Saturday, September 20, 2008

யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!


விகடன் போக்கில் ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும், மதனின் புத்திசாலித்தனம் மற்றும் எழுத்து நடை இன்னும் கூட பல நடுநிலை வாசகர்களை நிறுத்தி வைத்திருக்கிறது.
இதை அவரிடம் சொன்னபோது சிரித்துக் கொண்டார். அதுக்குக் காரணமும் விகடன்தானே... என்றார் ஒருமுறை.

என்னதான் அவரைப் புகழ்ந்தாலும் அல்லது வெறுப்பேற்றினாலும் அப்படியா... என சாதாரணமாக கேட்டுவிட்டுப் போகும் குணம் அவருக்குண்டு. அதே போல ஹாய் மதன் கேள்வி – பதில் பகுதிகளில் மதன் சொல்லும் பதில்களுக்கு தனி மரியாதையே உண்டு.
தமிழ் இலக்கிய உலகின் சகலகலா வல்லவர் அமரர் சுஜாதாவுக்குப் பிறகு, அதே சுவாரஸ்யமும் நம்பகத் தன்மையும் கொண்ட பதில்களைத் தந்தவர் மதன் மட்டுமே. காரணம் ஒவ்வொரு பதிலுக்கும் அவர் செலவழிக்கிற உழைப்பு, அவரது விசாலமான வாசிப்பு...

ஒருமுறை இளையராஜா – ஏஆர் ரஹ்மான் ஒப்பிடுங்கள்... என்று ஒரு கேள்வி.
அதற்கு அவர் அளித்த நச்சென்ற பதில்தான் அதன்பிறகு அத்தகைய முட்டாள்தனமான ஒப்பீடுகளுக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

மதன் பதில் இதோ: இளையராஜா- ரஹ்மான் இருவரையும் ஒப்பிடுவதே முட்டாள்தனம். ராஜா திரையிசையில் மட்டுமல்ல... சாஸ்திரிய இசையிலும் சிகரம் தொட்டவர். ரஹ்மான் தமிழ் திரையிசையை இன்னொரு தளத்துக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் இருக்கிறார். இந்த இருவேறு துருவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம் இனியும் வேண்டுமா...

மீண்டும் ஒருமுறை இதேபோன்ற கேள்வி வந்தபோதும், முந்தைய தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமல் அதே போன்றதொரு பதிலைத் தந்தவர்.

கடந்த 2004-ம் ஆண்டு, பாபாவுக்குப் பிறகு புதிய படங்கள் எதையும் ரஜினி அறிவிக்காத நேரம். பொதுத் தேர்தல் முடிவுகளும் ரஜினியின் விருப்பத்துக்கு மாறாக அமைந்துவிட்டன. அவர் யாரை புறக்கணிக்கச் சொன்னாரே அந்தக் கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்திருந்தது.

அப்போது மதனின் கேள்வி பதில் பகுதியில் ஒருவர் இப்படிக் கேட்டிருந்தார்:

கேள்வி: இனி ரஜினி?

மதன்: இனி ரஜினி இனி கஜினி என எழுதுவேன் என்று எதிர்பார்த்தீர்களா... இல்லை. இந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் எடுபடவில்லை என்பதற்காக அவர் அவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. நிச்சயம் அவர் திரும்பி வருவார், முன்பைவிட பலமாக. என்னுடைய கவலையெல்லாம், கடைசி மேட்சில் டக் அடித்துவிட்டு ஓய்வுபெற்ற பிராட்மேனைப் போல அவர் ஆகிவிடக் கூடாது என்பதுதான்.


இதோ இந்த வார விகடனில், ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு இப்படிக் கூறியுள்ளார்:

மதன்: சூப்பர்ஸ்டார் என்பது ஒரு டைட்டில். சிவாஜியையும், எம்ஜிஆரையும் நாம் சூப்பர்ஸ்டார் என்று அழைத்ததில்லை. ரஜினிக்கு மட்டுமே சூப்பர்ஸ்டார் பட்டத்தைத் தந்திருக்கிறோம். எதிர்காலத்தில் அவருக்கு இணையாக அல்லது அவரை விடப் புகழுடன் ஒரு நடிகர் வந்தாலும் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தருவோமா என்பது சந்தேகமே!

இது எப்படி இருக்கு!!

10 comments:

Arun Kumar said...

சூப்பர் பதிவு.. சூப்பர் ஸ்டார் போல.
சந்திரமுகி ரிலிஸ் ஏப்ரல் 14 அதே நாளில் தன் மகன் படத்தை வெளியிட வேண்டும் சந்திரமுகியை சச்சின் முறியடித்து சூப்பர் ஸ்டார் விஜய் என்று அனைவரும் புகழ வேண்டும் என்று பட தயாரிப்பாளர் தானுவை துண்புறித்து கடைசியில் மண்னை கவ்வியது விஜய் அண் கோ பேமிலி,

இதை போல அஜீத் கூட அடிக்கடி பேசி வாயை புண்ணாக்கி கொண்டு இருக்கிறார்..

அதற்கு எல்லாம் தலைவரின் ஒரே பதில்

இன்னா செய்தாரை உறுத்தால் அவர் நாண
நண்ணயம் செய்து விடல்

Anonymous said...

I am regular reader of your site and am a rajini fantic... there is a cover story in recent reporter article about rajini starting a tv channel and an non-political party ? Is that true if true i could seen this as post either in your blog or sundar's site am bit curious to see if thisis true

Abu said...

Thalaivar visayathula muthal muriyaga niyayamana illai illai nadu nilamiyana pathil.

Sabaash Madhan ji !

Regards
Abuthageer - Dubai.

Vaanathin Keezhe... said...

Thank you friends...

Anonymous said...

அந்த (எதோ ஒரு ஈன பத்திரிகையில் வாந்தியெடுத்துகொண்டிருக்கும்) மதன் என்கிறவன் ரஜினியைபற்றி சொன்னது புகழ்ச்சி இல்லை அவன் கூறியது இகழ்ச்சி...அதாவது அவன் சொன்னது "சூப்பர் ஸ்டார் என்பது ரஜினி மட்டும்தான்" என்பது அவனைப்பொறுத்தவரை அந்த பட்டம் ரஜினி ஒரு KING OF BOX OFFICE என்பதால் இல்லை என்கிற தொனியில் கூறியிருக்கிறான் என்பதே உண்மை..இதை புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! அவன் ஒரு "மைக்‍‍‍‍ ‍‍மோகன் போட்டியாளனின்(கமலா ஆசன்)" அடிவருடி... அந்த கமலா ஆசன் கூட ஒரு பேட்டியில எனக்கும் ரஜினிக்கும் போட்டியில்லை பொறாமையில்லை ஏன்னா நான் வாலி பால் விளையாடறேன் அவர் புட் பால் விளையாடுகிறார் பிறகு எப்படி எங்களுக்குள் போட்டி என்றான். இதிலுள்ள உள்குத்து எங்களுக்கும் தெரியும் கவட்டகாலனே கமலா ஆசனெ உன்னால 25 வருட தோல்வி/வயித்தெரிச்சல அடக்க முடியவில்லை என்பது எங்களுக்கும் தெரியும்... உன்னால மைக் மோகனிடம் சுமார் பதினைந்து ஆண்டுகள் முக்கி முக்கி போட்டிபோடத்தான் முடிந்தது!!! ரஜினியின் சக்தி! ரஜினியின் Mass Reach! Screen presence!!, Humanity, Integrity, Humbleness, Power, etc பக்கத்தில கூட வரமுடியவில்லை.... அடேய் ராமராஜன் படம் நல்லா ஒடிய காலத்தில கூட உன் ஒலகத்தரம் ஒடவில்லையடா ! ஹா ஹா... பொடா பொயி பொழப்ப பாரு..

Vaanathin Keezhe... said...

நன்றி... நமது இன்றைய தேவை மீடியா உலகில் நியாயமாக நம்மை ஆதரிப்பவர்கள். அதனால்தான் மதன் இந்த நேரத்தில் எழுதியிருக்கும் சாதகமான விஷயத்தை ஹைலைட் செய்தேன். இதற்கு முன்பும் பலமுறை ரஜினியைப் பாராட்டியுள்ளார் மதன். நீங்களே சொல்வது போல அர்த்தமற்ற 'கோமாளி'களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.

நன்றி நண்பா...

ரவி said...

ஆனால் தமிழைவிட சமஸ்கிருதம் தான் உயர்ந்தது என்ற கசட்டு சிந்தனையை எப்போது விட்டப்போறாறோ ?

Anonymous said...

'வெணாம்! அழுதுடுவேன்... இத்தோட நிறுத்திக்குவோம்... ‍ ‍ இப்படிக்கு "முன்னாள் ஆசுகாரு ரவி இன்னாள் ஆர்டினரி நரி"

Anonymous said...

'வெணாம்! அழுதுடுவேன்... இத்தோட நிறுத்திக்குவோம்... ‍ ‍ இப்படிக்கு "முன்னாள் ஆசுகாரு ரவி இன்னாள் ஆர்டினரி நரி"

Unknown said...

Chumma nachchunu irukku Madhanin bathilgal.

Thanks for posting the same ... including some of his old answers.