விஜயகாந்த்துக்கு எதிராக என்னை யாரும் தூண்டி விடவில்லை. இப்போதும் சொல்கிறேன், அவரை விட எனக்கே மக்கள் செல்வாக்கு அதிகம். இதை நான் வருகிற தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிட்டு, அவரைத் தோற்கடித்து ஜெயிப்பேன் என்கிறார் வடிவேலு.
முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில்தான் வடிவேலு புகார் கூறுகிறார், முதல்வருடைய விளையாட்டில் வடிவேலு பகடைக்காயாகி விட்டார் என்றெல்லாம் காலையில் வடிவேலு மீது குற்றம் சாட்டியிருந்தார் விஜய்காந்த்.
ஆனால் வடிவேலுவோ இதைக் கேட்டு இன்னும் கொதித்துப் போய்விட்டார்.
சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று ஆஜராகி விஜயகாந்துக்கு எதிராக சாட்சியம் அளித்த வடிவேலு (முந்தைய வழக்கில்) செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அடிச்சது என் வீட்டை. என் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு என் கண்ணெதிரே வந்த ஆபத்து இது. இதைப் பார்த்துட்டு நான் சும்மா இருப்பேனா... இதை வெளியே சொன்னா முதலமைச்சர் தூண்டுதல்னு சொல்றதா... நல்லாருக்கு நியாயம்.
நான் யாருடைய தூண்டுதலின் பேரிலும் புகார் கூறவில்லை. நடந்ததை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னோட பிரச்சினையை நான் சொல்றேன். அதுக்குக் காரணம் அவர்தான்னு எனக்கு நல்லா தெரியும்.
எனக்கு எல்லா மக்களுடைய ஆதரவும், எல்லா ஹீரோக்களின் ஆதரவும், எல்லா ஹீரோக்களின் ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. நான் தமிழக மக்களின் வீட்டுப் பிள்ளை. அவர்களுடைய ரேஷன் கார்டுகளில் மட்டும்தான் எனது பெயர் இல்லை. மத்தபடி அவங்க குடும்பத்துல நானும் ஒருத்தன்.
நான் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு ஜோக்கர். எல்லாக் கட்சிக்கும் பொது நான். எனவே யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
விஜய்காந்தை முதல்வர்னு சொல்லணுமாம்!!மக்களிடம் விஜயகாந்தை விட எனக்குத்தான் செல்வாக்கு அதிகம். நிச்சயமா அடுத்த தேர்தல்ல நான் அவரை எதிர்த்து நிற்பேன். அவர் எங்க நின்னாலும் அவரை தோற்கடிப்பேன். இதுல எந்த மாற்றமும் கிடையாது.
இதுக்கெல்லாம் காரணம் அவரோட 4 படங்கள்ல நான் தொடர்ந்து நடிக்க மறுத்ததுதான். அவரை முதல்வர்னு வாழ்த்திப் பேசணும்னு தருமபுரி, கஜேந்திரா, சபரி, பேரரசு படங்கள்ல கேட்டாங்க. நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். நான் யாராயும் அப்படியெல்லாம் சொல்ல முடியாது. எனக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் நண்பர்கள்தான்...!, என்கிறார் வடிவேலு உறுதியாக.
இது எப்படி இருக்கு!
12 comments:
Hey ennapa? Vijayakantha pathi seriousa blogla ezhuthiringa. Vadiveluva vida nalla comedy pannuvar theriyumle.
http://in.youtube.com/watch?v=3DQ3tbDJWxQ
http://in.youtube.com/watch?v=9FFDKlHczqM
http://in.youtube.com/watch?v=f3CSBG-Zy_Y
http://in.youtube.com/watch?v=7Mfj4DDwboQ
ஏன் இத்தனை தொடர் பதிவுகள் வி.காந்தைப் பற்றி என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதற்கு அடுத்த பதிவு அதுதான் நண்பரே...
கருத்துக்கு நன்றி
யம்மா நெத்தியடி
இப்படிக்கு
நடிகர் வடிவேலு பாசறை
but both Vadivelu n Vijayakanth better than RAJINI.. THERIUMLA..
துணிஞ்சு முடிவு எடுத்தாங்களே.. பின் வாங்கல.. மன்னிப்புக் கேட்கலே.. இமய மலைக்கு ஓடலே..
pRAKASH - sIVAKASI
Shabhaash .. Sariyana poatti.
அனானி...அவசரப்படாதீங்க... அவரவர் தனிப்ப்டட ஆசைக்காகவா அரசியல்?
பாபாவில் ரஜினி சொல்வார்:
சிஎம் பதவி அவ்வளவு சீப்பாயிடுச்சா... எவ்வளவு புனிதமான பதவி... அதுக்கு எவ்வளவு தகுதி வேணும்... கண்டவங்கல்லாம் சிஎம் ஆயிட முடியுமா...
Dear Prakash from SIvakasi,
Do you need people like Vadivel and VK, who for small rivalries between them are throwing muck at each other in public, to be your representatives in the Assembly/Parliament?
You want these kind of people to decide on the state/country's policies?
Not even God can save you.
Thanks Sharath
sad point here is even our media is
having same view as Sivakasi Prakash.They are writing as if stepping into politics or contesting in elections are the signs of bravery
dear prakash,
yesterday vk told that he never get munjamin for vadivel case but today he seek for that.hi prakash do you need this people.
Why Vkanth applying for bail. If he is honestly not involved in this incident, why can not he face the court directly. If he is not guilty, no court will convict him. He may claim police favoring ruling party. But, courts are still active which gives verdicts against ruling governments in cases.
And, why his partymen did not appear in court on the previous vadivelu case.
I think, Vijayakant will not even declare his constituency openly this time. He will keep it as a close secret to avoid vadivelu's nomination there. And , Vadivelu may win, if contested against Vkant as a general candiate supported by other parties. That will be a good deal..
ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா அடிமுடி மாதிரி முகமுடிய விதவிதம சரைச்சிகிறதுக்கு பேரு நடிப்பும் இல்லை, பொழுது போக்கும் இல்ல, கவட்ட கால வச்சிகினு ஆடறது ஆட்டம் இல்ல, மைக் மோகன், ராமராஜன் இவங்க கூட பல வருசம் போட்டிபொட்டது போட்டியில்ல, ஒலகத்தில இருக்கிற படங்கள மொத்தமா காப்பியடிக்க ஆரம்பிச்சி அது கண்டுபுடிச்ச ஒடனே பிட்டு பிட்டா 'காப்பி ரைட்ஸ்' இல்லாம காப்பியடிக்கிறது ஒலகத்தரம் இல்ல, ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா ஹா ஹா....
Post a Comment