Showing posts with label Biography. Show all posts
Showing posts with label Biography. Show all posts

Thursday, December 4, 2008

ரஜினியின் இன்றைய தோற்றம்!

னது வெளித்தோற்றம் பற்றிக் கவலைப்படாத ஒரே நடிகர் உலகில் அநேகமாக சூப்பர் ஸ்டார் ரஜினியாகத்தான் இருக்கும். நேற்று இன்று நாளை என எந்தக் காலமாக இருந்தாலும் ரஜினியின் தோற்றமும் சரி உள்ளமும் சரி... பளீர் வெள்ளை!

மேக்கப்பில் இருந்தாலும் சரி, தாடி, கலைந்த தலைமுடியுடன் இருந்தாலும் சரி, இங்கே நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல ‘உலக அழகர்’தான் அவர்.

ரஜினி ரசிகர் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களும் கூட இப்படித்தான் நினைப்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

காரணம், ரஜினியின் மனதை இந்த தமிழக மக்கள் ஏற்கெனவே படித்துவிட்டதுதான்.

பல நடிகர்கள் தங்கள் உள்மனசுக்கும் சேர்த்தே மேக்கப் போட்டுக் கொள்கிறார்கள். காரணம் அவர்களது நம்பிக்கையின்மை. இந்த திரைத் தோற்றமும், பிம்பமும் கலைந்துவிட்டால் நம்மை மக்கள் சீண்டுவார்களா என்ற அவநம்பிக்கை அவர்களுக்கு.

ஆனால் ரஜினி அப்படியல்ல.

அவர் பிம்பங்களைத் தாண்டி வெளியில் வந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லாவிட்டால், கதீட்ரல் சாலையின் போக்குவரத்து நெரிசலில் கார் மாட்டிக் கொண்டதும், ஜஸ்ட் காரை விட்டிறங்கி நடந்து போய் பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி கொளுத்தியபடி நிற்பாரா? (ஒரே நிமிடத்தில் அந்தப் பகுதியே கிடுகிடுத்துவிட்டது கூடிய மக்கள் கூட்டத்தைப் பார்த்து. பலர் தங்கள் வாகனங்களை அப்படி ஓரமாகப் போட்டுவிட்டு ரஜினி தரிசனத்துக்கு ஓடிவந்தனர். அதைப் பார்த்துப் பதறிப்போய் ரஜினியை போலீசார் கெஞ்சிய கெஞ்சல் இருக்கிறதே... காணக் கண் இரண்டு நிச்சயம் போதாது!)

இதோ பரபரப்பான எந்திரன் ஷூட்டிங்குக்கு நடுவில் ரஜினியின் இன்றைய தோற்றம். ரஜினி பேரக் கேட்டாலே புத்தகத்தைக் கொடுத்து ரஜினியிடம் வாழ்த்துப் பெற வந்த காயத்ரியிடம் புத்தகம் பெற்றுக் கொண்ட ரஜினி, புத்தகத்துடன் போஸ் தரும் காட்சி.

தெய்வீகப் புன்னகையய்யா...!

http://www.envazhi.com

Monday, December 1, 2008

தலைமுறைகளைக் கடந்த சாதனையாளர் ரஜினி - கனிமொழி

மிழில் இருவருக்கு மட்டும்தான் அனிமேஷன் எனப்படும் கார்ட்டூன் படங்கள் வெளிவரவுள்ளன. ஒருவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அடுத்தது ரஜினி அவர்கள். இதற்குக் காரணம் குழந்தைகளுக்கும் பிடித்த நாயகர்களாக, அனைத்துத் தரப்பினரையும் ஆகர்ஷிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்கள் திகழ்வதுதான், என்றார் கவிஞர் கனிமொழி எம்பி.

ரஜினியின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட அவர் பேசியதிலிருந்து:

தலைமுறைகளைக் கடந்தும் எப்படி ரஜினிக்கு மட்டும் இன்னமும் அதே ரசிகர் கூட்டமும், ஈர்ப்பு சக்தியும் உள்ளது என்ர ஆச்சரியம் பலருக்கு உண்டு. குழந்தைகளைக் கவரும் விதத்தில் நடிப்பது சாதாரண விஷயமல்ல. குழந்தைகளின் உலகில் அவர்களே நீதிபதிகள். அவர்கள் யாருடைய தீர்ப்பையும் ஏற்பவர்கள் அல்ல. தங்களுக்குப் பிடித்தவற்றை தாங்களே தீர்மானிக்கிறார்கள்.

அந்தக் குழைந்தைகளின் மனம் கவர்ந்த ஹீரோக்கள் என்றால் இங்கு இருவர்தான், ஒருவர் மக்கள்திலகம் எம்ஜிஆர். அடுத்தது ரஜினி அவர்கள். தமிழில் இந்த இருவருக்கு மட்டும்தான் அனிமேஷன் எனப்படும் கார்ட்டூன் படங்கள் வெளிவரவுள்ளன.

இதற்குக் காரணம் குழந்தைகளுக்கும் பிடித்த நாயகர்களாக, அனைத்துத் தரப்பினரையும் ஆகர்ஷிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்கள் திகழ்வதுதான்.

என் தலைமுறையிலும் மிகச் சிறந்த நடிகராக ரஜினி அவர்கள் திகழ்ந்தார்கள். எனக்கு முந்தைய தலைமுறை, அதாவது அவர் படம் நடிக்க ஆரம்பித்த வருடங்களில், ஆரம்ப படத்திலேயே அனைவரையும் வசியப்படுத்தினார்கள். இதோ எனக்கு அடுத்த இரு தலைமுறைக்கும் அவர்தான் புகழ்பெற்ற நாயகனாகத் திகழ்கிறார். இது சாதாரண விஷயமல்ல.

பத்து ஆண்டுகளில் நான்கு படங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறார். ஆனால் மக்களை அப்படியே தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்ற ஆச்சர்யம் பலருக்கும் இருக்கிறது. அதுகுறித்து இந்தப் புத்தகத்தில் கூட ஒருவர் ஆச்சரித்துடன் குறிப்பி்டுகிறார்.

நான் இங்கே கேட்டுக் கொள்ள விரும்புவது, ரஜினி அவர்களைப் பற்றி இன்னும் பல பரிமாணங்கலில் நிறைய புத்தகங்கள் நடுநிலைப் பார்வையுடன் வரவேண்டும் என்பதுதான். அப்போதுதான் அவரைப் பற்றியும் அவரது கடின உழைப்பு குறித்தும் மக்கள் புரிந்து கொள்வார்கள். காலத்தையும் மக்களின் ரசனையையும் பிரதிபலிக்கிற ஒரு முக்கிய ஆவணமாக அவை திகழும், என்றார் கனிமொழி.