மேக்கப்பில் இருந்தாலும் சரி, தாடி, கலைந்த தலைமுடியுடன் இருந்தாலும் சரி, இங்கே நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல ‘உலக அழகர்’தான் அவர்.
ரஜினி ரசிகர் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களும் கூட இப்படித்தான் நினைப்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.
காரணம், ரஜினியின் மனதை இந்த தமிழக மக்கள் ஏற்கெனவே படித்துவிட்டதுதான்.
பல நடிகர்கள் தங்கள் உள்மனசுக்கும் சேர்த்தே மேக்கப் போட்டுக் கொள்கிறார்கள். காரணம் அவர்களது நம்பிக்கையின்மை. இந்த திரைத் தோற்றமும், பிம்பமும் கலைந்துவிட்டால் நம்மை மக்கள் சீண்டுவார்களா என்ற அவநம்பிக்கை அவர்களுக்கு.
ஆனால் ரஜினி அப்படியல்ல.
அவர் பிம்பங்களைத் தாண்டி வெளியில் வந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லாவிட்டால், கதீட்ரல் சாலையின் போக்குவரத்து நெரிசலில் கார் மாட்டிக் கொண்டதும், ஜஸ்ட் காரை விட்டிறங்கி நடந்து போய் பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி கொளுத்தியபடி நிற்பாரா? (ஒரே நிமிடத்தில் அந்தப் பகுதியே கிடுகிடுத்துவிட்டது கூடிய மக்கள் கூட்டத்தைப் பார்த்து. பலர் தங்கள் வாகனங்களை அப்படி ஓரமாகப் போட்டுவிட்டு ரஜினி தரிசனத்துக்கு ஓடிவந்தனர். அதைப் பார்த்துப்
இதோ பரபரப்பான எந்திரன் ஷூட்டிங்குக்கு நடுவில் ரஜினியின் இன்றைய தோற்றம். ரஜினி பேரக் கேட்டாலே புத்தகத்தைக் கொடுத்து ரஜினியிடம் வாழ்த்துப் பெற வந்த காயத்ரியிடம் புத்தகம் பெற்றுக் கொண்ட ரஜினி, புத்தகத்துடன் போஸ் தரும் காட்சி.
தெய்வீகப் புன்னகையய்யா...!
http://www.envazhi.com
No comments:
Post a Comment