Sunday, September 7, 2008

எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் - தி ரோபோ படத்தின் முதல் ஸ்டில் சுவரொட்டிகள் வடிவில் வெளியாகயுள்ளது.

இந்த ஸ்டில்தான் நாளை பப்ளிசிட்டி டிசைனாகவும் செய்தித் தாள்களுக்குத் தரப்பட்டுள்ளது.

ஆனாலும் இதுவரை பத்திரிகைகளுக்கு எந்த ஸ்டில்லும் அதிகாரப்பூர்வமாகத் தரப்படவில்லை.

இன்னும் ஒரு மாதத்துக்கல்ல... ஒரு வருடம் வரைகூட மீடியா காலத்தை ஓட்டிவிடும் இந்த ஒரு ஸ்டில் மற்றும் அதற்கான பின்னணிக் கதையை பின்னி எடுப்பதில்.

இதைத் தவிர மேலும் இரண்டு வித்தியாசமான, மிரட்டல் ஸ்டில்களும் உண்டாம். அவை விரைவில் வெளிவரக் கூடும்.

அதேநேரம் படத்துக்கு தேவையற்ற மிகை எதிர்பார்ப்பை தரக்கூடாது என்பதால் படத்தில் வரும் ரஜினியின் உண்மையான தோற்றம் குறித்த ஸ்டில்களை வெளியிடாமல் முழுக்க முழுக்க அனிமேட்டட் டிசைன்களை மட்டுமே தரப்போகிறார்களாம்.

அதே போல ரஜினி பட வரலாற்றிலேயே முதல்முறையாக ரஜினிக்கு இணையாக கதாநாயகியின் பெயரும் அச்சிடப்பட்டுள்து.

இது ஷங்கருக்கு ரஜினி கூறிய ஆலோசனை என்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் காம்பினேஷனில் ஒரு படம் வரவேண்டும் என நீண்ட நாளாகவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். எனவே ஐஸ்வர்யா ராய் பெயரையும் இணைத்தே வெளியிடுங்கள். ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று ரஜினி கூறினாராம்.

அதுதான் ரஜினி!

7 comments:

கிரி said...

இனி எல்லா பேப்பர். மற்றும் குமுதன் விகடன் குங்குமம் எல்லோரும் போய் படத்தை போட்டு கொள்ளை அடிங்க ....

அப்புறம் ரஜினிய திட்டுங்க..

இந்த ஊடகங்கள் அரசியல்வாதிகள விட கேவலமா இருக்காங்க...

இயந்திரன் படம் கலக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

Repeateai!!!!!!
சிவாஜி தி பாஸ்!
குசேலன் தி குபேரன்!!
சுல்தான் தி வாரியர்!!!
இயந்திரன் தி ரோபோ!!!!
ரஜினி தி லயன் கிங்!!!!!
ரஜினி தி ஹியூமன் !!!!!!
தி நேம் இஸ் ரஜினிகாந்த் !!!!!!!

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் சிங்கம் சிங்கம் தான்டா மத்தவனெல்லாம் அசிங்கம்!, சிங்கம் சிங்கிளாவே சாதிக்கிறது!! சிங்கத்தின் கர்ஜனை முன்பெப்பொழுதையும் விட பலமாக ஆக்ரோஷமாக இருக்க வாழ்த்துக்கள்!! சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு! சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு!! (முப்பது ஆண்டுகளாக எங்களை எங்கள் நேரம், டிக்கட் பணம் இரண்டிற்கும் நியாயமான குடும்பத்துடன் பார்க்ககூடிய ஆரோக்கியமான பொழுது போக்கினை தந்தமைக்கு ர்ஜினி அவர்களுக்கு மிக்க நன்றி)…

Anonymous said...

அமிதாப் கட்டளை; நிறைவேற்றிய ரஜினி!.
அமிதாப்பச்சன் தனது மருமகள் ஐஸ்வர்யாவின் பெயர் போஸ்டரில் இடம் பெற வேண்டும் என சொன்னதின் பேரில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.


“வேறொன்றுலில்லை.... பாவம் நம்ம தினமலமும்,சின்னபுத்தி விகடனுக்கும் ஒரு ஐடியா கொடுக்கலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு ஒரு ரோசனை!

Vaanathin Keezhe... said...

நீங்க வேற... நாளைக்கே உங்க ஐடியா அப்படியே காப்பியடிச்சு அட்டைப்படக் கட்டுரை போட்டுடுவானுங்க...
கருத்துக்கு நன்றி விஜய், கிரி ணற்றும் அனானி.

Anonymous said...

Vijay,
super Ideas, But I will suggest you to give more SMS on Moron brothers, I do not read their magazines weekly, read their last week's "Dot" athaanga Kumkumam, in that they have teased Kuselan SMS by Youth.
I felt the some of the following SMS.
Dialogue pages of JV
"Aama, intha thodar minvettula. serial paaka mudiyatha illatharas ingalluku eppadi poluthu pokuthaam?"
"Neenga vera thathavum peranungalum vidara arikkai poraatam ella serial-yum minchina kundumbath thdoara- kalukkuthungam".
"Appana sirippu nihalichikku thaan panjamnnu sollunga." Athulayam pathirikkaingala minja mudiyumaa? Onnum ille kuselan pratchanaiyila, Andhara theatre garranlaellam group photo ellam eduthu news potta..Theatre associationla, naanga Rajiniya, Kuselanai-paththi pesuanatha pathrigainga kapsa vittutaangannu arikkai. athaiyum athe pathirkaaikele poda vendiyathayiduche. Ithavida ennanga super comdey bazar venum?"

Anonymous said...

இந்தியர்களையும், தமிழர்களையும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் மத, ஜாதி, மொழி மற்றும் பல்வேறு பொய்க்காரணங்களை சொல்லி அப்பாவி மக்க்ளை பொது மக்களை பிரித்து த்ன் வயிறை நிறப்பிக்கொண்ட ஈனப்பிறவிகளை நாம் அறிவோம்! திரு.ரஜினி அவர்கள் 'மட்டுமே' உலகெங்கெலும் வாழும் தமிழினத்தை அட்லீஸ்ட் மூணு மணி நேரம் ஒன்றாக இணைத்தவர்! ரஜினி ஒரு உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை இணைக்கும் சக்தி ! பிரிக்கும் சக்தி அல்லவே! அதற்க்காகவே நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமி(ம)தம் கொள்கிறேன்.... ஒரே ஒருத்தன காட்டுங்க பார்ப்போம்???? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார் வராமல் போகிறார் !ஐ டொன்ட் கேர்.... ஆனால் ரஜினி மேஜிக் என்பதை அரசியலுக்காக இழக்க தயாரில்லை.... இப்படிக்கு - உண்மையான ரஜினி ரசிகன்

Anonymous said...

இந்தியர்களையும், தமிழர்களையும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் மத, ஜாதி, மொழி மற்றும் பல்வேறு பொய்க்காரணங்களை சொல்லி அப்பாவி மக்க்ளை பொது மக்களை பிரித்து த்ன் வயிறை நிறப்பிக்கொண்ட ஈனப்பிறவிகளை நாம் அறிவோம்! திரு.ரஜினி அவர்கள் ‘மட்டுமே’ உலகெங்கெலும் வாழும் தமிழினத்தை அட்லீஸ்ட் மூணு மணி நேரம் ஒன்றாக இணைத்தவர்! ரஜினி ஒரு உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை இணைக்கும் சக்தி ! பிரிக்கும் சக்தி அல்லவே! அதற்க்காகவே நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமி(ம)தம் கொள்கிறேன்…. ஒரே ஒருத்தன காட்டுங்க பார்ப்போம்???? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார் வராமல் போகிறார் !ஐ டொன்ட் கேர்…. ஆனால் ரஜினி மேஜிக் என்பதை அரசியலுக்காக இழக்க தயாரில்லை…. இப்படிக்கு - உண்மையான ரஜினி ரசிகன்