ஒரு பசுவைக் கொன்ற பாவம் செய்த தன் மகனையே தேர்க் காலில் இட்டுக் கொன்று நீதியை நிலைநாட்டிய பரம்பரையாக்கும் நாங்கள்... என மார்தட்டிக் கொள்ளும் மறத் தமிழர்களுக்கு...
சில தினங்களுக்கு முன் மன்னிப்பு... வருத்தம் - இரண்டும் துவைதம் அல்ல... அத்வைதைமே... அதாங்க... இரண்டும் ஒன்றே என்று வாதிட்டு தங்கள் எழுத்து வல்லமையை பிரஸ்தாபித்த அஞ்ஞானிகள், ஆவிகள், ஜூவிகள் போன்ற பாவிகளை இன்னும் மதிக்கிற தமிழ் பெருங்குடி மக்களே...
நேற்று விகடன் போட்டிருக்கும் கூழைக் கும்பிடுக்கு அர்த்தம் என்ன... மன்னிப்பா... வருத்தமா.. அல்லது அவர்கள் பாணியில் இரண்டும் ஒன்றுதானா...?
இதோ ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ‘மன்னிப்பு’ மடல்...
கடந்த 10.9.08-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழ் கவர் ஸ்டோரியில் இடம்பெற்ற தகவல்களை முற்றிலுமாக மறுத்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா சார்பாக அவருடைய வழக்கறிஞர்
நவநீதகிருஷ்ணன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
‘குறிப்பிட்ட அந்தச் செய்தி, வரிக்கு வரி உண்மைக்குப் புறம்பானது… உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது’ என்பதோடு, ‘அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவி என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி கட்சிக்காக வகுத்துள்ள விதிமுறைகளின்படியே நிரப்பப்படுகிறது. அதன் தேர்தல் நடைமுறையில் யாராலும் தலையிட்டு தவறான ஆதிக்கம் செலுத்த இயலாது’ என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். மற்றபடி, ஜூ.வி. ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்த தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம்.
குறிப்பிட்ட அந்தச் செய்தி, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர்ஜெயலலிதா ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டவுடன், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று, தங்கள் நம்பகத்தன்மையையே (இருந்தால்தானே... என்கிறீர்களா!) அடகு வைத்து மன்னிப்புக் கேட்டுள்ளது விகடன் குழுமம். ரிப்போர்ட்டரும் இந்த இதழில் கேட்டுவிடும். அவர்களுக்குத் தெரிந்தது அது ஒன்றுதானே...
ஏதாவது சந்துமுனையில் நாலுபேர் பேசிக்கொள்ளும் புரளிகளைக் கூட கவர் ஸ்டோரியாக்குவதுதான் விகடன், குமுதத்துக்குத் தெரிந்த பத்திரிகை தர்மம்.
உதாரணம் பாருங்கள்:
பிரதமர் மன்மோகன் சிங், என்னை ஏமாற்றிவிட்டார், என யாராவது ஊர் பேர் தெரியாத ஒரு பெண் கூறினாலும் அதன் நம்பத் தன்மை, அதற்கான குறைந்தபட்ச ஆதாரங்கள் எதைப்பற்றியும் விசாரிக்காமல் ‘பிரதமர் ஏமாற்றினாரா... பெண் பகீர் புகார்!’ என அப்படியே பிரசுரிப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த புலனாய்வு ஜர்னலிஸம்.
அடுத்த இதழிலேயே ‘நாம் விசாரித்த வகையில் இதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். இந்த இதழ் அச்சேறும் வரை பதில் கிடைக்கவில்லை...’ என்று கூறி மங்களம் பாடிவிடுவார்கள். இரண்டு இதழ்களுக்கு பரபரப்பாக மேட்டர் தேற்றிய லாபம் அவர்களுக்கு.
சற்றே அலசிப் பார்த்தால் அவர்களது ஒவ்வொரு பரபரப்பு கவர் ஸ்டோரிக்குப் பின்னாலும் இப்படிப்பட்ட அசிங்க உண்மைகள்தான் ஒளிந்து கிடக்கும்.
எனவே இவற்றைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் மக்கள்தான் விழிப்போடு செயல்பட வேண்டும்.
எட்டு ரூபாய் செலவு பண்ணி இப்படிப்பட்ட பொய் பத்திரிகைகளை வாங்கிப் படிக்க வேண்டுமா...
இவர்கள் ஒரு பொய்ச் செய்தியைப் போட்டபிறகு சம்பந்தப்பட்டவர்கள் அதை மறுக்கும்வரை, மக்கள் உண்மை என்றே நம்ப வேண்டிய கட்டாயம். கேஸ் போடுவேன், கோர்ட்டுக்குப் போய் கோடிகளில் நஷ்ட ஈடு கேட்பேன், என்று யாராவது நோட்டீஸ் விட்டால் வாலைச் சுருட்டி பையில் போட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்கும் படலத்தில் இறங்கிவிடுவார்கள்.
ரஜினி போன்ற நல்ல மனிதர்கள், இந்த மாதிரி மூன்றாம் தர பத்திரிகைகளுடன் மோதுவதைக் கூட விரும்புவதில்லை. இதனால், ரஜினி போன்றவர்களைப் பற்றி இந்தப் பத்திரிகைகள் கூறுவதை மக்களும் சில நேரங்களில் நம்பிவிடுகிறார்கள்.
இவர்களாவது மன்னிப்புக் கேட்கிறார்கள்... மாய்ந்து மாய்ந்து அடுத்த சில வாரங்களுக்கு துதி பாடுகிறார்கள், சம்பந்தப்பட்டவர்களைக் நேரில் ஆளனுப்பி சமாதானமும் செய்கிறார்கள்.
ஆனால் ரஜினி இப்படியெல்லாம் செய்யவில்லையே... மனதார.... நேர்மையாக தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் கூறினார். அவ்வளவே... ஆனால் அதை எந்தளவு முடியுமோ அந்த அளவு கொச்சைப்படுத்தி அவருக்கு களங்கம் உண்டாக்க முயன்ற இந்தப் பொய்யர்களின் முகமூடி ஒரே மாதத்தில் கிழிந்துவிட்டதே!
எங்கே அந்த போலி சுயமரியாதை பேசும் அஞ்ஞானிகள்?
12 comments:
One of the best posts,I have read/seen
Thank You!
Why Rajini doesn't even bother to reply to these Yellow mags?
1. He has learnt to treat both adulation and opposition in the same way, and hence able to ignore them and not get perturbed about the consequences.
2. He doesn't want to throw stones at human excreta, which is what these Yellow magazines have become nowadays. I don't think JV or AV or Yellow Reporter mags are all even worthy of being used to remove pee from the toilet.
Now, with this open apology, Jaundice Vikatan has proved that whatever it is reporting as cover story or other stories are all FALSE STORIES.
If people still want to read & believe what these mags report, then it shows their calibre only.
Arun
Salutes to you Mr.Vino. please send this to rajinifans.com and onlyrajini.com and request them to publish...
Taj T
ive done something here to have you a few cents!
ive done something here to have you a few cents!
Super Post.. I like it
A good post. Unmaiya sonneenga.
அட்ரா....அட்ரா....அட்ரா....அருமையான பதிவு...!!
நானும் என் பங்குக்கு கேட்டு இருக்கிறேன் :-)
http://girirajnet.blogspot.com/2008/09/blog-post_12.html
நன்றி நண்பர்களே...
அருமையான பதிவு! சரியான செருப்படி!! மானங்கெட்ட பத்திரிகைகள்! தலைப்பை "கொடிகட்டிப் பறக்கிறது தமிழ் பத்திரிகைகளின் நியாயம்! என்று மாற்றினால் இன்னும் பொருத்தமாக உருக்கும். இப்படியே இருந்தாலும் தவறில்லை ஏனெனில் அது இந்த (PSEUDO) போலித்தமிழர்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த குமுதத்தில் வாந்த்தியெடுக்கும் கெ.பு.ம, நா.கு.ம, தெ.ம, எ.பொ.ம, க.ஒ.பி. எ.க.நா.ம என்கிற கேனை ஒரு பதிவு போடுங்களென். அந்த ஈனப்பிறவிய தமிழ் அகராதியிலிருந்து ( அல்லது இல்லாத) எந்த கெட்ட வார்த்தைய சொல்லி திட்டினாலும் அது குறைவாகத்தான் இருக்கும்.
Post a Comment