Monday, September 22, 2008

இதற்காகத்தானே ஆசைப்பட்டீர்கள் தமிழ்ப் பெருங்குடி மக்களே...!


விஜயகாந்த் நடிப்பு அல்லது அரசியல் குறித்து இதுவரை நமக்கு பெரிதாக எந்த அபிப்பிராயமும் இருந்ததில்லை. இரு கழகங்களின் மீதுள்ள வெறுப்பு, ரஜினி வருவார் என்ற நம்பிக்கை தாமதமாகிக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட சலிப்பு போன்றவைதான் மக்களுக்கு அவர் மீதான ஆர்வமாக மாறியிருக்கிறது என்பதே நடுநிலையாளர்கள் கருத்து (அது யார் நடுநிலையாளர்கள் என்கிறீர்களா... ஒட்டுப் போடக் கூட போகாமல் ஏஸி அறைக்குள் அல்லது மரத்தடிகளில் பஞ்சாயத்து பேசும் பார்ட்டிகள்!).

களத்தில் இறங்கி ஓட்டுப் போடும் மக்களின் நாடித் துடிப்பை அறிய ஊர் ஊராய்ச் சுற்றும் என்னைப் போன்றவர்கள் பெரும்பாலானோரின் கருத்து இதற்கும் ஒருபடி கீழ்... தினமலர், சன்டிவி, தினகரன், மாலைமுரசு போன்றவை கொஞ்சம் மூடிக்கிட்டிருந்தா இந்த ஆள் இருக்கிற இடமே தெரியாது..., என்பதே அந்த அபிப்பிராயம்.

ஆனால் சில பத்திரிகைகளும், கருத்துப் பரப்பிகளும் விஜய்காந்த்தான் இந்த மாநிலத்துக்கு நல்ல மாற்று என்பது போன்ற விஷ வித்தை விதைக்க முயற்சித்து வருகிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது... கலைஞரை விட மோசமான குடும்ப அரசியல், ஜெயலலிதாவை விட கொடுமையான அதிகார வெறி இரண்டுக்கும் சொந்தக்காரராகத்தான் விஜய்காந்த் திகழ்வார் என்பது.

விஜய்காந்த் சமீபத்திய ஒரு பிரஸ்மீட்டில் சொன்னது:

சார், உங்க கொள்கை என்ன?

மக்கள் நல்லா வாழணும்... இதாங்க என் கொள்கை..!

அதான் எப்படி நல்லா வாழ்வாங்க... என்ன திட்டமிருக்கு?

அதெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் பார்த்துக்கிடுவோம்...

கட்சியில உங்க மனைவி, மச்சினன் ஆதிக்கம் அதிகமிருக்கே...

நீங்க திமுக ஆளா...

ஏன்... நடுநிலையாளர் யாரும் இப்படிக் கேட்க மாட்டார்களா...

பாருங்க... என் மனைவிக்கு, மச்சின்னுக்கு என் மேல அளவு கடந்த பாசம், அக்கறை இருக்கு... அப்படிப்பட்டவங்க என் கட்சி மேலயும் அதே அளவு அக்கறை காட்றதுல உங்களுக்கு என்ன கஷ்டம்!

அடக் கடவுளே... இப்படி ஒரு ஆளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்க்கவும் நாலுபேர் இருக்கிறார்களே என்பதுதான் வேதனை.

இந்த நபருக்காக திமுகவை, பாமகவை திட்டுவது எவ்வளவு தவறானது பாருங்கள். கலைஞராவது, தன் கடைசி காலம் நெருங்கிவிட்டதை அறிந்தும், தன் மகனுக்கு முடி சூட்ட முடியாமல், எதிரிகள் விமர்சிப்பார்களே என்ற தயக்கத்தில் அமைதி காக்கிறார். ராமதாஸ் இன்னும் கூட பதவியை நேரடியாக அனுபவிக்காமல் தனக்கு வேண்டப்பட்ட, குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுக்கிறார்.

ஆனால் இந்த விஜய்காந்துக்கு எந்த பொது நல நோக்கமும் கிடையாது. அவரது ஒரே குறி, பதவி. ஒரு வேளை தப்பித் தவறி கிடைத்துவிட்டால், அதை மனைவி, மச்சான் கையில் ஒப்படைத்துவிட்டு குனியமுத்தூர் தோப்பில் குறிகேட்டபடி உட்கார்ந்துவிடுவார்.

ஆண்டாள் அழகர் கல்லூரி மாதிரி... ‘பிரமலதா - சுதீஷ் தமிழ்நாடு அரசு’ என்ற நிறுவனத்தை உருவாக்கவே அவரும் அவர் மனைவியும் பேராசைப் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் உள்ளடி வேலைகள் பலவற்றில் இறங்கிக் கொண்டிருக்கிறார் விஜய்காந்த்.

இது ஒரு பக்கமிருக்கட்டும்...

இவரது ஆட்களுக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை இருக்கிறதே... அது ‘பிரிட்டிஷ் பிரச்சினை’யாகிவிட்டது இப்போது!

இருவர் வீடும் ஒரே தெருவில், அதுவும் எதிரெதிரில்தான் அமைந்திருக்கிறது.
வடிவேலு தன் படங்களில் தொடர்ந்து நடிக்க மறுப்பது ஒரு பக்கம் கோபமென்றால், ‘பெரிய தலைவராகி’விட்ட பின்னும் தன்னிடம் பணிய மறுப்பதில் கட்டுக்கடங்காத கோபம் விஜய்காந்துக்கும் அவர் மச்சான் சுதீஷுக்கும்.

இந்தக் கோபம்தான் வடிவேலு மற்றும் விஜய்காந்த் ஆதரவாளர்களிடையே பெரும் மோதலாகி, இப்போது விஜய்காந்த் ஆட்கள் வடிவேலு வீட்டுக்குள் நள்ளிரவில் கல்லெறியும் கேவலம் வரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே ஏற்பட்ட பழைய மோதல் கேஸே இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது அதற்குத்தான் நாளை சாட்சி சொல்ல கோர்ட்டுக்குப் போகத் தயாராக இருந்தார் வடிவேலு.
இதைத் தடுக்க சினிமா பாணியில் ஒரு நாள் முன்பே கல்லெறிந்து மிரட்டியிருப்பதாக வடிவேலு கூறியிருக்கிறார்.

‘என்னைப் பணிய வைக்க அவரும் (விஜய்காந்த்), அவரோட ஆட்களும் எவ்வளவோ பண்ணிட்டாய்ங்க... ஆனா நான் என் பாட்டுக்கு வேலைய பார்த்துக்கிட்டுப் போயிட்டே இருக்கேன். இப்ப கல்லக் கொண்டெறியற லெவலுக்கு வந்திருக்காய்ங்க... இந்தக் காமெடியனோட மோதி கோட்டைக்குப் போயிடலாம்னு கனவு காணுறாரே... எவ்வளவு கேவலம் பாருங்க..., என்கிறார் வடிவேலு. காமெடியானாக இருந்தாலும் அவர் வார்த்தைகளில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளன பாருங்கள்!

இப்போது வடிவேலு கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜய்காந்த் உள்ளிட்ட 30 பேர் பேர் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். இதில் விஜய்காந்த் கைதாகவும் வாய்ப்பிருக்கிறது.

உடனே கலைஞர் அரசு பழிவாங்குவதாக விஜய்காந்த் சீன் கிரியேட் பண்ணும் வாய்ப்பும் ஏராளமிருக்கிறது. இதை வைத்தே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அவர் மனைவி மந்திரம் ஓதி, கேப்டனை (இதென்ன படிச்சி வாங்கின பட்டமா... இல்ல மிலிட்டரில டப்பு டப்புனு சுட்டு வாங்கின ரேங்கா...!) களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

இதையெல்லாம் யோசிக்க ஏது நம்மாளுங்களுக்கு நேரம்... இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள், எம்ஜிஆர் பெயரை தவறாகப் பிரயோகிக்கும் கறுப்பு ஆடுகள் வரவேண்டும் என்பதற்காகத்தானே அவர்களும் காத்துக் கிடந்தார்கள்... வேணும்... நல்லா வேணும்!

16 comments:

Anonymous said...

Sariyana soodu. Our people should know about the background of the candidates and then vote for them.

Anonymous said...

aama!vote vangikkaka tasmak bargal, TV serial moolam moolai malungadikapatta intha kailagatha tamilgalukku Ini varum aatchi nalla padi valzhi nadathha thaan thayaaraanlum, makkal thayaragavendum endru kavalaipadum rajiniyai eppadi purinthu kolla mudiyathu. arasiyal viyaparamaaki romba nallaagirtathu, SS annamalaiyil sonnathu pol, Arasiyal puntithamaaga illai, ithu oru pangu sandhai viyabaram. VK pondra konjam kooda nithaanam illatha, pothu makkal mun than seyalalarai adithathu ippodu eththanai perukku gnapagathil irukkiratho enna seivathu nalluku oru serialil yaravathu yaraiavathu adithukondirugiraargal, aaga Arasi-yil radhika aranjathila thapillai endru karpanaiyil moolgi kidakkum intha Tamil samoogam than thalaikku kollivaithu romba naalaagirathu.

Unknown said...

100% correct!

Dr. சாரதி said...

நியாயமான பதிவு, தமிழ்நாட்டு
மக்கள் என்றுதான் புரிந்துகொள்வார்களோ?

Vaanathin Keezhe... said...

நன்றி நண்பர்களே... நமது கவலையே, கலைஞர் - ஜெயா மீதான வெறுப்பு இந்தாளுக்கு வாக்குகளாக மாறிவிடக் கூடாதே என்பதுதான். என்னைப் போன்றவர்களுக்கு இவரை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு அதிகம். நிஜ முகம் தெரிகிறது. அது தெரியாத சாதாரண மக்கள் இப்போது ஓட்டுப் போட்டுவிட்டு, குத்துதே குடையுதேன்னு புலம்பாம இருக்கணும்!

தமிழன் said...

இவர் பத்து வருடங்களுக்கு முன் மூப்பானர் மற்றும் கலைஞர் உடன் பழகிய போதே அனைவருக்கும் தெரியும். தன்னை ரெண்டாவது எம் ஜி ஆர் ஆக இவர் காட்ட இப்போது இல்லை அப்போதே முயன்றார். அப்போது இவர் நல்ல எண்ணத்தில் செய்கிறார் என்று நினைத்தனர்.இவர் அடிக்க ஆள் அனுப்பவில்லை என்றாலும் தன் கட்சிகாரர்களை இப்போதே கட்டுப்படுத்த முடியாதவர் ஆட்சி வந்து என்ன கிழிக்க போகிறார்.

தமிழன் said...

இவர் பத்து வருடங்களுக்கு முன் மூப்பானர் மற்றும் கலைஞர் உடன் பழகிய போதே அனைவருக்கும் தெரியும். தன்னை ரெண்டாவது எம் ஜி ஆர் ஆக இவர் காட்ட இப்போது இல்லை அப்போதே முயன்றார். அப்போது இவர் நல்ல எண்ணத்தில் செய்கிறார் என்று நினைத்தனர்.இவர் அடிக்க ஆள் அனுப்பவில்லை என்றாலும் தன் கட்சிகாரர்களை இப்போதே கட்டுப்படுத்த முடியாதவர் ஆட்சி வந்து என்ன கிழிக்க போகிறார்.

Vaanathin Keezhe... said...

வடிவேலு பேட்டியைப் படியுங்கள்... இந்த விஜய்காந்தின் லட்சணம் புரிந்துவிடும்...
கருத்துக்கு நன்றி நண்பரே!

Anonymous said...

you r 100% correct.today i saw the press meet of vijaykanth.he is talking like pamaran.for every question he only says attacking vadivels house is a drama created by kalaignar and he gave a lot of unnecessary statements like mananoyali.pavam tamilaga makkal.

Unknown said...

Hope the general public understand's this man's true intentions.

Btw, thanks for the posting.

Vaanathin Keezhe... said...

நன்றி சரத்

RATHNESH said...

உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் விஜய்காந்த் மேலே வருவது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகி வருகிறது என்பதும் கவலைக்குரிய நிஜம்.

Anonymous said...

neenga DMK va

Tech Shankar said...

Congrats Dear Dude

Vaanathin Keezhe... said...

THANKS FRIENDS!

Anonymous said...

ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா அடிமுடி மாதிரி முகமுடிய விதவிதம சரைச்சிகிறதுக்கு பேரு நடிப்பும் இல்லை, பொழுது போக்கும் இல்ல, கவட்ட கால வச்சிகினு ஆடறது ஆட்டம் இல்ல, மைக் மோகன், ராமராஜன் இவங்க கூட பல வருசம் போட்டிபொட்டது போட்டியில்ல, ஒலகத்தில இருக்கிற படங்கள மொத்தமா காப்பியடிக்க ஆரம்பிச்சி அது கண்டுபுடிச்ச ஒடனே பிட்டு பிட்டா 'காப்பி ரைட்ஸ்' இல்லாம காப்பியடிக்கிறது ஒலகத்தரம் இல்ல, ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா ஹா ஹா....