ஜனநாயக நாட்டில் அவ்வப்போது மக்களின் மனதைப் படம் பிடிக்க கருத்துக் கணிப்புகள் நடத்துவதும் அதற்கேற்ப சில நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சகஜம்தான்.
ஆனால் சம்பந்தமே இல்லாமல் இத்தகைய கணிப்புகள் சில கருத்துத் திணிப்புகளுக்குக் காரணமாகிவிடுவதுதான் பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. ரஜினிக்கு எதிராக இந்த கருத்துக் கணிப்புகள் வந்துவிட்டதால் இப்படிச் சொல்வதாக நினைக்க வண்டாம். நாம் எந்தக் கணிப்பையும் ஆதரிப்பதில்லை.
பலமுறை இந்தக் கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையாவது திசை திருப்ப உதவியிருக்கின்றன.
இதனால்தான் கருத்துக் கணிப்பு என்ற நடவடிக்கைக்கே தடை போடும் முயற்சியில் இறங்கி உள்ளது தேர்தல் கமிஷன்.
லயோலா கல்லூரி முடிவுகளைப் பொறுத்தவரை, பல முரண்பாடுகள் உள்ளன.
தமிழக அரசின் இலவசத் திட்ட அறிவிப்புகளை 82 சதவிகித மக்கள் வரவேற்கின்றனர்.
ஆனால் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை 52 சதவிகிதம் பேர் எதிர்க்கிறார்கள்.
லயோலாவின் முன்னாள் மாணவரான விஜய்க்கு ரஜினியை விட 0.02 சதவிகித அதிக ரசிகர்கள் ஆதரவு இருக்கிறதாம். சரி... எஸ்.ஏ. சந்திரசேகர் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும். ஆனால் இந்த ரேஸில், விஜய்யைவிட அதிக ரசிகர்களைக் கொண்டவராகக் கூறப்படும் அஜீத் நிலை என்ன?
ரஜினியின் திரை உலகப் போட்டியாளர் கமல்ஹாசன் முதல் 5 இடங்களுக்குள் கூட இல்லையா? விஜய்காந்துக்கு (10 சதவிகிதமாம்!) உள்ளதை விட கமல்ஹாசனுக்கு ரசிகர் பலம் குறைவு என்று சொல்ல வருகிறதா... இந்தக் கணிப்பு? இது ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம்தானா...
அதிமுக - திமுகவை விட, ரஜினி –கமலை விட இவர்கள் முக்கியமாக எடுத்துக் கொண்டது விஜய்காந்தைத்தான்.
இல்லாவிட்டால் ஒருபடமும் ஓடாத, வரிசையாக 7 மெகா பிளாப்புகளைக் கொடுத்த விஜய்காந்துக்கு கமல்ஹாசனை விட அதிக செல்வாக்கு என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன?
6.5 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்துக்கு 2700 பேரை மட்டுமே பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்த சாம்ப்ளிங் அடிப்படை மகா தவறான ஒன்று.
எந்த ஒரு இலக்குமின்றி wide spectrum-ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவதே அபத்தம். இதில் ரஜினி பற்றிய கேள்வி எதற்கு? அவர் கட்சி ஆரம்பித்துவிட்டாரா? தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தாரா? அட, குறைந்தபட்சம் அதுபற்றிப் பேசுவது கூட இல்லையே... பிறகு ஏன் அவர் பெயரை உபயோகப்படுத்துகிறார்கள்...
ரஜினி என்ற மூன்றெழுத்தைத் தொடாமல் அவர்கள் இந்தக் கணிப்பை நடத்தியிருந்தால் அதுபற்றிப் பேச ஒருவரும் முன் வந்திருக்க மாட்டார்கள்.
நிறைய முரண்கள், கேள்விகள் உள்ளன இந்தக் கணிப்பில்.
ஏதோ சின்னப்புள்ளத்தனமாக சில குறிப்புகளைக் கொட்டியிருக்கிறார்கள் இந்தக் கல்லூரி மாணவர்கள். அவற்றை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ராஜநாயகத்தின் விசுவாசம், நம்பகத் தன்மையின் லட்சணம் நமக்கும் தெரியும். இவர்களது கணிப்பு இதற்கு முன்பு எத்தனை முறை தலைகீழானது என்பதும் நாம் பார்த்ததுதான்.
இந்தக் கருத்துக் கணிப்பின் பலன் நமது மீடியாவுக்கு ஒருநாள் கழிந்த நிம்மதி... அவ்வளவுதான்!
11 comments:
hi, i read your blog regularly. sadly i must admit even YOU also like other "fans" who appreciate sum1 who praises rajni & gets upset when they say bad or negative about him. Your analysis were always nice & makes sense.... except this one. Hope u doint mind i telling you this
( Al Pachino, Eddie Murphy, Bill Murray, Kevin Spacy, Robin Williams and the list goes on and on ... all of their movies were copied to international standards !!!!) All those movies were initially copied "without paying copy rights or atleast a thanks to the original makers" and now it has shrinked only to few scenes!!! and that is how ladies and gentlemen kamala hassan who was competing with Mic Mohan and Ramarajan for nearly 20 years finally? forcelly! being called as olaganayagan. because he is the only person who copies from all countries, languages without copy rights!!!! ok if some one says many of the Indian movies are made that way, the answer is none of them PRETEND, FAKE OR B.S. like our olakanayakan do..pathetic looser...
நம்மை பல விதத்தில் ஈர்த்த மனிதன் ரஜினியின் மேல் உள்ள அன்பால் சொல்கிறேன் வேறெதுமில்லை.. ரஜினி சார் அரசியலுக்கு வராதிங்க சார், அப்படி வந்தாகூடா சார் காஷ்மீர்ல போட்டியிடுங்க சத்தியமா 100 சதவீதம் உங்களுக்கு தான் வெற்றி! தமிழ் நாட்டில வேண்டாம் சார், கொலகார அரசியல் வாதிங்க, ஈனப்பிறவிங்க சிலர் உங்கலையும் , எங்களையும் அசிங்கப்படுத்திடுவாங்க... தமிழ் நாட்டை/கர்னாடாகாவை/மகாராஷ்டிராவை தவிர்த்து நீங்க எங்க வெணும்னாலும் போட்டியிடுங்க. சார் நீங்க செய்த உதவியெல்லாம் காணாம பொயிடும் சார்... மிடில் கிளாஸ், மற்றும் வறுமை கோட்டுக்கு கீழெ உள்ளவர்களுக்கு உங்கள மாதிரி மனிதன் தான் வேண்டும், அதில் மாற்றம் இல்லை ஆனா எதிரிகள், துரோகிகள் விட மாட்டாங்க சார்... நம் ராஜ்ஜியம் அரசியல் இல்ல சார், இத குறைத்து மதிப்பிடவில்லை மன்னிக்கவும். வேண்டி அழைத்த போது வேண்டாம் என்று சொன்ன நீங்கள் , இப்போதும் வேண்டாம் என்று சொல்லுங்கள்..பிளீஸ். நீங்கள் என்றும் எங்களில் ஒருவனாக இருங்கள் அது போதும். உண்மையான ரஜினி ரசிகன். இந்த கருத்து சுயனலமாக இருப்பின் மன்னிக்கவும் ஆனால் நான் உங்கள் நலம் விரும்பி ஏனெனில் நீங்கள் எங்கள் நலம் விரும்பி. நன்றி. Raj T
ரஜினி நாடளுமன்ற தேர்தலில் பாஜக - ஆதிமுகவுக்கு ஆதரவு கொடுத்த போது ஒரு நிருபர் சொன்ன கமென்ட் ஞாபகம் வருகிறது. "இது தோல்வியுற்றாலும் ரஜினி ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இல்லாமல் தமிழக தேர்தல் இல்லை". இப்ப ரஜினியை இழுக்காமல் கருத்து கணிப்பு கூட இல்லை. இவங்கள விட்டுத் தள்ளுங்க.
***(1)*** ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் அரசியல் வாதி நாய்களுக்கு பயம்!(ஜெயிக்கிரொ இல்லையோ , ஓட்டுக்கள் கன்னாபின்னாவென்று சிதறும்) ***(2)*** ரஜினி அரசியலுக்கு வரவில்லையென்றால் பத்திரிகைகளுக்கு பயம்! (அவரின் படத்தை அட்டையில் போட்டு கல்லாகட்டிய ஈனத்தனமான பத்திரிகைகளுக்கும் அக்சாணி குமுதத்தில் வாந்தியெடுக்கும் நாய், சொரிகுமார், சூ.ராஜி இவங்களுக்கு அடுத்தவெளை சாப்பாடு கிடைக்காது)***(3)*** ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரா!? வந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாமெ என்று ரசிகன் போர்வையில் சில குள்ளனரிகள் ***(4)*** ரஜினி மாதிரி ஒருவர் வந்தாலாவது மாற்றம் வராதா என்று விரும்புவர்கள் சிலர்... எது எப்படியோ என் தனிப்பட்ட கருத்து, 'ரஜினி மேஜிக்'கை அரசியலுக்காக இழக்க தயாரில்லை... சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல கற்பனையான காரணங்களை கூறி வயிறு வளர்த்த அரசியல் வாதிகள், பத்ரிகைகள் (ரஜினி பெயரைச்சொல்லி வியிறுவளர்த்தவர்கள்)இவர்களுக்கு மத்தியில் ஒரு மூன்று மணி நேரம் உலகவாழ் தமிழர்களை ஒன்று சேர்த்த பெருமை ரஜினிக்கு மட்டுமெ.. இப்படிக்கு ரஜினி ரசிகன் Raj T
Dear Observer,
I'm not blindly criticised the survey. Their intention is not good. And this is not an apt time to publish such surveys. That is why I posted that blog.
Anyway thank you for sharing your view on this.
ராஜ்... உங்களைப் போலவே இன்னும் பல நண்பர்கள் நினைக்கிறார்கள். அதற்குக்க காரணம் இன்றைய தலைமுறையிடையே தலைதூக்கியிருக்கும் வக்கிரபுத்தி... கைமாறு கருதாமல் ஒருவர் உதவினாலும், அதில் ஒரு குற்றம் காணுகிற அளவுக்கு விஷம்கிவிட்ட நஞ்சு மனங்கள்.
உங்கள் ஆதங்கத்தில் நியாயமிருக்கிறது.
loyola survey had been utter waste, and totally biased, (especially it leans towards the rulers), but was totally upset that vijay having more fans ( enna koduma saravanan idhu)..what are these medias trying to proove? thalaivar edhir neechal poduvathil vallavar, parkalam indha october enna nadakiradhu nu..but thalaivar podhu vazhkaiku vandhal, pala pudhiyarvagal, nammai pondravargal , nallavargal um podhu vazhkaiku vara kudiya vadikalaga adhu amaiyum..
Dear friend,
The colleges in chennai can't control the donation,dating issues.They never relate the syllabus to day today,future needs.
But find enough time to
do survey to please someone.
Excellant comment dude!
வேரில் வெந்நீர் ஊற்றும் வேலைதான் இது. வேறு என்னத்தை சொல்ல. உங்கள் பதிவு சற்று ஆறுதலாக இருக்கிறது.
- சிம்பிள் சுந்தர்
Post a Comment