25 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்புத் துறையில் இருந்தாலும் இன்னும் சலிக்காமல் தான் நடிப்பது எப்படி? என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினியே கூறியுள்ளார்.இதுகுறித்து இயக்குநர் லிங்குசாமி, தனது சொந்தத் தயாரிப்பான பட்டாளம் பட ஆடியோ ரிலீஸ் விழாவில் இப்படிக் கூறினார்:
சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஒரு Passion இருக்க வேண்டும். அதே போல இலக்கு முக்கியம்.
நான் ஒரு முறை ரஜினிகாந்திடம் பேசிக்கொண்டிருந்தபோது, சுமார் 25 வருடங்களாக திரையுலகில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இளமையும் வசீகரமும் அப்படியே இருக்கிறது. நடிப்பில் உங்களுக்கு சலிப்பே வரவில்லையா? என்று கேட்டேன்.
அதற்கு அவர், 1992-லிருந்து ஒவ்வொரு படம் நடிக்கும்போதும், இதுதான் நம்ம முதலும் கடைசியுமான படம் என்று நினைப்பேன்.

ஆனால் காலம் என்னை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வந்து விட்டது என்று சொன்னார். ரஜினி சார் ஒரு நிஜமான லெஜன்ட்.
ஒவ்வொரு படத்தையும் தனது கடைசி படமாக நினைத்து உழைக்க எந்த அளவு மனப்பக்குவம் வேண்டும் தெரியுமா... நிச்சயம் வேறு யாருக்கும் இந்தப் பக்குவம் வராது. அதனால்தான் அவர் ஒரு சகாப்தமாகப் பார்க்கப்படுகிறார். புதிய தலைமுறை படைப்பாளிகள் இதை மனதில் கொள்ள வேண்டும், என்றார் லிங்குசாமி.
http://www.envazhi.com




No comments:
Post a Comment