஜினி – கலாநிதி மாறன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ந்திரன் – தி ரோபோ திரைப்படத்தை சன் டிவியின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனும்.

இன்று புதன்கிழமை மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான நாகராஜன் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சன் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மற்றும் சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து இதுகுறித்து இறுதி முடிவை அறிவித்தனர்.

இந்த புதிய கூட்டணி குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படிக் கூறியுள்ளார்:

‘சன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக எந்திரன் – தி ரோபோ உருவாகவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே இது இந்தியாவின் மிகப் பெரிய படம். கலாநிதி மாறனுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி!’

கலாநிதி மாறன்:

‘சன் பிக்சர்ஸூக்கு இது மிகப் பெரிய படம். இந்தியாவிலேயே மிகப்பெரிய படமாக எந்திரன் இருக்கும் என உணர்வுப்பூர்வமாக நம்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமையடைகிறேன். இந்தப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய உயரத்தைத் தொடும்.’

இயக்குநர் ஷங்கர்:

கலாநிதி மாறனின் சன் டிவியுடன் இணைவதில் பெருமையடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்புகளுடன் உள்ள இந்தப் படம், சன் டிவியுடன் சேருவதால், மேலும் எதிர்பார்ப்பு கூடுவதுடன், விளம்பர வெளிச்சமும் உச்சகட்டமடையும்.

செய்திக் குறிப்பை சன் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பின்னர் பத்திகைகளுக்கு அனுப்பினார்.

ரஜினியும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் சந்தித்துக் கைகுலுக்கும் படம்.


இதோ அந்த அறிவிப்பு குறித்த பத்திரிகைச் செய்திக்குறிப்பு.





-வினோஜாஸன்

எந்திரன் இனி 'சன்' வசம்!

கைமாறியது ரஜினியின் எந்திரன்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது!

இது அதிகாரப்பூர்வமான செய்தி...

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான எந்திரன் – தி ரோபோவை அய்ங்கரன் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக பெரும் விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவியின், சன் பிக்சர்ஸ்.

இன்று மாலை சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனை அவரது இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ஷங்கர் மற்றும் கேமராமேன் ரத்னவேலு ஆகியோர் சந்திக்கின்றனர்.

ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தை அய்ங்கரன் நிறுவனம் 150 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராய், ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பெரு நாட்டில் உள்ள உலக அதிசயமான மாச்சு பிக்குவில் இரு மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு துவங்கியது. கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அய்ங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இன்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தன. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து சில வாரங்களுக்கு முன் விலகிக் கொண்டது.

இதனால் அய்ங்கரன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.
இந்நிலையில், இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.

பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக்க உறுதி பூண்டுள்ளது.

- நன்றி: தட்ஸ்தமிழ்

சரோஜா தேவியோடு நடிக்க முடியாமல் போய்விட்டதே...! - ரஜினி கலகல பேச்சு!!

ரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

திருமதி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஷ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு லதா ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டார்.

விழாவில் பழம்பெரும் பாடகர் பி.பி.சீனிவாஸ், நடிகை சரோஜாதேவி, எஸ்.என்.லட்சுமி, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர் கிருஷ்ணசாமி, விளையாட்டு வீராங்கனை சிறுமி விஜயலட்சுமி உள்பட பலர் சிறப்பிக்கப்பட்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சரோஜாதேவிக்கு விருது வழங்கி பேசியதாவது:

சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. ஆனால் அப்போது முடியவில்லை. அவருடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ஒரு வேளை அந்த நேரத்தில் நான் ஹீரோவாக நடித்தால் கூட, அப்போது திரையுலக ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோரை மீறி என்னால் அவருடன் நடித்திருக்க முடியுமா, அதற்கு அவர்கள் என்னை அனுமதித்திருப்பார்களா தெரியவில்லை.

சரோஜாதேவியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த விழாவிற்கு வந்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார் ரஜினி.

இந்த விழாவில் ரஜினியின் மதிப்புக்குரிய எஸ்பி முத்துராமன், மகளும் முன்னாள் மாணவியுமான சவுந்தர்யா ரஜினிகாந்த், முன்னாள் மாணவர்கள் நகுல், சிம்பு ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. குழந்தைகளுக்கு ரஜினி தன் கையால் பரிசுகளை வழங்கினார்.

வெள்ளை வேட்டி, சட்டையில் ஒரு பேராசிரியரின் கம்பீரத்துடன் விழாவுக்கு ரஜினி வந்திருந்தார். விழா முடிந்த பிறகும் அரங்கில் சிறிது நேரம் இருந்து, குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தார் ரஜினி.

http://www.envazhi.com

இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

நாம் முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்க வேண்டும் என்று 'பக்கா'வாகக் கணித்து வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. எந்த முடிவு எடுப்பதானாலும் கொட்டினோம், கவிழ்த்தோம் என்று பரபரக்கச் செய்ய மாட்டார். நிதானமாக, நன்கு யோசித்துத்தான் முடிவெடுப்பார்…

-ரஜினிக்கு இது யார் கொடுத்த சான்றிதழ் என்று யோசிக்கிறீர்களா...

இப்போது அவரைத் திட்டி எழுதி, தங்களது இருப்பை வெளிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள அதே விகடன் குழுமம்தான்.

நேரத்துக்கு ஒரு பேச்சு, ஆண்டுக்கு ஒரு நிலைப்பாடு என மாறிக் கொண்டே இருக்கும் இவர்கள், எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இயங்கும் ரஜினியை விமரிசிப்பதை என்னவென்று சொல்வது?

மதுரையில் நடந்த ஒரு விழாவில் ரஜினி பங்கேற்றுப் பேசியதை, ரஜினியின் பிறந்த நாளுக்காக தங்களது இலவச இணைப்பில் வெளியிட்டிருந்தனர்.

நியாயமாக இந்த வரிகளை அவர்கள்தான் தினசரி மனப்பாடம் செய்ய வேண்டும். தன் ரசிகர்களுக்கு ரஜினி தந்திருக்கும் இடம் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது விகடன் போன்ற பத்திரிகைகள்தான்.

அன்றும், இன்றும்... ‘என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களே...’ என்றுதான் ரஜினி அழைக்கிறார். இதை அவர் எப்போதும் மறக்கவில்லை. மீடியாதான் இந்த உண்மையை அடிக்கடி மறப்பதும், பின்னர் நினைவுக்கு வந்து தடுமாறுவதுமாக காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறது.

தன் ரசிகர்கள் குறித்து ரஜினி கூறிய வரிகள்:

"மதுரைக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய நட்பு உண்டு. நான் மதுரைக்கு முதன்முதலில் வந்தது 'மூன்று முடிச்சு' பட விழாவுக்கு. இதில் 'மூன்று' உண்டு. அதன்பின் 'திரிசூலம்' படத்தின் வெற்றி விழாவுக்கு வந்தேன். 'திரிசூலம்' - மூன்று சூலம். இதிலும் 'மூன்று' உண்டு.

பிறகு. 'மூன்று முகம்' படத்தின் வெற்றி விழாவுக்கும் வந்தேன். இதிலும் 'மூன்று' உண்டு. மதுரை என்பதிலும் மூன்று எழுத்து. ரஜினி என்பதிலும் மூன்று எழுத்து. இப்படியாக எனக்கும் மதுரைக்கும் நெருங்கிய நட்பு உண்டு.

நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு அதிசயம். அதிலும் கதாநாயகன் அந்தஸ்து பெற்றது பெரிய அதிசயம். அதைவிட, ரசிகர்களாகிய உங்கள் உள்ளங்களை நான் வென்றது மிகப் பெரிய அதிசயம். இந்திப் படங்களில் நடிக்கச் சென்றதும் அதிசயம். அதன்பின் ஆங்கிலப் படத்தில் நடித்தது பேரதிசயம்.

நான் பிறந்தவுடன் டாக்டர்கள், 'இவன் பத்து நாள் கூடத் தாங்க மாட்டான். இறந்துவிடுவான்' என்று சொல்லிவிட்டார்களாம். நான் பிறந்த நட்சத்திரம் என்ன என்று எனக்குத் தெரியாது. 'மூன்று முடிச்சு' விழாவுக்கு வந்திருந்தபோது, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றேன்.

சக நடிகர்களெல்லாம் தங்கள் பிறந்த நட்சத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தார்கள். அர்ச்சகர் என்னிடம் 'உன் நட்சத்திரம் என்ன?' என்று கேட்டார். எனக் குத்தான் தெரியாதே! அப்போது என் நட்சத்திரம் என்ன என்று தெரியாது. இப்போது தெரிந்துவிட்டது'' என்று கூறவும், ரசிகர்கள் 'சூப்பர் ஸ்டார்' என்று உற்சாக மாகக் குரல் கொடுத்தனர்.

ரசிகர்களே என் தெய்வம்!

நான் ஒரு குதிரை மாதிரி. என் கண்மணிகளாகிய நீங்கள் என் மேல் அமர்ந்துள்ளீர்கள். எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குதிரைமேல் சாமியை வைத்து ஊர்வலம் வந்தார்கள். வரும் வழியில் எல்லோரும் வணங்கினார்கள். உடனே குதிரைக்குக் கர்வம் வந்துவிட்டது, எல்லோரும் தன்னை வணங்குகிறார்களே என்று!

கோயில் வந்ததும், சாமியை உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்கள். அப்புறம் யாரும் குதிரையை மதிக்கவில்லை. அதுபோலத்தான் நானும்! ரசிகர்களாகிய நீங்கள் இருக்கும் வரைதான் எனக்கு மரியாதை...!"

ஆக, ரஜினி அன்று சொன்னதை இன்று வரை காப்பாற்றி வருகிறார். ‘தலைவா எங்களுக்காக என்ன செஞ்சீங்க?’ என்று தன் ரசிகன் தன்னை நேருக்கு நேர் பார்த்துக் கேட்கும் அளவு அவர்களை சமமாக நடத்துகிறார். அந்த நேர்மையும் சத்தியமும் ரஜினிக்கு இருக்கிறது.

ஆனால் 15 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கும் தங்கள் வாசகர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி, யார் பக்கமும் சாயாமல், நடுநிலையாகச் சொல்லும் தொழில் தர்மமும், நேர்மையும் விகடனுக்கு இப்போது இருக்கிறதா?

-வினோஜாசன்

www.envazhi.com

Tuesday, December 16, 2008

ரஜினி: உலக சினிமாவுக்கு இந்தியா தரும் பதில்!!

ந்தக் கேள்விக்கு ஆயிரத்தெட்டு வியாக்கியானங்கள் தரும் நபர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை ஒன்றை ஜீ குழும இணையதளம் வெளியிட்டுள்ளது.

என்னதான் உலகத் தரத்தில் இருந்தாலும் உள்ளூர் சரக்குக்கு உரிய மரியாதை தாமதமாகவே கிடைக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ரஜினி பிறந்த இந்த தமிழ் மண்ணில் அவரை இன்னமும் விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்கள்த்தான், நல்ல பப்ளிசிட்டியோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இருக்கவே இருக்கு வசதியாக அறிவுஜீவி முகமூடி!

ஆனால் வட நாட்டுப் பத்திரிகைகளோ ரஜினிதான் உலகுக்கு இந்திய சினிமாவின் முகம் என போற்றிப் புகழ்ந்த வண்ணம் உள்ளன.

என்டிடிவி, சிஎன்என், டைம்ஸ் என வட இந்திய தொலைக்காட்சிகள், ‘இந்தியாவின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார் ரஜினிதான்’ என அழுத்தம் திருத்தமாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன.

பிரதமர் கையால் மிகச் சிறந்த கலைஞருக்கான விருதினையும் பெற வைத்தன. அந்த மேடையில் பிரதமர் முன்னிலையிலேயே ரஜினியின் பெருமைகளைப் பட்டியலிட்டார் என்டிடிவியின் பிரணாய் ராய் மற்றும் நிகழ்ச்சி நடத்துனர்கள்.

நடிப்புலகச் சக்கரவர்த்தி என அனைவரும் ஒருமித்த குரலில் கூறி ரஜினியை இந்த தேசத்தின் பெருமைக்குரிய குடிமகனாக பாராட்டின.

ஆனால் இங்குள்ளவர்களோ, இன்னமும் அவர் பிறந்த இடம் தேடி ‘மண் ஆராய்ச்சி’யில் இறங்குவதும், ரசிகர் மன்ற சந்திப்பில் என்ன குறை காணலாம் என்று பூதக்கண்ணாடியோடு அலைவதுமாய் திரிகிறார்கள்.

நல்லவர்களை, பெருமைக்குரியவர்களை மதிக்காத நாடு விளங்காது என மகாபாரதம் சொல்வதை இங்கே நினைவு கூறுகிறோம்.

ஜீ குழுமத்தின் www.zeenews.com இணைய தளத்தில் ரஜினியைப் பற்றி அங்கிதா சுக்லா என்ற செய்தியாளர், ரஜினி பிறந்த நாளுக்காக ஒரு சிறப்புக கட்டுரை எழுதியுள்ளார்.
அதன் ஒவ்வொரு வரிகளும் உண்மை ரசிகனை மட்டுமல்ல... ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் பெருமிதம் கொள்ள வைக்கும்.

ரஜினி ஒரு சகாப்தம் – தலைவருக்கு வயது 59!

-இது கட்டுரையின் தலைப்பு.

‘எங்க ஊர் ஜேம்ஸ்பாண்ட் ரஜினி இருக்கும் போது, யாருக்கு வேணும் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட்?’ – இப்படித்தான் அந்தக் கட்டுரையே ஆரம்பமாகிறது!

‘ரஜினி – உலக சினிமாவுக்கு இந்தியா வைத்துள்ள பதில்தான் ரஜினி! இவரது ஒவ்வொரு பட வெளியீடும் திருவிழாவை மிஞ்சும் உற்சாகத்துடன் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்படுகின்றன.

சிவாஜி – தி பாஸ் வெளியான போனது ரசிகர்கள் ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், தேங்காய்கள் உடைத்து திருஷ்டி கழித்து கொண்டாடிய விதமும், இந்த மனிதர் மக்கள் மீது எந்த அளவு ஆளுமை செலுத்துகிறார் என்பதைக் காட்டியது.

இந்த நாட்டின் ஒவ்வொரு சினிமா ரசிகனும் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து நேசிக்கும், ரசிக்கும் ஒரே மனிதர், சகாப்தமாகத் திகழும் கலைஞர் ரஜினி ஒருவர்தான்.
அவரது சண்டைக் காட்சிகள் உலகப் புகழ் பெற்றவை. நகைச்சுவை மிளிரும் அவரது வசனங்களுக்கோ ஜப்பான், சீனாவிலும் ஏராளமான ரசிகர்கள். மிகச் சிறந்த, தரமான பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் ரஜினியின் படங்கள்...

-இப்படி ஒரு அசத்தலான அறிமுகத்துடன் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில், ரஜினியின் வாழ்க்கையை ரத்தினச் சுருக்கமாக, எந்தப் பிழையுமின்றி அவர் சொல்லியிருக்கும் விதம் அட்சரலட்சம் பெறும்.

‘சீனாவை வென்ற ரஜினி!’ எனும் துணைத் தலைப்பில், சீனாவில் ரஜினி படங்கள் எப்படி ரசிக்கப்படுகின்றன என இந்தக் கட்டுரையாளர் எழுதியுள்ள விதம் சிலிர்க்க வைக்கிறது. சமீபத்தில் ரஜினியைப் பற்றி இதயப்பூர்வமாக எழுதப்பட்ட அருமையான கட்டுரை இது.

விரிவாக ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள அந்தக் கட்டுரையை படித்து ரசியுங்கள்.

இங்கே தரப்பட்டுள்ள தொடர்பை கிளிக் செய்யுங்கள்.
http://www.zeenews.com/entertainment/movies-theatre/2008-12-12/490352news.html



www.envazhi.com

இந்த ரசிகர்களால் ரஜினிக்கு என்றும் பெருமைதான்!

ண்ணாமலை படத்தில் வினு சக்கரவர்த்தி ஒரு வசனம் பேசுவார்...

‘அம்மா...புள்ளன்னு பெத்தா இப்படியொரு புள்ளையத்தான் பெக்கணும்...’ என்பார் சூப்பர்ஸ்டார் ரஜினியைக் காட்டி.

அதே பெருமை அவரது ரசிகர்களுக்கும் இப்போது கிடைத்திருக்கிறது.

'ரசிகன்னு இருந்தா இப்படியில்ல இருக்கணும!' என்று அனைவரும் பெருமையுடன் குறிப்பிடும் வகையில், அமைதியாக, ஆனால் அர்த்தத்துடன் செயல்படத் துவங்கிவிட்டனர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி பிறந்த நாளன்று இனிப்பு கொடுத்து பட்டாசு வெடிப்பதோடு நின்றுவிடாமல், மக்களுக்குப் பயன்தரும் பல்வேறு நலத் திட்டப் பணிகளில் தங்களை அவர்கள் ஈடுபடுத்திக் கொண்டு வருவது பெருமைக்குரிய விஷயம். ரஜினி விரும்பிய மாறுதல் அவரது ரசிகர்களிடம் உருவாகி வருகிறது என்பதன் அடையாளமாகவே இது பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் துன்புறும் இந்த வேளையில், தன் பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று ரஜினி கூறிய பின்னர் நடந்த விழாக்களே இப்படி இருந்ததென்றால், அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்திருந்தால்... இந்த தமிழகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை ரஜினியின் ரசிகர்கள் ஒரே நாளில் காட்டியிருப்பார்கள்!!

ஏழைக் குழைந்தைகளைத் தத்தெடுப்பது, கண் சிகிச்சை முகாம்கள், ரத்த தான முகாம்கள், அன்னதானம் வழங்குதல், பள்ளிச் சீருடை வழங்குதல், உலக அமைதிக்காக அமைதிப் பிரார்த்தனை, மும்பையில் வீர மரணமடைந்த ஜவான்களுக்கு மரியாதை செலுத்துதல்... என தமிழகம் ரஜினிமயமாகக் காட்சியளித்தது இந்த டிசம்பர் 12-ம் தேதி.

இந்த தகவல்களை முழுமையாக இனிவரும் பதிவுகளில் தருகிறோம்...
ரஜினிபேன்ஸ்.காம் ரத்த தான முகாம்!

ரஜினி ரசிகர்களுக்கென்று முதல்முறையாக துவங்கப்பட்ட தளம் www.rajinifans.com. உலகில் வேறு எந்த நடிகருக்காவது ரசிகர்கள் இப்படியொரு ‘பக்கா’ இணையதளத்தை உருவாக்கி, அதுவும் இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்படுத்தியிருப்பார்களா... என்பது சந்தேகமே...!

இந்த இணையதளத்தின் சார்பில் சென்னை பரங்கிமலை, மவுண்ட் மெடிக்கல் சென்டரில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்திருந்தனர். ரஜினிபேன்ஸ் தளத்தின் நிர்வாகி ஜெ.ராம்கி தலைமையில் 33 பேர் ரத்த தானம் அளித்தனர்.

தொடர்ச்சியாக 4-ம் ஆண்டாக இந்த ரத்த தான முகாம் மிகச் சிறப்பான முறையில் நடந்துவருகிறது. கடந்த ஆண்டு தளபதி சத்தியநாராயணா கலந்து கொண்டு பாராட்டும் அளவுக்கு சிறப்பாக நடந்த நற்பணி இது.

மவுண்ட் மெடிக்கல் சென்டர் டாக்டர் சச்சிதானந்தம் மேற்பார்வையில், மிகப் பாதுகாப்பான முறையில் ரத்தம் பெறப்பட்டு, அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிகழ்வில் நாம் பார்த்து பெருமைப்பட்ட விஷயம், வந்திருந்த ரசிகர்களின் வயது மற்றும் அவர்கள் காட்டிய உணர்வு. வேறு எந்த நடிகரின் ரசிகர்களுக்கும் இப்படியொரு உணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. இன்னும் கல்லூரிப் பருவம் கூடத் தாண்டாத இந்த இளம் நண்பர்கள், தங்கள் தலைவர் ரஜினி மீது உயிரையே வைத்திருப்பது பிரமிக்க வைத்தது.

ரஜினியே சொல்லியிருப்பது போல... இப்படிப்பட்ட அருமையான இளைஞர்களை மிகச் சரியாக வழிநடத்த வேண்டியது அவசியமல்லவா... அந்த பொறுமையும், பண்பும், ஆளுமையும் இன்று ரஜினிக்கு மட்டுமே உண்டு!

http://www.envazhi.com

Pics: www.rajinifans.com

Sunday, December 14, 2008

ரஜினி பிறந்த நாளும் ஊடகங்களும் - 1

து ஒரு சிறந்த கட்டுரை என்று இங்கே பிரசுரிக்கவில்லை. ரஜினி பிறந்த நாளில் தமிழ் அச்சு ஊடகங்கள் ரொம்பத்தான் 'பிகு' பண்ணிக்கு கொண்டன.

அவரது பிறந்த நாள் குறித்த செய்திகளை முன்னணி நாளிதழ்கள் வெளிவராமல் பார்த்துக் கொண்டன. ஏதாவது ஒரு கரை வேட்டியைக் கட்டிக் கொண்டு அலையும் அவர்களைச் சொல்லி என்ன ஆகப் போகிறது. இந்த விஷயத்தில் ஆங்கிலப் பத்திரிகைகள் ரஜினி பிறந்த நாளுக்கு சிறப்புப் பக்கம் போடுமளவுக்கு தங்களை மேம்படுத்திக் கொண்டுள்ளன. மக்களின் விருப்பம் புரிந்து இயங்கினால்தானே சர்க்குலேஷன் கூடும்? (தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்துமே சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிறப்பு மலர்கள் வெளியிட்டவைதான். அதிலும் தினகரனும், தினமலரும்...)


இணைய தளங்கள் இன்னும் கரை வேட்டி மனோபாவத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. பிரச்சினையென்றால் குறிப்பிட்ட கட்டுரையை உடனடியாகத் தூக்கிவிடுகிற வசதியால் வந்த தைரியம் போலிருக்கிறது!

வெப்துனியா சமயம் கிடைத்த போதெல்லாம் ரஜினியைக் குத்திப் பார்க்கும் கீழ்த்தரமான வேலையைச் செய்ததுதான்.

இப்போது ரஜினி பிறந்த நாளுக்காக ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஜஸ்ட்... உங்கள் பார்வைக்காக!



ர‌ஜினி 58 – முள்ளும் மலர்களும்

ர‌ஜினிக்கு இன்று 58 வது பிறந்த நாள். நடிகர் என்ற அடையாளத்துக்கு மேலாக அவரது பெயர் தமிழகத்தில் உருவாக்கியிருக்கும் தாக்கம் ஆச்ச‌ரியமானது. ர‌ஜினியின் பிரபல்யத்தை தனிப்பட்ட சாதனையாக ஏற்க மறுப்பவர்களுக்கும் வியப்பளிக்கக்கூடிய புதிர் அது. சிவா‌ஜிராவ் கெய்க்வாட் ர‌ஜினியாக ப‌ரிமாணம் அடைந்த நெடுங்கதையின் சாராம்சத்தில் ஒருவேளை இந்த புதிருக்கான விடையை ஒருவர் கா‌ண‌க்கூடும்.

பொருளாதார நெருக்கடியால் இடப்பெயர்வுக்கு நிர்ப்பந்திக்கப்ப‌ட்ட குடும்பம் ர‌ஜினியுடையது. மராட்டிய மன்னர் சிவா‌ஜியின் பாதுகாவலர்களின் வா‌‌ரிசுகளில் சிலர் கர்நாடாகாவுக்கு குடிபெயர்ந்தனர்.. சிலர் கிருஷ்ணகி‌‌ரி அருகிலுள்ள நாச்சிக்குப்பத்தில் குடியேறினர். அப்படி குடிபெயர்ந்து வந்த குடும்பத்தில் பிறந்தவர் ர‌ஜினியின் தந்தை ரானோ‌ஜிராவ் கெய்க்வாட். ர‌ஜினியை அவரது தாயார் ராம்பாய் நாச்சிக்குப்பத்தில் பெற்றெடுத்தார் என்பது சமீபத்தில் தெ‌ரியவந்திருக்கும் உண்மை. இதனை முன்னிறுத்தி தமிழின அடையாளத்தை அவர்மீது பூசும் வேலைகள் து‌‌ரிதப்படுத்தப்பட்டுள்ளது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் பரம்பரைக்கு ர‌ஜினியின் பூர்வீகம் குறித்த கவலை அவசியமற்றது. ரானோ‌ஜிராவுக்கு கர்நாடகா காவல்துறையில் வேலை கிடைத்ததை தொடர்ந்து கர்நாடகாவுக்கு மீண்டும் ஒரு இடப்பெயர்வை மேற்கொண்டது ர‌ஜினியின் குடும்பம்.

ர‌ஜினியின் நடத்துனர் வேலையும், அவரது சினிமா பிரவேசமும் அனைவரும் அறிந்தது. எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்த அற்புதமல்ல ர‌ஜினியின் திரை பிரவேசம். பசி, பட்டினி, அலைச்சல், அவமானங்கள், காத்திருப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் நிரம்பியது அவரது ஆரம்ப காலம். சினிமா பின்னணி வாய்க்கப்பெறாத ஒருவர் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் ர‌ஜினியும் எதிர்கொண்டார்.

கலைந்த சிகை, கறுத்த மேனி, அலட்சிய பார்வை, திரையில் அதுவரை பார்த்திராத ஸ்டைல் என ரசிகர்களை சுண்டி இழுத்தார் ர‌ஜினி. சினிமாவின் அழகியல் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட அவரை தங்களின் பிரதிநிதியாக பார்க்க தலைப்பட்டார்கள் சாதாரண ஜனங்கள். அவர்கள், ஆறிலிருந்து அறுபதுவரை, ப்‌‌ரியா, முள்ளும் மலரும் படங்கள் ரஜனியின் நடிப்புத் திறமைக்கு இன்றும் சான்றுகளாக திகழ்கின்றன.

இந்தப் பட்டியல் மேலும் வளராமல் நின்று போனதற்கு ஏவிஎம் தயா‌‌ரித்த முரட்டுக்காளைக்கு பெரும் பங்குண்டு. கதை நாயகன் கதாநாயகனாக மாற்றம் கொண்ட விபத்து இந்த காலகட்டத்தில்தான் நடந்தது. அதிலிருந்து இன்று வரை ர‌ஜினியால் மீண்டு வர முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

ரசிகர்கள், தயா‌‌ரிப்பாளர்கள் மற்றும் வியாபா‌‌ரிகளின் விருப்பத்திற்கேற்ப அவர் கட்டியெழுப்பிய கதாநாயக பிம்பத்திற்கு எதிராக செயல்பட்ட போதெல்லாம் அவருக்கு தோல்வியே ப‌ரிசானது. ராகவேந்திரராக அவர் நடித்த போதும், பாபாவில் சக்தி வேண்டி கடவுளிடம் கை ஏந்திய போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் அவரது ரசிகர்கள்.

இந்த இரு படங்கள் தவிர்த்து தனது ஆன்மீக ஈடுபாட்டை அனேகமாக அவர் யார் மீதும் திணித்ததில்லை. நான் யார் என்ற விடை தெ‌ரியாத கேள்வியை நோக்கியே அவரது

ஆன்மீகப் பயணம் இருந்து வந்திருக்கிறது. புகழின் உச்சியிலும் நிலைதடுமாறாத மனம், அவருக்கு கிடைத்த ஆன்மீக ப‌ரிசென்றால் அதில் மிகையில்லை. தனது தேடுதல் பயணத்தில் ராகவேந்திரர், அருணாச்சலேஸ்வரர், பாபா என பல தளங்களை கடந்து வந்திருக்‌கிறா‌ர் ர‌ஜினி.

பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதி‌‌ரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை.

மனோரமா, மன்சூர் அலிகான், வேலு பிரபாகரன் போன்றோர் அவரை விமர்சித்த போது ர‌ஜினியின் எதிர்தாக்குதல் அரவணைப்பாகவே இருந்ததை நாடறியும்.

இன்றைய தேதியில் அவரை தவிர்த்த தமிழக அரசியல் சாத்தியமில்லை. முத்து படத்தின்போது அவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு அவருக்கு எதிரான ஓட்டுகள் சிதறிப்போகாமல் ஓரணியில் திரள பெ‌ரிதும் உதவியது. இதனை ர‌ஜினியின் தனிப்பட்ட வெற்றியாக சோ போன்றோர் முன்னிறுத்தியது நாடாளுமன்ற தேர்தலிலேயே பொய்யாக்கப்பட்டது. வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிவிட்ட ர‌ஜினிக்கு அரசியலுக்கு‌‌ரிய பொறுமையும், சாதுர்யமும் கைவரப் பெறாததில் ஆச்ச‌ரியமில்லை.

திரையில் வரும் கதாநாயக பிம்பத்தை நிஜத்திலும் பேண வேண்டிய கட்டாயம் ர‌ஜினிக்கு முன்பு வரை இருந்தது. அந்த அவஸ்தையை உடைத்தெறிந்தவர் ர‌ஜினி. தனது வழுக்கை விழுந்த தலையை பொது இடங்களில் மறைக்க ஒருபோதும் அவர் முயன்றதில்லை.

ஆரம்ப காலத்தில் அவர்மீது படிந்த கலகக்கார சாயல் இன்று இல்லை. இன்று அவர் ஒரு ஆன்மீகவாதி. சிறந்த குடும்பத் தலைவர். சமூக ஒழுக்கங்களை மீறாத நல்ல குடிமகன். மரபான சமூக ஒழுக்கங்களின் நிழலில் பாதுகாப்பை தேடும் அனைத்து தரப்பினருக்கும் அவர் ஆதர்ஷ புருஷன். அவரை விரும்புவதன் மூலம் அந்த பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறது தமிழ் சமூகம்.

ர‌ஜினி என்பது இன்று ஒரு பெயர் மட்டுமல்ல. ர‌ஜினி என்பது ஒரு நபருமல்ல. அதையெல்லாம் தாண்டி அது ஒரு மிகை யதார்த்த பிம்பம். அந்த பிம்பத்திற்கு எதிராக ர‌ஜினியாலும் ஒன்றும் செய்ய இயலாது. ராகவேந்திரர், பாபா படங்கள் தோல்வி அடைந்ததற்கு இதுவே காரணம். ர‌ஜினி இல்லாமலே அவரது பெய‌ரில் கட்சி தொடங்குவதற்கும் காரணம் இதுவே.

இந்த பிம்பத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்கும் சிவா‌ஜி, எந்திரன் போன்ற படங்களையே மீண்டும் மீண்டும் தேர்வு செய்கிறார் ர‌ஜினி. சமூகத்தின் பிரக்ஞையில் பதிந்திருக்கும் அந்த பிம்பத்திற்கு இசைவாகவே குறைந்தபட்சம் தனது திரைவாழ்க்கையையாவது அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ர‌ஜினிக்கு இருக்கிறது. ஒரு ப்‌‌ரியா, ஒரு முள்ளும் மலரும், ஒரு ஆறிலிருந்து அறுபதுவரை அவரது வாழ்வில் இனி சாத்தியமா என்பது கேள்விக்குறி. குசேலனில் தன்னை சுற்றியிருந்த தங்க வேலியை நெகிழ்த்தும் சந்தர்ப்பம் ர‌ஜினிக்கு கிடைத்தது. அவர் விரும்பியும் அவரை சுற்றியிருந்த வியாபார நிர்ப்பந்தத்தால் அது முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.

ர‌ஜினிக்கு இன்று எதி‌‌ரிகள் யாருமில்லை. அவர் வெற்றி கொள்ள வேண்டியவர்கள் ஒருவருமில்லை. அவர் எட்ட வேண்டிய உயரங்களும் இல்லை. இன்று அவருக்கிருக்கும் ஒரே சவால், சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ர‌ஜினி என்ற பிம்பத்தை கடந்து வருவது. இதன் பொருள் தனது அடையாளத்தை அளிப்பதல்ல. ஒரே அடையாளத்தில் தங்கிப் போகாமல் இருப்பது.

இது சாத்தியமா என்றால், நிச்சயம் சாத்தியமே. ர‌ஜினியின் ஆதர்ஷ நடிகர் அமிதாப்பச்சனே இதற்கு சிறந்த உதாரணம். எத்தனையோ சவால்களை வெற்றி கொண்ட ர‌ஜினியால் இந்த சவாலையும் வெற்றி கொள்ள முடியும்.


மேலும், அடையாளங்களிலிருந்து மீள்வதுதானே உண்மையான ஆன்மீக விடுதலையும்கூட.
http://www.envazhi.com

Friday, December 12, 2008

தலைவருக்கு வாழ்த்து சொன்ன தலைவர்!

இன்று 58 வயது முடிந்து 59ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் சுல்தான் படப்பிடிப்பில் இருந்த ரஜினியை, தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதி வாழ்த்தினார்.

இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் உள்ள நிலையில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததால், சற்று அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது ரசிகர்களுக்கு.

மேலும் ரஜினியும் இன்று சுல்தான் படப்பிடிப்புக்காக ஐதராபாத் போய்விட்டார். நேற்று பெங்களூரு போன அவர் தனது அண்ணனிடம் ஆசி பெற்றுக் கொண்டு ஐதராபாத் போய்விட்டார்.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி, ரஜினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அழகிரி - ஸ்டாலின் வாழ்த்து

முதல்வரின் மூத்த மகன் மு.க அழகிரி மற்றும் இளைய மகனும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஸ்டாலின் ஆகியோரும் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம்தெரிவித்தனர்.

சிரஞ்சீவி - சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரஜா ராஜ்யம கட்சித் தலைவர் சிரஞ்சீவி ஆகியோரும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

ப.சிதம்பரம்

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இன்று தனது வாழ்த்துக்களை பிறந்த நாள் காணும் ரஜினிக்குத் தெரிவித்துக் கொண்டார்.

இவர்களைத் தவிர இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினி்க்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

திரையுலகில் ரஜினிக்கு நெருக்கமான பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்க முயன்றதாகக் குறிப்பிட்டனர். இவர்களில் ஒரு சிலரால் மட்டுமே ரஜினியுடன் தொடர்பு கொள்ள முடிந்ததாம்.

தமிழகமெங்கும் நற்பணிகள் செய்த ரசிகர்கள்

சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தி.நகர் பகுதியில் ரஜினிகாந்த்தின் பிரமாண்ட கட் அவுட்டும் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கோவில்களில் விசேஷ வழிபாடுகள், பூஜைகளை நடத்தியும், அன்னதானம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டும் கொண்டாடினர். எந்திரன் படம் வெற்றி அடைய வேண்டும் எனவும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இன்று மாலையிலும் பல்வேறு நல உதவி நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்துள்ளனர் ரசிகர்கள்.

தலைவருக்கு வாழ்த்து சொன்ன தலைவர்!

இன்று 58 வயது முடிந்து 59ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் சுல்தான் படப்பிடிப்பில் இருந்த ரஜினியை, தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதி வாழ்த்தினார்.

இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் உள்ள நிலையில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததால், சற்று அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது ரசிகர்களுக்கு.

மேலும் ரஜினியும் இன்று சுல்தான் படப்பிடிப்புக்காக ஐதராபாத் போய்விட்டார். நேற்று பெங்களூரு போன அவர் தனது அண்ணனிடம் ஆசி பெற்றுக் கொண்டு ஐதராபாத் போய்விட்டார்.

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி, ரஜினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அழகிரி - ஸ்டாலின் வாழ்த்து

முதல்வரின் மூத்த மகன் மு.க அழகிரி மற்றும் இளைய மகனும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஸ்டாலின் ஆகியோரும் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம்தெரிவித்தனர்.

சிரஞ்சீவி - சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரஜா ராஜ்யம கட்சித் தலைவர் சிரஞ்சீவி ஆகியோரும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

ப.சிதம்பரம்

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இன்று தனது வாழ்த்துக்களை பிறந்த நாள் காணும் ரஜினிக்குத் தெரிவித்துக் கொண்டார்.

இவர்களைத் தவிர இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினி்க்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

திரையுலகில் ரஜினிக்கு நெருக்கமான பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்க முயன்றதாகக் குறிப்பிட்டனர். இவர்களில் ஒரு சிலரால் மட்டுமே ரஜினியுடன் தொடர்பு கொள்ள முடிந்ததாம்.

தமிழகமெங்கும் நற்பணிகள் செய்த ரசிகர்கள்

சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தி.நகர் பகுதியில் ரஜினிகாந்த்தின் பிரமாண்ட கட் அவுட்டும் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கோவில்களில் விசேஷ வழிபாடுகள், பூஜைகளை நடத்தியும், அன்னதானம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டும் கொண்டாடினர். எந்திரன் படம் வெற்றி அடைய வேண்டும் எனவும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இன்று மாலையிலும் பல்வேறு நல உதவி நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்துள்ளனர் ரசிகர்கள்.

ஒரு தலைவனுக்காக இந்தத் தவம்...


தேசத்துக்காக
தலைவன் காத்திருந்தது ஒரு காலம்...
உன் வருகை அந்த பழைய
சரித்திரத்தை மாற்றியிருக்கிறது...

இதோ
உன்னைத் தலைவனாகக் காண
இந்த தேசம் காத்திருக்கிறது...

இந்தப் பிறந்த நாள்
மக்களின் புதிய நம்பிக்கைகள் பலிக்கும்
துவக்க நாளாக அமையட்டும்...!

இது வழக்கமான வாசகமாக இருக்கலாம்...
ஆனால் உனக்காகவே எழுதப்பட்ட வாசகம்;
தலைவா நீ விரும்பும்போதே வா...
தலைமைப் பீடம் தவம் கிடக்கிறது!!


-சங்கநாதன்

அவர் பிறவியிலேயே தலைவர்தான்!! – சோ

ன்றைய நாளிதழ்கள் பெரும்பாலானவற்றில் முக்கியச் செய்தி ரஜினியின் பிறந்த நாள்தான்.
டெக்கான் கிரானிக்கிள் நாளிதழ், இரண்டாவது பக்கத்தை முழுமையாக ரஜினி ஸ்பெஷலாகவே வெளியிட்டுள்ளது.

ஆனால் அதில் முக்கிய கட்டுரையின் தலைப்புக்கும் உள்ளே எழுதப்பட்டுள்ள சமாச்சாரத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் வெளியிட்டுள்ளனர். ‘ரஜினி மேனியா’ எனத் தலைப்பிடப்பட்ட இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது என்னவோ ‘எந்திரனு’க்கு எதிரான செய்திகள்!

அடுத்து ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் அவரது ரசிகர்கள் மற்றும் அதற்கு ரஜினியின் நிலைப்பாடு குறித்தும் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பக்கத்தின் ஹைலைட் சோவின் பேட்டி. பல முறை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட அதே கருத்தைத்தான் இங்கும் சொல்லியிருக்கிறார்.

“மிகப்பெரிய மக்கள் செல்வாக்கும் ஆளுமைத் திறனும் உள்ள ரஜினி அரசியல் கட்சி துவங்கி தேர்தலில் நின்றால் ஒட்டுமொத்த வாக்குகளையும் அள்ளிவிடுவார். கைவசம் உள்ள திரைப்படங்களை முடித்துவிட்டு அவர் அரசியலுக்கு வருவார் என்பது என் நம்பிக்கை.

தலைமைப் பண்பு மற்றும் ஆளுமைத் திறன் ரஜினியின் பிறப்பிலேயே அவருக்கு வந்துவிட்ட ஒன்று. இதை அவர் புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. எந்த முடிவுக்கும் அத்தனை சாதாரணமாக வரமாட்டார். அனைவரிடமும் கருத்து கேட்பார், ஆனால் அவரது சொந்த முடிவைத்தான் எடுப்பார். பிறவியிலேயே அவர் தலைவர்தான்.

அது கடவுள் அவருக்குக் கொடுத்த வரம். ஒருமுறை செயலில் இறங்கிவிட்டால் அப்புறம் யாராலும் அவரைத் தடுத்து நிறுத்த முடியாது...” என்று தெரிவித்துள்ளார் சோ.

அவரது பேட்டியின் ஆங்கில வடிவம்:

Rajini is born Leader! - Cho

I wish Rajini well on his 58th birthday today. He has been one of my best friends for over two decades. We have been meeting quite often and discussing everything under the sun.

He is one person who has not changed after gaining so much of success, popularity and wealth. He remains detached from all worldly success. I am enamored of the idea that a person can remain untouched by such fame, glory and money.

He is not giving any thought to politics at the moment. He is now engrossed in the current film projects. I think his spiritual inclination and the resultant confidence will only help him do well in politics. But he cannot be pressurized on any subject by anyone at any given point of time. Fans will not be able to force his political entry.

As a commanding personality with a large fan following, he can sweep the polls if he takes the political plunge. I don’t think he is impulsive; he is intuitive. Whenever he has to take a decision on an important subject, he consults several experts on the subject. And takes a decision on his own weighing all the pros and cons.

He is a born leader and everyone cutting across religion, gender, caste likes him. That is a great gift from God for his humility. Once absorbed into work, he will not think of anything else.

டைம்ஸ் ஆப் இந்தியாவும் தன் பங்குக்கு ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

-வினோஜாஸன்
http://www.envazhi.com

மனங்களை வென்ற மகா கலைஞனுக்கு வாழ்த்துக்கள்!

லங்கையில் காயம்பட்டுத் துடிக்கும் நம் சகோதரர்களுக்காக இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து விடுங்கள் என்று என்னதான் ரஜினி கூறினாலும், ஏதோ இன்றுதான் தீபாவளி, கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு வந்துவிட்டதைப் போன்ற உணர்வு ரசிகர்களின் மனசுக்குள்...

இன்னொரு பக்கம், ரஜினியின் இந்த பிறந்த நாளுக்காகவே கிடைத்த நல்ல செய்தியைப் போல, இலங்கையில் போர் முனையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லி ஈழ மக்களைத் துன்புறுத்திய சிங்கள ராணுவமே தோற்றுப்போய் ஆயுதங்களை கீழே வீசிவிட்டு புறமுதுகிட்டு ஓடியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஜினியின் வாக்கு பலிக்கட்டும்... ஈழத் தமிழர்களின் மண் அவர்களுக்கு முழுமையாய் கிடைக்கட்டும்.

இந்த பிறந்த நாளில் உலகமே ரஜினிக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்க, அவரோ எங்கோ ஒரு தனிமையான இடத்தில் இந்த தினத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்.
ரஜினி பற்றி கடந்த சில மாதங்களில் சில முக்கிய பிரபலங்கள் கூறியவற்றின் தொகுப்பு இது:

மன்மோகன் சிங், பிரதமர், இந்தியா

‘ஒரு சிறந்த நடிகர், கலைஞருக்கு இந்த விருதைத் தருவதில் பெருமைப்படுகிறேன்.’ (என்டிடிவி விருது விழா)

‘எங்கள் நாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் டான்சிங் மஹாராஜா இங்கே வெற்றி பெற்று இருநாட்டு கலாச்சார உறவுகள் பலப்பட காரணமாக இருந்ததை நினைவு கூறுகிறேன்...’ (ஜப்பான் பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்)

மு.கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு

அன்புத் தம்பி ரஜினி நிஜமாகவே ஒரு உச்ச நட்சத்திரம். வான மண்டலங்களையெல்லாம் தாண்டி, நட்சத்திரங்களைத் தாண்டி சூரியனுக்கு நிகராய் பிரகாசித்துக் கொண்டிருப்பவர். உண்மையிலேயே சூரியனுக்கு அருகில் வீற்றிருப்பவர்.

அவருடைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். புத்தகங்கள், பத்திரிகை வாயிலாக அவரது பழைய வாழ்கைகையும், இப்போது அவர் கடைப்பிடிக்கும் வாழ்க்கையையும் படித்து நான் உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து, கண் கலங்கிப் இருக்கிறேன்.

...வாழ்க அவர் பல்லாண்டு, என்றும் இதே பெருமை, புகழுடன்.

-சிவாஜி வெள்ளி விழா

ஜெயலலிதா, முன்னாள் முதல்வர், தமிழ்நாடு

அன்புச் சகோதரர் ரஜினி ஒரு அரிய கலைஞர். மிகச் சிறந்த மனிதர். வித்தியாசமான நடிப்புக்கு உரியவர். அவர் என்னைப் பாராட்டியதைப் பெருமையாகக் கருதுகிறேன்...(ரீடிப் நேர்காணல்)

எல் கே அத்வானி:

ரஜினியைப் போன்ற மனிதரைப் பார்ப்பது அபூர்வம். அவரது மன உறுதி அசாத்தியமானது. என்னை வியக்க வைக்கிறது.

அமிதாப் பச்சன்:

ரஜினியை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. எப்போதும் என் நலம் விரும்பும் நல்ல சகோதரன். மிகச் சிறந்த பண்பாளர்.

பாரதிராஜா:

மிக அருமையான மனிதன் ரஜினி. அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. பழகியதில்லை. மிக உயர்ந்த குணங்களுக்குச் சொந்தக்காரர். நான் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிடுவேன். பின்னர் பேசியதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன். ஆனால் என்றும் நிதானம் தவறாத மனிதன் ரஜினி.

அடித்த கரங்களுக்கே பூமாலை போடுகிற உயரிய பண்பு அவருக்கு உண்டு. அது எல்லோரிடத்திலும் காணக் கிடைக்காதது... (குசேலன் பிரச்சினையில்...)

வைகோ:

ரஜினியிடம் இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. கடின உழைப்பு, நேரம் தவறாமை, நேர்மை, உறுதியான பேச்சு அனைத்துக்கும் ரஜினியை உதாரணமாகச் சொல்லலாம்.

எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை அவர் கையாளும் விதம் வியப்பைத் தருகிறது. (ரஜினி ரசிகர்களுக்காக வெளியிட்ட அறிக்கை)

இளையராஜா:

ரஜினி மனதளவில் ஒரு துறவியின் வாழ்க்கையை வாழும் உன்னதமான கலைஞர். திரையுலகில் இப்பெடிப்பட்ட அரிய குணங்களுடன் உச்ச நடிகராக இருப்பது சாதாரண விஷயமல்ல. மிக்க் கடினமான உழைப்பாளி. அதற்கான பலன்தான் கடவுள் அவரை வைத்துள்ள உயரம்... (பால் நிலா பாதை)

கமல்ஹாசன்:

ரஜினியைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொல்வதைப் போலத்தான். ரஜினியால் செய்ய முடியாத வேடம் கிடையாது. அவரால் எம்ஜிஆராகவும் நடிக்க முடியும். சிவாஜியாகவும் பிரதிபலிக்க முடியும்.

எங்கள் இருவருக்கும் உள்ள நட்பில் யார் பெரியவர், சின்னவர் என்ற பேதம் கிடையாது. வயதில் அவர் பெரியவர்தான். ஆனால் இருவருக்கும் உள்ள நட்பு வெளிச்ச வட்டத்துக்குள் சிக்காதது (மிட் டே).

டாக்டர் ராமதாஸ்:

ரஜினிகாந்த் நல்ல மனிதர். மிகச் சிறந்த பண்பாளர்... (மாலை மலர்)


தொகுப்பு: வினோஜாஸன்
http://www.envazhi.com