கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர் என்று ஒரு சொலவடை சொல்வார்கள் சிவனடியார்கள்.
ரஜினி பற்றிய உண்மைகள் அல்லது வதந்திகள் இரண்டுக்குமே இது சாலப் பொருந்தும்.
ரஜினி தமிழ்நாட்டில் சம்பாதித்து கர்நாடகத்தில் முதலீடு செய்கிறார் என்று நீண்ட காலமாகவே சொல்கிறார்கள்... சொல்கிறார்கள்... சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
அரைகுறை பத்திரிகை நிருபர்கள் முதல் மெத்தப் படித்த அஞ்ஞானிகள் வரை இதே புலம்பல்தான்.
அட உண்மையாகத்தான் இருக்குமோ... என்ற ஒரு மயக்கத்தில் நானும் ஒசூர் எல்லையிலிருந்து மைசூர், ஹம்பி வரை நெடுஞ்சாலை, குறுஞ்சாலை எல்லாம் ஒரு வார பயணம் கூட செய்து பார்த்துவிட்டேன். இதில் நமக்குத் தெரிந்த உண்மை ஒனறுதான், பெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய சொத்து வைத்திருக்கும் விஐபிக்களில் நிறையப் பேர் தமிழர்கள் என்பதே அது!
அவர்களில் சிலரது பெயரை இங்கே வெளியிடுவதில் நமக்கு எந்த பயமும் இல்லை.
கர்நாடகத்தில் சொத்துக் குவித்து வைத்திருக்கும் தமிழர்களில் முதலிடம் பிடிப்பவர்கள்... சந்தேகமே வேண்டாம், தமிழக முதல்வர் மாண்புமிகு கருணாநிதியின் குடும்பத்தினர்தான்.
நாளைய முதல்வர் எனப் புகழப்படும் ஸ்டாலின் தொடங்கி, அங்கேயே செட்டிலாகிவிட்ட செல்வி – செல்வம் தம்பதிகள் வரை கணக்கில்லாமல் நிலங்களாக, எஸ்டேட்டுகளாக, தொழிற்சாலை பங்குகளாக, பங்களாக்களாக, அலுவலகக் கட்டிடங்களாக இவர்களது சொத்துமதிப்பு பல நூறு கோடிகளைத் தாண்டுகிறது.
கோவையைச் சேர்ந்த பெரும் தொழ்லதிபர்கள் இருவருக்கு இந்தப் பகுதிகளில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.2000 கோடியைத் தாண்டுகிறது.
டிவிஎஸ் நிறுவனம், இந்து, அதிமுகவின் தம்பி துரை, ஏசி சண்முகம் இவர்களுக்கெல்லாம் கோடிக்கணக்கில் சொத்துக்கள். அட நம்ம முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல ஏக்கர் நிலங்கள், ஓட்டல்கள் பெங்களூர் மற்றும் புதிய ஏர்போர்ட்டைச் சுற்றித்தான் அமைந்துள்ளன.
மைசூர், ஹாசன், மங்களூரிலெல்லாம் இவர்களுக்குச் சொத்துக்கள் உள்ளன.
கூர்க், ஷிமோகா பகுதிகளில்கூட சொத்துக்கள் வைத்துள்ளனர் சில தமிழர்கள்.
பெங்களூரிலிருந்து ஹாசன் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரஜினிக்கு பல பேக்டரிகள், சந்தன எண்ணெய் ஆலைகள் இருப்பதாக பலர் கூறிய வண்ணம் உள்ளனர். நாம் விசாரித்தவரையில் ரஜினி நேரடியாகத் தொடர்புடைய எந்த ஆலையும், அலுவலகமும் அங்கில்லை என்பதே உண்மை.
வேண்டுமானால் சில தொழில்களில் பங்குதாரராக இருக்கலாம். அதுகூட நமது யூகம்தான். ஆனால் பங்குதாரர் ஆவது அத்தனை பெரிய பாவ காரியம் அல்ல. அது ஒரு சாதாரண விஷயம். ஒரு லட்ச ரூபாய் இருந்தால் நீங்களும்கூட கர்நாடகத்தில் பிரபலமாயிருக்கும் பல கம்பெனியின் ஷேர்களை வாங்கி பங்குதாரராகி விட முடியும்.
சில இடங்களில் ரஜினி நிலம் வாங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். கர்நாடகத்தில் சரத்குமாருக்கு இல்லாத நிலமா!
பெங்களூர் போனால் இப்போதும் ரஜினி தங்குவது இந்திரா நகரில் உள்ள ஒரு சாதாரண பிளாட்டில்தான். அங்கு ரஜினிக்கு துணை ஒரேயொரு உதவியாளர். ரஜினி இங்கு வருவதும் போவதும்கூடத் தெரியாது என்கிறார்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்.
ஆனால் ரஜினி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை தமிழகத்தில்தான் முதலீடு செய்துள்ளார். ஆனால் அவை எல்லாமே மிக நாணயமான முதலீடுகள் என்பதைத் தெரிந்து கொண்டால் போதும், பொது வாழ்க்கைக்கு அவர் எந்த அளவுக்குத் தகுதியானவர் என்பதைப் புரிந்து கொள்ள...
அதெல்லாம் கிடக்கட்டும்...
ரஜினி அங்கே நிலம் வாங்கினார்... இங்கே இடம் வாங்கினார்... அவர் பதிவு அலுவலகம் போகாமல் வீட்டிலிருந்தபடியே பத்திரப் பதிவு செய்தார் என்றெல்லாம் டெஸ்க் ஒர்க் செய்யும் புலனாய்வுப் புலிகள், கர்நாடகத்தில் ரஜினிக்குச் சொந்தமான ஏதாவது ஒரு தொழிற்சாலைக்காவது ஆதாரம் தந்திருக்கிறார்களா...
உண்மையில் அப்படி ரஜினிக்கு கர்நாடகம் முழுக்க சொத்துக்கள் இருந்திருந்தால், பேனைப் பெருமாளாக்கும் கலையில் வித்தகர்களான இவர்கள் எப்படியெல்லாம் எழுதிக் கிழித்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் (காஷ்மீர் தவிர- அதைக் கேட்க ஒரு பயலுக்கும் துப்பில்லை!). சட்டம் அதனை அனுமதிக்கிறது. அந்த சட்டத்தை வைத்துக் கொண்டுதான் தமிழ் பணக்காரர்கள் மற்ற மாநிலங்களில் சொத்து வாங்கிக் குவிக்கிறார்கள். ஆனால் ரஜினி மட்டும் தமிழ்நாட்டு பார்டரைத் தாண்டக்கூடாது...
நல்ல நியாயம்...
இதுவல்லவா வந்தாரை வாழவைத்துக் கிழித்த உத்தம தமிழ்க் குணம்!
17 comments:
Hi,
Nice article. I like your blog very much. Thanks for all your sincere effort to gather information about thalaivar which is not easy. Also, can you pls tell us how is Kuselan collection in TN? any improvement? Thanks.
தல ... போட்டுத் தாக்குங்க... கலக்கல்தான்!
This is the best matured article I read recently. JUST THE TRUTH AND FANTASTIC. Plase request Mr.Sundar to provide a link from rajinifans.com and onlyrajini.com... once again YOU HAVE WRITTEN DOWN THE TRUTH AND ITS JUST FANTASTIC! Our Salutes!!
Summa kalakkureenga. Unmiayaana ungal pondra fans irrukumvarai rajiniyap paththi yar enna sonna enna, namakku thaan ungalai mathiri athirdai aalunga irukeengale.
Aaama kali gnaniku onnum illaya! kovai industrialists sari, sothairajukku. ippa theriyuthu yen karnatakala thulli thulli kuthikiraangannu. Aama tamilkaraan Tn irunthikittu ithanai soththai vaangi kuvichcha. Muthalla pakeeranukku evalavu irukkumo theiryala. MORONS, Driuttumalarellam iniyavathu konjam yosischi pesattum.
buterfly
He is not investing in Pakistan right? As long as he invest in India who cares. People who live in Tamil Nadu have PF account. Most of them have life insurance account. Most of them put their money in bank savings account. Where the hell all these money get invested? These Institution invest the money on public offerings right? :) They should ask the institutions that they should invest the money in companies who have head quarters in Tamil Nadu only right? :) Can't they ask?
His second daughter is also going to get married soon to some one who lives in Tamil Nadu. Then they will put a full stop for this issue reason is where ever he invested would belong to his two daughters who live in TamilNadu.
PTB
i hope Kumudam and AV appoligize for their prositution
மிகச் சரியாக சொன்னீங்க. என்ன பொறுத்தவரை ரஜினியை பிடிச்சவங்க, கமலை பிடிச்சவங்கன்னு இரண்டு Group தான் இருக்க முடியும். இதில், கமலை பிடிப்பவர்களுக்கு ரஜினி எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும், அவரை பிடிக்காது. தூற்றிக்கொண்டே இருக்கணும். இவர்களுக்கு Maturity கொஞ்சம் கம்மி.
Great! Excellent.. U and Sundar are doing superb work.. keep going. Hope this reaches across globe not only to our fan group.. across each and every person..Real Truth can never be hidden long.
Hi Prakash, you better ask Kalaipuli Dhanu. He will tell not only about Kuselan collection but also about some other movies.
நன்றி நண்பர்களே... ஒரு நல்ல மனிதரைப் பற்றி நல்ல வார்த்தைகளை எழுதக் கூட கூலி கேட்கும் கூட்டம் இது. அதனால் இந்த மாதிரி காகிதப் புலிகளிடம் இனி எந்த நல்ல விஷயத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஒரு இதழில் தாக்குதல், அடுத்த இதழில் சரணாகதி இப்படித்தான் குரங்கு பல்டியடித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள். எல்லாம் சர்க்குலேஷனுக்காக!
Hi,
Very good posting by you. We need such to-the-point articles to refute the baseless & unreasonable accusations against Rajini by media pigs in TN.
Arun
தமிழக அரசியல் தலைவர்கள் மாநிலத்துக்கு மாநிலம் ஒவ்வொரு பேச்சு பேசுவதை விட ரஜினி ஒன்றும் தவறாக பேசிவிடவில்லை தவறு செய்தால் மன்னிப்பு கேட்பது தமிழனின் பண்பு
Dear anony, I have given in onlyrajini.com
Rajinifans.com they themselves have given.
இந்தியர்களையும், தமிழர்களையும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் மத, ஜாதி, மொழி மற்றும் பல்வேறு பொய்க்காரணங்களை சொல்லி அப்பாவி மக்க்ளை பொது மக்களை பிரித்து த்ன் வயிறை நிறப்பிக்கொண்ட ஈனப்பிறவிகளை நாம் அறிவோம்! திரு.ரஜினி அவர்கள் ‘மட்டுமே’ உலகெங்கெலும் வாழும் தமிழினத்தை அட்லீஸ்ட் மூணு மணி நேரம் ஒன்றாக இணைத்தவர்! ரஜினி ஒரு உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை இணைக்கும் சக்தி ! பிரிக்கும் சக்தி அல்லவே! அதற்க்காகவே நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமி(ம)தம் கொள்கிறேன்…. ஒரே ஒருத்தன காட்டுங்க பார்ப்போம்???? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார் வராமல் போகிறார் !ஐ டொன்ட் கேர்…. ஆனால் ரஜினி மேஜிக் என்பதை அரசியலுக்காக இழக்க தயாரில்லை…. இப்படிக்கு - உண்மையான ரஜினி ரசிகன்
இந்தியர்களையும், தமிழர்களையும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் மத, ஜாதி, மொழி மற்றும் பல்வேறு பொய்க்காரணங்களை சொல்லி அப்பாவி மக்க்ளை பொது மக்களை பிரித்து த்ன் வயிறை நிறப்பிக்கொண்ட ஈனப்பிறவிகளை நாம் அறிவோம்! திரு.ரஜினி அவர்கள் ‘மட்டுமே’ உலகெங்கெலும் வாழும் தமிழினத்தை அட்லீஸ்ட் மூணு மணி நேரம் ஒன்றாக இணைத்தவர்! ரஜினி ஒரு உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை இணைக்கும் சக்தி ! பிரிக்கும் சக்தி அல்லவே! அதற்க்காகவே நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமி(ம)தம் கொள்கிறேன்…. ஒரே ஒருத்தன காட்டுங்க பார்ப்போம்???? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார் வராமல் போகிறார் !ஐ டொன்ட் கேர்…. ஆனால் ரஜினி மேஜிக் என்பதை அரசியலுக்காக இழக்க தயாரில்லை…. இப்படிக்கு - உண்மையான ரஜினி ரசிகன்
Great Post !!
This should reach out to the max number of people.
இந்த மாதிரி ரஜினி மீது பழி போட்ட அனைவரிடம் நான் கேட்டு இருக்கிறேன். இதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா என்று, ஆனால் எவராலும் இதற்கு ஆதாரம் கொடுக்க முடிய வில்லை. இவர்கள் அனைவருக்கும் ரஜினி மீது ஒரு காண்டு. அவ்வளவு தான்.
மோகன்
Post a Comment