Saturday, September 27, 2008

இன்று வருகிறார் ரஜினி!


ரஜினியின் அரசியல் குறித்து இதுவரை எத்தனையோ முறை பரபரப்பான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அதனையொட்டி அவர் அரசியலுக்கு வருகிறார், வரமாட்டார் என பந்தயம் கட்டும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது.

ஆனால் இந்த முறை ரஜினியின் அரசியல் குறித்த பரபரப்புகளுக்கு தகுந்த ஆதாரங்கள் பலவற்றைக் காட்டுகிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள்.

அவர் சென்னையில் இருக்கும் வரை கிளம்பவில்லை. ஆனால் எந்திரனுக்காக அவர் அமெரிக்கா கிளம்பிய பின்னர்தான் அத்தனை பரபரப்புகளும் கிளம்பியுள்ளன என்பதையும் நாம் மறந்துவிடவில்லை.

அமெரிக்காவிலிருந்தாலும் தன்னைப் பற்றி வரும் செய்திகள், ரசிகர் மன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார் ரஜினி. அங்கிருந்துதான் தனது மன்றங்களுக்கு பல உத்தரவுகளை ரஜினி பிறப்பித்தார் என்றும், அழைப்புகள் கூட அவரது உத்தரவுக்குப் பிறகுதான் அனுப்பப்பட்டன என்றும் நமக்கு நம்பகமான நபர்கள் மூலம் இன்று காலை தகவல் கிடைத்தது.

எனவே அமைதியான சூழலில் கிளம்பிப் போனவர் இப்போது பரபரப்பான சூழலில் திரும்புகிறார்.

இந்தப் பரபரப்புக்கு ஆதாரமில்லாமல் இல்லை. அனைத்தும் உண்மைதான் என பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள் ரஜினியின் நண்பர்கள். அவற்றில் பெரும்பாலானவற்றைப் பற்றி ஏற்கெனவே இங்கே விவாதித்திருக்கிறோம்.
இன்று ரஜினி வருகிறார். அடுத்து என்ன நடக்கும்... என்ற கேள்விக்கு யூகங்களை பதிலாகத் தருவதை விட, அவர் வாயாலேயே என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்...


இதோ ரஜினி வருகை குறித்த செய்தி (தட்ஸ்தமிழ்):

மீண்டும் ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று இரவு சென்னை வருகிறார் ரஜினி. இது அவரது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் தகவல்.

ஒரு மாத கால எந்திரன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினி சென்னை திரும்புகிறார். அவரை விமான நிலையத்தில் பெரும் திரளாக வரவேற்க முதலில் திட்டமிட்டிருந்தனர் ரசிகர் மன்றத்தினர். 1996 தேர்தலின் போது ரஜினிக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு இணையாக ஏற்பாடு செய்யவும் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், அந்த மாதிரி எதுவும் செய்துவிடாதீர்கள், ரஜினி அதை விரும்பவுமில்லை என தலைமை மன்றத்திடமிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, இப்போதைக்கு அமைதியாக இருக்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இருந்தாலும் இன்று மாலை நெருங்க நெருங்க ஒரு வேகத்தில் அனைவரும் விமான நிலையத்தில் குவிந்தாலும் வியப்பதற்கில்லை, என்கிறார் ரஜினி ரசிகர் மன்ற சென்னை மாவட்டப் பிரமுகர் ஒருவர்.

அரசியல் போஸ்டர்கள்!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை மொத்தமாகச் சந்திக்கிறார் ரஜினி. இதனால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள் சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே பேனர்கள் வைத்துள்ளனர். ஏராளமான போஸ்டர்களை தங்கள் சொந்த செலவில் ஒட்டியுள்ளனர்.

ரஜினி, எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ள இந்த பேனர் மற்றும் போஸ்டர்களில் மகாத்மா காந்தி, காமராஜர், விவேகானந்தர், காயிதே மில்லத், தேவர் போன்ற பெரும் தலைவர்களோடு ரஜினியை ஒப்பிட்டு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்தப் போஸ்டர்கள் மாவட்ட அளவிலும் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர் ரஜினி மன்ற நிர்வாகிகள் சிலர்.

ரசிகர்களுக்கு அழைப்பு!

ரஜினி-ரசிகர்கள் சந்திப்புக்கு அக்டோபர் 3-ம் தேதி முதல் ரஜினி தேதி ஒதுக்கியுள்ளார். மாவட்ட வாரியாக ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்துக்கு வருமாறு ரஜினி ரசிகர் மன்றத் தலைவரான சத்தியநாராயணா அழைப்பு அனுப்பியுள்ளார்.

முதலில் சென்னை மற்றும் புறநகர் பகுதி ரசிகர்ளையும், மன்றப் பொறுப்பாளர்களையும் சந்திக்கும் ரஜினி, மற்ற மாவட்டங்களிலிருந்து தலா 25 மன்றப் பொறுப்பாளர்களைச் சந்திக்கப் போகிறாராம்.

இதற்கான அழைப்புகள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும், மற்ற விபரங்ளை இன்று ரஜினி வந்தபிறகு கூறுவதாகவும் மன்றத் தலைவர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

9 comments:

Anonymous said...

dear friend,
I feel too tensed...i hope everything will settle finely with almighty support.

Vaanathin Keezhe... said...

Hope so bro...

suki said...

nanbarae
romba padapadappa ka ulladhu, enna nadakumo, edhu nadandalum adhu nandragavae nadakum, parkalam

Vaanathin Keezhe... said...

Cool cool... All are waiting for the Golden words from Rajini, the great soul!

Anonymous said...

Kumudam and reporters are making their money with this october meet... Every kumudam and Reporter has news abt rajini and this week Kumudam said Oct 9 rajini will announce and reporter says Pondy CM has an assignment to bring rajini to politics...
Not sure what is in our thalaivar's mind

Anonymous said...

did he came today?

Anonymous said...

'ரசிகர் வாழ்க்கை ரஜினி கையில் ‍ தண்டமுண்ட மலர் வாந்தியெடுத்திருப்பது' என்பது ஒரு விதமான Excuse அது ஒரு 100% தவறான கருத்து...அது க‌ருத்தல்ல , முட்டாள் தனமான கிரிமினல் குற்றச்சாட்டு!! ரஜினி முப்பது வருசமா தன் ரசிகர்களிடம் "உன்னையும் உன் தொழிலையும், உன் குடும்பத்தையும் பார்! !!" என்றுதான் கூறினார்! ரஜினியின் மற்ற டயலாக் எல்லாத்தையும் மேற்கோளிட்டு காட்டும் கபோதிகளே " உன் வாழ்க்கை உன் கையில்" என்ற டயலாக் மறந்து போச்சா? எனக்கென்னமோ ரஜினி வந்தா அவர் பெயரை நாசப்படுத்த தயார இருக்கிற கூமுட்ட‌ கூட்டமும், ரஜினி பெயர சொல்லி சம்பாதிக்க நினைக்கும் துரோகி கூட்டமும், ரஜினி வந்தால் என்ன நடக்கும் என்பதை அறியாமல் சும்மா கமெண்ட் அடிக்கிறவங்களும் தான் அவரை அரசியலுக்கு வரும்படி அழைக்கிறார்கள்!!!!! அதாவது ரஜினி ரசிகர்கள் என்னவோ முப்பது வருசமா வெலை வெட்டியில்லாமல் அலைவது போலவும், இப்ப அவரால் தான் அவர்கள் நாசமானது போலவும் பெசுவது மிகப்பெரிய தவறு....... ரஜினி ஒரு Inspiration, Role Model, A good hearted person, A very good entertainer(worthy for your time and money), a good citizen of India. ரஜினியை வைத்து பிழைப்பு நடத்தும் ஈனப்பிறவி பத்திரிகைகளும், ரஜினியை வைத்து பிழைப்பு நடத்த நினைக்கும் ரசிகன் போர்வையில் இருக்கும் குள்ள நரிகளும் சொல்வதனால் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது.... இரு முறை ( 1996, 02)தன் கருத்துகளை/ஆதரவை கூறினாரே தவிர‌ ரஜினி எப்பொதும் அரசியலுக்கு வருகிறென் என்று கூறியதில்லை.. என்னை பொறுத்தமட்டில் ரஜினி புதிதாக ஒன்றும் செய்யத்தேவையில்லை, இது நாள் வரை செய்தது மிகப்பெரிய சேவை! ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கிறென் என்று மட்டும் தான் கூறினார்! வெறெதுமில்லை!! ‍ ரஜினி சார் தமிழ் நாடு முழுவதும் ஒரு 100 கிலோமீட்டருக்கும் ஒரு ஆம்பூலன்ஸ், ஒரு பயர் என்சின், ஒரு எமெர்ஜென்சி ஆஸ்பிட்டல், முதியோருக்கு ஒரு இல்லம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு இல்லம் இப்படி செய்யலாம் சார்! தமிழ் நாட்டைத்தவிர வெறெந்த மானிலத்திலும் இத்தனை சாதி இல்லை, இத்தனை சாதி கட்சி இல்லை, ரவுடித்தனம் இல்லை, இங்க இன்டர்னெட்ல வாந்தியெடுக்கிறவனெல்லாம் ஓட்டே பொடுவதில்லை!!!! வேண்டாம் சார்! நீங்கள் ஒரு மனிதாபமிக்க மனிதன், மரியாதைக்குரியவர்!! இப்படிக்கு உண்மையான ரஜினி ரசிகன் - Raj T

Vaanathin Keezhe... said...
This comment has been removed by the author.
Anonymous said...

என் கருத்துக்கள் அந்த தண்ட‍ முண்ட மலர் பத்திரிகைக்கு! அந்த லொயொலா லொள்ளு, வந்தவன் போனவன் சொல்கிற விசயத்த பற்றி தான்... ரஜினி ரசிகர்களை அல்ல...(ஒரு சிலர் தேவைக்கு அதிகமான எதிர்ப்பார்ப்பை வளர்த்துக்கொண்டுள்ளனர் என்பது உண்மைதான்). ரஜினிக்கு பத்திரிகைகள் 'திரைமறை காரணங்களுக்காக ' நெருக்கடியை ஏற்படுத்துவது போல தலைவரின் ரசிகர்களும் செய்யக்கூடாது.. நல்லது செய்ய அரசியல் மட்டுமே வழியல்ல!!! அப்படி ரஜினி வந்தால் என் ஒட்டும் என்னால் முடிந்த வரை என்னைச்சார்ந்தவர்களின் ஒட்டும் ரஜினிக்கு மட்டுமே! அதுவும் 8 மணிக்கே சென்று ஒட்டு போடுவேன். அது ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினி வர வேண்டும் , வந்தே ஆக வேண்டும் என்று அவரை எந்த விதத்திலும் நிர்பந்தபடுத்தமாட்டேன். அப்படி நிர்பந்தபடுத்த ரஜினியும் விட மாட்டார், நிர்பந்த படுத்த யாருக்கும் தகுதி கிடையாது. வாழ்க ரஜினி மேஜிக்! - Raj T