தமிழில் இருவருக்கு மட்டும்தான் அனிமேஷன் எனப்படும் கார்ட்டூன் படங்கள் வெளிவரவுள்ளன. ஒருவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அடுத்தது ரஜினி அவர்கள். இதற்குக் காரணம் குழந்தைகளுக்கும் பிடித்த நாயகர்களாக, அனைத்துத் தரப்பினரையும் ஆகர்ஷிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்கள் திகழ்வதுதான், என்றார் கவிஞர் கனிமொழி எம்பி.
ரஜினியின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட அவர் பேசியதிலிருந்து:
தலைமுறைகளைக் கடந்தும் எப்படி ரஜினிக்கு மட்டும் இன்னமும் அதே ரசிகர் கூட்டமும், ஈர்ப்பு சக்தியும் உள்ளது என்ர ஆச்சரியம் பலருக்கு உண்டு. குழந்தைகளைக் கவரும் விதத்தில் நடிப்பது சாதாரண விஷயமல்ல. குழந்தைகளின் உலகில் அவர்களே நீதிபதிகள். அவர்கள் யாருடைய தீர்ப்பையும் ஏற்பவர்கள் அல்ல. தங்களுக்குப் பிடித்தவற்றை தாங்களே தீர்மானிக்கிறார்கள்.
அந்தக் குழைந்தைகளின் மனம் கவர்ந்த ஹீரோக்கள் என்றால் இங்கு இருவர்தான், ஒருவர் மக்கள்திலகம் எம்ஜிஆர். அடுத்தது ரஜினி அவர்கள். தமிழில் இந்த இருவருக்கு மட்டும்தான் அனிமேஷன் எனப்படும் கார்ட்டூன் படங்கள் வெளிவரவுள்ளன.
இதற்குக் காரணம் குழந்தைகளுக்கும் பிடித்த நாயகர்களாக, அனைத்துத் தரப்பினரையும் ஆகர்ஷிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்கள் திகழ்வதுதான்.
என் தலைமுறையிலும் மிகச் சிறந்த நடிகராக ரஜினி அவர்கள் திகழ்ந்தார்கள். எனக்கு முந்தைய தலைமுறை, அதாவது அவர் படம் நடிக்க ஆரம்பித்த வருடங்களில், ஆரம்ப படத்திலேயே அனைவரையும் வசியப்படுத்தினார்கள். இதோ எனக்கு அடுத்த இரு தலைமுறைக்கும் அவர்தான் புகழ்பெற்ற நாயகனாகத் திகழ்கிறார். இது சாதாரண விஷயமல்ல.
பத்து ஆண்டுகளில் நான்கு படங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறார். ஆனால் மக்களை அப்படியே தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்ற ஆச்சர்யம் பலருக்கும் இருக்கிறது. அதுகுறித்து இந்தப் புத்தகத்தில் கூட ஒருவர் ஆச்சரித்துடன் குறிப்பி்டுகிறார்.
நான் இங்கே கேட்டுக் கொள்ள விரும்புவது, ரஜினி அவர்களைப் பற்றி இன்னும் பல பரிமாணங்கலில் நிறைய புத்தகங்கள் நடுநிலைப் பார்வையுடன் வரவேண்டும் என்பதுதான். அப்போதுதான் அவரைப் பற்றியும் அவரது கடின உழைப்பு குறித்தும் மக்கள் புரிந்து கொள்வார்கள். காலத்தையும் மக்களின் ரசனையையும் பிரதிபலிக்கிற ஒரு முக்கிய ஆவணமாக அவை திகழும், என்றார் கனிமொழி.
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
No comments:
Post a Comment