ஒரு இடத்தில் ஜெயித்ததற்கே இந்த ஆளு (விஜயகாந்த்) இந்த பாடுபடுத்துறாரே... நாளைக்கு பத்து இடத்தில் ஜெயிச்சிட்டா இந்த நாடு என்னாகுமோன்னு பயமா இருக்குண்ணே... அவருக்கு மட்டும்தானா மக்கள் செல்வாக்கு... எனக்கும்தாண்ணே இருக்கு. நான் நின்னா ஓட்டுப்போட மாட்டாங்களா நம்ம மக்கள்... இப்ப சொல்றண்ணே... அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். நானா, விஜயகாந்த்தா பார்த்துடுவோம்ணே...
-விஜய்காந்த் தொண்டர்களின் வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட வடிவேலு அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது.
நடிகர் வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடுகளும், அதுதொடர்பான மோதல்களும் இருந்து வருவது தெரியும்தானே...
சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு, அதில் வடிவேலு கடுமையாக தாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸில் விஜயகாந்த் மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இன்று வடிவேலு சாட்சியம் அளிக்கவுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 50-க்கும் மேற்பட்டோர் 20-க்கும் மேற்பட்ட பைக்குகள், ஆட்டோக்களில் சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டுக்கு வந்தனர்.
பின்னர் வடிவேலு வீட்டின் மீது கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டனர். வீடு மற்றும் அலுவலகம் மீது சரமாரியாக பெரிய பெரிய கற்களை வீசி அடித்ததில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், வீட்டின் வரவேற்பரையில் இருந்த ஷோகேஸ் ஆகியவை உடைந்து சிதறின.
வீட்டுக்குள் இருந்தவர்கள் மீதும் கற்கள் விழுந்ததில் வடிவேலு வீட்டினரில் ஒருவர் காயமடைந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக வடிவேலு உள்ளிட்டோர் உயிர் தப்பினர்.
இந்த கொலை வெறித் தாக்குலைப் பார்த்து அந்த தெருவே பரபரப்பாகியது. அனைவரும் தெருவில் கூடிவிட்டனர். சிறிது நேர தாக்குதலுக்குப் பின்னர் அந்த கும்பல் வந்த வண்டிகளில் திரும்பி விட்டது.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.
'எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறார்?' நடந்த சம்பவம் குறித்து வடிவேலு இப்படிக் கூறுகிறார்:
20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். வந்தவுடன் கற்களை எடுத்து வீட்டின் மீதும், அலுவலகம் மீதும் சரமாரியாக வீசினர். தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தனர். பக்கத்து வீடுகளிலும் போய் கற்கள் விழுந்தன.
என் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயா என்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கினர்.
நான் ஒரு நகைச்சுவை நடிகன். என்னை தாக்கி விட்டு எந்தக் கோட்டையை இவர் பிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. என்னை அடித்துதான் இவர் கோட்டையைப் பிடிக்க வேண்டுமா? அந்த அளவு வீக்கான பார்ட்டியா இவரு...
ஒரு இடத்தில்தான் ஜெயித்திருக்கிறார். அதற்கே இப்படியா? என்னை எதற்காக குறி வைக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே என்னை தாக்கி வருகிறார்கள். பலமுறை கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இதையெல்லாம் நான் வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்.
ஒரே எதிரி... அது விஜய்காந்த்தான்! நான் காமெடி நடிகன். ரவுடி அல்ல. ஜனங்களை சிரிக்க வைப்பது மட்டுமே எனது தொழில். ஜனங்கள்தான் எனது கடவுள். கல் வீசியவர்களுக்கும், அதைத் தூண்டியவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.
எனக்கு இந்த உலகிலேயே ஒரேயொரு எதிரிதான் இருக்கிறார். வேறு யாரும் எனக்கு எதிரிகள் இல்லை. அஜீத் படத்தை வைத்திருந்தார்கள் என்று கூறுகிறார்கள். அது திசை திருப்பும் செயல்.
நானா, விஜயகாந்த்தா பார்த்து விடுவோம்ணே!விஜயகாந்த்தான் என்னைக் கொலை செய்ய ஆளை அனுப்பியுள்ளார். கடந்த ஒரு வருடமாகவே இதை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
மக்கள் செல்வாக்கு என்று நீ கூறுவாயானால் எனக்கும்தான் மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அடுத்த தேர்தலில் நீ எங்கே வேண்டுமானாலும் போட்டியிடு. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். மக்கள் செல்வாக்கு எனக்கா, விஜயகாந்த்துக்கா என்று பார்த்து விடுவோம்ணே...
நீ ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறாய். நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். அத்தனை கட்சிகளின் ஆதரவுடனும் உன்னை எதிர்த்துப் போட்டியிடுவேன். பார்த்து விடலாம்.
எம்ஜிஆர் பேரச் சொல்லக்கூட தகுதியில்ல!என்னை ஆள் வைத்து அடிச்சீல்ல, உனக்கு எந்தத் தகுதியும் இல்லை. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். அதில் நீ ஜெயித்து விட்டால் இந்த தமிழ் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்.
ஒரு இடத்தில் ஜெயிச்சதுக்கே இந்தாளு இந்த பாடு படுத்துறாரே..., நாளைக்கு பத்து இடத்தில் ஜெயிச்சுட்டா இந்த நாடு என்னாகுமோன்னு பயமா இருக்குண்ணே...
இந்த லட்சணத்துல இந்தாளு எம்ஜிஆர் பெயரையெல்லாம் எந்த தகுதில உபயோகப்படுத்துறார்னே தெரியலயே...உண்மையில அந்த புரட்சித் தலைவரோட பெயரைச் சொல்லக்கூட இந்தாளுக்குத் தகுதியில்ல!!”
5 comments:
ஏன் சார், எதுக்கு இந்த கொலைவெறி விஜயகாந்த் மேலே?
அடுத்தடுத்து இரண்டு பதிவா?
உண்மையை சொல்லுங்க,ரஜினி இறங்க மாட்டாரா இந்த அரசியல் களத்திலேனு நீங்களெல்லாம் காத்திகிட்டே இருக்க, துணிவா இறங்குனதோட மட்டுமல்லாமல் நின்னு ஆடுராரேனு விஜயகாந்த் மேலே காண்டுதானே உங்களுக்கு.
;-)))
துணிவு பெருசில்லை. விஜயகாந்துக்கு கண் பணம் பதவி. இவருடன் இருப்பவர்களுக்கும் அதுதான். நல்லது செய்வதற்கு அரசியலுக்கு வந்து தான் செய்யணும் என்பது இல்லை . நம் சூப்பர் ஸ்டார் நல்லது செய்கிறார். அவர் அரசியலுக்கு வரணும் என்பது கட்டாயம் இல்லை. அவரை போன்ற நல்லவர்கள் வந்தால் நாடு நலம் பெரும்.
நன்றி கரிகாலன்...
தயவு செய்து என் எழுத்தைக் கொச்சைப்படுத்த முயற்சிக்காதீர்கள்... இது காசுக்காக எழுதப்படுவதல்ல...
நல்ல நோக்கத்தில், ஒரு நல்ல நட்பு வாசகர் வட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்படுவது.
ஒரு நல்ல மனிதரை அரசியலுக்கு வா வா என அழைப்பதும், இருக்கிற தீய சக்தியை விரட்ட முயற்சிப்பதும் இயல்புதானே...
நின்னு ஆடுறான் என்பதற்காக ஒரு மோசமான தீவிரவாதியின் பக்கம் நிற்பீர்களா...
இந்த வலைதளத்தில் நான் கடுமையாக விமர்சிப்பவர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் நான் நன்கு அறிவேன்.
விஜய்காந்தின் இயல்பு உங்களுக்கு இப்போது புரியாது. புரியும் காலம் வரும்போது நிச்சயம் வருந்துவீர்கள் நண்பா...
நாலு வரின்னாலும் நச்சுன்னு சொன்னீங்க அனானி... வருகைக்கு நன்றி.
Post a Comment