Tuesday, September 9, 2008

குன்னக்குடி: ஜனங்களின் இசை தெரிந்த கலைஞன்!


எல்லாருக்கும் நல்லவராய் இருந்து விடுவோம்... இதனால் யாருக்கும் இழப்பில்லை எனும் தத்துவத்தின்படி வாழ்ந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.

இப்படி வாழ்வதில் உள்ள ஒரே சிக்கல் பலரது கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டி வரும். ஆனாலும் அவற்றைச் சகித்துக்கொண்டால் உலகுக்குப் பயன்படும் வாழ்வை வாழ முடியும்.
அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் குன்னக்குடி. வாழும்போது குறையில்லாத மனிதன் யார். மகாத்மாவையும் குறைகூறிய முன்னோர்களைக் கொண்டதுதான் நமது பாரம்பர்யம். இதில் குன்னக்குடியெல்லாம் எம்மாத்திரம்!

கர்நாடக சங்கீதம் மேட்டுக் குடிகளுக்கானது என வேதம் படித்தவர்கள் வியாக்கியானம் பண்ணிக்கொண்டிருக்கையில், கீழ்மட்ட ரசிகன் வரை அதைக் கொண்டுபோய், அவர்களின் விசில் சத்தத்தையும் பரிசாகப் பெற்றவர் குன்னக்குடி.

ஒரு திரைப்பட இசைக் கலைஞர் என்பதாலேயோ என்னமோ... கர்நாடக சங்கீதம் வேறு, திரை இசை வேறு என்ற பேத்த்தை அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. எந்தக் கச்சேரியாக இருந்தாலும் திரைப்பாடல்களை துக்கடாவாகவோ, மெயினாகவோ இசைத்து கூட்டத்தை வயலின் நரம்புகளில் சிறைப்படுத்தி விடும் அரிய வித்தைக்காரர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர அபிமானி. ரஜினி ஸ்பெஷல் பாடல்களை மட்டுமே பல கச்சேரிகளில் அவர் வாசிக்கக் கேட்டிருக்கிறேன். குறிப்பாக மதுரை, கோவைக்கு வந்தால் அவர் தவறாமல் எம்ஜிஆர், ரஜினி பாடல்களை வாசித்துக் காட்டி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்துவிடுவார்.

வயலினுக்கு இன்னொரு அரத்தம் குன்னக்குடி என்று உலகைச் சொல்ல வைப்பது எத்தனை பெரிய சாதனை...

அவரது இசையை ரசித்தவர்கள் என்ற முறையில் நமது மரியாதையைச் செலுத்துவோம், மவுனமாய்!

3 comments:

Anonymous said...

இந்தியர்களையும், தமிழர்களையும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் மத, ஜாதி, மொழி மற்றும் பல்வேறு பொய்க்காரணங்களை சொல்லி அப்பாவி மக்க்ளை பொது மக்களை பிரித்து த்ன் வயிறை நிறப்பிக்கொண்ட ஈனப்பிறவிகளை நாம் அறிவோம்! திரு.ரஜினி அவர்கள் 'மட்டுமே' உலகெங்கெலும் வாழும் தமிழினத்தை அட்லீஸ்ட் மூணு மணி நேரம் ஒன்றாக இணைத்தவர்! ரஜினி ஒரு உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை இணைக்கும் சக்தி ! பிரிக்கும் சக்தி அல்லவே! அதற்க்காகவே நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமி(ம)தம் கொள்கிறேன்.... ஒரே ஒருத்தன காட்டுங்க பார்ப்போம்???? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார் வராமல் போகிறார் !ஐ டொன்ட் கேர்.... ஆனால் ரஜினி மேஜிக் என்பதை அரசியலுக்காக இழக்க தயாரில்லை.... இப்படிக்கு - உண்மையான ரஜினி ரசிகன்

Anonymous said...

இந்தியர்களையும், தமிழர்களையும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் மத, ஜாதி, மொழி மற்றும் பல்வேறு பொய்க்காரணங்களை சொல்லி அப்பாவி மக்க்ளை பொது மக்களை பிரித்து த்ன் வயிறை நிறப்பிக்கொண்ட ஈனப்பிறவிகளை நாம் அறிவோம்! திரு.ரஜினி அவர்கள் ‘மட்டுமே’ உலகெங்கெலும் வாழும் தமிழினத்தை அட்லீஸ்ட் மூணு மணி நேரம் ஒன்றாக இணைத்தவர்! ரஜினி ஒரு உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை இணைக்கும் சக்தி ! பிரிக்கும் சக்தி அல்லவே! அதற்க்காகவே நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமி(ம)தம் கொள்கிறேன்…. ஒரே ஒருத்தன காட்டுங்க பார்ப்போம்???? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார் வராமல் போகிறார் !ஐ டொன்ட் கேர்…. ஆனால் ரஜினி மேஜிக் என்பதை அரசியலுக்காக இழக்க தயாரில்லை…. இப்படிக்கு - உண்மையான ரஜினி ரசிகன்

Shankar said...

ஆமாம். அமரர் குன்னக்குடி அவர்களின் வயலின் கீதத்துக்கு மயங்காதவர் யார்?
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஷங்கர்