Showing posts with label Ajith. Show all posts
Showing posts with label Ajith. Show all posts

Wednesday, October 22, 2008

ரஜினி வழிதான் நம்ம வழியும்!


வ்வொரு படத்தின் வெளியீட்டுக்கு முன் அல்லது வெளியான அடுத்த நாள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது அஜீத்தின் பாணி.

முன்பெல்லாம் இந்தமாதிரி சந்திப்பின் போது நிறைய பேசுவார் அஜீத். ஆனால் அந்தப் பேச்சின் ‘பலன்’களை நிறைய அனுபவித்து விட்டதாலோ என்னமோ இப்போது முழுமையாக அடக்கி வாசிக்கிறார்.

ஆனால் ஒவ்வொரு பத்திரிகையாளரிடமும் நிறைய நேரம் தனிப்பட்ட முறையில் பேசுகிறார், குடும்பம், உடல்நிலை, பொருளாதார நிலை, அவரது எண்ணங்கள் இப்படி நிறைய... ஆனால் எதுவும் பத்திரிகையில் போடுவதற்கல்ல!

ஏகன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதையொட்டி 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு சென்னை அடையாறு பார்க் ஷெராட்டன் ஓட்டலில் விருந்து கொடுத்தார் அஜீத். மாலை 6 மணிக்கு ஆரம்பித்த இந்த சந்திப்பு இரவு 10 வரை நீண்டது.
பத்திரிகையாளர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட அஜீத் எதுவும் பேச மறுத்துவிட்டார்.

அது என்ன தனித் தனியாக பேசுகிறீர்கள்... அதையே மொத்தப் பேருக்கும் சேர்த்துப் பேசினால் என்ன? – அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன்.

அது வந்து சார்... மைக் பிடிச்சி நான் பேச ஆரம்பிச்சாலே, நான் சொல்ல வந்த விஷயத்தை திசை திருப்பிடறாங்க. இதுகூட நான் ரஜினி சார்கிட்டருந்து கத்துக்கிட்டதுதான். நான் தெரிவிக்க நினைக்கிறது ஒரு விஷயமா இருக்கும். ஆனால் மக்களைச் சென்று சேரும்போது அதுவே வேறு செய்தியாக இருக்கும்.

இப்படித்தான் என் பெயர் தேவையில்லாத சிக்கலில் சிக்கிக் கொண்டது சில ஆண்டுகளுக்கு முன். இப்போதுதான் அந்த மாதிரி வீண் வம்புகளில் சிக்காமல் இருப்பது எப்படின்னு கத்துக்கிட்டேன்.

ரஜினி சார் ஒருமுறை என்கிட்ட இப்படிச் சொன்னார்: நிறைய செய்ங்க... குறைவா பேசுங்கன்னு. நம்ம தலைவர் வழிதான், என் வழியும். அவர் சொன்னதைத்தான் இப்போ கடைப்பிடிக்கிறேன். அவர் கொடுத்த இமாலயன் மாஸ்டர்ஸ்தான் இப்போ என்னோட குரு.

இப்போ உங்ககிட்ட நான் பேசின இதே விஷயங்களை பிரஸ் மீட்ல பேசியிருந்தா, இதை எப்படியெல்லாம் கொண்டு போயிருப்பாங்கன்னு நினைச்சுப் பாருங்க... அதான் இந்த மீட்டிங்கை ஜஸ்ட் ஒரு கெட் டு கெதரா மாத்திட்டேன்...

இப்ப என்ன தெரியணும் என்னைப் பத்தி... நான் சந்தோஷமா இருக்கேன். நல்ல மனிதர்கள் இப்போ என்னைப் பத்திப் புரிஞ்சிக்கிட்டாங்க. அதுவே போதும் எனக்கு..., என்றார். பேச்சில் இன்னும் அந்தப் பழைய அஜீத்.

ஆனால் ‘தலைவர்’ வழிக்கு வந்த பிறகு ஒரு புதிய, அமைதியான அஜீத்தைப் பார்க்க முடிந்தது!
http://www.envazhi.com

Monday, October 13, 2008

ச்சும்மா... தமாசு!


இங்கே தரப்பட்டுள்ள படத்துக்கு தனி விளக்கம் தேவையில்லை. உங்களுக்கே நன்கு புரியும்... நாம் பார்க்காத போஸ்டர் யுத்தமா, என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது!

சில தினங்களுக்கு முன் ஹலோ எஃப் எம் அலுவலகத்தில் நடந்த ஏகன் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அஜீத்தின் ரசிகர்கள் சிலர் மாலை மலர் அலுவலகம் அருகில் வைத்திருந்த பேனர் வாசகம் இவை.

லயோலா சர்வேயில் விஜய்க்கு அளிக்கப்பட்ட (அல்லது வாங்கப்பட்ட) முக்கியத்துவத்தைக் கண்டு கொதித்துப் போய்த்தான் அஜீத்தின் ரசிகர்கள் இப்படியெல்லாம் பேனர் வைத்திருக்கிறார்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை..!!
http://www.envazhi.com

Friday, September 26, 2008

கருத்துக் கணிப்பு: ஒரு நாள் கூத்து!


ஜனநாயக நாட்டில் அவ்வப்போது மக்களின் மனதைப் படம் பிடிக்க கருத்துக் கணிப்புகள் நடத்துவதும் அதற்கேற்ப சில நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சகஜம்தான்.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் இத்தகைய கணிப்புகள் சில கருத்துத் திணிப்புகளுக்குக் காரணமாகிவிடுவதுதான் பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. ரஜினிக்கு எதிராக இந்த கருத்துக் கணிப்புகள் வந்துவிட்டதால் இப்படிச் சொல்வதாக நினைக்க வண்டாம். நாம் எந்தக் கணிப்பையும் ஆதரிப்பதில்லை.

பலமுறை இந்தக் கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையாவது திசை திருப்ப உதவியிருக்கின்றன.

இதனால்தான் கருத்துக் கணிப்பு என்ற நடவடிக்கைக்கே தடை போடும் முயற்சியில் இறங்கி உள்ளது தேர்தல் கமிஷன்.

லயோலா கல்லூரி முடிவுகளைப் பொறுத்தவரை, பல முரண்பாடுகள் உள்ளன.

தமிழக அரசின் இலவசத் திட்ட அறிவிப்புகளை 82 சதவிகித மக்கள் வரவேற்கின்றனர்.

ஆனால் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை 52 சதவிகிதம் பேர் எதிர்க்கிறார்கள்.

லயோலாவின் முன்னாள் மாணவரான விஜய்க்கு ரஜினியை விட 0.02 சதவிகித அதிக ரசிகர்கள் ஆதரவு இருக்கிறதாம். சரி... எஸ்.ஏ. சந்திரசேகர் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும். ஆனால் இந்த ரேஸில், விஜய்யைவிட அதிக ரசிகர்களைக் கொண்டவராகக் கூறப்படும் அஜீத் நிலை என்ன?

ரஜினியின் திரை உலகப் போட்டியாளர் கமல்ஹாசன் முதல் 5 இடங்களுக்குள் கூட இல்லையா? விஜய்காந்துக்கு (10 சதவிகிதமாம்!) உள்ளதை விட கமல்ஹாசனுக்கு ரசிகர் பலம் குறைவு என்று சொல்ல வருகிறதா... இந்தக் கணிப்பு? இது ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம்தானா...

அதிமுக - திமுகவை விட, ரஜினி –கமலை விட இவர்கள் முக்கியமாக எடுத்துக் கொண்டது விஜய்காந்தைத்தான்.

இல்லாவிட்டால் ஒருபடமும் ஓடாத, வரிசையாக 7 மெகா பிளாப்புகளைக் கொடுத்த விஜய்காந்துக்கு கமல்ஹாசனை விட அதிக செல்வாக்கு என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன?

6.5 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்துக்கு 2700 பேரை மட்டுமே பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்த சாம்ப்ளிங் அடிப்படை மகா தவறான ஒன்று.

எந்த ஒரு இலக்குமின்றி wide spectrum-ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவதே அபத்தம். இதில் ரஜினி பற்றிய கேள்வி எதற்கு? அவர் கட்சி ஆரம்பித்துவிட்டாரா? தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தாரா? அட, குறைந்தபட்சம் அதுபற்றிப் பேசுவது கூட இல்லையே... பிறகு ஏன் அவர் பெயரை உபயோகப்படுத்துகிறார்கள்...

ரஜினி என்ற மூன்றெழுத்தைத் தொடாமல் அவர்கள் இந்தக் கணிப்பை நடத்தியிருந்தால் அதுபற்றிப் பேச ஒருவரும் முன் வந்திருக்க மாட்டார்கள்.
நிறைய முரண்கள், கேள்விகள் உள்ளன இந்தக் கணிப்பில்.

ஏதோ சின்னப்புள்ளத்தனமாக சில குறிப்புகளைக் கொட்டியிருக்கிறார்கள் இந்தக் கல்லூரி மாணவர்கள். அவற்றை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ராஜநாயகத்தின் விசுவாசம், நம்பகத் தன்மையின் லட்சணம் நமக்கும் தெரியும். இவர்களது கணிப்பு இதற்கு முன்பு எத்தனை முறை தலைகீழானது என்பதும் நாம் பார்த்ததுதான்.

இந்தக் கருத்துக் கணிப்பின் பலன் நமது மீடியாவுக்கு ஒருநாள் கழிந்த நிம்மதி... அவ்வளவுதான்!