Friday, December 5, 2008

ரஜினிபேன்ஸ்.காம் ரத்த தான முகாம்... நாள், இடம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 58-வது பிறந்த நாளையொட்டி ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம் குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இப்போது இதற்கான இடம் மற்றும் இறுதி ஏற்பாடுகள் முடிவாகியுள்ளன.

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ள மவுண்ட் மெடிக்கல் சென்டரில் (முகவரி: 5/66, பட் ரோடு சந்திப்பு, செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை-18).

வருகிற டிசம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமுக்கு டாக்டர் எம்.சச்சிதானந்தன், டாக்டர் சுபாஷிணி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். முகாமுக்காக நமது தளம் வடிவமைத்துள்ள பேனர்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.

உயரிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில் ரத்த தானம் நடைபெற மருத்துவர் குழு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விழா முழுக்க முழுக்க www.rajinifans.com தனது சொந்த முயற்சியில் நடத்துவது. எந்த வித நிதியுதவியும் யாரிடமும் பெறப்படவில்லை. இதுவரை தலைவர் பிறந்த நாளுக்கு அப்படியொரு முயற்சியில் நாம் இறங்கவுமில்லை என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர் பிறந்த நாளை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் www.rajinifans.com முயற்சியில் நீங்களும் கரம் கோர்க்கலாமே...

மேலும் விவரங்களுக்கு:
http://www.rajinifans.com/others/contactus.php

-எஸ்.சங்கர்
www.rajinifans.com

No comments: