Saturday, September 20, 2008

எந்திரன்: ஹவாயில் இரண்டாவது டூயட்!


சூப்பர் ஸ்டார் ரஜினி – ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கும் எந்திரன் – தி ரோபோ படத்தின் இரண்டாவது டூயட் பாடல் காட்சியை ஹவாய் தீவுகளில் படமாக்குகிறார் இயக்குநர் ஷங்கர்.

எந்திரன் படப்பிடிப்பு இப்போது வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களின் எழில்மிகு இயற்கை காட்சிகளின் பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8-ம் தேதி தொடங்கிய எந்திரன் படப்பிடிப்பின் முதல் பகுதி வரும் அக்டோபர் 5-க்குள் முடிவடைகிறது.

அதற்குள் மூன்று பாடல் காட்சிகள் மற்றும் ரோபோ ரஜினியின் வடிவமைப்பு போன்றவற்றை முடித்துவிடும் திட்டத்திலிருக்கிறார் ஷங்கர்.

ஆறு பாடல்கள் இடம்பெற உள்ள இந்தப் படத்துக்கு இதுவரை 3 பாடல்களை போட்டுக் கொடுத்து விட்டாராம் ரஹ்மான். இன்னும் 3 பாடல்கள் மற்றும் ரோபோ ரஜினிக்கான அதிரடி தீம் மியூசிக் என ரஹ்மானுக்கு எக்கச்சக்க வேலை வைத்திருக்கிறாராம் ஷங்கர்.

இப்போதைக்கு ட்ராக் மட்டும்தான் போட்டுக் கொடுத்துள்ளாராம் ரஹ்மான். பின்னர் இந்தப் பாடல்களை லண்டனில் உள்ள தனது விருப்ப ஸ்டுடியோவில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து தரப் போகிறாராம்.

முதல் டூயட் பாடலை தென் அமெரிக் காவில் உள்ள பெரு நாட்டின் புகழ் பெற்ற வரலாற்று நினை விடமான மாச்சு பிக்கு மற்றும் அமேசான் காடுகளில் வைத்துப் படமாக்கிய ஷங்கர், அடுத்த டூயட் பாடலை அமெரிக்காவின் உல்லாச உலகமான ஹவாய் தீவுகளில் வைத்துப் படமாக்கி வருகிறாராம்.

மூன்றாவது பாடல் எந்திரன் ரஜினி பங்கேற்கும் அதிரடிப் பாடல். இது ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாகிறது.

6 comments:

Anonymous said...

ரஜினி இந்த ஒரு விசயத்தில் தவறு செய்திருக்கிறார்... ஒரு COPY CAT ஐ , 'மைக் மோகனிடம் பதினைந்த்து ஆண்டுகள் முக்கி மோதி பொட்டியிட்டவனை' இந்த அளவுக்கு ரஜினி மதிக்ககூடாது....

Unknown said...

Coool News

Vaanathin Keezhe... said...

Thank you friends

அகநாழிகை said...

ரோபோ பற்றிய புதிய தகவல்கள் நன்றாக இருந்தது. இது தொடர்பான எனது பதிவையும் http://aganaazhigai.blogspot.com/2008/09/blog-post_20.html முடிஞ்சா படிங்க நண்பரே ! எப்படியோ ரோபோ படத்துக்கு பரபரப்புக்கு பஞ்சமேயில்ல !

Arun Kumar said...

நண்பா

என் ப்ளாக்கிற்க்கு வந்து பின்னோட்டமிட்டதிற்க்கு மிக்க நன்றி, உங்கள் வலைபூவை தினமும் படித்து வருகிறேன். காலையில் எழுதவுடம் முதலில் சுந்தரின் தளத்தையும் உங்கள் தளத்தையும் ரஜினி பேன்ஸ் தளத்தையும் பார்த்த பின்பு தான் வேறு வேலையே ஓடும். குசேலன் அவதூறு சமயத்தில் நீங்கள் பதிந்த பதிவுகள் அத்துணையும் மாணிக்க முத்துக்கள் ( தலைவர் பட பேரு :))

தொடரட்டும் உங்கள் சேவை..

நன்றியுடன்
அருண்

Vaanathin Keezhe... said...

நன்றி அருண்...

ரஜினி ஒரு நல்ல ஆத்மா. இதை தமிழக மக்களஅ நன்கறிவார்கள்.ஒரு நல்ல மனிதரைப் பற்றி மனசாட்சி உள்ளவர்கள் எழுதும் எழுத்துக்கள் எல்லாம் நல்லவிதமாகவே இருக்கும்...

பொறாமைக்காரர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்...