சர்க்கரையாய் இனிக்காதே... உன்னைக் கரைத்துக் காணாமலடித்து விடுவார்கள், என்ற பழமொழியை மீண்டும் ஒருமுறை இங்கே கூற விரும்புகிறேன்.
மீடியாக்காரர்களை ரொம்பக் கொஞ்சினால் முகத்தை நக்க வருவார்கள். ரொம்பவும் தூர வைத்தால், ரஜினியை கடித்துக் குதறுவது போலவும் செய்வார்கள். இவர்களுக்கு அவ்வப்போது கேஸ் போட்டு வாலை ஒட்ட நறுக்கி வைக்கும் அல்லது மானத்தை வாங்கும் ஜெயலலிதா, கருணாநிதிகள்தான் லாயக்கு.
இதோ மீண்டும் ஒருமுறை தன்னைப் பற்றி தாறுமாறாக எழுதிய ஆவி, ஜீவி, ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல... உடனே மன்னிப்பு கேளுங்கள்... இல்லாவிட்டால் கொடுங்கள் ரூ.10 கோடி நஷ்ட ஈடு என்றும் சூடு கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மூலம் நக்கீரன், ஜூவி, ரிப்போர்ட்டர் பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் இதோ...
கட்சியின் பொதுச் செயலாளர் நான்தான்; போடுங்கள் கையெழுத்து என்று சசிகலா கூறியதாக சசிகலா அரங்கேற்றிய பவர்கட் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட தகவல்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
எனது அரசியல் எதிரியான கருணாநிதி உத்தரவுபடியே அந்த செய்தி வெளியிடப்படடுள்ளது. இந்த பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும்.
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக் கோரி மான நஷ்ட வழக்கு தொடரப்படும். பத்திரிகை கவுன்சிலிலும் புகார் செய்யப்படும்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
மீடியா: ரஜினியும் ஜெயலலிதாவும்!எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு தான் திமுகவில் சேர முயன்று கருணாநிதிக்குத் தூது அனுப்பியதாக ஒரு பத்திரிகை எழுதியுள்ள கட்டுரைக்கு எதிராகவும் இதே போன்ற நோட்டீசை அனுப்பியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்குத் தெரியும், இந்தப் பத்திரிகைகளால் தனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை என்பது. காரணம் 1996-லிருந்து ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக நிலையை எடுத்து வருபவர்கள் இவர்கள்.
இனி ஒழிந்தார் ஜெயலலிதா என்ற இவர்களின் பிரச்சாரத்தைத் தாண்டி 2001-ல் அதிகாரத்துக்கு வந்தார். அதனால் இவர்களின் லட்சணம் என்ன, வாக்காளர்கள் மீது இவர்களை எந்த அளவு நம்புகிறார்கள் என்பதெல்லாம் அவருக்குப் புரிந்திருக்கிறது. அதனால்தான் தைரியமாக அடித்து நொறுக்குகிறார்.
அதற்காக நாம் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை. ஆனால் மீடியாவை அவர் அணுகும் விதம்தான் ஓரளவு சரியானது என்றே தோன்றுகிறது.
ரஜினி ரசிகர்கள், அனுதாபிகள், ஆதரவாளர்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது இது ஒன்றுதான்.
மீடியா விஷயத்தில் ரஜினி ஜெயலலிதாவை விட மிக மேம்பட்ட அணுகுமுறையக் கையாளுகிறார். அதாவது தன்னை விமர்சிக்கும் மீடியாவை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஒரு அணுகுமுறை அது.
ஆனால் அவரது கண்ணியத்தைப் புரிந்து கொண்டு மதிக்கும் அளவுக்கு இங்குள்ள மீடியாவுக்கு ஞானமும் இல்லை, இவர்களிடம் அப்படிப்பட்ட ஞானிகளும் இல்லை.
அதனால்தான் ரஜினி கேட்காத மன்னிப்பைக் கேட்டுவிட்டதாக தலைப்புச் செய்தியாக பிரஸ்தாபித்தார்கள்.
இனி ரஜினி 'ஆபீஸ் ரூம்' போட்டால்தான் அடங்குவார்களோ!
(மீடியாக்களுக்குத்தான் மக்களிடம் செல்வாக்கில்லையே... அப்படியெனில் குசேலன் பாதிக்கப்பட்டதாக எப்படிக் கூறுவீர்கள் என சிலர் கேட்கக் கூடும். சினிமா வேறு, அரசியல் வேறு. இதற்கு ஒரு தனிப் பதிவைத் தரும் திட்டமுள்ளது.)
9 comments:
Rajini will not Karunanithi or Jayalalitha. He may like some of thier qualities but he is not going to follow anyone's approach as it is. In the media case also, he is not going to change , following Jayalalitha. If he is convinced on something, he will do it. Thats all. Our suggestions to him to do this and that will never work out... Better we understand and try to accept him as he is.. The problem to most of the fans are , they are not able to accept Rajini as he is and enforcing their wishes on him.. The day a fan understand this, he will be at piece of mind, irrespective of anything happen around Rajini(especially in media)
Yes... absolutely... one cannot force Rajini to do any thing... If he convinced with the things, the he will do on his own... But this is a kind of suggestion. thats all...
Vino sir, once again a neththiyadi post from you.
Friend,
Neengaintha thirutumalarukku sariyaana savukkadi koduthhu oru news podunga. kamaloda kanmanigallukku mathiri. Netthu rajini -Political party title news, inside they have mentioned a small news still about kuselan, behind screens settlement Warning for Producers. Will they talk about their person... whom they are trying to patron his movies failures & producers compensation.
Invanungalai Rajini should treat in the Office room of Sivaji.
I do not know how many of you have seen Mr.Manirathnam's movie GURU. I was always thinking of super star should act in a biography and GURU was the perfect story for his image. Mr.Manirthnam should have casted super star for Hindi version. The villain in the movie is media. The second off of the movie is how GURU fight with the media. There were many scenes in the movie, where GURU says let them keep writing bad about us, let them talk about what happened yesterday. We should think about tomorrow only and work hard to beat them and prove they are wrong. One of the dialog, GURU was challenging the media reporter saying "If you want to remove me from the business, you must become GURU. By the way when you become GURU I must have gone into another dimension and you can not become GURU, reason is there is only one GURU". The climax was the highlight of the movie and if SIVAJI had that climax after that fight, man that would have been awesome. Finally GURU proves as long as people are with him, media, government could not do anything on him.
Please if you have time, watch the movie.
PTB
Thanks... very good analysis. Ofcourse, Rajini is the apt person to do such roles.
Dear Vannathin keezhe,
Rajini is a saint who is also an actor. He will not think of harming anybody and so the hitting back will all happen in movies only. He is a strong believer in god and destiny. But the media will not be able to get away by bad mouthing him. Divine law will come into play-If someone tries to find happiness by doing harm to others(in this case Rajini), they are bound to be unhappy. I suggest you read the book Autobiography of an yogi by PARAMAHANSA YOGANANDA. Lot of scenes from Baba movie are seen in this book.
You are doing a good job;keep it up
இந்தியர்களையும், தமிழர்களையும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் மத, ஜாதி, மொழி மற்றும் பல்வேறு பொய்க்காரணங்களை சொல்லி அப்பாவி மக்க்ளை பொது மக்களை பிரித்து த்ன் வயிறை நிறப்பிக்கொண்ட ஈனப்பிறவிகளை நாம் அறிவோம்! திரு.ரஜினி அவர்கள் ‘மட்டுமே’ உலகெங்கெலும் வாழும் தமிழினத்தை அட்லீஸ்ட் மூணு மணி நேரம் ஒன்றாக இணைத்தவர்! ரஜினி ஒரு உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை இணைக்கும் சக்தி ! பிரிக்கும் சக்தி அல்லவே! அதற்க்காகவே நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமி(ம)தம் கொள்கிறேன்…. ஒரே ஒருத்தன காட்டுங்க பார்ப்போம்???? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறார் வராமல் போகிறார் !ஐ டொன்ட் கேர்…. ஆனால் ரஜினி மேஜிக் என்பதை அரசியலுக்காக இழக்க தயாரில்லை…. இப்படிக்கு - உண்மையான ரஜினி ரசிகன்
Vikatan seeks apology to Amma. Thalaivar keeta apology ivanguana varutham..The cowards getting exposed one by one..
ஒரு செய்தி... ஒரு வருத்தம்!
கடந்த 10.9.08-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழ் கவர் ஸ்டோரியில் இடம்பெற்ற தகவல்களை முற்றிலுமாக மறுத்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா சார்பாக அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். 'குறிப்பிட்ட அந்தச் செய்தி, வரிக்கு வரி உண்மைக்குப் புறம்பானது... உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது' என்பதோடு, 'அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவி என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி கட்சிக்காக வகுத்துள்ள விதிமுறைகளின்படியே நிரப்பப்படுகிறது. அதன் தேர்தல் நடைமுறையில் யாராலும் தலையிட்டு தவறான ஆதிக்கம் செலுத்த இயலாது' என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். மற்றபடி, ஜூ.வி. ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்த தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர்
Post a Comment