இந்தக் கேள்விக்கு ஆயிரத்தெட்டு வியாக்கியானங்கள் தரும் நபர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை ஒன்றை ஜீ குழும இணையதளம் வெளியிட்டுள்ளது.
என்னதான் உலகத் தரத்தில் இருந்தாலும் உள்ளூர் சரக்குக்கு உரிய மரியாதை தாமதமாகவே கிடைக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ரஜினி பிறந்த இந்த தமிழ் மண்ணில் அவரை இன்னமும் விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்கள்த்தான், நல்ல பப்ளிசிட்டியோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இருக்கவே இருக்கு வசதியாக அறிவுஜீவி முகமூடி!
ஆனால் வட நாட்டுப் பத்திரிகைகளோ ரஜினிதான் உலகுக்கு இந்திய சினிமாவின் முகம் என போற்றிப் புகழ்ந்த வண்ணம் உள்ளன.
என்டிடிவி, சிஎன்என், டைம்ஸ் என வட இந்திய தொலைக்காட்சிகள், ‘இந்தியாவின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார் ரஜினிதான்’ என அழுத்தம் திருத்தமாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன.
பிரதமர் கையால் மிகச் சிறந்த கலைஞருக்கான விருதினையும் பெற வைத்தன. அந்த மேடையில் பிரதமர் முன்னிலையிலேயே ரஜினியின் பெருமைகளைப் பட்டியலிட்டார் என்டிடிவியின் பிரணாய் ராய் மற்றும் நிகழ்ச்சி நடத்துனர்கள்.
நடிப்புலகச் சக்கரவர்த்தி என அனைவரும் ஒருமித்த குரலில் கூறி ரஜினியை இந்த தேசத்தின் பெருமைக்குரிய குடிமகனாக பாராட்டின.
ஆனால் இங்குள்ளவர்களோ, இன்னமும் அவர் பிறந்த இடம் தேடி ‘மண் ஆராய்ச்சி’யில் இறங்குவதும், ரசிகர் மன்ற சந்திப்பில் என்ன குறை காணலாம் என்று பூதக்கண்ணாடியோடு அலைவதுமாய் திரிகிறார்கள்.
நல்லவர்களை, பெருமைக்குரியவர்களை மதிக்காத நாடு விளங்காது என மகாபாரதம் சொல்வதை இங்கே நினைவு கூறுகிறோம்.
ஜீ குழுமத்தின் www.zeenews.com இணைய தளத்தில் ரஜினியைப் பற்றி அங்கிதா சுக்லா என்ற செய்தியாளர், ரஜினி பிறந்த நாளுக்காக ஒரு சிறப்புக கட்டுரை எழுதியுள்ளார்.
அதன் ஒவ்வொரு வரிகளும் உண்மை ரசிகனை மட்டுமல்ல... ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் பெருமிதம் கொள்ள வைக்கும்.
ரஜினி ஒரு சகாப்தம் – தலைவருக்கு வயது 59!
-இது கட்டுரையின் தலைப்பு.
‘எங்க ஊர் ஜேம்ஸ்பாண்ட் ரஜினி இருக்கும் போது, யாருக்கு வேணும் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட்?’ – இப்படித்தான் அந்தக் கட்டுரையே ஆரம்பமாகிறது!
‘ரஜினி – உலக சினிமாவுக்கு இந்தியா வைத்துள்ள பதில்தான் ரஜினி! இவரது ஒவ்வொரு பட வெளியீடும் திருவிழாவை மிஞ்சும் உற்சாகத்துடன் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்படுகின்றன.
சிவாஜி – தி பாஸ் வெளியான போனது ரசிகர்கள் ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், தேங்காய்கள் உடைத்து திருஷ்டி கழித்து கொண்டாடிய விதமும், இந்த மனிதர் மக்கள் மீது எந்த அளவு ஆளுமை செலுத்துகிறார் என்பதைக் காட்டியது.
இந்த நாட்டின் ஒவ்வொரு சினிமா ரசிகனும் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து நேசிக்கும், ரசிக்கும் ஒரே மனிதர், சகாப்தமாகத் திகழும் கலைஞர் ரஜினி ஒருவர்தான்.
அவரது சண்டைக் காட்சிகள் உலகப் புகழ் பெற்றவை. நகைச்சுவை மிளிரும் அவரது வசனங்களுக்கோ ஜப்பான், சீனாவிலும் ஏராளமான ரசிகர்கள். மிகச் சிறந்த, தரமான பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் ரஜினியின் படங்கள்...
-இப்படி ஒரு அசத்தலான அறிமுகத்துடன் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில், ரஜினியின் வாழ்க்கையை ரத்தினச் சுருக்கமாக, எந்தப் பிழையுமின்றி அவர் சொல்லியிருக்கும் விதம் அட்சரலட்சம் பெறும்.
‘சீனாவை வென்ற ரஜினி!’ எனும் துணைத் தலைப்பில், சீனாவில் ரஜினி படங்கள் எப்படி ரசிக்கப்படுகின்றன என இந்தக் கட்டுரையாளர் எழுதியுள்ள விதம் சிலிர்க்க வைக்கிறது. சமீபத்தில் ரஜினியைப் பற்றி இதயப்பூர்வமாக எழுதப்பட்ட அருமையான கட்டுரை இது.
விரிவாக ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள அந்தக் கட்டுரையை படித்து ரசியுங்கள்.
இங்கே தரப்பட்டுள்ள தொடர்பை கிளிக் செய்யுங்கள்.
http://www.zeenews.com/entertainment/movies-theatre/2008-12-12/490352news.html
www.envazhi.com
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
3 comments:
Your link is incomplete. Please click the below link to read the story.
http://www.zeenews.com/entertainment/movies-theatre/2008-12-12/490352news.html
நன்றி கோபி... சரி செய்யப்பட்டது.
//ரஜினி பிறந்த இந்த தமிழ் மண்ணில் அவரை இன்னமும் விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்கள்த்தான் //
முதலில் நான் இரஜினியின் இரசிகன் என்பதை சொல்லிகொள்கிறேன், அப்புறம் இரஜினி தமிழ் மண்ணில் பிறக்கவில்லை(இதை யாரும் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை)
விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்கள்,செய்துகொண்டுதான் இருப்பார்கள் இதுக்கு இரஜினியும் ஒருவகையில் காரணமே!
//என்டிடிவி, சிஎன்என், டைம்ஸ் என வட இந்திய தொலைக்காட்சிகள், ‘இந்தியாவின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார் ரஜினிதான்’ என அழுத்தம் திருத்தமாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன.//
இப்படி இருப்பதுக்கு தமிழ் இரசிகர்கள்தான் காரணம் என்பதை ஏன் ஏழுத மறந்திர்கள்
//**ஆனால் இங்குள்ளவர்களோ, இன்னமும் அவர் பிறந்த இடம் தேடி ‘மண் ஆராய்ச்சி’யில் இறங்குவதும், ரசிகர் மன்ற சந்திப்பில் என்ன குறை காணலாம் என்று பூதக்கண்ணாடியோடு அலைவதுமாய் திரிகிறார்கள்.
நல்லவர்களை, பெருமைக்குரியவர்களை மதிக்காத நாடு விளங்காது என மகாபாரதம் சொல்வதை இங்கே நினைவு கூறுகிறோம்**//
அவர் பெருமைக்குரியவராக ஆக்கபட்டதே இந்த தமிழகத்தில்தான் எனபதை மறுக்கமுடியாது
மகாபாரதமே ஒரு கட்டுகதைதான்(இதை பற்றி பேசவேண்டும் என்றால் இன்னொறு பதிவு வேண்டும்)
உத்தம்புருசன் என்று போற்றபடும் இராமனே தன் மனைவியை சந்தேகபட்டு தீயில் இறங்க சொன்னானே இது இன்னொறு கட்டுகதை/கற்பனை கதையான இராமாயணத்தில் வருவது
Post a Comment