Thursday, September 25, 2008

இதுதான் ஒரு நல்ல மக்கள் தலைவனுக்குரிய குணம்!


ரஜினி இப்போது அரசியல் கட்சியை அறிவிக்கப் போகிறார்... அல்லது சமூக இயக்கம் தொடங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பெரிதாகிக் கொண்டே போகிறது.

சிலர் இந்த நிலையை 1996-ல் நிலவிய சூழலுடன் ஒப்பிடுகிறார்கள்... சில பத்திரிகைகளிலும் இந்த ரீதியிலான அலசல்கள் ஆரம்பமாகியுள்ளன.

அன்றைய சூழலில் செய்திக்காக ரஜினியின் பின்னாலேயே சுமார் 3 ஆண்டுகாலம் சுற்றியவன், அவரது அனைத்து பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பங்கேற்றவன் என்ற முறையில் இது குறித்த என் பார்வை...

1996-ல் மக்கள் ஒரு நிஜமான அரசியல் மாற்றத்தை விரும்பினார்கள். அதற்கு ரஜினிதான் பொருத்தமான தலைமையைத் தருவார் என்றும் தீவிரமாக நம்பினர்.
அவருடைய ஒரு வார்த்தையை மட்டுமே மந்திரம் மாதிரி நம்பி அவர் பின்னால் ஓடிவரத் தயாராக இருந்தார்கள்.

அரசியல் கட்சிகள் பக்கமும் அவருக்கிருந்த செல்வாக்கு அபரிமிதமானது. தமிழ் மாநிலக் காங்கிரஸ் எனும் கட்சியைத் துவங்கிய மூப்பனார், அந்தக் கட்சிக்குத் தலைமை ஏற்க வருமாறு ரஜினியை ஒருமுறையல்ல 4 முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் அழைத்தார்.
தனிப்பட்ட முறையிலும் ரஜினியை கட்சித் தலைமை ஏற்கும்படி மூப்பனார் எந்த அளவு வேண்டிக் கொண்டார் என்பதை சோ பலமுறை மேடைகளிலேயே கூறியது உங்களுக்கும் நினைவிருக்கும்.

டெல்லியிலோ, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் ரஜினி முதல்வராக ஒப்புக் கொண்டால், காங்கிரசுக்கு கூட்டணியே வேண்டாம். சில உதிரிக் கட்சிகளுடன் தனித்தே போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கூறினார்.

இந்த அளவு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்ட வாய்ப்பைத்தான் ரஜினி மறுத்தார். உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது. வேறு நபராக இருந்திருந்தால்...

நினைக்கவே முடியவில்லை அல்லவா...

ஆனால் ரஜினி இந்தப் பதவிக்கும், அதை ஒரு வியாபாரமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கவும் என்றுமே விரும்பியதில்லை.

அவர் விரும்பியது ஒரு நல்ல ஆட்சி... அதை யார் தந்தால் என்ன? என்பதுதான் அவரது வாதம். அந்த நல்ல எண்ணத்தில் மக்கள் தந்த அரிய வரத்தை வேறு சிலரிடம் ஒப்படைத்தார். என்ன... அன்று அதைத் தரக் கூடாதவர்களிடம் தந்துவிட்டார். அதுதான் பிரச்சினையே!

அன்று ரஜினிக்கு நிலவிய செல்வாக்கைப் பார்த்து, நிச்சயம் அடுத்த எம்ஜிஆர் அல்லது அவரையும் தாண்டி ஒரு படிமேலே கூடப் போய்விடுவார் இந்த மனிதர் என்று நிருபர்களிடம் கமெண்ட் அடித்த ரகுபதி, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், சாத்தூர் ராமச்சந்திரன் போன்றவர்கள் இன்னும்கூட அமைச்சர் என்ற அந்தஸ்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று மட்டும் ரஜினி மந்திரிசபை அமைத்திருந்தால், இவர்கள் ஒருபோதும் கோட்டைக்குப் போயிருக்க முடியாது...

இதற்காக, கருணாநிதி உள்ளிட்டவர்கள் ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது.

உண்மை... இது மிகைப் புகழ்ச்சியில்லை. இந்த விவரங்கள் நம்மில் பலருக்கும் நன்கு தெரியும், எனவே மேம்போக்காக இவற்றை நினைவுபடுத்துகிறேன்.

அன்றைய சூழல் இது... இன்றைக்கு...?

தொடரும்!

22 comments:

Anonymous said...

PORUTHATHU ELLAM PUMI ALATHANO!

Vaanathin Keezhe... said...

நிச்சயமாக...

நன்றி பாரத ப்ரியன்.

Anonymous said...

/// புதிய அரசியல் கட்சி
சமூக நல இயக்கம்
உணர்ச்சிப்பூர்வ சந்திப்பு
இவற்றுக்கு அப்பாற்பட்ட ஒன்று
//

வழக்கமான குழப்பம்.

இதையும் வாக்குக்கு சேர்த்திருக்கலாம்

Vaanathin Keezhe... said...

இனி அதற்கு அவசியமிருக்குமா தெரியவில்லை...

Unknown said...

வடிவேலுவின் தில் பத்தி என்ன நினைக்கிறீர்கள்??

Vaanathin Keezhe... said...

விஜய்காந்தை எதிர்த்து அவர் பேசுவதில் நியாமிருக்கிறது. ஆனால் தனிக்கட்சி என்பதெல்லாம் டூ மச்..

Shankar said...

மிகவும் அருமை. இந்த முறை மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரஜினியால் இப்போது இருக்கும் குண்டர் அரசியலை எப்படி ஜெயிக்க முடியும்? தேர்தல் வரப் போகுது என்றவுடன் சிறையில் இருந்து ஒரிஜினல் குண்டர்களை அரசியல் (கு)தண்டர்கள் வெளியே கொண்டுவந்து விட்டார்களே....இது எல்லாம் ரஜினிக்கு சரி வருமா?

Unknown said...

ஏன் டூ மச்? தில் இருக்கு. தனிக்கட்சி தொடங்கறார். சினிமால ஹீரோவா இல்லாட்டியும் நிஜத்தில ஹீரோவா தெரியறார்.

Vaanathin Keezhe... said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, என எடுத்துக்கொள்பவர் அல்ல ரஜினி.

நிச்சயம் ரஜினியின் பாதை புதிதாகத்தான் இருக்கும்.

உண்மையான, நேர்மையான தொண்டர்கள் இருந்தால் எப்போர்பட்ட குண்டர்களையும் எதிரிகொள்ளலாம், 1972 முதல் 77 வரை எம்ஜிஆர் திமுகவை எதிர்கொண்ட மாதிரி.

Vaanathin Keezhe... said...

சேவியர்...
கணநேரத்து உணர்ச்சிவசப்படல் அல்ல அரசியல் என்பது. சொல்லப்போனால் ஓவராக உணர்ச்சிவசப்படுபவர்கள் இதில் சாதிப்பது மிகவும் குறைவு... மற்றபடி வடிவேலு பேச்சில் தில் உள்ளது, நியாமும் உள்ளது.

அதனால்தானே இந்த இரண்டே நாட்களில் விஜய்காந்த் இமேஜ் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிப் போயிருக்கிறது...!

Anonymous said...

அன்று ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பு இருந்தது...

இன்று?

அவர் அரசியலுக்கு வருவார் என்று இத்தனைக்காலம் காத்திருந்த ரசிகர்கள் மட்டுமே தற்போது அவரது அறிவிப்பு குறித்து எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.

மக்கள்?

கிட்டத்தட்ட தலைவரின் அரசியல் குறித்த எதிர்ப்பார்ப்பையே குழி தோண்டி புதைத்துவிட்டனர். (எத்தனை காலம் தான் அவர்களும் காத்திருப்பார்கள்?).

மக்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு சூழ்நிலையில் வந்தால் மட்டுமே அவர் வெற்றி பெற இயலும். அது மறுபடியும் நடக்குமா?

உங்கள் பதிவி்ற்க்காக காத்திருக்கிறோம்.

- சிம்பிள் சுந்தர்

Unknown said...

At an interesting point u have put "To be continued..." like in a serial story (thodar kathai).

Eagerly waiting for the next part.

Vaanathin Keezhe... said...

சுந்தர்ஜி...
இந்த முறை 'நான் அரசியலுக்கு இப்போது வரவில்லை' என்று அவர் சொல்வார் என்று நான் நினைக்கவில்லை. அவசரப்பட்டு விரக்தியடைய வேண்டாம்.

அவர் ஒரு ரிஷி மாதிரி. அத்தனை சீக்கிரம ஒரு முடிவுக்கு வரமாட்டார்.
அதனால் கொஞ்சம் பொறுத்திருப்போமே...

அடுத்த பதிவில் இன்னும் சில தகவல்களைத் தருகிறேன்...

Vaanathin Keezhe... said...

திரு சரத்...
இது ஒரு தொடர் அல்ல... இன்னும் இரு பதிவுகளில் முடித்துவிடுகிறேன்...
ஆனால் வேறு ஒரு 'தொடர்' எண்ணம் உள்ளது.
விரைவில் அதுகுறித்த அறிவிப்பைத் தருகிறேன்...
நன்றி

Anonymous said...

hi sundar i too accept that the peoples expectation over our thalaivar in politics reduces but to a small amount only.but i dont agree that it has gone out entirely.people always like our thalaivar because of his humbleness,honestness.thats why every family in tamilnadu want to see his movies in the fdfs itself without caring of the expenses.according to me if thalaivar goes to each and every district for his social club or political activities definitely he will get back his prevoius fame.

Unknown said...

Dear Vino,
Thanks for the response. I will be waiting to read your "serial".

Anonymous said...

vino avargale,

what do you think about loyola college survey?

what do you think about the beard man called vinayagam.

rajesh.v

Vaanathin Keezhe... said...

Pl. Wait for my next post Rajesh...
Thanks

Anonymous said...

I like the way you analyze things....good work. Keep it up!!!

Vaanathin Keezhe... said...

Thank You

Anonymous said...

நம்மை பல விதத்தில் ஈர்த்த மனிதன் ரஜினியின் மேல் உள்ள அன்பால் சொல்கிறேன் வேறெதுமில்லை.. ரஜினி சார் அரசியலுக்கு வராதிங்க சார், அப்படி வந்தாகூடா சார் காஷ்மீர்ல போட்டியிடுங்க சத்தியமா 100 சதவீதம் உங்களுக்கு தான் வெற்றி! தமிழ் நாட்டில வேண்டாம் சார், கொலகார அரசியல் வாதிங்க, ஈனப்பிறவிங்க சிலர் உங்கலையும் , எங்களையும் அசிங்கப்படுத்திடுவாங்க... தமிழ் நாட்டை/கர்னாடாகாவை/மகாராஷ்டிராவை தவிர்த்து நீங்க எங்க வெணும்னாலும் போட்டியிடுங்க. சார் நீங்க செய்த உதவியெல்லாம் காணாம பொயிடும் சார்... மிடில் கிளாஸ், மற்றும் வறுமை கோட்டுக்கு கீழெ உள்ளவர்களுக்கு உங்கள மாதிரி மனிதன் தான் வேண்டும், அதில் மாற்றம் இல்லை ஆனா எதிரிகள், துரோகிகள் விட மாட்டாங்க சார்... நம் ராஜ்ஜியம் அரசியல் இல்ல சார், இத குறைத்து மதிப்பிடவில்லை மன்னிக்கவும். வேண்டி அழைத்த போது வேண்டாம் என்று சொன்ன நீங்கள் , இப்போதும் வேண்டாம் என்று சொல்லுங்கள்..பிளீஸ். நீங்கள் என்றும் எங்களில் ஒருவனாக இருங்கள் அது போதும். உண்மையான ரஜினி ரசிகன். இந்த கருத்து சுயனலமாக இருப்பின் மன்னிக்கவும் ஆனால் நான் உங்கள் நலம் விரும்பி ஏனெனில் நீங்கள் எங்கள் நலம் விரும்பி. நன்றி. Raj T

Anonymous said...

***(1)*** ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் அரசியல் வாதி நாய்களுக்கு பயம்!(ஜெயிக்கிரொ இல்லையோ , ஓட்டுக்கள் கன்னாபின்னாவென்று சிதறும்) ***(2)*** ரஜினி அரசியலுக்கு வரவில்லையென்றால் பத்திரிகைகளுக்கு பயம்! (அவரின் படத்தை அட்டையில் போட்டு கல்லாகட்டிய ஈனத்தனமான பத்திரிகைகளுக்கும் அக்சாணி ‍ குமுதத்தில் வாந்தியெடுக்கும் நாய், சொரிகுமார், சூ.ராஜி இவங்களுக்கு அடுத்தவெளை சாப்பாடு கிடைக்காது)***(3)*** ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரா!? வந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாமெ என்று ரசிகன் போர்வையில் சில குள்ளனரிகள் ***(4)*** ரஜினி மாதிரி ஒருவர் வந்தாலாவது மாற்றம் வராதா என்று விரும்புவர்கள் சிலர்... எது எப்படியோ என் தனிப்பட்ட கருத்து, 'ரஜினி மேஜிக்'கை அரசியலுக்காக இழக்க தயாரில்லை... சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல கற்பனையான காரணங்களை கூறி வயிறு வளர்த்த அரசியல் வாதிகள், பத்ரிகைகள் (ரஜினி பெயரைச்சொல்லி வியிறுவளர்த்தவர்கள்)இவர்களுக்கு மத்தியில் ஒரு மூன்று மணி நேரம் உலகவாழ் தமிழர்களை ஒன்று சேர்த்த பெருமை ரஜினிக்கு மட்டுமெ.. ‍ இப்படிக்கு ரஜினி ரசிகன் Raj T