Saturday, September 6, 2008

ரஜினி... அரசியல்... எச்சரிக்கை!


மீண்டும் ஒருமுறை மீடியா தனது ஊக வர்த்தகத்தைத் தொடங்கிவிட்டது, சூப்பர் ஸ்டார் ரஜினி விஷயத்தில். இந்த முறையும் தினமலர்தான் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

ரஜினி, இயந்திரன் – தி ரோபோ ஷூட்டிங்குக்கு அமெரிக்கா போய்விட்டதால், அடுத்த ஒருமாதத்துக்கு செய்திகள் வேண்டுமே. அதற்கான ஏற்பாடுகளில் இப்போதே இறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

எப்படியிருந்தாலும், ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வியை எழுப்பி, மீண்டும் அவரைப் பற்றிய பல்வேறு பரபரப்புகளை உயிருடனே வைத்திருக்க பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளன பத்திரிகைகள். அதற்கான முதல் கல்லை இந்த முறை தினமலர் அடித்துள்ளது. அவர்களைப் பொறுத்தவரை வந்தால் மாங்காய், போனால் வெறும் கல் அவ்வளவுதான்.
இங்குதான் ரசிகர்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம், இயந்திரன் ரிலீஸ் வரை இதுபோல பயங்கரமாக உசுப்பி விட்டுக் கொண்டே இருப்பார்கள். ரஜினியும் வழக்கம் போல மவுனமாகவே இருப்பார். சரியாக படம் வெளிவரும் தருணம் பார்த்து தங்கள் சதி வேயை அரங்கேற்றத் தொடங்கிவிடுவார்கள்.

ரசிகர்களும் ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று ஒருகணம் மயங்கிப் போகிறார்கள். குசேலனுக்கு நடந்தது அதுதான்.

படம் ரிலீஸ் ஆகும் வரை இவர்கள் கொடுத்த பப்ளிசிட்டி என்ற, பாஸிட்டிவ் ரிப்போர்ட்ஸ் என்ன... அதே படம் வெளியாவதற்கு ஒரு இரவு முன்பு மொத்தமாகக் கவிழ்த்தார்கள்.
ரஜினி மன்னிப்பு கேட்டார் என்ற பொய்யை, சர்வ நிஜம் போலவே பேசி வைத்துக் கொண்டு வெளியிட்டு பல தீவிர ரசிகர்களையும் கூட நம்ப வைத்தன இதே தினமலர், தினகரன் நாளிதழ்கள்.

தன் பேச்சு குறித்து மக்களுக்கு ரஜினி அளித்த விளக்கத்துக்கு மன்னிப்பு முகம் மாட்டி ரஜினியை தமிழ் விரோதி போலவே சித்தரித்தார்கள். அஞ்ஞானிகள், பார்நிவேதாக்கள், மொட்டைக் கடிதாசி நிபுணர்களெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு வந்து தங்கள் வக்கிரத்தைக் கொட்டினார்கள்.

அதனால் இந்த கயவர்களிடம் இம்முறை கவனம் தேவை!

சரி... தினமலர் செய்தியில் எந்த அளவு உண்மை...?

ரஜினி மன்றத் தலைவர் சத்தியநாராயணாவை பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் சமீபத்தில் சந்தித்தது உண்மை என்பதை ராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகிகள் உறுதிப்படுத்தினர். அதுமட்டுமல்ல, அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்களையும் நான்கு தினங்கள் சந்திக்கப் போகிறார் ரஜினி, அக்டோபர் மாதத்தில்.

‘இப்போ இந்தச் செய்தி வெளியில் கசிவதில்கூட ஒரு ஆபத்திருக்கிறது. இயந்திரன் படத்துக்காக இப்போதிலிருந்தே ரசிகர்களை உற்சாகமாக்க ஆரம்பித்துவிட்டார் ரஜினி என்றெல்லாம் விமரிசனங்கள் வரும். ஆனால் இம்முறை சார் அவர்களுக்கு ஒரு மெஸேஜ் வைத்திருக்கிறார். நிச்சயம் அது ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தும். மற்றபடி எந்தச் செய்தியையும் நம்பாதீர்கள். சார் சொல்வதுதான் உண்மையான செய்தி... மற்றதெல்லாம் இவர்களாகவே இட்டுக் கட்டிக் கொள்வதுதான்..’ என்கிறார் சத்தியநாராயணா.

நூறு சதவிகிதம் வாஸ்தவமான வார்த்தைகள்!

4 comments:

Anonymous said...

Hm, enna pandrathu summa paraparppukkunnu news vera yarayum thoda mudiyala. athotta undhaikirrangna. rajiniya pona 1 masama thitti kummiyadichathula ennanna raji fans orupakkam thitti theethathoda, businesskkum aapu, onnum ila before the Kuselan news I visit their website for any new news to look at their head lines many times in a day. After that once I visit that's all.
Ippa media kudimichandaya makkal pakkakkudathunnu thaan Rajini-Buruda, kumutham reporter Soundarya Rajini Sir kooda pesina dialogunnu ellam scene.
Friend is there any way that you can confirm the infomration whether their anti-rajini has affected their businessany way or not? MORON Brothers - notsure when is their judgement day? Chee..man who did a super circus bulti is now warned by Hindu Munnani for his useless talk about Vinayaka pooja related activites in Coimbatore. SothaiKumar got a big dimikki from Namitha for his own production movie still he shuts his up and down, if he becomes a ruler ......hm hm Tamil people's total SINS of all their previous births to have this fellow talking about politics and nallatchi..

Vaanathin Keezhe... said...

Thanks for your valuable comment.

Yes... absoltely you are right...
விகடன் மற்றும் குமுதம் குழும பத்திரிகைகளின் விற்பனையில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள சரிவு... தமிழ் மக்கள் அவர்களது Anti - Rajini perversion-க்குக் கொடுத்த சரியான அடி. குறிப்பாக தினமலரையெல்லாம் ரஜினி ரசிகர்கள் சீண்டுவதாகவே தெரியவில்லை. அதன் விளைவு மீண்டும் ரஜினி துதியை ஆரம்பித்துள்ளன. ஆனாலும் ரசிகர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும். முன்னிலும் மும்முரமாக இந்தப் பத்திரிகைப் புறக்கணிப்பைத் தொடர வேண்டும்...

கிரி said...

இவனுக இப்படி ஏத்தி ஏத்தி விட்டு ரஜினி மேல வெறுப்பு வருபடி செய்து விடுகிறார்கள்.

ரஜினி அரசியல் பற்றி எதுவும் கூறவில்லை என்றாலும் வேண்டும் என்றே, கூட்டம் கூட்டுராறு ரசிகர்கள சந்திக்கிறார்..அரசியல் கட்சி தொடங்குகிறார் அங்கே போறாரு இங்கே போறாரு ஒண்ணுக்கு போறாரு மூக்கை சிந்துறாறு, மீசை எடுத்துட்டாரு புதுசா ரிங் போட்டு இருக்காருன்னு ஏதாவது மொக்கை செய்தி போட்டு காலத்தை ஓட்டுறானுக இவனுக மாதிரியான கேவலமான பிறவி இல்லை. இவர்களுக்கு அரசியல்வாதிகளே 1000 மடங்கு பெட்டர்.

rapp said...

:):):)