விஜய்காந்துக்கு எதிராக திடீரென்று ஏன் இத்தனைப் பதிவுகள்...
திடீரென்று திமுகவுக்கு ஆதரவாகக் குரல் ஒலிக்கிறதே என்றெல்லாம் நண்பர்கள் பின்னூட்டங்களில் கருத்துப் பதிந்துள்ளார்கள்.
அவர்களுக்கு ஒரு விளக்கம்!
நான் திமுக அனுதாபி இல்லை.
ரஜினி பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறோம்... என்பதற்கான விளக்கங்கள்தான் நீங்கள் இங்கே படித்த விஜய்காந்த் - வடிவேலு மோதல்கள் குறித்த பதிவுகள்.
சக நடிகர் ஒருரால் தாக்கப்பட்டவுடன் நான் அரசியலுக்கு வந்து அவரை தோற்கடிப்பேன் என காமெடியன் ஒருவரே இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்.
இந்த தாக்குதலுக்குக் காரணமாகக் காட்டப்படும் கதாநாயகனோ, இது கலைஞரின் வேலை என்று, அரசியல் மற்றும் பதவியிலேயே குறியாக இருக்கிறார்.
வடிவேலுவுக்கும் விஜய்காந்துக்குமாவது பகை இருக்கிறது... ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்ள முகாந்திரமுள்ளது.
ஆனால் சம்பந்தமே இல்லாமல் அரசியல் என்ற ஒன்றை மட்டுமே காரணமாக வைத்து கலைஞர் மீது, அதுவும் ஒரு மாநில முதல்வர் மீது விஜய்காந்த் குற்றம் சாட்டுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?
வடிவேலு வீட்டு மீது கல்லெறியச் சொன்னதும் கலைஞர்தான், பின்னர் வடிவேலுவை போலீசில் புகார் தரச் சொன்னதும் கலைஞர்தான் என்று சொல்ல வருகிறாரா விஜய்காந்த்?
அல்லது, வடிவேலுவே தன்வீட்டு மீது கல்லெறிந்து கொண்டார் என்கிறாரா?
கலைஞர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல... மாநில முதல்வர். அவருக்கு எதிராக விஜய்காந்த் இப்படிக் குற்றம் சாட்ட என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்?
மாநில முதல்வர் மீது ஆதாரமில்லாமல் இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறியதற்காக இவரை இப்போதே சிறையில் தூக்கிப் போட சட்டம் இடம் தருகிறதே...
இப்படிப்பட்ட அரை வேக்காடுகளைத்தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் என்றெல்லாம் சிலர் தூக்கிப் பிடித்து வருகிறார்கள். அதை நம்மால் முடிந்தவரை எக்ஸ்போஸ் செய்யவே இத்தனை பதிவுகள்.
ஆனால்-
ரஜினி?
ஒரு கண்ணியமான மனிதர். நல்லவர். தனிப்பட்ட காரணங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டு மக்களைத் தூண்டிவிடாதவர். பாபா படத்துக்கு நேர்ந்தது போல ஒரு நிலை வடிவேலுவுக்கோ விஜய்காந்துக்கோ நேர்ந்திருந்தால்... சற்று கற்பனை செய்து பாருங்கள்.
ஆனால் ரஜினி அப்போதும் நிதானம் காத்தார். ரசிகர்களைத் தூண்டிவிட்டு வன்முறை செய்யச் சொல்லவில்லை. ராமதாஸ் வீட்டு மீது கல்லெறியச் சொல்லவில்லை.
அல்லது குசேலனை இப்படி குறிவைத்து தாக்கினார்களே என்று பத்திரிகைகளே வாங்காதீர்கள் என தன் ரசிகர்களுக்கு கட்டளையிடவில்லை அவர்.
ரஜினி என்ற நல்ல மனிதர்தான் இந்த நாட்டு அரசியலுக்கு இப்போது தேவை என்பதாலேயே இங்கே இவற்றைக் குறிப்பிடுகிறேன். மற்றபடி, ரஜினியோடு வேறு யாரையும் ஒப்பிடவும் முடியாது, ஒப்பிடவும் கூடாது.
பதினைந்து ஆண்டுகளாக ஒரு மாநிலத்தின் பெரும்பான்மை மக்களே அரசியலுக்கு வா... வா... என வருந்தி வருந்தி அழைத்தும், இன்னமும் அமைதி காக்கிறாரே... அந்தப் பக்குவம் வேறு யாருக்கு வரும்?
சினிமா, அரசியல் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்களுக்கு பெரிய அளவில் நன்மை செய் வேண்டும் என்ற ஒரு லட்சியம் ரஜினிக்கு இருக்கிறது. தமிழ் மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்... விஜய்காந்த் மாதிரி சில்லறை அரசியல்வாதிகளைப் புறம் தள்ள வேண்டும்!
13 comments:
Well said!
nanbarae
nalla padhivu, sameebadhil ktvil raasi endru ajith naditha thiraipadathin oru katchiyai edechaiaga parka neritadhu, adhil thalaivar rajniyin poster yai ajithum nanbargalum otti vitu selvargal, pinnadiyae 2 per vandu adhai kizhipargal, asdhai parthu ajith ketpar" en enga thalaivar in padathai kizhikirirgal ?" avan kooruvan" ivaruku enna thagudhi irkiradhu, ivanai ellam thalaivar nu solringa, " ajith:" idhae unga thalaiva poster ah nanga kizhicha neenga enna panuvinga?" avan: " mavanae unna kali panirpom" ajith: " aana nanga apdi illa, innamum ungalidam porumaiya pesit irukom, engal thalaivar engaluku solli kuduthadu idhu than, porumai, anbu, idha vida thalaivara iruka vera enna thagudi venum"..wow nethi adi( thayavu seidhu nan ajith adharavalan endru udanae kooradhirgal, idhu just oru descriptionae)
நன்றி திரு.சுகி.
ரஜிநி ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.
அஜீத் என்ன பேசினாலும், ஆரம்பத்திலிருந்தே அவர் மீது தனிப்பட்ட வஞ்சை உண்டு ரஜினிக்கு. காரணம் அஜீத் சுய முயற்சியால் முன்னுக்கு வர முயன்றவர்.
ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் என்றால் சூரியன் மாதிரி. உலகுக்கு ஒரே சூரியன்தான்... அப்படி ஒரே சூப்பர் ஸ்டார்தான் என்ற உண்மை புரிந்து, உண்மையாகவே ரஜினியை நேசிக்க ஆரம்பித்து, இன்று ரஜினி போட்டுக் கொடுத்த ரூட்டில் வெற்றியை ருசிப்பவர்...
நீங்கள் குறிப்பிடும் அந்தக் காட்சி உண்மையிலே அருமையான ஒன்றுதான்!
ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா அடிமுடி மாதிரி முகமுடிய விதவிதம சரைச்சிகிறதுக்கு பேரு நடிப்பும் இல்லை, பொழுது போக்கும் இல்ல, கவட்ட கால வச்சிகினு ஆடறது ஆட்டம் இல்ல, மைக் மோகன், ராமராஜன் இவங்க கூட பல வருசம் போட்டிபொட்டது போட்டியில்ல, ஒலகத்தில இருக்கிற படங்கள மொத்தமா காப்பியடிக்க ஆரம்பிச்சி அது கண்டுபுடிச்ச ஒடனே பிட்டு பிட்டா 'காப்பி ரைட்ஸ்' இல்லாம காப்பியடிக்கிறது ஒலகத்தரம் இல்ல, ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா ஹா ஹா..... ரசிகர் மன்றத்துக்கும் நற்!?பணி இயக்கத்துக்கும் வித்தியாசம் இருக்கு நண்பர்களே!! தெரிந்துகொள்ளுங்கள் அந்த நற்!?பணி இயக்கத்த்துக்கு பல வருடம் தலைவராக(வலியாக) இருந்த குண!?சீலன் ஒரு சினிமா வாய்ப்பு தேடிவந்த ஒரு அபலை பெண்ணை அந்த ஒலகத்தரமான ஒழுக்க!?சீலரின் ஆபீஸ்லயெ வச்சி கற்பழிச்சிருக்கானுங்க, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கழிச்சி ஒரு படத்த ஒரு காட்சி முக்கிமுனகி ஒட்டி இப்ப கோழிபிரியாணி சாப்பிடராங்க...விட்டுதொலைங்கசார்... பாவம்...
Thank you friend... Please mention your name...
vino buddy, contact_rbt_2008@yahoo.com is my email and the name is Raj T :)
என்ன விளையாட்டு இது, கோலியாடு, கில்லியாடு, பம்பரம் விடு, வேட்டிய அவுத்துட்டு ஆடு சாரி வேட்டையாடு, விளையாடு...சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கிட்ட விளையாடலாமா? என்ன விளையாட்டு இது விளையாட்டு பிள்ளைகள் :-)) - Raj T
Hahahahhaaaaaa
Good and enjoyable comment in Kounder style!
Thanks Raj!
சார் இந்த வீடியோவ ஒரு தனி பதிவா பொடுங்க சார் பிளீஸ்...
http://www.youtube.com/watch?v=JZDWtchmcc8
Raj T
hi
one worst fellow named luckylook posting abusive contents about super star
check this link
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=13585&hl=
he too running a blog for kamalhasan. please post more about kamalhasan kama leelaigal
my humble request boss
Dear Baskar
Dont wasting your time in spreading such abusive things created by others. This is only helped to popularise that idiotic guy's blog...
You should simply blast him with apt reply or just ignore... Rajini is far above in all aspects and no other actor is even nearing his supremacy in India.
திரு.ராஜ்... நல்ல கண்டுபிடிப்பு. நம்ம சுந்தர் உங்களுடைய இந்த வீடியோவை போட்டிருக்கிறார். அதனால் நான் விட்டுவிட்டேன்... எல்லாம் ஒன்றுதானே!
***(1)*** ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் அரசியல் வாதி நாய்களுக்கு பயம்!(ஜெயிக்கிரொ இல்லையோ , ஓட்டுக்கள் கன்னாபின்னாவென்று சிதறும்) ***(2)*** ரஜினி அரசியலுக்கு வரவில்லையென்றால் பத்திரிகைகளுக்கு பயம்! (அவரின் படத்தை அட்டையில் போட்டு கல்லாகட்டிய ஈனத்தனமான பத்திரிகைகளுக்கும் அக்சாணி குமுதத்தில் வாந்தியெடுக்கும் நாய், சொரிகுமார், சூ.ராஜி இவங்களுக்கு அடுத்தவெளை சாப்பாடு கிடைக்காது)***(3)*** ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரா!? வந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாமெ என்று ரசிகன் போர்வையில் சில குள்ளனரிகள் ***(4)*** ரஜினி மாதிரி ஒருவர் வந்தாலாவது மாற்றம் வராதா என்று விரும்புவர்கள் சிலர்... எது எப்படியோ என் தனிப்பட்ட கருத்து, 'ரஜினி மேஜிக்'கை அரசியலுக்காக இழக்க தயாரில்லை... சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல கற்பனையான காரணங்களை கூறி வயிறு வளர்த்த அரசியல் வாதிகள், பத்ரிகைகள் (ரஜினி பெயரைச்சொல்லி வியிறுவளர்த்தவர்கள்)இவர்களுக்கு மத்தியில் ஒரு மூன்று மணி நேரம் உலகவாழ் தமிழர்களை ஒன்று சேர்த்த பெருமை ரஜினிக்கு மட்டுமெ.. இப்படிக்கு ரஜினி ரசிகன் Raj T
Post a Comment