நன்றி...
சில நண்பர்களின் கருத்துப் பதிவுகளுக்கு ஒரு சின்ன விளக்கமாக இதை எடுத்துக்கொள்ளவும்.
நாம் என்னதான் மெத்தப் படித்த மேதாவிகளாக இருந்தாலும், நமக்குள் ஒரு தீவிர ரசிகன் இருக்கிறான். அவனுக்கு சரியான தீனி போடுவது ரஜினி போன்ற மக்கள் நாயகர்கள்தான்.
ஆனால் ரஜினி வெறும் சூப்பர்ஸ்டார் மட்டுமல்ல... அற்புதமான மனிதர். அரசியல் என்ற பெயரில் தன் பெரும் ரசிகர் கூட்டத்துக்கிடையில் விரிசல் விழக்கூடாது என்ற தொலைநோக்குப் பார்வை அவருக்குண்டு.
இப்படிப்பட்ட ஒரு மனிதரை அவரது ரசிகர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் இல்லாமல் போனதுதான் பாபா, குசேலனுக்கு பிரச்சினைகள் வரக் காரணம்.
‘இந்த மண்ணை ஆளும் தகுதி ரஜினியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. ஆனால் அவரது ரசிகர்கள் முழுமையாக அவரது ஆளுமையில் இருக்கிறார்களா... அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொளிகிறார்களா...’ என தனது கருத்தை இங்கே ஒரு நண்பர் தனது பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு பதிலாக இரு சம்பவங்களைக் கூற விரும்புகிறேன்...
பாபா ஒரு மோசமான படம் என்று யாராவது இப்போது சொல்வார்களா... அல்லது குசேலன் நல்ல படமில்லை என்று கூறமுடியுமா...?
ஆனால் இந்த இரு படங்களுமே கடும் பாதிப்புகளுக்குள்ளாயின.
பாபாவில் ஆன்மீகவாதியாக இமயத்திக்குப் போகும் ரஜினியை, நாட்டில் நடக்கும் அநியாயங்கள் மீண்டும் சமூகத்தின்பால் இழுத்து வருகின்றன. அதாவது அவர் அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தியோடு படம் முடிகிறது.
ஆனால் ரசிகர்கள் படத்தை வரவேற்கவில்லை. பாமகவின் எதிர்ப்பைக் கூட சமாளிக்கும் திராணியற்றவர்களா இவர்கள் எனும் தேவையற்ற விமர்சனத்துக்கு ஆளானார்கள்.
இப்போது குசேலன்...
‘நான் என்னவாகப் போகிறேன் என்பதை நான் தீர்மானிப்பதில்லை... மேலே இருப்பவன்தான் தீர்மானிக்கிறான்’ எனும் ரஜினி, தனது அரசியலுக்கு அப்பாற்பட்ட தனது உலகத்தை லேசாகக் கோடிட்டுக் காட்டியிருந்தார்.
இதற்கும் போதிய ஆதரவில்லை. என்னதான் பத்திரிகைகள் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தாலும், ரசிகர்கள் அலையலையாக திரண்டு வந்திருக்கலாமே..., என்ற விமர்சனம் மீண்டும் ரசிகர்கள் மீது விழுந்திருக்கிறது.
ஆக அவர் அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் போதும் அமைதி காக்கிறார்கள்... அரசியல் இப்போதைக்கு வேண்டாம் என்றாலும் அமைதி காக்கிறார்கள்...
இதுதான் நிஜமான ஆபத்து!
விரிவாக மீண்டும் அலசலாம்...
3 comments:
rajini got 26 crores as salary for kuselan...
Hahahahaaaaa
Hereby, announcing that Mr.Praveen was the auditor for the producer's of Kuselan.
அதெப்படி பிரவீன் அவர் வாங்கும் போது கிட்ட நின்னு பாத்த மாதிரி சொல்றீங்க.?
உங்கள சொல்லி குத்தமில்லை. எந்த நியூச படித்தாலும் அத நிஜம்னு நம்புறவங்க இருக்கிற வரை இது போன்ற செய்திகளின் நம்பகத்தன்மை அவரவரை பொறுத்தது.
Post a Comment