Thursday, December 4, 2008

புறம் பேசியவர்களிடமும் நட்பு பாராட்டும் ரஜினியின் பண்பு!

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்'

-இந்தக் குறள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... ரஜினிக்கு நூறு சதவிகிதம் பொருந்தம்.

வள்ளுவப் பெருமானின் வாக்கை அப்படியே ஏற்று நடக்கும் உண்மையான தமிழ் மகன் இந்த ‘தங்க மகன்’!

ரஜினியைப் புகழ்ந்து பேசுபவர்களின் பட்டியலுக்கு இணையானது அவரைப் பற்றி புறம் பேசுபவர்களின் பட்டியல்.

காரணம்... பொறாமையைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை!

அட, அவர்களுக்கும் ரஜினிக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் ரஜினி என்னமோ அவர்களது ஜென்மப் பகைவர் மாதிரி நினைத்துக் கொண்டு வார்த்தைகளில் வன்மத்தைக் கொட்டுவார்கள்.

சத்யராஜூக்கும் ரஜினிக்கும் என்ன பகை? இத்தனைக்கும் சத்யராஜ் ஆரம்ப காலத்தில் வாய்ப்பின்றி சும்மா கிடந்த நேரத்தில் தனது படங்களில் முக்கிய வேடங்கள் கொடுத்து அவரை ஸ்டார் வில்லனாக்கியவர் ரஜினி. மூன்று முகத்தில் தொடங்கி மிஸ்டர் பாரத் வரை எத்தனை படங்கள்... எவ்வளவு வாய்ப்புகள். இதை சத்தியராஜே எத்தனை மேடைகளில் நெகிழ்ச்சியுடன் (அப்படி நடித்தபடி?!) சொல்லியிருப்பார்!

ஆனால் இதே சத்தியராஜூக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது.

காவிரி மேடையில் தான் செய்த அநியாய பாவத்துக்கு, ஈழ மேடையில் கழுவாய் தேடிக் கொண்டார்.

இந்த மன்சூர் அலிகான்.... அவர் பேசிய நரகல் பேச்சுக்களை அச்சில் ஏற்ற முடியாது. ஆனால் அவர்தான் படையப்பாவில் ஒரு சின்ன ரோலில் வந்து பெரிய சம்பளத்துடன் போனார். இன்று ரஜினி புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்.

மனோரமா... ரஜினியின் இடத்தில் வேறு ஒரு நடிகர் இருந்திருந்தால், மனோரமா என்ற நடிகையை தமிழ் ரசிகர்கள் இந்நேரம் மறந்துவிட்டிருப்பார்கள். அடுத்த ஜென்மத்துக்கும் சேர்த்து பாவங்களைச் சேர்த்துக் கொண்டார் மனோரமா... அந்த ஒரே தேர்தலில்.

ஒரு வருடம்... சீண்ட ஆளில்லை. ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை இந்த மனோரமாவுக்கு. ஆனால் ஆண்டவன், இந்த ‘அருணாச்சலம்’ பக்கத்தில் இருப்பது, அருணாச்சலத்தில் வாய்ப்பு கிடைத்த போதுதான் அந்தம்மாவுக்கே தெரிந்தது!!

ரஜினி எப்போதும் ஈர உள்ளத்துக்குச் சொந்தக்காரர். ஏதோ முதுமையின் தாக்கத்தில் மனோரமா பேசியதாக நினைத்து மறந்து மன்னித்து, பிறர் படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்தார். (அன்று எந்த ஜெயலலிதாவுக்காக ரஜினியை தாறுமாறாகப் பேசினாரோ, அதே ஜெயலலிதாவை சுத்தமாக மறந்து போனார் மனோரமா, தனக்கு கலைஞர் தலைமையில் நடந்த பாராட்டு விழாவின்போது!)

இப்போது வேலு பிரபாகரன்-

ரஜினியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்து இப்போது புகழ் பாடுபவராக மாறியுள்ள இயக்குநர்.
ரஜினி ஒரு நல்ல நடிகரே இல்லை என முழங்கியவர்தான் இவர். ஆனால் இன்று இப்படிச் சொல்கிறார்:

‘பகுத்தறிவு பிரச்சாரம் செய்த நான் வீடு இல்லாமல் நடுத் தெருவில் நின்றபோது, நண்பர் ரஜினிதான் உதவி செய்தார். சூப்பர் ஸ்டார் செய்த உதவி வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது...’ (நீங்க பேட்டி கொடுத்த அந்த பாவிகளுக்கு நன்கு உறைக்கும்படி சொல்லுங்கள்...பிரபாகரன்!)

இவரது முன்னாள் மனைவி ஜெயதேவி. இவரும் ரஜினியை இஷ்டத்துக்கும் விமர்சித்தவர்தான். ஆனால் அவருக்கும் சிவாஜியில் ஒரு வாய்ப்புக் கொடுத்து பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்தார் ரஜினி. இத்தனைக்கும் தீட்டிய மரத்திலேயே கூர் பாரப்பது போல, அந்த சிவாஜி ஷூட்டிங்கிலேயே கூட தகராறு செய்தவர் இந்தப் பெண்.

உடனே ரஜினி இப்படிச் செய்ததற்கு ஆயிரம் தப்பர்த்தங்களை சிலர் கண்டுபிடிக்கக் கூடும்.

உங்களைக் கேவலமாகப் பேசிய ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள். குறைந்தது அப்படிச் செய்யலாம் என்ற எண்ணமாவது உங்களுக்கு வருகிறதா என்று யோசித்துப் பாருங்கள். அப்புறம் ரஜினியை விமர்சிக்கலாம்.

கஷ்டப்படுபவர் எதிரியா நண்பனா என்று பார்ப்பதில்லை ரஜினி... கஷ்டப்படுகிறாரா... சரி அவர்களுக்கு முதலில் கையைக் கொடுப்போம். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்... இதுதான் ரஜினி.

இந்த வரிசையில் இன்னும் எத்தனை எத்தனை நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள்... பாக்கியிருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு... என இளையராஜா சுவாமிகள் (ரஜினி இப்படித்தான் கூப்பிடுவார்!) பாடியது ஒவ்வொரு நாளும் நிஜமாகி வருகிறது.

ஓசியில் ஒரு பிளாக் கிடைக்கிறதே என்று வக்கிரங்களை வாரியிறைக்கும் அசமஞ்சங்கள்தான் முக்கியமாக இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரைப் பற்றி வந்த விமர்சனங்களுக்கு அளவில்லை. நாய் பேயெல்லாம் ஒரு மைக் கிடைத்ததே என்று குரைத்துத் தீர்த்தன, இன்றைய 'சில பிளாக்கர்கள்' போல. அறிவு ஜீவிப் பத்திரிகைகள் அவரை ஒரு ஆட்சியாளராகவே பொருட்படுத்தவில்லை. எம்ஜிஆருக்கு பக்கபலமாக இருந்த தினத்தந்தி பேன்ற பத்திரிகைகளை இவர்கள் எள்ளி நகையாடியது கொஞ்சமல்ல... (அதே தினத்தந்தியில் வரும் செய்திக்கு இன்று கெஜட்டுக்கு சமமான அந்தஸ்து!)

ஆனால் இன்று- இதே அசட்டு அஞ்ஞானிகளும் அரைவேக்காடுகளும் போட்டி போட்டுக் கொண்டு புகழ்ந்து தள்ளுகின்றன. அவரைப் போல ஒரு ஆட்சியாளர் உண்டா... மனிதாபிமானி, பொற்கால ஆட்சி தந்த புரட்சித் தலைவர் என்று போற்றிப் புகழ்கின்றன.
எம்ஜிஆர் பெயர் சொல்லாமல் ஓட்டுக் கேட்கிற தைரியம் இன்றைய கட்சிகளில் யாருக்காவது உண்டா... (இன்னும் பல படிகள் மேலே போய் கருப்பு சிவப்பு பழுப்பு பெயிண்ட் அடித்துக் கொள்கிறார்கள் தங்கள் முகங்களுக்கு!)

அன்றைக்கு செய்தது போல எம்ஜிஆருக்கு எதிராக எதையாவது பேசி ஓட்டுக் கேட்டுப் பார்க்கட்டும் இவர்கள் – திமுக உள்பட- டப்பா டான்ஸாடி விடும்!

ஏனென்றால், மகாபாரதம் சொல்வது போல ‘நல்லவர்களுக்கு காலமே தலை வணங்கும்... காலத்தின் கையிலிருக்கும் சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்’!
http://www.envazhi.com

2 comments:

Enthiran said...

Mr.Vino your write up is very good.I liked each and every word of yours.
You royally slaped on their faces.That too last two paras are just superb.

Vaanathin Keezhe... said...

நன்றி நெப்போலியன்.... www.envazhi.com -க்கும் வாங்க!