ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா... ஏன் வருவதுப்போல போக்குக் காட்டிவிட்டு பின்னர் வர மறுக்கிறார்?
இதுதான் இன்றைக்கு பெரும்பாலான நடுநிலையாளர்கள்... ஏன் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வி.
இதைத் தவறு என்றும் ஒரேயடியாகக் கூறுவதற்கில்லை.
உண்மையில் ரஜினிக்கு அரசியல் ஆர்வமில்லையா...
‘ஏன் இல்லாமல்... நிறையவே உண்டு. ஆனால் ரஜினி செய்ய நினைக்கிற அரசியல் வேறு, நிச்சயம் அந்த மாதிரி உயர்ந்த அரசியலுக்கு இன்றைய தமிழ்நாடு இடம் கொடுக்குமா? என்பதுதான் சந்தேகம்...’ என்கிறார் ரஜினியின் நெருங்கிய மிகச் சில நண்பர்களில் ஒருவரும் மூத்த பத்திரிகையாளருமான சோ எஸ். ராமசாமி
சோ மட்டுமல்ல... ரஜினியே பல முறை திரைப் படங்களிலும், பொது மேடைகளிலும் இதைப் பேசியிருக்கிறார், இன்னும் நயமான வார்த்தைகளில்.
‘என் ஒருவனால் மட்டுமே எந்த மாற்றங்களையும் இந்த சமூகத்தில் செய்துவிட முடியாது. இங்கே எல்லாமே தவறாக இருக்கிறது. இந்த சமூகமே அடிப்படையில் மாற வேண்டும், ஒட்டுமொத்த அமைப்பே மாற வேண்டும். அப்போதுதான் நான் நினைக்கிற மாதிரி ஒரு ஆட்சியைத் தர முடியும்... அது வரை இப்படித்தான் இருக்கும்...’ - ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம் என அனைவரும் கணிப்பு வெளியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ரஜினி எழுதிய வசனம் இது, வள்ளி படத்தில் (கதை, திரைக்கதை, வசனம் – நம்ம சூப்பர் ஸ்டார்தான்!).
ரஜினி அரசியலுக்கு வரத் தயங்குவதன் காரணம் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி, அரசியலும், சட்ட அமைப்பும் நல்ல அரசாங்கம் அமைவதற்கு ஏதுவாக இல்லை என்பதுதான்.
1996-ம் ஆண்டு ரஜினி தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியிலும் இதையே தெளிவாகக் கூறியிருப்பார். அவரது இந்தக் கருத்து உறுதிப்பட்டது மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்மராவுடனான சந்திப்புக்குப் பிறகுதான்.
எந்த அரசியல்வாதியையும் தோற்றத்தையும், கேள்விப்பட்ட விஷயங்களையும் மட்டுமே வைத்து எடைப் போட்டுவிடக் கூடாது என்பதை ரஜினி உணரத் தொடங்கியதும் இந்த சந்திப்புக்குப் பிறகுதான்.
முதல்வர் ரஜினி!ஆரம்பத்தில் நரசிம்மராவ் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார் ரஜினி. அவரது பன்மொழிப் புலமை, முடிவெடுப்பதில் காட்டும் நிதானம், நல்ல மாற்றத்தை தமிழக அரசியலில் கொண்டுவர வேண்டும் என்ற கருத்துக்களுக்கு ராவ் அளித்த முக்கியத்துவம் போன்றவை ரஜினிக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தன.
அதே சூட்டோடு நரசிம்மராவைச் சந்தித்த ரஜினி, தன் விருப்பத்தைக் கூற, அமைதியாக அனைத்துக்கும் தலையசைத்தார் ராவ். ஆனால் ரஜினி நேரடியாக களத்தில் இறங்கி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் பதவியில் அமர வேண்டும். ஆனால் அது முழுக்க முழுக்க காங்கிரஸ் அரசாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ராவ். இந்த விஷயத்தில் யாரும் நரசிம்மராவைக் குறைசொல்ல முடியாது.
ஆனால் ரஜினிக்கு இதில் உடன்பாடில்லை. ஒரு காங்கிரஸ் முதல்வராக, டெல்லியின் ஏஜென்டாக இருப்பதில் அவருக்கு நிச்சயம் மகிழ்ச்சியிருக்காது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. எனவே மூப்பனார் முதல்வராக இருக்கட்டும், ஆனால் அதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் – தேர்தல் பிரச்சாரம் உள்பட- தானே முன்னிற்பதாக உறுதியளித்தார் ரஜினி.
ராவும் கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டார்.
அடுத்து தான் விரும்பியது போன்ற ஒரு அரசுதான் தமிழகத்தில் ஏற்படப் போகிறது என்ற நம்பிக்கையோடு சென்னையில் ரஜினி கால் வைக்கும்போது, அதிரடியாக வந்தது காங்கிரஸ் – ஜெயலலிதா கூட்டணிச் செய்தி.
அதன்பிறகு ரஜினி தயவில் தமாகா பிறந்ததும், அதற்கு தலைமையேற்குமாறு ஒரு பிரஸ் மீட்டில் மூப்பனாரே வேண்டுகோள் விடுத்து, அதை ரஜினி நிராகரித்ததும் நடந்தது.
ரஜினி தயவுடன் முதல்ரான கருணாநிதி, நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் நெப்போலியன், தியாகு, குப்பன், சுப்பன் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, கடைசியாக போனால் போகிறதென்று ரஜினி பெயரைச் சொல்லி தனது தன்னம்பிக்கையின்மையைப் பறைசாற்றியதும் நினைவிருக்கும்.
இதன் பிறகு கிட்டத்தட்ட அரசியலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட ரஜினி, மீண்டும் 2002-ல் அரசியலே களத்தைத் தீண்டிப் பார்க்க அது நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதையெல்லாம் பார்க்காமல் ரஜினியைச் சுட்டுவிட்டது. சூழ்நிலை அப்படி.
தனது பழைய கொள்கையே சிறந்தது என்ற நினைப்பில் மீண்டும் முழு நேர சினிமாக்காரராகி விட்டார் ரஜினி.
என்னுடையது தனி சாம்ராஜ்யம்...ரஜினியின் படங்களைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ரஜினியின் மனநிலை தெளிவாகப் புரியும்.
எந்தப் படத்திலும் ரஜினி அரசாங்கத்தைச் சார்ந்து இயங்கமாட்டார். அரசாங்கம் அது பாட்டுக்கு நடக்கும். ஆனால் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய மக்கள் நலப் பணிகளை ரஜினி தனி மனிதராக தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்வார். ஒரு இணை அரசாங்கமே நடத்துவார். மனிதாபிமானம் எனும் சட்டம்தான் அவரது ராஜ்ஜியத்தில் அதிக வலுவானதாகத் திகழும்.
எஜமான், பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா, சிவாஜி... இப்படி எல்லாப் படங்களிலும் இந்த சிறப்பம்சத்தைக் காணலாம்.
அப்படியென்றால் ரஜினிக்கு அரசியல் சாசன மக்களாட்சி முறை மீது நம்பிக்கையில்லையா... என்ற விமர்சனம் எழக் கூடும்.
ரஜினி நம்புவது மனசாட்சியையும், கடவுளையும் மட்டுமே. சட்டமும் போலீசும் இரண்டாம் பட்சம்தான் அவருக்கு.
ஒரு நல்ல மனிதனிடம், மக்கள் நலமே பெரிதாக எண்ணும் ஒருவனிடம் சர்வாதிகாரத்தைத் தரலாம். அது நிஜமான நல்லாட்சியைத் தர, மக்களுக்கு அவன் செய்ய நினைக்கும் நல்லவற்றை தடையின்றி செய்ய வைக்க உதவும், ஃபிடல் காஸ்ட்ரோவைப் போல.
இதுதான் ரஜினியின் மனம் விரும்பும் அடிப்படை மாற்றம். குறைந்தபட்சம் இதற்கான அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சியாளராக இருந்தால்தான், தான் வகிக்கும் பதவிக்குரிய பல நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்ய முடியும் என்பது அவர் எண்ணம்.
ஆனால் இன்றைக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறதா... பதில் உங்களுக்கே தெரியும்!
12 comments:
நீங்கள் பயன்படுத்திய அதே வார்த்தை. வாவ்! நீங்களும் திரு.சுந்தர் அவர்களும் பெரும்பாலான உண்மையான மனிதர்களும் என்னைப்போன்றோரின் உள்ளத்தை மன ஒட்டத்தை படம் பிடித்து காட்டியதற்கு மிக்க நன்றி!ரஜினி ஒரு உன்னதமான மனிதன் மற்றும் தொழிலாளி
Wow....a wonderful analysis in different perspective.
பிரமாதம். மிக அருமையான அலசல். நன்றி.
நன்றி... நன்றி!!
Hi,
When the post of CM was offered to him in a platter he politely refused and what was his age at that time-46. Can you imagine anyone to be so matured at that age. See around yourself-Every one is calling himself next CM(from VKanth to JKRitesh). Even now if there is some one the people of TN want in politics it is superstar alone. Money and power cannot corrupt him as he is beyond all these things.Thanks for wonderful post. Sundar, you, Arun all are doing great job
Fantastic post.if thalaivar starts political party in future definitely people will think only the points that u have meant in this article. and support him due to thalaivars perfect life.common people never think bad about our thalaivar because they never bother about those medias as we the fans got tensed by reading those matter.
Hi friend,
You have made very clear the path of "TRUTH", is never understood clearly.
I remember, even Mahatma Gandhi requested Congress to take a role of social reforming movement than ruler through politics. But as now, people are using Rajini, then no body listened to him contested the elections, still the haunt of CONGRESS is not allowing India alone. Even a foriegner is accepted as PM because, CONG name is easy to fool people in lot more in remote India.
THAT'S WAHT I WAS ALSO QUESTIONING,RAJINI IS A LEADER TO RULE NO DOUBT, BUT HOW MANY OF THE FANS AND PUBLIC ARE THERE TO BE UNDER HIS RULE?"
Excellent analysis!
I guess many here too have felt the same, but you have put it in correct words.
kool one. I was not aware of couple of things in your blog. Looks like you are a very matured person that too from media background. I have seen couple of people like you and Sundar. There are few more also. Why don't you guys all get together and launch a new web site. In that way it get recognized. Also these kind of response will reach the media owners and not the editors. I would recommend to start a new portal with special columns from you and Sundar. Or you all guys try to meet the magazine owners and ask them directly why they are hating super star like.
PTB
நன்றி... திரு PTB-யின் யோசனையை செயல்படுத்தும் நாள் வரும்.
மற்றொரு நண்பர் எழுப்பியுள்ள கேள்வி நியாயமானது. ரஜினியின் அனைத்து ரசிகர்களும் முதலில் அவரது மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் என்னை மட்டும் நம்பிக் கொண்டிருப்பதை முழு நேரத் தொழிலாகக் கொள்ளாதீர்கள் என அறிவுறுத்துகிறார். நேரம் வரும்போது அவருக்குத் தோள் கொடுக்க வேண்டும். அந்த நேரம் கனிந்துவரும் வரை காத்திருக்க வேண்டும். மாருதல் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால் மாறுதல் வரும் என்ற நம்பிக்கை சிதையக் கூடாது.
அப்படிச் சிதையாமல் காக்கும் ஒரு தன்னார்வ முயற்சிதான் நானும் மற்ற நண்பர்களும் செய்வது!
Thank you for your reply.
I was listening Aahaa FM Viramuthu neram and Viramuthu narrated an incident that happened during Annamalai. They decided to write a song which would attract fans and just for fun Viramuthu told the first lyrics of ‘kondayil Talampoo song’. Every one liked it seems and super star asked Viramuthu in his ears that “You have written kusbu name, can I also expect my name?”. Viramuthu in turn replied “Sir, I am using kusbu name just because to bring your name in the song only” that would drive the fans nuts.
After that during padayappa in the song “kikku yerutheae”, he has written the words like “Rajini Chitthar pattu”. Every one liked it and Viramuthu hand over the song to the unit and returned home. He was about to have lunch and he got a call from Super Star and asked why he used his name there like “Rajini Chitthar” and asked him to remove it. Viramuthu replied that fans would like it and if any issues comes in he would take care of it. Super star was begging, pleasing him to remove it reason is media will interpret it in a different way. So finally Viramuthu had to change it back like “Gyna Chittar pattu”.
He ended with the punch line that “It was the same super star who asked him to hear his name in the song and after so many years the same super star was begging to remove the name”. He ended a punch line with “Day by day, over year by year super star is maturing and growing!”
PTB
நன்றி PTB...
ரஜினி இந்த பக்குவத்தை எப்போதோ அடைந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையெனில், நண்பர்கள் குறிப்பிட்டதைப் போல, 46வயதில் தன்னைத் தேடிவந்த முதல்வர் பதவிக்கான வாய்ப்பை தெரிந்தே வேண்டாமென்று சொல்வாரா அவர்!!
அரசாங்கங்களுக்கு அப்பாற்பட்டு சில நல்ல விஷயங்களைச் செய்ய நினைக்கிறார் ரஜினி. அதை யாரும் தடுக்க முயற்சிகாகமலிருந்தாலே போதும்... அவர் முதல்வருக்கும் மேல் ஒரு உயரிட இடத்தில் வைத்துப் போற்றப்படுவார்... காத்திருப்போம்!
Post a Comment