Showing posts with label Kamal. Show all posts
Showing posts with label Kamal. Show all posts

Monday, October 20, 2008

இயக்குநர்களின் இயக்குநர் ஸ்ரீதர்!


மிழ் சினிமாவின் எல்லைகளை விரிவடையச் செய்த படைப்பாளிளுள் முக்கியமானவராகக் கருதப்பட்ட இயக்குநர் ஸ்ரீதர் இன்று காலை 10 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஜெமினி என சிகரங்களை இயக்கிய பெருமைக்குரிய ஸ்ரீதர் சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அத்துடன் திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கிக் கொண்டார்.

கடும் உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் அவரை அடையாறு மலர் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

ஒரு சாதாரண வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர், பழைய கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்த தமிழ் சினிமாவுக்கு அறுபதுகளில் புதுரத்தம் பாய்ச்சியவர்.
அதுவரை வசனங்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த சினிமாவை, உணர்வுகளால் வாழ வைத்த அற்புதக் கலைஞன் ஸ்ரீதர்.

அவரது இயக்கத்தில் உருவான கல்யாணப் பரிசையும், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் இன்றும் திரையுலகம் கொண்டாடுகிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள்தான் என்றாலும் அவற்றின் திரைக்கதையில் தெரியும் புத்துணர்ச்சியை வேறு படங்களில் பார்ப்பது அரிது.
நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் தமிழில் போகுமா என்ற சந்தேகத்தோடு சிலர் பார்த்தபோது, அதன் தமிழ் வடிவம் மட்டுமல்ல, தில் ஏக் மந்திர் என்ற பெயரில் அதன் இந்தி வடிவத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கி சாதனைப் படைத்தவர் ஸ்ரீதர்.

1961-ல் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுதினார். அவரால் சூப்பர் ஸ்டார்களையும் இயக்க முடிந்தது, புதுமுகங்களையும் எளிதாக நடிக்க வைக்க முடிந்தது.

இன்று முன்னணி நடிகராகத் திகழும் விக்ரம் தனது வாழ்க்கையைத் துவங்கியது ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் மூலம்தான்!

கமர்ஷியல், கிளாஸிக் என தொட்டது அனைத்திலும் வெற்றி பெற்ற உன்னதக் கலைஞர் ஸ்ரீதர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரஜினி உருவெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரையும் கமல்ஹாசனையும் வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக அமைந்தது.

பின்னர் ஸ்ரீதருக்காகவே ரஜினி துடிக்கும் கரங்கள் எனும் படத்தில் நடித்துக் கொடுத்தார். படம் வணிக ரீதியில் பெரிய வெற்றி. ரஜினிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை அலங்கார் திரையரங்க வளாகத்தில் 90 அடி உயர கட் அவுட் வைத்து அவரை சூப்பர் ஸ்டார் என்று அழுத்தம் திருத்தமாக நிரூபித்தவர் ஸ்ரீதர்.

மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து அவர் இயக்கிய உரிமைக்குரல், மீனவ நண்பன் இரண்டுமே வசூலில் சிகரம் தொட்டவை.

அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பல மைல் கற்களைப் படமாகத் தந்தவர் ஸ்ரீதர்.

சிவாஜி கணேசனின் சிவந்த மண் திரைப்படத்தை தமிழ் திரையுலகம் மறக்கமுடியுமா?

திரையுலகிலிருந்து அவர் முழுமையாக விலகினாலும் அவர் மனம் கடைசி மூச்சு நிற்கும்வரை சினிமாவையே சுவாசித்துக் கொண்டிருந்தது. தனது 78-வது வயதிலும் கூட சினிமாவுக்காக திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதர். இன்றைய முன்னணி இயக்குநர்கள் பி.வாசு, இயக்குநராக இருந்து நடிகராகிவிட்ட சந்தானபாரதி, சிவி ராஜேந்திரன் என பல இயக்குநர்களை உருவாக்கியவர்.

தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெற்றிக் கொடி கட்டியவர் ஸ்ரீதர்.

கலைஞர் இரங்கல்:

ஸ்ரீதரின் மறைவு உண்மையாகவே தமிழ் திரையுலகுக்கு பெரும் இழப்பு என கலைஞர் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

கலையுலகம் கண்ணீர்!

இயக்குநர்களின் இயக்குநரான ஸ்ரீதரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக இயக்குநரும் தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ராம நாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

(with inputs from www.thatstamil.com)

http://www.envazhi.com

Friday, September 26, 2008

கருத்துக் கணிப்பு: ஒரு நாள் கூத்து!


ஜனநாயக நாட்டில் அவ்வப்போது மக்களின் மனதைப் படம் பிடிக்க கருத்துக் கணிப்புகள் நடத்துவதும் அதற்கேற்ப சில நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சகஜம்தான்.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் இத்தகைய கணிப்புகள் சில கருத்துத் திணிப்புகளுக்குக் காரணமாகிவிடுவதுதான் பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. ரஜினிக்கு எதிராக இந்த கருத்துக் கணிப்புகள் வந்துவிட்டதால் இப்படிச் சொல்வதாக நினைக்க வண்டாம். நாம் எந்தக் கணிப்பையும் ஆதரிப்பதில்லை.

பலமுறை இந்தக் கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையாவது திசை திருப்ப உதவியிருக்கின்றன.

இதனால்தான் கருத்துக் கணிப்பு என்ற நடவடிக்கைக்கே தடை போடும் முயற்சியில் இறங்கி உள்ளது தேர்தல் கமிஷன்.

லயோலா கல்லூரி முடிவுகளைப் பொறுத்தவரை, பல முரண்பாடுகள் உள்ளன.

தமிழக அரசின் இலவசத் திட்ட அறிவிப்புகளை 82 சதவிகித மக்கள் வரவேற்கின்றனர்.

ஆனால் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை 52 சதவிகிதம் பேர் எதிர்க்கிறார்கள்.

லயோலாவின் முன்னாள் மாணவரான விஜய்க்கு ரஜினியை விட 0.02 சதவிகித அதிக ரசிகர்கள் ஆதரவு இருக்கிறதாம். சரி... எஸ்.ஏ. சந்திரசேகர் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும். ஆனால் இந்த ரேஸில், விஜய்யைவிட அதிக ரசிகர்களைக் கொண்டவராகக் கூறப்படும் அஜீத் நிலை என்ன?

ரஜினியின் திரை உலகப் போட்டியாளர் கமல்ஹாசன் முதல் 5 இடங்களுக்குள் கூட இல்லையா? விஜய்காந்துக்கு (10 சதவிகிதமாம்!) உள்ளதை விட கமல்ஹாசனுக்கு ரசிகர் பலம் குறைவு என்று சொல்ல வருகிறதா... இந்தக் கணிப்பு? இது ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம்தானா...

அதிமுக - திமுகவை விட, ரஜினி –கமலை விட இவர்கள் முக்கியமாக எடுத்துக் கொண்டது விஜய்காந்தைத்தான்.

இல்லாவிட்டால் ஒருபடமும் ஓடாத, வரிசையாக 7 மெகா பிளாப்புகளைக் கொடுத்த விஜய்காந்துக்கு கமல்ஹாசனை விட அதிக செல்வாக்கு என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன?

6.5 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்துக்கு 2700 பேரை மட்டுமே பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்த சாம்ப்ளிங் அடிப்படை மகா தவறான ஒன்று.

எந்த ஒரு இலக்குமின்றி wide spectrum-ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவதே அபத்தம். இதில் ரஜினி பற்றிய கேள்வி எதற்கு? அவர் கட்சி ஆரம்பித்துவிட்டாரா? தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தாரா? அட, குறைந்தபட்சம் அதுபற்றிப் பேசுவது கூட இல்லையே... பிறகு ஏன் அவர் பெயரை உபயோகப்படுத்துகிறார்கள்...

ரஜினி என்ற மூன்றெழுத்தைத் தொடாமல் அவர்கள் இந்தக் கணிப்பை நடத்தியிருந்தால் அதுபற்றிப் பேச ஒருவரும் முன் வந்திருக்க மாட்டார்கள்.
நிறைய முரண்கள், கேள்விகள் உள்ளன இந்தக் கணிப்பில்.

ஏதோ சின்னப்புள்ளத்தனமாக சில குறிப்புகளைக் கொட்டியிருக்கிறார்கள் இந்தக் கல்லூரி மாணவர்கள். அவற்றை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ராஜநாயகத்தின் விசுவாசம், நம்பகத் தன்மையின் லட்சணம் நமக்கும் தெரியும். இவர்களது கணிப்பு இதற்கு முன்பு எத்தனை முறை தலைகீழானது என்பதும் நாம் பார்த்ததுதான்.

இந்தக் கருத்துக் கணிப்பின் பலன் நமது மீடியாவுக்கு ஒருநாள் கழிந்த நிம்மதி... அவ்வளவுதான்!

Sunday, September 21, 2008

சிவாஜியை மிஞ்சியதா தசாவதாரம்?!


கமல்ஹாசனின் தசாவதாரம் இன்று 100-வது நாள் விழா கொண்டாடுகிறது. அதைப் பற்றி என்ன சொன்னாலும் விமர்சனமாகிவிடும் என்பது தெரியும். இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியாது நம்மால்.

ஆளவந்தானுக்குப் பிந்தைய கமல் படங்களில் ஹேராம், விருமாண்டி போன்றவை பேசப்பட்டாலும் வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவையே அவருக்குத் தந்தன.
பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ்... இந்த 10 ஆண்டுகளில் கமலின் தோல்விப் பட வரிசை அவரது சாதனைகளை மிஞ்சும் அளவுக்குப் பெரியதுதான்.

வேட்டையாடு விளையாடு ஓரளவுக்கு ஓடியது. இந்நிலையில் ஏகப்பட்ட குறைகள், லாஜிக் மீறல்களுடன் வந்தது தசாவதாரம். கமலும் அவற்றை மறுக்கவில்லை.

ஆனாலும் வசூல் ரீதியாக கமலுக்கு நிறைவைத் தந்த படம் தசாவதாரம்.

இன்று அந்தப் படத்தின் 100-வது நாள் விழா.

எப்படியும் ஒரு தியேட்டரிலாவது சில்வர் ஜூப்ளி கொண்டாடிவிடும் இந்தப் படம் என்ற நம்பிக்கை கமல் ரசிகர்களுக்கு.

இருக்கட்டும்...

தசாவதாரம் 100 நாள் கொண்டாடியதில் நமக்கு எந்த அதிருப்தியும் இல்லை. சச்சின் போன்ற படங்கள் 200 நாள் கொண்டாடும்போது தசாவதாரம் கொண்டாடக் கூடாதா என்ன...?

நம் விமர்சனம் கமல் மீதல்ல...

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் மீதுதான். அவருக்கு சிவாஜி படத்தின் பிரம்மாண்டம் மற்றும் வெற்றியைப் பார்த்து வந்த காய்ச்சல் இருக்கிறதே... அது டபுள் நிமோனியாவை விட அதிகம். அப்போதே தனது விஷமத்தனத்தை ஆரம்பித்துவிட்டார்.

சிவாஜியின் பிரமாண்டத்தை மிஞ்சும் விதத்தில் ஒரு படம் எடுக்கப் போகிறேன் என ஆரம்பித்து, ரஜினி படத்தை விட ஒரு ரூபாயாவது அதிக விலைக்கு என் படத்தை விற்பேன் (நான் கற்பனையாக சொல்லவில்லை... ஆதாரங்களோடுதான் சொல்கிறேன்!!) என்று சபதம் போட்டது வரை பல கதைகள் நமக்குத் தெரியும்.

ஆனால் அதற்கும் இவருக்கு சிவாஜிதான் வழிகாட்டியது. பின்னே... இவரிடம் ஏது சொந்த சரக்கு... இவர் கம்பெனி பேனரே காப்பிதானே. அதற்காக அமெரிக்காவின் ஆஸ்கார் அகாடமி இவரைக் காய்ச்சி எடுத்ததும், பிறகு அந்த பெயரை இவர் இழந்ததும் தனிக்கதை. அது முழுமையாக நமக்கும் தெரியும், பிறகு சொல்கிறேன்.

இப்போது சிவாஜியைவிட தசாவதாரம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறிவருகிறார் இந்த ‘வெறும்’ ரவிச்சந்திரன்.

அது உண்மைதானா...

சில விவரங்கள்:

சென்னையில் 6 திரையரங்குகளில் தசாவதாரம் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வெளியே மாயாஜாலில் தொடர்ந்து 100-வது நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.

சிவாஜி உலகமெங்கும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்களைத் தாண்டியது, நல்ல வசூலுடன்.

உலகெங்கும் 121 திரையரங்குகளில் 100-வது நாள் விழாவைக் கொண்டாடிய ஒரே இந்தியத் திரைப்படம் சிவாஜி மட்டுமாதான் (சிவாஜி தமிழ் 108 திரையரங்குகளில் 100 நாள், தெலுங்கு 13 திரையரங்குகள்).

வெளிநாடுகளில் ஓரிரு வாரங்களைத் தாண்டுவதே இந்தியத் திரைப்படங்களுக்கு பெரும் சிரமம். ஆனால் 16 வெளிநாட்டுத் திரையரங்குகளில் சிவாஜி 100 நாட்களைக் கடந்து ஓடியது.

மலேஷியா – 6 தியேட்டர்கள்
சிங்கப்பூர் – 2 தியேட்டர்கள்
அமெரிக்கா – சியாட்டில் சிட்டி
மஸ்கட் – ரூபி சினிமா
தென்னாப்பிரிக்கா – 2 தியேட்டர்கள்
கனடா – 2 தியேட்டர்கள்
இலங்கை – கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 100 நாள்

சிவாஜி வெள்ளி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:

சென்னை: பால அபிராமி – பகல் காட்சி (சென்னையில் 17 தியேட்டர்களில் ரிலீசாகியிருந்தது)
காஞ்சிபுரம்: பாபு – 4 காட்சிகள்
அம்பத்தூர்: ராக்கி – 4 காட்சிகள்
பெங்களூர் பிவிஆர் – 2 காட்சிகள்

மலேஷியாவில் சிவாஜியின் வசூல் சாதனை மகத்தானது. எட்டு வார கலெக்ஷன் மட்டும் 2,422,788 டாலர்கள். கிட்டத்தட்ட ரூ. 11 கோடியே 63 லட்சம்!
ஆனால் தசாவதாரம் வசூல் 7 கோடியே 80 லட்ச ரூபாய்தான்.

பிரிட்டன் பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே திரைப்படம் சிவாஜி மட்டுமே. முதல்வாரம் 9-ம் இடத்தில் இருந்தது சிவாஜி. பிரிட்டனில் மொத்தம் ஏழு வாரங்கள் ஓடியது சிவாஜி. மூன்றாவது வார முடிவில் சிவாஜியின் வசூல்: 5 கோடியே 74 லட்சம் ரூபாய்.

ஆனால் தசாவதாரம் டாப் டென் வரிசைக்குள்ளும் வரவில்லை. வசூலித்ததோ: 4 கோடி ரூபாய்தான், அதுவும் கடைசிநாள் தூக்கப்படும் வரையிலான வசூல்!

எல்லாம் சரி... இந்தப் படம் எதுக்குன் னுதானே கேக்குறீங்க... தசாவதாரம் 100-வது நாள் விழா கொண்டாட்ட லட்சணம்...(நன்றி அருண்) உலகத்தரம் கொடிகட்டிப் பறக்குதுல்ல, மொழியிலும், கலாச்சாரத்திலும்!!

நன்றி: www.rajinifans.com,

Saturday, September 13, 2008

ராமானுஜதாஸன் கமல்ஹாசன்!


கமல்ஹாசன் என்ற திரைக் கலைஞனைத் தாக்கி எழுதும் எண்ணம் எப்போதும் எனக்குக் கிடையாது. ஆனால், அந்தப் பெரிய நடிகரின் சமூகப் பார்வை பற்றிய என்னுடைய மதிப்பீடுகளின் ஒரு பகுதிதான் இது. அவர் நடிப்பைப் பற்றி மேலான விமர்சனங்களை நிறைய வைத்தவன் என்பதால் இந்த விமரிசனத்தை வைப்பதிலும் தவறில்லை எனக் கருதுகிறேன்.

கமலின் இன்னொரு உலகம் பகுத்தறிவு பேசும் நாத்திக உலகம். இந்த தளத்தில் இவருக்கு நிறையவே நண்பர்கள் உண்டு. ஆனால் வசதிக்கேற்ப கடவுளை துணைக்கழைக்கும் இவரது நவீன பெரியாரிஸம்தான் நமக்குப் புரியவில்லை. இது பலருக்கும் தெரியும்.

ஆனால் என்ன காரணத்திலாலோ அவரது அத்துமீறல்களுக்கு மட்டும் சிலர் சிறப்புச் சலுகை காட்டுகின்றனர். மீடியாக்கள் அவரை செல்லப் பிள்ளையாய் கொண்டாடுகின்றன, கழுத்தில் தமிழன் வில்லை மாட்டி!

இது... அவரது கோணல்களைப் படம் பிடிக்கும் நேர்ப் பார்வை. அவ்வளவுதான்...

முன்னாள் பத்திரிகையாளர் (நமக்கு அவர் அப்படித்தான்!) ஒருவர் கமல்ஹாசனை தனது பிளாக்குக்காக சமீபத்தில் பேட்டி எடுத்திருக்கிறார்.

அதில்தான் கமல்ஹாசனின் பகுத்தறிவு பளபளக்கிறது!

இதோ அதில் ஒரு பகுதி...

...உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள். அவங்க தப்பா எடுத்துக்கலைன்னா ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்.திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல.

ஏன் தெரியுமா? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனும்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான். இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும்!


ஆஹா... என்ன அரிய கண்டுபிடிப்பு!

இந்த நடுகல்லுக்கும் தமிழனின் நாட்டார் தெய்வங்களுக்கும் உள்ள தொடர்பை எத்தனை லாவகமாக மறைக்க முயல்கிறார் பாருங்கள்!

ராமானுஜரை தெய்வமாக வழிபடுகிறார்கள் இவரது சமூகத்தினர். அப்படியெனில் ராமானுஜக் கடவுளையும் ஒப்புக் கொள்கிறாரா இந்த ‘ஸ்ரீலஸ்ரீ கமலானந்த ஸ்வாமிகள்’!

அது கிடக்கட்டும்... ராமானுஜரை கடவுளாக இவரது சமூகம் கொண்டாடுகிறது. அதே ராமானுஜர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏகப்பட்ட நல்ல விஷயங்களைச் செய்ததாகக் கூறுகிறார்கள். அப்படியெனில் இவரது சமூகத்தினர், இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களை சகோதரர்களாக அல்லவா ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்! மாறாக, இன்றைக்கும் அவர்கள் நின்ற இடத்தை சாணம் தெளித்து தீட்டுக் கழிக்கிறார்களே... இந்த முரண்பாட்டுக்குப் பெயர்தான் பகுத்தறிவா...

ஆதி சங்கரர் மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதிதான்... இவர்கள் சொல்லும் கதைகளின்படி. ஆனால் காஞ்சிபுரத்தில் நன்கு அறிமுகமான தலித் ஒருவனால் சங்கர மடத்து இரண்டாம் கட்டுக்குள் இன்னும்கூட நுழைய முடியாத நிலைதானே...

இதுபற்றியெல்லாம் தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் கமல் பிரஸ்தாபிக்கலாமே... ஆனால் இன்றும் ராமானுஜதாஸன்... ரங்கராஜ நம்பியாக தன்னைக் காட்டிக் கொள்வதில்தானே இவருக்கு அக்கறை இருக்கிறது... வட கலை, தென்கலை என செத்துப்போன சமாச்சரங்களுக்கு விஞ்ஞான சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் இந்த திறமையான கலைஞர் என்பதுதான் வேதனை.

தலித்துகள் என்றால் ஆப்ரிக்கர்களைவிட கருப்பாக... பூவராகன்களாகத்தான் இருப்பார்கள் என்பது இவர் உலகத்து நியதி போலும்! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கற்பனையில் கூடவா நல்ல உருவம் கொடுத்துப் பார்க்க முடியாது!

இதே கமல்ஹாசன் முன்பொருமுறை விகடனுக்கு அளித்த பேட்டி...

நான் எப்போதும் என்னை பிராமணனாக அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன். என் பெண்ணுக்குக் கூட பள்ளியில் சாதிப் பெயர் குறிக்க மறுத்துவிட்டேன்.

சின்ன வயதில் எங்கப்பா கூட கோயிலுக்குப் போய் கச்சேரியெல்லாம் கேப்பேன். ஆனா, எனக்கு சுட்டுப்போட்டாலும் பிராமணத்தனம் வராது. சுட்டுப் போட்டாலும் இந்த மந்திரங்கள் தெரியாது. அதைக் கத்துக்கும் ஆர்வமும் எனக்கில்லை... நான் படிச்சதெல்லாம் நான்-பிராமண இலக்கியங்கள்தான்!


ஆனால் இன்று கமல் அந்த பிளாக்கருக்கு அளித்துள்ள பேட்டி...

...ஆமாம், எனக்கு விஷ்ணு ஸகஸ்ரநாமம் முழுசா தெரியுமே... (கொஞ்சம் சொல்லிக்காட்டுகிறார்). சுப்ரபாதம் முழுசா தெரியும். திருப்பல்லாண்டு கூட தெரியும். எனக்கு அபிராமி அந்தாதி தெரிஞ்சதினாலதான் என்னால் குணா படத்தில் அதை சொல்ல முடிஞ்சுது.

இதுக்கு காரணம் டி.கே. சண்முகம் அண்ணாச்சி. குழந்தையாக இருந்தபோது அவருடைய நாடக குழுவில இருந்தேன். ஊர் ஊரா போவோம். அப்ப கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போவார். எந்த கோவிலுக்கு போறோமோ அந்த பாடல் சொல்லணும். அப்படித்தான் தேவாரம், திருவாசகம் படிச்சேன். பிரபந்தத்தில எனக்கு பல பாடல்கள் தெரியும்... (அபிராமி அந்தாதியிலும், திவ்யபிரபந்தத்திலும் சில பாடல்கள் சொல்லிக்காட்டினார்...)


ஏன் இவ்வளவு முரண்கள் கமல் அவர்களே...

மூட நம்பிக்கைக்கு எதிர்ப்பு என்று கூறிக்கொண்டே நீங்கள்தான் எத்தனை மூடத்தனங்களை, முரண்களை உங்களுக்குள் கொண்டிருக்கிறீர்கள்...

தம் வசதிக்காக மரபுகளை உடைத்துக் கொண்டு வாழ்வதற்குப் பெயர் பகுத்தறிவல்ல...

மரபுகளும், சமூக விதி மீறல்களும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்காகப் பயன்படும்போதுதான் அது புரட்சி. மற்றபடி சொந்த வசதிக்காக, ஒழுக்க மீறல்களுக்காக அவற்றைப் பயன்படுத்தும்போது, அது சுயநலமாகிறது!

இதை நமது ‘பச்சைத் தமிழர்கள்’ இனியாவது புரிந்து கொள்வார்களா... அல்லது பிரிவினை வளர்த்தாலும், நாகரீகமாக சாதியம் பேசினாலும் அவர் நம்மாளு என்று அனுசரித்துக் கொள்வார்களா... தொல் திருமாக்கள்தான் சொல்லவேண்டும்!

குறிப்பு: ரஜினிக்கு கமல் நெருங்கிய நண்பர். ரஜினி மிகவும் மதிக்கும் ஒருவரைப் பற்றி இப்படி எழுதலாமா என பின்னூட்டம் எழுதத் தயாராக உள்ள நண்பர்களுக்கு... அவர்களின் நட்புக்கும், இந்தக் கருத்துக்கும் சம்பந்தமில்லை. சொல்லப்போனால் கமல் என்ற நடிகரின் மீதான விமர்சனம் அல்ல இது. நடிகன் என்ற வட்டம் தாண்டிய கமலின் சமூகப் பார்வை மீதான விமர்சனம் மட்டுமே!

Friday, September 5, 2008

கற்பழிப்புக்குப் பரிகாரம் மன்னிப்பா?

வேறு வழியில்லை... நாம் சும்மா இருந்தாலும், இந்த விவகாரத்தை எப்படியாவது எழுதுப்பா என கலைஞானி கமல்ஹாசனின் ரசிகமணிகள் ஓயாமல் நமக்கு அன்புக் கட்டளை இட்ட வண்ணம் உள்ளனர்.

கமலுக்கு எதிரானதல்ல இந்த பதிவு. அந்த நோக்கமும் நமக்கில்லை. போகிறபோக்கில் ஓரிரு உண்மைகளைச் சொல்வதற்கு மட்டுமே இதுவரை நாம் கமல் பெயரை இங்கே உபயோகித்திருக்கிறோம்.

இந்தச் செய்தியில் 100 சதவிகித உண்மை இருப்பதால், வம்புராசா பாணியில் இதை கிசுகிசுவாகக் கூட வெளியிட வேண்டிய அவசியமில்லை என்பதால் இன்னொரு நண்பரின் பிளாகிலிருக்கும் இந்த விஷயத்தை நேரடியாகவே தந்துவிடுகிறேன் (திருப்தியா...!)

செய்தி (தமிழ்சினிமா):

உலக நாயகன் கமல்ஹாசனின் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் 3 பேர் சமீபத்தில் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர். கமல்ஹாசனே இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் இதற்கு காரணம் என்ன? என்று தெரிவிக்கப்படவில்லை.

தற்போது மன்ற நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது. நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கு முன்தினம் நடந்த அந்த அசிங்கமான சம்பவம்தான் இதற்கு காரணமாம். ஆம்...!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்துக்கு சம்பவத்தன்று ஒரு அழகான பெண் வந்தார். அலுவலலகத்தில் அப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகள் இருந்துள்ளனர்.

அந்த பெண் தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும், கமல் படத்தில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு கமல் வாய்ப்பு கொடுப்பாரா? என்று அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து மன்ற நிர்வாகி அந்த பெண்ணை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று உனக்கு என்னென்ன திறமை இருக்கிறது? ஒரு முறை நடித்து காட்டு என்று கூறியியிருக்கிறார். அந்த பெண்ணும் வெகுளித்தனமாக, வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஆடிக்காட்டியிருக்கிறார். பின்னர் கொஞ்சம் கவர்ச்சியாக ஆட்டம் போடு என்று கூறி பெண் அணிந்திருந்த ஆடைகளை இவராகவே அவிழ்த்திருக்கிறார்.

இதனால் அந்த பெண் ஷாக் ஆனார். நிர்வாகி மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே சுதாரித்து வெளியேறுவதற்குள் நிர்வாகி அத்து மீறத் தொடங்கியுள்ளார். சினிமாவுக்கு வந்து விட்டால் இதெல்லாம் சகஜம். பல பேரை அனுசரித்துப் போக வேண்டும் என்று பேசியபடியே தனது அத்துமீறல் செயல்களைத் தொடங்கினார். அப்போது மேலும் 2 மன்ற நிர்வாகிகளும் அறைக்குள் புகுந்து உறவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

காரியம் முடிந்ததும், போய் ஒரு வாரம் கழித்து வா... சார் வந்ததும் கேட்டுவிட்டு பதில் சொல்கிறோம். இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என்று கூறியியிருக்கிறார்கள்.
பெண்ணும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து வெளியியேறியிருக்கிறார். வெளியேறும் முன்பு புத்திசாலித்தனமாக நிர்வாகியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டாராம். பின்னர் அந்த போனில் இருந்த நம்பர்களுக்கெல்லாம் பேசி, விஷயத்தைச் சொல்ல, கமல்ஹாசனின் காதுகளுக்கு விஷயம் எட்டியது.

இதையடுத்து அந்த பெண்ணை நேரில் சந்தித்த கமல்ஹாசன் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டதுடன், மன்ற நிர்வாகிகளை நீக்கி நடவடிக்கை எடுத்ததாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.


- நண்பர் சுந்தர் எழுதியிருந்தது போல இதே விஷயத்தில் ஒரு ரஜினி மன்ற நிர்வாகியின் பெயரோ அல்லது எங்கோ ஒரு கிராமத்தில் ரஜினி மன்ற உறுப்பினராக ஒருகாலத்தில் இருந்த யாரோ ஒரு நபரோ சம்பந்தப்படிருந்தால்கூட ரஜினியின் தலைதான் உருண்டிருக்கும்.
இங்கோ கற்பழிப்புக்கு பிராயச்சித்தம் மன்னிப்போடு முடிந்து விட்டிருக்கிறது.
தமிழ்ப் பெண்களுக்கு ரொம்பத்தான் பெருந்தன்மை!

Monday, September 1, 2008

ரஜினியைப் போன்ற சிறந்த மனிதனைப் பார்த்ததில்லை! – பாரதிராஜா


“அவரோடு நான் சண்டை போட்டிருக்கிறேன்... அவரை பொது மேடைகளில் விமர்சித்திருக்கிறேன். பலமுறை கருத்து வேறுபட்டிருக்கிறேன். ஆனால் பதிலுக்கு என்னை ஒரு முறைகூட அவர் திட்டியதோ விமர்சித்ததோ கிடையாது. ஏதாவது அவசரம் என்று தகவல் சொன்னால் மாறாத அன்போடு இப்போதும் முதலில் வந்து நிற்கிறார். அவரைப் போன்ற சிறந்த மனிதனை இந்த சினிமாவில் மட்டுமல்ல, சமூகத்திலும் கூடப் பார்த்ததில்லை...”
-சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில் சொன்ன கருத்துக்கள் இவை.

மலேஷியாவில் இன்று நடக்கும் தன் மகள் ஜனனியின் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கும் பாரதிராஜா, நாளை இரவு ஓட்டல் இஸ்தானாவில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் தன் முதல் படத்தின் நாயகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினி – கமல், இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருந்து தருகிறார்.

ஜனனி – ராஜ்குமார் தம்பிதுரை திருமணத்தில் கலந்து கொள்ள நேற்று இரவே விமானத்தில் மலேஷியா புறப்பட்டுச் சென்றுவிட்டார் சூப்பர் ஸ்டார். அங்கு இரு தினங்கள் தங்கியிருக்கும் ரஜினி, நாளை நடைபெறும் இந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

“இது எங்கள் 30 ஆண்டுகால நட்புக்கு ஒரு சின்ன மரியாதை. கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திரைக் கலைஞர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான் என்பதை நிரூபிக்கத்தான் இந்த விருந்து...” என்கிறார் பாரதிராஜா.

நல்லா சத்தமா சொல்லுங்க பாரதிராஜா அவர்களே... இதே விருந்தில் கலந்துகொள்ள வரும் நடிகர் சங்க நாட்டாமைகள், பெரியார் வேடம் போட்டு நிஜத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் ‘டகால்டி’ பேர்வழிகளுக்கு உரைக்கிற மாதிரி!

Sunday, August 31, 2008

இந்த திண்ணைப் பேச்சுக்காரர்களிடம்...


இந்தப் பதிவைப் படிக்கும் முன்... ஒரு சின்ன வேண்டுகோள்!

ரஜினி –கமல் இருவரில் யார் உசத்தி என்று அலசுவதற்கல்ல இந்தப் பதிவு. இந்த இருவரும் நண்பர்களாகவே இருந்தாலும், உண்மையில் யார் முதலிடத்திலிருக்கத் தகுதியானவர் என்பதை அலசும் பதிவு இது. இதற்கென்ன இப்போது அவசியம் என்பவர்கள் மேலே தொடருங்கள்.

கமல் ரசிகர்களும் படியுங்க... நியாயம் புரியும்!



இப்போது பெரும்பாலான பத்திரிகைகள், இணைய தளங்களை சற்றே கூர்ந்து நோக்குபவர்கள், மீடியா... இல்லையில்லை... பத்திரிகையாளர்களின் வக்கிர புத்தி என்ன என்பதை வெகு எளிதாக உணரலாம்.

இதுவரை – கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் – ரஜினி – கமல் என்று எழுதப்பட்டு வந்த Ranking-ஐ திருப்பிப் போட முயற்சித்து வருகிறார்கள், ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல!

மேலோட்டமாகப் பார்க்கிறபோது இதில் என்ன இருக்கிறது இந்த அளவு அலட்டிக் கொள்ள... இந்த இருவருமே ஒரே அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள்தானே... என்று சிலர் கேட்கக் கூடும்.
அதற்கு ஒரு சின்ன விளக்கம்...

சில மாதங்களுக்கு முன், கமல்ஹாசனின் தசாவதாரம் வருமா.. வராதா என்ற சூழலை மீடியா உருவாக்கிருந்த நேரம் அது. சிவாஜி தந்த வெற்றியில் எங்கும் எதிலும் ரஜினி என்ற சூழ்நிலை.

அப்போது, கமல்ஹாசன் தனது நெருக்கமான, சொல்லப்போனால் அந்தரங்கமான காராயதரிசி போன்ற ஒருவரிடம் குறைபட்டுக் கொண்டார் இப்படி... (இது ஜூவி கழுகு டைப் கப்ஸா இல்லை... உயிருள்ள ஆதாரங்களுடன் கூடிய உண்மை!!)

‘என்னய்யா இது... நானும் இவ்வளவு முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். வேணும்னா தோல்விப் படம் தர்றோம்... வித்தியாசமா பண்ண முயற்சிக்கிறேன். மீடியாக்காரங்க நம்மகிட்ட நல்லா பேசறாங்க... நம்ம படத்தைப் பத்தி நல்லாதான் எழுதறாங்க... ஆனா இன்னும் எவ்வளவு நாளைக்கு என்னை இரண்டாமிடத்திலேயே வைத்திருக்கப் போகிறார்கள்? இருபது வருஷமா ரஜினி – கமல்னுதான் எழுதறாங்க... இந்த ரேங்கிங்ல எப்பதான் மாறுதல் வரும்?’

அடுத்த நாளே, கமல் அலுவலகத்திலிருந்து போன் கால்கள் முக்கிய பத்திரிகையாளர்களுக்குப் பறந்தன. கமல்ஹாசனை அவர்கள் தனித் தனிக் குழுவாகப் போய் பார்த்ததும் தசாவதார அல்வா வாங்கி வந்ததும் தனிக் கதை.

சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த மீடியா சந்தர்ப்பவாதிகள், இப்போது தங்கள் விஷமத்தனத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்: சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்காக நீண்ட நாள் காத்திருந்த கமல் அதை தசாவதாரத்தில் பெற்று விட்டார்! (சிஃபி)
இன்னொருவர்: ரஜினி-கமல் என்ற ரேங்கிங்கில் தற்போது மாற்றம். தசாவதாரமும், குசேலனும் இந்த வரிசையை மாற்றிப் போட்டிருக்கின்றன (தினமலர்).
அடுத்தவர்: இனி கமல் Vs ரஜினி! (வாடகை கன்டன்டில் காலம் தள்ளும் எம்எஸ்என், யாஹூ!)


இன்னும் இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

இது நியாயமா... யோசித்துப் பாருங்கள்!

சினிமா என்பது கலை என்ற நிலையைத் தாண்டி வெகு காலமாகிவிட்டது. இங்கு வியாபாரம்தான் பிரதானம். அதன்பிறகுதான் கலை... கொலை எல்லாம்.
வியாபாரத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் ரஜினி என்றுமே முதலிடத்தில்தான் நிற்கிறார். முன்பே நாம் சொன்னதுபோல, ரஜினிதான் இன்றைக்கு இந்திய சினிமாவின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார் வெளிநாடுகளில்.

வெளிநாட்டில் நூறு நாட்களைக் கடந்து ஓடியவை ரஜினியின் படங்கள் மட்டும்தான்... மற்ற நடிகர்களின் வெற்றிப் படங்கள் கூட ரஜினியின் சுமாரான படம் என்று மீடியாவால் வர்ணிக்கப்பட்ட படங்களை நெருங்க முடியாது. அப்படி ஒரு சாதனை.

அட... நடிப்பென்று வந்தாலும் ரஜினிக்கு இணை கிடையாது. இன்றும் கூட ரஜினியின் அருமையான நடிப்பாற்றலை வியந்து பேசுகிறார் தங்கர் பச்சான். அவருக்கு மிகப் பிடித்த இரு படங்கள் அண்ணாமலை மற்றும் பாட்ஷா.

ஒரு ஆக்ஷன் ஹீரோ அழுதால்கூட ரசிக்க முடியும். ஆனால் ஒரு ரொமான்டிக் ஹீரோ சண்டை போட்டால்கூட அது டான்ஸ் மாதிரிதான் தெரியும் – இது நான் சொல்வதல்ல... நடிப்புச் சக்ரவர்த்தி என ரஜினி புகழும் அமிதாப்பச்சன் சொன்னது!

இன்றும் இயக்குநர் விக்ரமன் பிரமிப்போடு இப்படிக் கூறுகிறார்:

என்னுடைய வானத்தைப் போல படம், ரஜினி சாரின் படையப்பாவை முந்தியதாக குமுதத்தில் ஒரு செய்தி போட்டார்கள். அதை உடனே மறுத்து அறிக்கை கொடுத்தேன். காரணம் படையப்பா வசூலில் 20-ல் ஒரு பங்குதான் வானத்தைப் போல. இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

அதே போல.. பாபாவை ஒரு தோல்விப் படமென்று என்னால் ஒருபோதும் கூற முடியாது. அந்தப் படத்தில் எல்லா அம்சங்களுமே சிறப்பாக இருந்தன. நியாயமாக ரஜினியின் ரசிகர்கள் அதை நன்றாக ஓட வைத்திருக்க வேண்டும். பத்திரிகைகளில் வருவதை மட்டுமே நம்பிக்கொண்டு, படத்துக்கு போதிய ஆதரவளிக்காமல் விடுபவர்கள் எப்படி அவரது தீவிர ரசிகர்களாவார்கள்? சொல்பவர்கள் பேச்சைக் கேட்காமல் யோசித்துப் பார்த்தால் புரியும் நான் சொல்வது...

பாபாவுக்கு பணத்தை ரஜினி சார் திருப்பித் தந்தார் என்ற செய்தி எனக்குக் கிடைத்த போது மிகவும் வருத்தப்பட்டு ரஜினி சாரிடம் என் உணர்வுகளைச் சொன்னேன். நான் இந்த அளவு பேசக் காரணம், அடிப்படையில் ரஜினி சாரின் அத்தனை படங்களும் குடும்பம் சார்ந்தவை. குடும்பத்தோடு பார்த்து மகிழக் கூடியவை... ரஜினியோடு நான் யாரையும் ஒப்பிட மாட்டேன். அவர் வழி தனி வழி... அவர் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான்!”

-என்ன செய்வது... சினிமாவிலேயே இருக்கிற ஒருவருக்குத் தெரிந்ததை விட, தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என பிதற்றும் ஒரு கும்பல் இப்போது கமல் – ரஜினி என எழுத ஆரம்பித்துள்ளது.

இன்றைக்கு ரஜினி கவுர வேடத்தில் தோன்றிய ஒரு படத்தை சதி செய்து, உண்மைகளை மறைத்து தோல்விப் படமாகக் காட்டிவிட்டதால் அவரது மதிப்பு குறைந்துவிடுமா... அல்லது வசூல் சக்கரவர்த்தி அந்தஸ்து இறங்கிவிடுமா...

குசேலன் படத்தில இப்போதும் பிரமிட் சாய்மிராவுக்கு லாபம்தான். இதை எப்போதும் சொல்ல முடியும், எங்கேயும் சொல்ல முடியும். ஒரு சில தியேட்டர் உரிமையாளர்கள் பொய்க் கணக்கு காட்டி நஷ்டஈடு வாங்குவதில் குறியாக இருக்கிறார்கள். (இவர்களும் அடுத்த ரஜினி படம் வெளியாவதற்குள் தியேட்டர்களை சாய்மிராவுக்கோ ஆட்லேப்ஸூக்கோ விற்றுவிட்டு ஓடப் போகிறவர்கள்தான்.)

அதனால் இந்த ஜுஜுபி மேட்டருக்காக ரஜினியை ஒரு படி இறக்கி, தகுதியில்லாத ஒருவரை மேலேற்றப் பார்ப்பது என்ன நியாயம்?

ஆளவந்தான் தொடங்கி, மும்பை எக்ஸ்பிரஸ் வரை வெளியான கமலின் தோல்விப் படங்களுக்காக அவரை ஒவ்வொரு படியாக இறக்கிக் கொண்டே போயிருந்தால், இன்று தமிழ் சினிமாவின் கடைசிப் படியில் அல்லவா நின்று கொண்டிருந்திருப்பார் கமல்ஹாசன்!